Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களது நேர்மையும், அபிவிருத்தியும் ஒவ்வொரு கிராமங்களையும் அபிவிருத்திப்பாதையில் கொண்டு செல்ல வழிவகுக்கும்; யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

15ccf50ed654c105b58ab7ffa5cc9d0c.jpg

இறுதிக் கட்ட யுத்தத்தினையடுத்து 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 80 ஆயிரம் விவசாயிகளுக்கு கடனுதவிகளும் அவர்களது தேவைகளுக்காக 500 உழவு இயந்திரங்களும் இந்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளது என யாழ்.இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கியின் இரண்டாவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் இன்று ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள யாழ். கிளை வளாகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

மன்னாரில்  கடற்றொழிலாளர்களுக்கு 175 படகுகள் இந்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 350 குடும்பங்கள் பயனடைகின்றனர். அதுபோல குருநகர் மீன் வலை உற்பத்தி செய்வதற்கு 140 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இதன் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நிறைவடையவுள்ளது. குறித்த கட்டடம் மார்ச் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.

மேலும் இந்திய அரசினால் கட்டப்பட்டு வரும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி வடக்கில் ஏற்கனவே 1000 வீடுகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 11 ஆயிரம் வீடுகள் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்ளு முன்னர் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

இருப்பினும் 50 ஆயிரம் வீடுகளில் வடபகுதியில் 42 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதுமட்டுமல்ல கொழும்பில் உள்ள வங்கிகள் வியாபாரத்தினை முதன்மைப்படுத்தியதாகவே அமைகின்றன ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்த வங்கியானது மக்களது வாழ்வாதார தேவைகளை மேம்படுத்தியதாகவே அமைகின்றது.

அந்தவகையில் தற்போது பல்வேறு திட்டங்கள் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி கடந்த ஆண்டு மாதிரி அபிவிருத்திக் கிராமமாக வட்டு.மேற்கு கிராமம் தெரிவு செய்யப்பட்டு 426 பயனாளிகளுக்கு 41 மில்லியன் ரூபாவில் வழங்க திட்டமிடப்பட்டது. அதில்  இதுவரை 142 பேருக்கு 10.45 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

கடனைப் பெற்றவர்கள் 99 வீதமானவர்கள் உரிய தவணைகளில் கடனைமீளச்செலுத்தி விட்டனர். இவர்களது செயற்பாடுகள் பாராட்டப்பட வேண்டியது. இவர்கள் தமது நோக்கத்தினை நிறைவேற்றி அதனூடாகவே இந்த கடன்களைச் செலுத்தியுள்ளனர்.

இவர்களின் இந்த செயற்பாடு 2013 ஆம் ஆண்டில் மற்றைய அபிவிருத்திக் கிராமமாக வட்டு. வடக்கினை தத்தெடுத்துக் கொள்வதற்கு மிகவும் பங்குவகின்றது. அத்துடன் மேலும் பல கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கு அவர்களது செயற்பாடுகள் சிறப்பாக வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
 

http://www.onlineuthayan.com/News_More.php?id=437711783521637998

மலையாளக்கோமாளி தனது குடியேற்றங்கள் வெற்றிகரமென்கிறார்.

 

கோபிலவு, சூரிய புர மக்கள் இந்த வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டர்களா இருக்கிறார்களா தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.