Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடு­த­லைப்­பு­லிகள் தங்­க­ளைத் ­தாங்­களே அழித்­துக்­கொண்­டார்கள் : இரா. சம்பந்தன்

Featured Replies

1. கருணான்ட பிரிவிற்கு பிறகாவது புலிகள் கொஞ்சம் சுதாகரித்திருக்கலாம்...அவ்வளவு சனமும்,போராளிகளும் சாகமல் தப்பித்திருப்பார்கள்...இவ்வளவு அழிவும் வந்திருக்காது..நீண்ட கால ஆயுதப் போராட்டம் சரிவராது என்ட முடிவு கருணாவின் பிரிவோட தலைவருக்கு தோன்றியிருக்குமாயின் அப்பவே அமைப்பை கலைத்து விட்டு மறைந்திருக்கலாம்.
 
2. மறைந்திருந்து விட்டு நீண்ட காலத்திற்கு பிறகு புலம் பெயர் மக்களோடு சேர்ந்து அரசியல் ரீதியாக எதாவது முயன்றிருக்கலாம்...முப்பது வருடமாக போராடிய அமைப்பு விரல் சொடுக்கும் நேரத்தில் அழிந்து போனதென்பது கொடுமையிலும் கொடுமை

 

நீங்கள் பொதுப்பட ஒரு கருத்தை சொல்வது பேறு விடையம். சம்பந்தரின் பேச்சின் கீழ் ஒரு கருத்தை போட்டு விவாதிப்பது வேறுவிடையம்.

நீங்கள் முன்னால் போன கருத்துக்களை வாசிக்கவில்லை, அல்லது பொருள் இல்லாவிட்டாலும் அதில் சில கருத்துக்களுக்கு வெறுமனே மறுப்பு எழுத விரும்புகிறீர்கள்.

 

கருணா பிரிவால் புலிகள், தோற்றார்கள் என்று பொருள்படவோ, போராட்டத்தை புலிகள், ஆரம்பித்தோ, அல்லது தொடர்ந்திருக்கப்படாதென்றோ, அல்லது இன்றைய புலம் பெயர் மக்களின் ராஜதந்திர பாதை 2004 ல் தலைவருக்கு திறந்திருந்திருந்ததென்றோ, அல்லது இதை செய்து தீர்வை பெற்று இருக்கலாம் என்றோ பொருள் பட சம்பந்தர் பேசவில்லை. நீங்கள் வேறு எதைவது இதில் சொல்ல முயன்றிருந்தால் அதை விளக்க முயவில்லை.( புலம் பெயர் மக்களின் போராடத்தை நக்கல் அடிப்போர், கொச்சைப் படுத்துவோர், அதை தொடந்து செய்து வெற்றி காணலாம் என்று பொருள்பட கருத்து எழுத்தினால் அது தன்னைதான் எதிர்ப்பது போலாகும். வரவு செலவு திட்ட விவவாதம் வரைக்கும் கூட்டமைப்பை தொடந்து சாடிய அர்ச்சுனும் அதில் சம்பந்தரின் பேச்சின் பொருளை விளங்காமல் சம்பந்தர் புலிஎதிர்ப்பில் இறங்கி தனது கன்னையில் வந்துவிட்டதாக குழம்புகிறார்.)

 

சம்பந்தர் "புலிகள் தாங்களால் தோற்றார்கள்" என்பதை இராமனின் முடிசூட்டுவிழாவில் இலக்குவணன் சிரித்ததாக கம்பர் எழுதியது போல ஒவ்வொருவரும் தனக்கேற்ற விளக்கம் அதற்குக்கொடுக்காலாம் என்று்திறந்த நிலையில் வைத்து அவர் அதை பேசவில்லை. அவர் தெளிவாக தான் சொல்லும் விளக்கத்திற்கு மேலே தனது பேச்சுக்குள் யாரும் விளக்கமொன்றை திணிப்பதை விரும்பவில்லை.  திரும்ப ஒரே விடயத்தை இரண்டாவது முறை அதே பாணியில் சொல்லியிருப்பதன் பொருள் "எனது பேச்சு மற்றயவர்களின் பொழிப்புரைகளால் அடை மொழிகள் ஏற்றபடத்தேவை இல்லாது" என்று காட்டவே.

Edited by மல்லையூரான்

விடு­த­லைப்­பு­லிகள் தங்­க­ளைத் ­தாங்­களே அழித்­துக்­கொண்­டார்கள் : இரா. சம்பந்தன்

 

விடுதலைப் புலிகள் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டார்கள் மற்ற எல்லோரும் பிழைத்துக்கொண்டார்கள்?

 

புலிகளை தமிழர்களில் இருந்து பிரித்து பிறிதொரு சக்தியாக முன்னிறுத்தி கருத்துக்கூறுவது அபத்தமானது. தமிழர்கள் தங்களை தாங்களே அழித்துக்கொள்கின்றார்கள் அவர்களுக்குள் புலிகளும் அடக்கம்.

 

தங்களை தாங்களே அழிக்கின்றோம் என்ற விளக்கம் கூட அவர்களிடம் இருக்கவில்லை .

 

இது உண்மையான கூற்று ஆனால் இது புலிகளுக்கு மட்டும் பொருத்தமில்லை எல்லோருக்கும் பொருந்துகின்றது. இப்போதும் இதே நிலைதான்.

 

விடுதலைப் புலிகள் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டார்கள் மற்ற எல்லோரும் பிழைத்துக்கொண்டார்கள்?

 

புலிகளை தமிழர்களில் இருந்து பிரித்து பிறிதொரு சக்தியாக முன்னிறுத்தி கருத்துக்கூறுவது அபத்தமானது. தமிழர்கள் தங்களை தாங்களே அழித்துக்கொள்கின்றார்கள் அவர்களுக்குள் புலிகளும் அடக்கம்.

 

 

இது உண்மையான கூற்று ஆனால் இது புலிகளுக்கு மட்டும் பொருத்தமில்லை எல்லோருக்கும் பொருந்துகின்றது. இப்போதும் இதே நிலைதான்.

குறவர், குறத்தி சாத்திரம் யாழில் மலிவு விற்பனை.

 

நாடி பிடித்து சொல்லவல்ல மருத்துவர்களுக்கு மருத்துவம் மட்டும் தான் தெரிகிறது, ஆனால் அதை விளங்க வைப்பதற்கு அரசியல் அறிவு இல்லாததால் அதை தவிர்த்துவிடுகிறார்கள். :unsure:

போர்க்குற்றங்கள் மீதான நடவடிக்கை - சிறிலங்கா இராணுவத் தளபதியைத் துளைத்தெடுத்த அமெரிக்க அதிகாரி [ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013, 02:29 GMT ] [ கார்வண்ணன் ]

vikram-singh-jegath-jeyasoorya.jpgசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் மட்டக்குழுவில் இடம்பெற்றுள்ள, தெற்கு, தென்கிழக்காசியாவுக்கான பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர் விக்ரம் சிங் நேற்றுப் பிற்பகல் சிறிலங்கா இராணுவத் தளபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் பற்றிக் சூலரும் கலந்து கொண்டார். 

இதன்போது, இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

எனினும், இந்தச் சந்திப்பின் போது, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், அண்மையில் சிறிலங்கா இராணுவத் தளபதியினால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை தொடர்பாகவும், விக்ரம்சிங் பேசியதாக தெரிய வருகிறது. 

குறிப்பாக சிறிலங்கா இராணுவத்தின் அண்மைய அறிக்கையில் வடக்கில் போர் இடம்பெற்ற சூழலில் காணாமற்போனவர்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ள கருத்துகள் குறித்து, போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிக்க துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்தும் விக்ரம்சிங் விசனத்தை வெளியிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.com/view.php?20130129107684

தமிழினப் படுகொலைகளை, தமிழின அழிப்பை முன்னின்று அரங்கேற்றி வரும் சிங்கள - இந்திய அரச காட்டுமிராண்டிப் பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் உளறுவதை நியாயப்படுத்த அந்தக் கைக்கூலிகளின் ஒட்டுண்ணிக் கும்பல் ஒன்று எப்பவும் தயாராகவே உள்ளது!

  • தொடங்கியவர்

முதலில் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துங்கள்!

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி சாராதவர்கள் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யுங்கள் என வலியுறுத்தி வருகின்றனர். எனினும் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்க ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நோக்கம் இம்மியும் இல்லை. கூட்டமைப்பை தனிக் கட்சியாக பதிவு செய்து விட்டால் கூட்டமைப்பில் அங்கம் பெறும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கு காத்திரமான இடம் கிடைத்துவிடும்.

 

 

இஃது தமது கட்சி என்று அதிகாரம் செலுத்து கின்ற தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு அவ்வ ளவு நல்லதல்ல. எனவே கூட்டமைப்பு என்று வெளியில் கூறிக் கொண்டாலும் தமிழரசுக் கட்சியை வளப்படுத்திக் கொள்வதிலேயே அந்தக் கட்சிக்காரர்கள் கவ னம் செலுத்தி வருகின்றனர். இதற்கு கூட்டமைப்புடன் இணைந்துள்ள இதர கட்சி சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரி வித்து வருகின்றனர். கூட்டமைப்பை பதிவு செய்யாததன் உள் நோக்கம் என்ன என்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அண்மையில் கேள்வி எழுப்பியுள் ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டாலும் அல்லது தமிழரசுக் கட்சியின் கீழ் கூட்டமைப்பு இயங்கினாலும் அது பற்றி நாம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை. எம்மைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கக்கூடிய ஒரு கட்சி, தனக்குள் முரண்பட்டுக் கொள்ளுமாக இருந்தால் உலகம் காறி உமிழும். தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை இல்லை. அங்கு ஒருவரை ஒருவர் கடிந்து கொள் கின்றனர் என்ற நிலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால ஆரோக்கியத்துக்குப் படுபாதகமாக அமையும்.

 

சிங்கள ஆட்சியாளர்களின் போக்கினால் அவர்களுடன் ஒற்றுமையாக இருக்க முடியாது என்று நாம் கூறுவதற்கு முன்னதாக, நாங்கள் எங்களோடு ஒற்றுமையாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். எங்களுக்குள் முரண்படுகின்றபோது அது உள் வீட்டு வண்டவாளங்களை தண்டவாளங்களில் ஏற்றிவிடும். அதன்பின்பு இனப்பிரச்சினையைவிட உள் வீட்டுப் பிரச்சினையே பெரிதாகிப்போகும். ஆகையால் ,ஆசாடபூதிகளாக இருக்காமல் தமிழ்ப் பற்றோடும்,தமிழ் மக்களுக்கு சேவையா ற்ற வேண்டும் என்ற விசுவாசத்தோடு -உள்ளன் போடு அரசியலை முன்னெடுங்கள். அப்போது தான் எங்கள் இலக்கை அடையமுடியும்.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=481:2013-01-30-05-05-12&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

நன்றி ரகுநாதன் .

நல்லதோ கெட்டதோ உண்மையை பேச இந்த உலகில் பலர் இருக்கின்றார்கள்.அதே உலகத்தில் தான் இறந்தவனின் கோமணத்தையும் உருவி வியாபாரம் செய்யவும் சிலர் இருக்கின்றார்கள் .அவர்களுக்கு நாடு ,இனம் ,மொழி ,அடுத்தவன் மரணம் ,துன்பம் பற்றி எதுவித அக்கறையுமில்லை தனது வியாபாரத்தை எப்படி நடத்துவது என்பது தான் பிரச்சனை .

கனடாவில் அதி தீவிர தேசியம் பேசியவர்கள் தான் இப்போ அரசுடனும் கே.பி யுடனும் நிற்கின்றார்கள் .கேட்டால் அந்த அநாதை பிள்ளைகளை பார்க்க மனம் மாறிவிட்டதாம் .இப்ப அந்த பிள்ளைகளுக்கென்று பணம் சேர்க்கின்றார்கள் பாவிகள் .

முப்பதுவருடமாக போராட்டத்தை வைத்து பிழைத்து இப்ப போராட்டதிற்கு பின் ஆன நிலையை வைத்து பிழைக்கிறான் .

இவர்கள் தான் இப்போ சம்பந்தனையும் தூற்ற தொடங்கியுள்ளார்கள் .

இதற்குள் தலைவரை வேறு இழுக்கின்றார்கள் .

இவர்கள் என்னமாதிரி எல்லாம் சுத்தினார்கள் என்பதெல்லாம் இப்ப கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகின்றது .அதை பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை ஏனெனில் சுரணை என்ற சொல்லே அவர்கள் அகராதியில் இல்லை .

 

இது ஒரு உண்மையான தரவு.இதில் புலம் பெயர் ஊடகங்களும் அடக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ரகுநாதன் .

நல்லதோ கெட்டதோ உண்மையை பேச இந்த உலகில் பலர் இருக்கின்றார்கள்.அதே உலகத்தில் தான் இறந்தவனின் கோமணத்தையும் உருவி வியாபாரம் செய்யவும் சிலர் இருக்கின்றார்கள் .அவர்களுக்கு நாடு ,இனம் ,மொழி ,அடுத்தவன் மரணம் ,துன்பம் பற்றி எதுவித அக்கறையுமில்லை தனது வியாபாரத்தை எப்படி நடத்துவது என்பது தான் பிரச்சனை .

கனடாவில் அதி தீவிர தேசியம் பேசியவர்கள் தான் இப்போ அரசுடனும் கே.பி யுடனும் நிற்கின்றார்கள் .கேட்டால் அந்த அநாதை பிள்ளைகளை பார்க்க மனம் மாறிவிட்டதாம் .இப்ப அந்த பிள்ளைகளுக்கென்று பணம் சேர்க்கின்றார்கள் பாவிகள் .

முப்பதுவருடமாக போராட்டத்தை வைத்து பிழைத்து இப்ப போராட்டதிற்கு பின் ஆன நிலையை வைத்து பிழைக்கிறான் .

இவர்கள் தான் இப்போ சம்பந்தனையும் தூற்ற தொடங்கியுள்ளார்கள் .

இதற்குள் தலைவரை வேறு இழுக்கின்றார்கள் .

இவர்கள் என்னமாதிரி எல்லாம் சுத்தினார்கள் என்பதெல்லாம் இப்ப கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகின்றது .அதை பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை ஏனெனில் சுரணை என்ற சொல்லே அவர்கள் அகராதியில் இல்லை

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.