Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கைக்கார மனிதன்

Featured Replies

எங்கள் புரஃபசர் ஒரு முறை கலவியல் பாடம் நடத்தும் போது எங்களை கேட்டார்: மனித உடலிலேயே செக்ஸுக்கு மிக அத்தியாவசியமான பாகம் எது? நாங்கள் எல்லாம் இதுவா, அதுவா என்று ஏதோதோ பதில்களை சொல்லி பார்த்தோம். எதுவுமே சரியாக இல்லை. கடைசியில் பேராசிரியரை மிக பொருமையாக சொன்னார், “மனித கலவிக்கு மிகவும் அத்தியாவசிய பாகம், அவர்களுடைய கை” என்று.

 

கைய்யா?! ஆட்சரியமாய் இருந்தாலும், உடனே எங்கள் மரமண்டைக்குள் பல்ப் அடித்த எப்ஃபெக்ட், அட ஆமாம், ”தொட்டால் பூ மலரும்” என்று நம்மூரில் தான் பாட்டே இருக்கிறதே! தொடுகை உணர்வு மட்டும் இல்லை என்றால், காமம் அதன் ஸ்வாரசியத்தை இழந்து விடுமே…..தொட்டு, தடவி, வருடி, கிள்ளி, என்று நிறைய கைவேலைபாடுகள் இருப்பதனால் தானே மனித கலவி இவ்வளவு கிளுகிளுப்பாய் இருக்கிறது.

மற்ற மிருகங்களுக்கு இந்த பிரச்சனையே இல்லை……பெண்ணை பார்த்தோமா? போட்டியிட்டு, மற்ற ஆண்களை விரட்டிவிட்டு அவளை ஓரம் கட்டினோமா? அவள் பின்னால் போய் லபக் என்று பிடித்து, படக்கென்று புணர்ந்து, மடக் என்று மரபணுக்களை முதலீடு செய்தோமா, சிம்பிள்! மேட்டர் ஒவர், என்று செயல் படுகின்றன மற்ற மிருகங்கள். 

ஆனால் மனிதர்களுக்கு இந்த முறை ஒத்துவரவில்லை. முதலில் மனித பெண்ணை போய் பின்னாலிருந்து பிடித்தெல்லாம் உறவுக்கொள்ளவே முடியாத நிலை. காரணம் இவள் மற்ற ஜீவராசிகளை போல நான்கு காலில் நடப்பதில்லையே. இவள் தான் மிக புதுமையாக இரண்டு காலில் நிமிர்ந்து நடக்கிறாளே. நடந்தால் நடந்து விட்டு போகட்டும், அதற்கும் செக்ஸுக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா? இதில் தான் பிரச்சனையே!

நான்கு காலில் நடக்கும் விலங்குகளுக்கு கர்பப்பை மல்லாந்த நிலையில் இருக்கும், அதனால் புவி ஈர்ப்பு சக்தியின் பாதிப்பு இருக்காது. இப்படி படிந்துகிடக்கும் இந்த கர்ப்பப்பையினுள் மரபணுக்களை செலுத்தினால் அப்படியே பத்திரமாக இருக்கும், வெளியேறாது, அதனால் மகசூல் அதிகாக இருக்கும். ஆனால் மனித பெண்ணோ இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்கிறாள். இவள் கர்பப்பையும் இதனால் புவி ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு, செங்குத்தாகவே இருக்கிறது. இந்த நிலையில் இவளுக்குள் மரபணுக்களை முதலீடு செய்தால், அவை தங்காமல் வெளியேறிவிடும்…..அப்புறம் எப்படி இனம் விருத்தியாவது?

ஆனால் இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்பதால் மனித குலத்திற்கு ஏகப்பட்ட ஆதாயங்கள் இருந்தன. கைகளை வேறூ வேலைகளுக்கு பயன்படுத்த முடிந்தது, இதனால் மற்ற மிருகங்களை விட மிக வேகமாய் முன்னேற முடிந்தது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், கலவியின் போது இப்படி இரண்டு காலில் நிற்பது அனுகூலமாக இல்லை. அந்த சமயத்திற்கு மட்டுமாவது பெண் தன் செங்குத்தான நிலையை விட்டுக்கொடுத்து, மல்லாந்த நிலைக்கு மாற வேண்டி இருந்தது. அதுவும் விந்தணுக்கள் போய் கருமுட்டையோடு கூடும் அந்த பல நிமிடங்களுக்கு அவள் அப்படியே கிடந்தாக வேண்டும்……. அவ்வளவு நேரத்துக்கெல்லாம் சும்மா படுத்து கிடக்க முடியாது, சுத்த போர்! என்று பெண் முரண்டு பண்ணினால் மொத்த மரபணு ஆட்டமும் குளோஸ்! ஆக பெண்ணை எப்படியாவது மதிமயக்கி, மல்லாந்து கிடப்பதை ஸ்வாரசியமாக்கினாலே ஒழிய மனித மரபணுக்கள் பரவ வாய்ப்பில்லை.

மனித இனத்திற்கு மட்டும் இப்படி ஒரு வினோத தேவை இருந்ததால் தான் இயற்கை மனிதர்களுக்கு மட்டும் என்று சில பிரத்தியேக மாற்றங்களை செய்துள்ளது. உதாரணத்திற்கு உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு மிருகத்தை எடுத்துக்கொள்ளுங்களேன். எலி, பூனை, நாய், சிங்கம், புலி என்று எந்த மிருகமாக இருந்தாலும், அவற்றின் தோலில் இருக்கும் ரோமம் இரண்டு பாலினத்திற்குமே ஒரே மாதிரியாக தானே இருக்கிறது. ஆண் எலிக்கு எவ்வளவு தோல் ரோமமோ, அதே அளவு தானே பெண் எலிக்கும். ஆனால் மனிதர்களில் மட்டும் அப்படி இருப்பதில்லையே. பருவம் அடைந்த பிறகு மனித ஆணுக்கு பெண்ணை காட்டிலும் அதிகமான உடல் ரோமம் முளைத்து விடுகிறதே. ஆக மனிதர்களை பொருத்த வரையில் பெண்ணுக்கு உடம்பில் முடி மிக குறைவு, இருப்பதும் மிக மிக சன்னமானதே. ஏன் இந்த வித்தியாசம்? நம் நெருங்கிய உறவுக்கார இனமான சிம்பான்சியில் கூட இந்த ரோம வித்தியாசம் கிடையாதே……பெண் ஆண் இரண்டுக்குமே ஒரே மாதிரியான தோல்முடி தானே அவற்றுக்கு. மனிதர்களில் மட்டும், அதிலும் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த வித்தியாசம்?

ரோமம் அடர்த்தியாக இருந்தால் தொடுதல் உணர்வை துல்லியமாய் கிரகிக்க முடியாது. இதுவே ரோமம் குறைவாக இருந்தால் தொடுகை உணர்வு சுகமாய் தோன்ற ஆரம்பிக்கும். ரோமம் குறைவான மனித பெண்ணின் தோலை தொட்டு, தடவி, வருடி, மென்மையாக உராசினால் போதும்….அவள் நரம்புகளில் மின்சாரம் அதிகமாய் பாய, மூளை கிளர்ச்சிக்குள்ளாகிறது, அவள் மதி மயங்கி ரொம்ப நேரத்திற்கு அறை தூக்கத்தில் படுத்தே கிடப்பாள். இந்த அவகாசத்திற்குள் அவளுக்குள் மரபணுக்களை முதலீடு செய்துவிட்டால், நிச்சயம் நல்ல மகசூல் கிடைக்குமே!

ஆனால் இதுலும் ஒரு பிரச்சனை இருந்தது. வெறுமனே பெண்ணின் உடல் ரோமங்களை நீக்கினால் மட்டும் போதாதே. அவள் தோலை பதமாய் கையாளும் பக்கவம் ஆணுக்கும் இருந்தாக வேண்டுமே. இது ஒரு புதிய தேவையாக உருவாகிவிட, இதுவே கலவியல் தேர்வுக்குண்டான ஒரு கோட்பாடாகவும் மாறியது. தன்னை மென்மையாக தொட்டு, வருடி, களிப்புற செய்த ஆண்களையே பெண்கள் தேர்வு செய்ய ஆரம்பித்தார்கள். காட்டு மிராண்டி மாதிரி தன்னை கையாண்ட ஆண்களை பெண்களை கழற்றிவிட ஆரம்பிக்க, கேட்க வேண்டுமா? கைபதம் இருந்த ஆண்களின் மரபணுக்கள் மட்டுமே பெருவாரியாக பரவின. 

இதனால் போக போக ஆண்களுக்கு கைகளின் லாவகம் அதிகரித்துக்கொண்டே போனது…………. இந்த லாவகம் எல்லாம் வெறுமனே பெண்களை தொட்டு தடவுவதற்க்காக மட்டும் இன்றி, மற்ற விஷயங்களுக்கும் பிரயோஜனப்பட்டதால், கல்லை தேய்த்து கருவிகளை உருவாக்க ஆரம்பித்தார்கள் மனிதர்கள். இந்த ஒரு சின்ன மாற்றம் மட்டுமே பெரிய பரிணாம வளர்ச்சியை தூண்டிவிட, அதுவரை, குரங்காய் இருந்தவர்கள் மனிதர்களாக மாற ஆரம்பித்தார்கள். இந்த நிலை மனிதர்களை நாம் இன்றும், ஹோமோ ஹேபிலிஸ் Homo habilis, (கைக்கார மனிதன்) என்றே அழைக்கிறோம் என்றால் பாருங்களேன், இந்த கைகளின் மகிமையை! இந்த பரிணாம வளர்ச்சிக்கு காரணமே மனித பெண்ணின் கலவியல் தேர்வு தான் என்றால் அது இன்னும் ஆட்சரியமாக இல்லை?
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.