Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கு சுவிஸ் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் நிவாரணம்

Featured Replies

 
 
 

 

01_CI.JPG

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. செங்கலடி ஆண்டான்குளம், ஐயன்கேணி மற்றும் கொக்குவில், புன்னைச்சோலை ஆகிய கிராமங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு அரிசி, சீனி, பருப்பு, சோயா இறைச்சி, நெத்தலிக் கருவாடு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரமுகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இந்திரகுமார் பிரசன்னா இந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் கையளித்தார்.

புலம்பெயர்ந்து சென்றாலும் தமிழ் உறவுகள் எம்மை மறந்துவிடவில்லை என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடும்போது செய்யப்படும் இத்தகைய உதவிகள் காலம் கடந்தும் பேசப்படும். இந்த உறவு தொடர்ந்தும் நிலைக்க வேண்டும். செய்த உதவி சிறியதாக இருந்த போதிலும் உதவி செய்ய வேண்டும் என முன்வந்தவர்களின் மனம் விசாலமானது. எனவே அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம் என நிவாரணப் பொருட்களைக் கையளித்துப் பேசியபோது பிரசன்னா குறிப்பிட்டார்.  மூ

 

மூலம்: http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87527/language/ta-IN/article.aspx

Edited by நியானி

உதவிய உறவுகளுக்கு நன்றிகள்.

 

 

பகிர்விற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உதவிய உறவுகளுக்கு நன்றிகள்.

 

 

பகிர்விற்கு நன்றி

 

(சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக்குழு  என்று போடப்பட்டுள்ளதே....??)

 

 

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அதன்  விளையாட்டுப் பிரிவு செய்திருக்கு  :icon_mrgreen:

 இவ்வளவு கடன் சுமைக்கு மத்தியிலும் அவர்கள் உதவி இருக்குறார்கள். வாழ்த்துக்கள். கணக்கு கேட்கும் நண்பர்களை காணவில்லை 

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அதன்  விளையாட்டுப் பிரிவு செய்திருக்கு  :icon_mrgreen:

 இவ்வளவு கடன் சுமைக்கு மத்தியிலும் அவர்கள் உதவி இருக்குறார்கள். வாழ்த்துக்கள். கணக்கு கேட்கும் நண்பர்களை காணவில்லை 

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

இதாரடாப்பா சாமியோவ்.

எவன் அவன் கணக்குக்கேட்டான் அன்பு அண்ணா ?

விளையாட்டுப்பிள்ளையளிட்டையெல்லாம்

கணக்குக் கேட்பாகளா ?

விளையாட்டுப் பிரிவின் விளையாட்டு வேலையாலை அங்கை கொஞ்சப்பேருக்கு முதுகு கூனப்போகுது. ஏனண்ணா இந்த இந்த விளையாட்டு?

  • கருத்துக்கள உறவுகள்

உதவும் கரங்களுக்கு நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அதன்  விளையாட்டுப் பிரிவு செய்திருக்கு  :icon_mrgreen:

 இவ்வளவு கடன் சுமைக்கு மத்தியிலும் அவர்கள் உதவி இருக்குறார்கள். வாழ்த்துக்கள். கணக்கு கேட்கும் நண்பர்களை காணவில்லை 

 

 

நானும் அதைப்பார்த்தேன் அன்பு.

 

இவை  இரண்டும் ஒன்றென்று எனக்கு தெரியும்

எனது கேள்வி  என்னவெனில்

அதை தாயகத்தில் தற்பொழுது போடுவதால் ஆபத்து வராதா?

எமது தொடர் பணிகள் பாதிக்கப்படாதா?

விளையாட்டுத்துறை  என்று போட்டாலும் ஆபத்துத்தான்.

ஆனால் இப்படி ஏதாவது வகையில் அந்த மக்களுடன் தொடர்புகளைப்பேணி  உதவிகள்  சென்றடைவதை வளர்க்கணும்.  ஆனால் இனம் காட்டுவதில் அவசரம் தேவையற்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.