Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழரின் அழுத்தங்களை ஏற்று சர்வதேசம் செயற்படக்கூடா - வெளிவிவகார அமைச்சர்

Featured Replies

புலம் பெயர் தமிழர்கள் வழங்கும் அழுத்தங்களை ஏற்றுக் கொண்டு சர்வதேசம் செயற்படக் கூடாது. புலம் பெயர் தமிழர்கள் தாங்கள் வாழுகின்ற நாடுகளில், தங்களது நாட்டு அரசுக்கு இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கின்றனர்.

எனவே இந்த அழுத்தங்களினால், எமது நாட்டின் உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதை ஒரு போதும் நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இவ்வாறு இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்விவ காரங்களில் சர்வதேச தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. சில நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் அழுத்தங்கள் காரணமாக, சில நாடுகள் இலங்கை மீது கடுயைமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. எனினும், வெளிநாட்டு சக்திகளின் அரசியல் உதை பந்தாக இலங்கை செயற்படாது. பெரிய வளங்கள் மற்றும் ஊடக வலையமைப்பின் ஊடாக இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க சில சக்திகள் முயற்சித்து செய்து வருகின்றன.

பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கிய நாடு என்ற ரீதியில் உலக சமூகம் இலங்கைக்கு அனுதாபத்துடன் கூடிய ஒத்துழைப்பையே வழங்க வேண்டும்.


வெளிநாடுகளில் உள்ளவர்களின் நோக்கங்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க இடமளிக்க முடியாது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமே தீர்வு காணமுடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பின்றி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகளைத் தொடர முடியாது என்று ஜி.எல்.பீரிஸ் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=728301795227214513

அர்சுனுக்கு எதிராக சென்று கனேடிய புலம் பெயர் மக்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று பிரிசு கூறியிருப்பது வருந்தத்தக்கது. :D

 

இதில் பீரிசு பெயரை மட்டும் சொல்லாமல் கனடவை நேராகவே தாக்குகிறார். கனடாவின் புலம் பெயர் தமிழ் மக்களின் அழுத்தத்தால் பொதுநலவாய மகாநாட்டை குழப்பி தனக்கு வரத்தக்க கமிசன்களை இல்லாமல் செய்கிறது என்கிறார்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் மக்கள் பெரும் சக்தி  என்று அவரே ஒத்துக்கொள்கின்றார்.

நாம்.......................???.

  • தொடங்கியவர்

ஏன் தமிழர்கள் இடம்பெயர்ந்தார்கள்?

 

அவர்கள் இடம்பெயராமல் இருந்திருந்திருந்தால் ... வெளி உலகிற்கு இனவழிப்பு பற்றி ஒன்றுமே தெரிந்திருக்காதே  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.