Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இலங்கைக்கு விஜயம்செய்யவுள்ளார்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sarma_CI.jpg

 பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம்செய்யவுள்ளார்.

 

எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கே இவர் இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.

 

மனித உரிமை மீறல்கள், பிரதம நீதியரசருக்கெதிரான குற்றப் பிரேரணை போன்ற விவகாரங்களினால் இலங்கையில் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டைக் கொழும்பில் நடத்துவதற்கு அந்த உறுப்பு நாடுகள் சிலவற்றிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

 

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்க தூக்கி எறியப்பட்டமை போன்ற விவகாரங்களால் இந்த மாநாடு தொடர்பில் இலங்கைக்கு சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

 

கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்வதெனில் மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை தமது பதிலளிக்கும் கடப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என பிரிட்டன், கனடா ஆகிய நாடுக்ள வலியுறுத்தியுள்ளன.

 

இந்த நிலையில், சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணை அதற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

 

இந்த மாநாட்டை பிரிட்டிஷ் பிரதமர் பகிஷ்கரிக்க வேண்டுமென அந்நாட்டு எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், இறுதிப் போரின் பின்னரான மனித உரிமை நிலவரங்கள், ஜனநாயகம் பற்றிய விடயங்கள் ஆகியவற்றில் இலங்கையின் பொறுப்புக் கூறல் தொடர்பாக ஏற்கனவே கடுமையான விசனத்தை வெளியிட்டிருந்த கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இந்த மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.

 

எவ்வாறிருப்பினும், ஏற்கனவே திட்டமிட்டபடி பொதுநலவாய உச்சிமாநாடு நடத்தப்படும் என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. திட்டமிட்டபடி மாநாடு நடத்தப்படும் என்பதை நாம் தெரிவிக்கிறோம் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகமவும் உறுதியாகக் கூறியிருந்தார்.

 

இலங்கையில் இந்த மாநாடு நடத்தப்படுவது நிறுத்தப்பட்டு, வேறொரு நாட்டில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான கால அவகாசம்  இல்லாதனால் வேறு வழியின்றி இலங்கையில் திட்டமிட்டப்படி இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக பொதுநலவாய ஒன்றியத்தின் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதனை நன்கு அறிந்துகொண்ட தற்போது மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் அதிலும் அரசியல் இலாபம் தேடும் வகையிலேயே ''என்ன நடந்தாலும் திட்டமிட்டபடி மாநாடு நடத்தப்படும்" என பகிரங்கமாக கூறுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதன்மூலம் சர்வதேச சமுகத்தை வெற்றிகொண்டுவிட்டோம் என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து அரசியல் இலாபம் ஈட்டிக்கொள்ளவதற்காக இவ்வாறு பகிரங்க பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் கருதப்படுகிறது.

 

பொதுநலவாய நாடு திட்டமிட்டபடி இலங்கையில் நடைபெற்றாலும், அதில் முக்கிய பல நாடுகள் கலந்துகொள்ளுமா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படாமலேயே உள்ளது.

 

அத்துடன், மாநாடு நடத்தப்பட்டாலும் இலங்கைக்கு அது தலையிடியாகவே அதாவது சர்வதேசத்தின் அழுத்தங்களும், நெருக்கடிகளும் கூடிய மாநாடாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87769/language/ta-IN/article.aspx

விஜய் நம்பியாரை வெற்றிகரமாக கையாண்டவர்களுக்கு கமலேஷ் சர்மா ஒன்றும் பெரியவிடயமாக இருக்காது :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.