Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி - அமெரிக்கா ஐரோப்பா புறக்கணிப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sri%20Lankan%20garment.JPG

சிறிலங்காவானது தனது ஆடை ஏற்றுமதிக்கான சந்தையை சீனாவில் விரிவுபடுத்திய போதிலும் கூட தொடர்ந்தும் சிறிலங்கா ஆடை ஏற்றுமதியானது வீழ்ச்சியடைந்துள்ளதாக வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

"சிறிலங்காவின் இவ்வாண்டு ஆடை ஏற்றுமதியானது கடந்த ஆண்டை விட வீழ்ச்சியடைந்துள்ளது" என சிறிலங்கா ஆடை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் திரு.யோகன் லோறன்ஸ் தெரிவித்துள்ளார். 

"சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதியானது நவம்பர் 2012 வரை ஏழு சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன" எனவும் யோகன் லோறன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். 

சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக இவரிடம் வினவியபோது "ஆடை ஏற்றுமதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான புதிய சந்தை வாய்ப்புக்களை நாம் ஆராய்ந்து வருகிறோம். ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்று மிகப் பெரிய சந்தை வாய்ப்பைக் கண்டறிவதென்பது மிகக் கடினமான பணியாகும்" என யோகன் லோறன்ஸ் பதிலளித்துள்ளார். 

"எதுஎவ்வாறிருப்பினும், ஏனைய நாடுகளின் உயர் உற்பத்தி செலவீனத்தால் நாம் சீனாவிடமிருந்து சில ஆடை ஏற்றுமதிக்கான கட்டளைகளைப் பெற்றிருந்தபோதும் அவை அவ்வளவு பெரிய சந்தை வாய்ப்புக்கள் அல்ல" எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

பாகிஸ்தானுக்கான ஆடை ஏற்றுமதி தொடர்பாக திரு.யோகன் லோறன்சிடம் கேட்டபோது, "பாகிஸ்தானிடமிருந்து நாங்கள் ஆடை ஏற்றுமதிக்கான எதுவித கட்டளைகளையும் பெற்றுக் கொள்ளவில்லை. பாகிஸ்தான் பெருமளவில் டெனிம் ஆடைகள் மற்றும் காலுறைகளையே அதிகம் ஏற்றுமதி செய்கின்றன. ஆனால் இவை சிறிலங்காவில் உற்பத்தி செய்யப்படவில்லை" எனவும் அவர் பதிலளித்தார்.

செய்தி வழிமூலம் : Fibre2fashion News Desk - India

 

http://www.puthinappalakai.com/view.php?20130126107666

உலகின் 20ஆவது பெரிய இராணுவத்தை கட்டி ஆள பெரிய பணம் தேவை.

 

அதற்கு மேற்குலத்திற்கான ஏற்றுமதி முக்கியம்.

அதிலும் ஆடை ஏற்றுமதி - மிக முக்கியம்.

 

புறக்கணி சிங்களத்தை !

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி - ஏற்பட்டு நாசமாகப்போய் குட்டிசுவராகி அழுந்திப்போகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி - அமெரிக்கா ஐரோப்பா புறக்கணிப்பு?

நல்ல விஷயம்.

சீனாவிற்கு ஆடை ஏற்றுமதி செய்வது, எஸ்கிமோவிற்கு ஐஸ் விற்பது போல்.

 

சீனாவில் பாவிப்பதற்கல்ல. வாங்கி விற்பதற்கு. அல்லது "Made in China" என்று label மாற்றவே.

 

சீனா நிரைய உள்ளடைகள் செய்து விற்கும் நாடு. பாகிஸ்த்தான் டெனிம் மட்டும் ஏற்றுமதி செய்வதால் label மாற்றுவது கஸ்டம்.

 

மேலும் சீனாவின் கைத்தொழில் சிறுதொழில் பொருட்களை இலங்கை என்று பெயர் போட்டு பரஸ்பரம் பண்ட மாற்று செய்யலாம். அது பாகிஸ்த்தானுடன் முடியாது.

மூடப்பட்ட ஒரு தொழில்சாலை

 

A-garment-factory.jpg

 

Workers.jpg

GSP+Gra.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.