Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு எல்லை கிராமங்கள் சிங்களமயம்-தமிழர் வெளியேறும் நிலையில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முல்லைத்தீவு எல்லை கிராமங்கள் சிங்களமயம்-தமிழர் வெளியேறும் நிலையில்!
ஜன 27, 2013
     
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்கள் சிங்கள மயப்படுத்தப்பட்டு தொழில் வளங்கள் சுரண்டப்படும் நிலையில் மிகப்பெரும் வாழ்வாதார நெருக்கடியினை தமிழர்கள் எதிர்நோக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள் இதனால் பூர்வீக வாழ்விடங்களை விட் டு வெளியேறும் நிலை தோற்றுவிக்கப்பட்டு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
1984ஆம் ஆண்டு இந்தக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் 27வருடங்களின் பின்னர் 2011 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டனர். இந்த மக்களுடைய வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் கடல்வளம் முழுவதும் 1984 ஆம் ஆண்டின் பின்னர் குடியேறிய சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 
குறிப்பாக கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 10 இற்கும் குறைவான சிங்கள மீனவர்களே தற்காலிகமாக தங்கியிருந்தனர். எனினும் தற்போது 32 5 சிங்கள மீனவர்கள் குடும்பங்களுடன் நிரந்தரமாகத் தங்கியிருப்பதுடன் அவர்களில் 250 வரையான குடும்பங்களுக்கு யுத்தத்தின் பின்னர் நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்தும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
 
எனினும் இந்த 325 குடும்பங்கள் தங்கியிருக்கும் நிலம் மற்றும் சிங்கள மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பாடசாலை தேவாலயம் தற்போது அமைக்கப்பட்டுவரும் விகாரை என அனைத்தும் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் காணிகளுக்கான ஆவணங்களை தமிழ் மக்கள் வைத்திருக்கின்றனர்.
 
இந்நிலையில் அதிகளவு வளமான கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் தமிழ் மக்கள் கடலில் இறங்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. இதேபோல் கொக்கிளாய் ஆற்றுப்பகுதியும் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றிற்கெனத் தனித்துவமான யாப்பு ஒன்றே உள்ளது. இதன் பிரகாரம் இந்த ஆற்றில் இயந்திரப்படகுகள் பாவிக்கக் கூடாதென அரசாங்கமே குறிப்பிட்டுள்ளது. ஆனால் தற்போது தண்ணீர் தெரியாதளவிற்கு இயந்திரப்படகுகள் ஆற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
 
இந்தக் கடலில் பயன்படுத்துவதைப் போன்று கரைவலை சுருக்குவலை போன்ற தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளும் இங்கு கையாளப்படுகின்றன. இந்நிலையில் 3பேர் கொண்ட ஒரு படகில் ஒரு நாளைக்கு 750ரூபா பெறுமதியான இறாலையே தற்போது பிடிக்க முடிகின்றது. அதற்கு மேல் எதுவுமே கிடைப்பதில்லை. இதனால் 750ரூபாவில் மூன்று குடும்பங்கள் வாழ்க்கை நடத்துவது எப்படி? மேலும் நாயாறு கிராமத்தில் கடந்தாண்டின் நடுப்பகுதியில் 168 சிங்கள மீனவர்கள் வந்து தங்கினர்.
இதில் 36 மீனவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜிதசேனாரத்ன குறிப்பிட்டதுடன் ஏனையவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டுமென உத்தரவிட்டதுடன் இந்த விடயத்தை தமிழ் ஊடகங்கள் சிலவற்றுக்கும் செய்தியாகக் கொடுத்திருந்தார்.
 
ஆனால்இ இந்த மீனவர்கள் எவரும் இதுவரை வெளியேற்றப்படாத நிலையில் தற்போது மேலதிகமாக 50வரையான சிங்கள மீனவர்கள் வந்து தங்கியிருக்கின்றனர். எனினும் இந்தப்பகுதிக்கு கிராமசேவகர் கூட செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.
 
இதேபோல் புலிபாய்ந்தகல் பகுதியிலும் பருவகால தொழிலுக்காக சிங்கள மீனவர்கள் வருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் மற்றும் தங்கியிருப்பவர்கள் அனைவரும் அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் விடப்பட்ட தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளைப் பயன்படுத்தியே தொழில் செய்கின்றனர். எனினும் மாவட்டத்திலுள்ள பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் கடற்றொழிலாளர் சம்மேளனம் போன்றன எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
 
ஒருமுறை சட்டவிரோதமான கடற்றொழில் முறையினைப் பயன்படுத்தி தொழில் செய்த சிங்களஇ முஸ்லிம் மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். எனினும் கைதுசெய்யப்பட்டு சில நிமிடங்களில் அங்கு கூடிய கொக்கிளாய் முகத்துவாரம் பகுதி மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளைத் தாக்குவதற்குச் சென்றுவிட்டனர்.
இதனால் கைதுசெய்யப்பட்ட அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.
இது மட்டுமல்லாமல் அத்துமீறி குடியேறியுள்ள சிங்கள மீனவர்கள் தற்போது தமது குடித்தொகை பெருக்கத்திற்கேற்ப மேலதிக காணிகள் வழங்கப்படவேண்டுமெனவும் மீள்குடியேறியுள்ள தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் அத்தனை உதவிகளும் தமக்கும் வழங்கப்படவேண்டுமெனவும் கேட்டுவருகின்றனர். 
இந்நிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொடுக்கப்படும் பொருட்கள் உதவிகள் குறிப்பாக கடற்றொழில் உபகரணங்கள் சிங்கள மீனவர்களுக்கும் வழங்கப்படுகின்றது. தொழில் செய்யும் இடங்கள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு வளங்கள் முழுமையாகச் சுரண்டப்படும் நிலை
 
மற்றும் இந்தப்பகுதி மக்களுக்குச் சொந்தமான வயல் நிலங்கள் விடுவிக்கப்படாமை சிங்கள மீனவர்களிடமுள்ள தொழில் வளங்களுடன் சிறிய வள்ளங்களை வைத்துள்ள தமிழர்களால் போட்டியிட முடியாமை போன்றவற்றிதூல் சுமார் 5ற்கும் மேற்பட்ட எல்லைக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தாம் மிகப்பெரும் வாழ்வாதார நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
 
இந்தக் கிராமங்களில் குறிப்பாக கொக்கிளாய் கிழக்கு மேற்குப் பகுதியிலுள்ள 37விதவைகள் கருணாட்டுக்கேணியிலுள்ள 41விதவைகள் கொக்குத்தொடுவாய் வடக்கு தெற்கு மத்தி ஆகிய பகுதிகளிலுள்ள 79 விதவைகள் என மொத்தமாகவுள்ள 157விதவைக் குடும்பங்கள் நிர்க்கதி நிலையில் உள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.