Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

37 நாள் உண்ணவிரதப்போராட்டம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிவு

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

பிரான்ஸ் தமிழீழ மக்களின் 37 நாட்கள் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்.

பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களால் இன்று முதல் 37 நாட்கள் சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழீழ தாயகத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் கொலை வெறியாட்டங்களை அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கிலும் விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடைக்கு ஆட்சேபம் தெரிவித்தும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத கவன ஈர்ப்பு போராட்டம் சுழற்சி முறையில் நடைபெறவுள்ளது.

இன்று காலை 10.15 மணியளவில் தலைநகர் பரிசில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகாமையில் தமிழீழ தேசியக் கொடியும் பிரான்ஸ் நாட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டு அடையாள உண்ணாவிரத கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் தமிழீழ மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேராசியர் யூலியா அவர்கள் பிரஞ்மொழியில் உருக்கமான உரையை வழங்கினார்.

இதேநேரம் பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பினர் பாரிஸ் நகரில் உள்ள மருத்துவ மனையில் இரத்ததானம் செய்துள்ளனர்.

உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டுள்ள தமிழீழ மக்கள் சிறீலங்கா படையினரின் படுகொலைகளைத் தெரிவிக்கும் பதாதைகளை தாங்கிவாறு தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதோடு பிரஞ்மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரத்தினையும் வழங்கியுள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நாட்டு யாழ்கள உறுப்பினர்களே, 37 நாள் போராட்டச் செய்திகளினை யாழில் பதித்தால் அதை வாசிக்கும் எமக்கும் உணர்வுகள் கூடும். செய்வீர்களா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

அனேகமாக தினமும் ரி.ரி.என் தொலைக்காட்சி செய்தியில் இதுபற்றிக்கூறுவார்கள்.

அத்தோடு கந்தப்பு அவர்கள் கூறியதுபோல் தினமும் அங்கு நடப்பவற்றை யாராவது இங்கும் வந்து தொடர்ந்து தரவேண்டும் என்பதே எனது விருப்பமும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா.....

இந்தப் போராட்டம் ஆரம்பமான அன்றுதான் ரி.ரி.என்னில் அறிவித்தார்கள் என்று நினைக்கிறேன். ஏன், இந்தப் போராட்டம் ஓரிரு நாள் அவகாசத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டதா???? ஏன், போதியளவு ஊடக விளம்பரங்கள் கொடுக்கப்படவில்லை?????

இப்போராட்டம் பற்றிய காட்சிகளை ரி.ரி.என்னில் காட்டும் போது சிலர் வரிசைக்கு நின்று படம் தொடர்ந்து எடுப்பதாக தெரிகிறது. ஏன், இந்தப் போராட்டத்தை பிரஞ்சுப் பூசாரிகள் சரியான விதத்தில் எம்மக்களிடம் கொண்டு செல்லவில்லை???? ஏன், எம்மக்களின் அவலங்கள் இப்போராட்டத்தில் சரியான முறையில் காண்பிக்கப்படவில்லை?????

இப்போராட்டத்தை பிரஞ்சு ஊடகங்களுக்கு கொண்டு செல்ல சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தால் என்ன????? இங்கு நான் வன்முறைகளைக் குறிப்பிடவில்லை!!! சட்டத்திற்கு உட்பட்டே பலவற்றைச் செய்யலாம்!!!!

....

இப்படியான பல கேள்விகளுக்கு சரியான பதிலில்லையாயின், அல்லது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாயின், இப்போராட்டத்தை இப்படி நடத்துவதை விட, பிரான்சிலுள்ள எதாவது எம்மவர்களின் கோயில் ஒன்றுக்குள் நடத்திவிட்டு, நாலு கோசங்களை தமிழிலும் போட்டு, நாலு தமிழ்க் கவிதைகளையும் வாசிக்கச் சொல்லிவிட்டு எழும்பி வரலாம்!!!!!!!!

ஈழ்பதீஸ்வரா!!! அடியேனின் மண்டையில் பட்டதைச் சொன்னேன்!!!!

அரோகரா .....

வாயடிக்க தான் நாமா?

இப்படி ஒரு நல்ல விடயத்திற்கு ஒருவரும் பதில் சொல்லாமல் இருக்கின்றீர்களே??

இங்கு எழுதுவது எப்படி அவர்களை சென்றடையும் என நினைக்காதீர்கள்...

நாம் கட்டாயம் உடனிருக்க வேண்டும்

அனைவரும் ஒன்று திரண்டு...உறவுகளுக்கு ஆதரவு குடுப்போம்

இப்பதானே எங்களுக்கு தெரியும்

பிரான்சில இருக்கிற உறவுகளுக்கு எமது ஆதரவை எல்லாரும் தெரிவிக்கலாமே

இதைப்பற்றி பிரான்சிலுள்ள எமது உறவினர்களுக்கும் தெரிஞ்சவைக்கும் சொல்லி அவர்களையும் கலந்து கொள் ஊக்கப்படுத்தலாமே

ஆமாம் பாரீஸில் இருக்கும் எனது தம்பி இரண்டு தரம் அங்கு போயிருந்தார்...பெரிசாக கூட்டமில்லையெண்டு சொல்லி கவலைப்பட்டார்...

வேறு செய்திகள் அறியும்போது தெரியப்படுத்துகிறேன்.

நன்றி யூ.கே பெடியன்..தொடர்ந்து செய்திகளை எதிர்பார்க்கிறோம்

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள். அங்கு நடப்பவற்றை உடனுக்குடன் கூறினால் நல்லா இருக்குமே.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தேசியத்தலைவரே எனது தலைவர் - பிரான்சின் பொன்டி மாநகரசபை அலோசகர் மிஸ்ரிபியர்

http://sankathi.com/content/view/3905/26/

பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களின் 21 வது நாட்களாக,தொடரும் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்

தமிழர் தாயகத்தில் நடைபெறும் தமிழ்மக்களல் மீதான படுகொலைகளை கண்டித்து பிரான்ஸ்ல் நடாத்தப்பட்டு வரும் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் 09-07-2006 வியாழக்;கிழமை 21வது நாளாக காலை 10:00 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலின் பின் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

france-una-1.jpg

20 நாளான இன்று வில்லியலுபெல் தமிழ்ச்சங்த்தினர் கலந்து சிறப்பித்தனர். இந் நாளில் நவாலித் தேவாலையத்தின் மீது குண்டு வீசிப்படுகொலை செய்யப்பட்டதின் 11ம் ஆண்டினை இன்நாளில் நினைவுகுறப்பட்டது.

PICT0038.gif

இந்த வெளிப்பாட்டினை கலையின் ஊடாக இச்சங்கக் கலைஞர்கள் தமிழ்ச்சோலை மாணவர்கள் வழங்கியத்தனர்.

PICT0061.gif

PICT0052.gif

பதிவு.

பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் 25 வது நாளில்

25-2.gif

25-1.gif

பதிவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2gb4.jpg

3vk9.jpg

4bu1.jpg

5ao0.jpg

6wn7.jpg

na1jc3.jpg

na2yy3.jpg

na3ff3.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.