Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய நீதியரசர் மீது இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புதிய நீதியரசர் மீது இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டு
January 16, 2013, 6:13 am|views: 112
 
நேற்றையதினம் புதிய பிரதம நீதியரசராக பதிவியேற்ற மொஹான் பீரிஸிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் மோசடி விரோத குரல் அமைப்பு ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்கவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
சட்டமா அதிபராக இருந்த காலத்தில் மொஹான் பீரிஸ் 75 லட்சம் ரூபாய் முறைகேடு சம்பவம் ஒன்றில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் அடிப்படையில், மொஹான் பீரிஸ் குறித்து உடனடி விசாரணை நடாத்துமாறு வசந்த சமரசிங்க தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
 
புதிய பிரதம நீதியரசராக பதவியேற்று சில மணித்தியாலங்களில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய நீதியரசர் மீது இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டு

 

இதன் காரணத்தால் தான் சிங்கள பயங்கரவாத அரசின் நீதிபதியாகும் தகுதி கிடைத்திருக்கும்.

இலங்கையில் இலஞ்சம் வேண்டாதரவர்கள் யார்? அவர்கள் நிச்சயம் அரசியல்வாதிகள் இல்லை .

மோகன் பீரிசு பதவிக்கு வரக்காரணம் துணிச்சலாக அரசின் கொலைகள், கொள்ளை, வன்முறை வழக்குகளை சடைவதனாலேயே. அவர் முதல்நாள் நீதி மன்றத்தில் இறங்கியவுடனேயே சக நீதியரசர்கள், சட்டத்தரணிகளின் வெறுப்பை சம்பாதிக்கப் போகிறார். மோகன் பீரிசு தனக்கு இந்த பதவி தேவை இல்லை என்றார். ஆனால் அவரால் பதவியை மறுக்க முடியாது, ஏன் எனில் முடியாது என்றுவிட்டு அவர் லஞ்ச ஊழல்களில் தனது பங்கிற்கு தப்புவது கஸ்டம்.

 

சிராணி சொல்வது போல் சிராணியோ அல்லது பிரதீப் காரியவாசமோ காந்திகள் அல்ல. காரியவாசம் சில பிரச்சனைகளில் இருந்தாலும் அதை மேலிடத்திற்கு பணம் கொடுத்து தீர்க்க இருவரும் விரும்பவில்லை. காரணம் தாங்கள் இனி தொடர்ந்து இவ்வாறு பிளக்மெயில் பண்ணப்படலாம் என்று நினைக்கிறார்களாகும். இதனால் சிராணி சாதுதிரியமாக அரசியல் வழகொன்றை கையில் எடுத்தார். ஆனால் அவ அதில் விட்டுக்கொடுப்புகள் செய்து சட்டம் நிறைவேற இடம் கொடுத்த பின்னர், அரசு தன் பக்க போர்குற்ற விசாரணைகள் மாதிரி ஏதாவது வந்தால் சிராணி விட்டு பிடிக்கலாம் என்று பயப்படுகிறது. மேர்வில் சில்வா மாதிரி அரசுக்கு இடைஞ்சல் வரக்கூடிய தறு துறும்புகளை செய்யாலாம், அரசு பயப்படாமல் வந்து காப்பாற்றும். ஆனல் ஒத்துப்போகாமல் அரசை ஒருதடவை தன்னும் ஒருவர் எதிர்த்தால் அரசு அவரை சந்தேகப்படும்.

 

இதனால் போர்க் குற்றத்தை குற்றமில்லை என்று சொல்லத்தக்க மோகன் பீரிசு மாதிரி முழு பூசனிக்கயை சோற்றுக்குள் மறைக்கும் நீதிபதியே மகிந்தாவுக்கு தேவை. சிராணி திலகவர்த்தனா அரசுடன் இருந்தாலும், நாமல் வர யார் கூட சந்தர்ப்பம் அளிப்பர்கள் என்பதும் ஆராயபட்டிருக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.