Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசரமாக நடந்த நாய்களின் மாநாடு

Featured Replies

கட்டாக்காலி நாய்களை அழிக்கின்ற நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் என்ற செய்தியை அறிந்த நாய்கள் அவசரமாக மாநாடு ஒன்றை நடத்தின. மாநாட்டில் வீட்டுநாய்களும் தெருநாய்களும் கலந்து கொண்டிருந்தாலும் தெரு நாய்களே அதிகமாக பங்கேற்றன. உயர்ரக நாய்கள் பகிஷ் கரித்தது போல மாநாட்டில் பங்கேற்கவில்லை. மாநாட்டிற்கு தலைமை தாங்கிய நாய்க்கூட்டத்தலைவர் கூட்டத்தை ஆரம்பித்தார். அன்புக்குரிய எனதருமை சகோதர நாய்களே! மனிதர்களுக்கே நன்றியின் பெருமையை உணர்த்திநிற்கும் என் இனமே எங்கள் குல தெய்வமாகிய வைரவப் பெருமானை ஒரு நிமி டம் வணங்கிக்கொள்வோம் என்றார்.

 

 

அடுத்தாக வீதிவிபத்துக்களிலும் நீர் வெறுப்பு நோயினாலும் மரணித்து போன எங்கள் உறவு களுக்காக மோகன ராகத்தில் அபரக் கீதம் இசைப் போம் என்றார். தலைவரின் அறிவிப்பையடுத்து எல்லா நாய்களும் குந்தியிருந்து வானத்தை நோக்கியவாறு ஊளையிட்டு தங்கள் அஞ்சலியை செலுத்திவிட்டு அமர்ந்துகொள்ள, நாய்த்தலைவர் உரையாற்றினார். அன்புக்குரிய என்னருமை உறவுகளே! எங்கள் இனத்திற்கு ஆபத்து வந்துவிட்டது. அதிலும் குறிப்பாக தெருக்களில் வாழ்கின்ற எங்கள் இனத்திற்குப் பேராபத்து. ஊடகங்களில் வந்திருக்கக் கூடிய செய்தி களின்படி, எங்களுக்கு எந்த நேரத்திலும் மர ணம் சம்பவிக்கலாம். எனவேதான் இந்த மா நாட்டை அவசரமாகக் கூட்டியுள்ளோம்.

 

மகிந்த சிந்தனையின் கீழ் எங்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு நன்றிசெலுத்தும் வகையில் எங்களில் பலர் யாழ்ப்பாணத்திலிருந்த இராணுவக் காவலரண்கள் பலவற்றில் கடமையாற்றியுள்ளோம். எங்களிடம் இருக்கின்ற அபரிதமான கேட்கும் சக்தியால் மெல்லிய சலசலப்புக்கும் குரல் கொடுத்து படைவீரரை விழிப்படையச் செய்தோம். ஆனால் சந்திகளிலிருந்த இராணுவக் காவலரண்கள் குறைக்கப்பட்டதன் காரணமாக நாங்கள் தொழில் இழந்தோம். அதனால் எங்கள் சீவியம் கடினமாகிக் கொண்டது என்பது உண்மைதான். அதற்காக தெருநாய்கள் என்ற பேரில் எங் களைப் படுகொலை செய்வதென்பது எந்தவகையிலும் நியாயமாகாது. நாங்கள் விரும்பி தெருவுக்கு வந்தவர்கள் அல்ல. எங்களை எங்கள் எஜமானர்கள் தங் கள் வீடுகளிலிருந்து துரத்திவிட்டனர்.

 

அதுமட்டுமல்ல எங்கள் இனத்தின் பெண் சிசுக் களை தெருக்களில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் எங்கள் இனத்தைச் சேர்ந்த நாய்க்குட்டி கள் மனிதர்கள் ஓடித்திரியும் வாகனச் சில்லு களின் மிதிப்புக்கு ஆளாகின்றனர். இந்தக்கொடுமை இன்னமும் நீடிக்கின்றது. பெண் நாயை வளர்த்து தமக்குத் தேவையான ஆண் குட்டிகளை எடுத்துக்கொண்டு பெண் குட்டிகளை தெருவில் வீசுகின்ற கொடுமைக்காக மனிதர்களுக்குக் கொடுக்கின்ற தண்டனைதான் என்ன? எங்கள் வழிபடுகடவுள் வைரவரும் இதனை மன்னிப்பாரா?

 

இவ்வாறு நாய்களின் மாநாட்டில் அதன் தலைவர் ஆக்ரோசமாக உரையாற்றிக் கொண் டிருந்தார். (நாளை வரும்)

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=457:2013-01-26-04-52-49&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

  • தொடங்கியவர்

அவசரமாக நடந்த நாய்களின் மாநாடு  

 

கட்டாக்காலி நாய்களை அழிப்பதென்ற தகவலையடுத்து தெருநாய்களும் வீட்டு நாய் களும் அவசர அவசரமாக நடத்திய மாநாட்டில் தலைவர் ஆற்றிய உரை நேற்று இப்பகுதியில் வெளிவந்திருந்தது. நாய்களின் மாநாட்டில் ஆக்ரோசமாக உரையாற்றிய நாய்க் கூட்டத் தலைவர் தொடர் ந்து உரையாற்றுகையில், நாய்கள் கடைசிப் பிறப்பென்பதால் எங்களின் மரணம் பற்றி யாழ்ப் பாண மக்களுக்கு இம்மியும் கவலையில்லை. ஆனால் எங்கள் இனத்தின் காவலால்தான் எத்தனையோ பேர் நிம்மதியாக உறங்குகிறார்கள்.


இவர்களில் பலரின் உயிர்களையும் பெறுமதி யான உடைமைகளையும் காப்பாற்றிய பெருமை எங்களையே சாரும்.  நிலைமை இதுவாக இருக்க, எங்களைப் படுகொலை செய்வதென்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

 

ஓ! அன்புக்குரிய யாழ்ப்பாண மக்களே! இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த ஓர் காளை மாட்டின் உயிரை காப்பாற்றுவதற்காக நீதி மன்றம் சென்ற நீங்கள், எங்கள் உயிரை மட்டும் காப்பாற்றுவதற்கு ஏன் முயற்சிக்கவில்லை? ஆக, யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் வாழ்ந்த சட்டத்தரணி சண்முகநாதன் என்ற அன்பர் ஒருவர், தன் வளர்ப்பு நாய்க்கு யாழ்ப்பாண மாந கர சபை மரண தண்டனை கொடுத்ததை எதிர்த்து வவுனியா நீதிமன்றில் யாழ். மாநகர சபைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார். யாழ்ப்பாணத்தில் நீதிமன்றங்கள் இயங்காத காலத்தில் வவுனியாவுக்குச் சென்று அங்குள்ள நீதிமன்றில் வழக்குத் தாக்கல்செய்த சட்டத் தரணி சண்முகநாதனின் ஜீவகாருண்யம் இங்கு வேறு யாருக்கும் இல்லையா என்ன? அந்த பெரியார் இறந்து போனதால் எங்களு க்கான தீர்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.


சிவபூமி என்று போற்றப்பட்ட யாழ்ப்பாணத்தில் எங்கள் தொடர்பில் எவரும் இரக்கம் காட்டாமை வேதனை தருகிறது. அன்புக்குரிய யாழ்ப்பாண மக்களே! யுத்த சூழலால் நீங்கள் சொந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்தபோது எத்துணை துன்பப்பட்டீர்கள். அதுபோலத்தான் உங்கள் வீட்டில் வளர்த்த எங்களை தடியால் அடித்து தெருவுக்கு அனுப்பிய போது நாங்களும் வேதனைப்பட்டோம்.

 

தவறு உங்கள் பக்கம் இருக்கும்போது எங் களுக்கு தண்டனை கொடுப்பது நியாயம் என்று நினைக்கிறீர்களா?  டெங்கு பரப்பும் நுளம்பு பெருகுகின்ற சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினால் மனிதர்களுக்குத் தண்டனை. டெங்கு நுளம்புக்கு விடுதலை. வாகனங்களுக்கு வரி அனுமதிப் பத்திரம் எடுக்காவிட்டால் வாகன உரிமையாளர்களுக்குத் தண்டனை. ஆனால் எங்களை வளர்க்கின்ற வர்கள் எங்களுக்கு ஏஆர்வி மருந்தேற்றி எங் களை நல்ல முறையில் பராமரிக்காவிட்டால் எங்கள் எசமானருக்குத் தண்டனையில்லை. மாறாக எங்களுக்குத் தண்டனை அதுவும் மரண தண்டனை. ஓ!யாழ்ப்பாணத்தின் உயர் பண்பாட்டுப் பெருமைக்குரிய மக்களே! டெங்கு நுளம்புக்கு ஒரு நீதி. எங்களுக்கு மறுநீதியா?

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=466:2013-01-27-05-56-45&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

  • கருத்துக்கள உறவுகள்

நாய்களின் மாநாட்டுப் பந்தலில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள். :D  :lol:

 

Evening-Tamil-News-Paper_17542231083.jpg2bcc7ebd-6f18-4238-bd81-5b83e9c884eb_S_s

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலும் இது ஒவ்வொரு ஞாயிறும் நடப்பதாக கேள்வி

 

நடப்பவைகளை  தெரிந்து வைத்திருப்பதால் அந்தப்பக்கம் போவதில்லை............

ஒரே கடிபாடுதானாம்.......

  • தொடங்கியவர்

அவசரமாக நடந்த நாய்களின் மாநாடு

 

மாநாட்டுக்கு தலைமை தாங்கிய நாய்க் கூட் டத் தலைவரின் ஆக்ரோசமான உரைக்கு சபையில் பலத்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
நாய்களின் ஆதரவு ஆரவாரங்களுக்கு மத்தியில் மாநாட்டுத் தலைவர் பின்வரும் தீர் மானங்களை முன்வைத்தார். நாய்களை வளர்ப்பவர்கள், அந்தந்த உள் ளூராட்சி சபைகளில் அனுமதி பெறுவதுடன் காலத்துக்கு காலம் எங்களுக்கு நீர்வெறுப்பு நோய் வராமல் தடை மருந்து ஏற்ற வேண்டும். இதனைக் கிரமமாக செய்வதை உறுதிப்படுத் தும் பொருட்டு ஒவ்வொரு உள்ளூராட்சி அமைப்பு களும் இதற்கென பணியாளர்களை நியமிக்க வேண்டும். அதேநேரம் இந்தப் பணியாளர்களிடம் எங் கள் தொடர்பில் (நாய்கள்) முழுமையான விபரங் கள் இருக்க வேண்டும்.

 

எங்களில் யாரேனும் இறந்தால் அது தொடர்பில் உரிய பணியாளர்களுக்குத் தெரியப்படுத்தி எங்கள் இறப்பை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு குடும்பப் பதிவு அட்டையிலும் எங்கள் தொடர்பான விபரத்திற்கு இடம் ஒதுக்கி அத னைப் பதிவு செய்வதும் அவசியமாகும். அத்துடன் எங்களை யாரேனும் தெருவுக்கு அனுப்பினால் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன் றின் முன் நிறுத்துவதும் கட்டாயமானதாகும். இவையாவற்றுக்கும் மேலாக பெண் நாய் வளர்ப்பவர்கள் கர்ப்பத்தடை மருந்துகளை ஏற்றுதல் மூலம் அல்லது சத்திர சிகிச்சை மூலம் கருத்தடை செய்தல் வேண்டும். இதனைத் செய்வதன் மூலம் நாய்க்குட்டிகளை வீதிகளில் வீசுகின்ற கொடுமை நிறுத்தப்படும். இவற்றைச் செய்வதில் மாநகர சபைகள், பிர தேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகள் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும் என்ற தீர்மானங்களை இவ்விடத்தில் முன் வைப்பதுடன், தெரு நாய்கள் தொடர்பில் பொருத் தமான ஜீவகாருண்ய செயற்றிட்டங்களை அமுல்படுத்துங்கள் என வினயமாக வேண்டு கிறோம்.

 

அன்புக்குரிய யாழ்ப்பாண மக்களே! தெரு நாய்களால் உங்களுக்கு பல்வேறு இடைஞ்சல் கள், வீதி விபத்துக்கள் ஏற்படுகிறது என்பதை நாம் நிராகரிக்கவில்லை. ஆனால், நாங்கள் தெருவுக்கு வருவதற்கு நீங்கள் தானே காரணம். நீங்கள் அதிக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.  ஆனால், எங்கள் பெருக்கத்தை கட்டுப்படுத் துவதற்காக கருத்தடை செய்ய மறுக்கிறீர்கள்-மறக்கிறீர்கள். ஆக, உங்களின் காவலனாக இருக்கும் எங் களை நீங்கள் காப்பாற்றாவிட்டால் யார்தான் காப்பாற்ற முடியும்? எனவே, எங்களை வீதியில் விடாமல்,எங்கள் சிசுக்களை தெருக்களில் வீசாமல் பராமரித்துக் கொள்ளுங்கள் என்று தயவாகக் கேட்டுக் கொள்கிறோம் என தலைவர் கூறியதும், மாநாடு நிறைவு பெற்றது.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=468:2013-01-28-10-09-41&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.