Jump to content

பாவம் றிஷானா.....


Recommended Posts

றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறித்து மரணமடைந்த குழந்தையின் தாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்தக் கல் நெஞ்சக்காரி சற்றும் மனக்கவலை கொள்ளாது அதனைத் தானும் பார்வையிட வேண்டுமெனக் கூறி சிறைச்சாலைக்கு வந்துள்ளாள். அவளின் முன்பாகவே ரிஸானாவின் உயிர் பிரிந்தது.

 

 

மூதூர் றிஷானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது. இதுதொடர்பில் சாதக பாதக கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. றிஷானாவை மீட்பதில் இலங்கை அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.


இறுதிக் கட்டத்தில் காத்திரமான பங்களிப்புக்களை அரசு மேற்கொள்ளவில்லை என்று  கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய சூழ் நிலையில், இலங்கையின் முஸ்லிம் அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் நடந்து கொண்ட அசிரத்தையான போக்குகள் குறித்த தகவல்களும் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளன.

 

 

மரணமடைந்த குழந்தையின் தாயின் மனநிலையில் மாற்றங்களை எற்படுத்த, நன்கு அரபு மொழி தெரிந்த  இலங்கை முஸ்லிம் பெண் ஒருவரை சவூதிக்கு அனுப்பி குறித்த தாயுடன் நேரடியான சந்திப்பொன்றை மேற் கொள்ள முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் முன்வைக்கப்பட்ட யோசனை அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில் றிஷானாவின் விடுதலைக்காக சவூதி சென்ற இலங்கை  முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் அங்கு என்ன செய்தார்கள்? இங்கு வந்து என்ன செய்தார்கள்? என்ற தகவல்கள் தற்போது எமக்கு ஆதாரபூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை ஒரு விமர்சன பார்வையில் தருகிறோம்.

 

 

சவூதி அரேபியா சென்ற குழு என்ன செய்தது?

 

2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சவூதி அரேபியா சென்ற தூதுக் குழுவில் முதிர்ந்த அரசியல்வாதிகள் இருவர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஒருவருடன் அந்த அரசியல்வாதியின் மகனும் சென்றிருந்தார். இரண்டாவது அரசியல் வாதி "பப்ளிசிட்டி' மன்னர்.

 

இவர்கள் சவூதி அரேபியா சென்றடைந்தவுடனேயே முதல் கேட்ட கேள்வி, எந்த ஹோட்டல் எமக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதே. அதன்படி சவூதி தலைநகர் ரியாத்திலுள்ள 5 நட்சத்திர ஹோட்டலான அல்கொஸாமியில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர்.


பின்னர் மகனுடன் சென்ற முதிர்ந்த அரசியல்வாதி, மத்திய கிழக்கிற்கு பொறுப்பாக உள்ள ஜனாதிபதி ஒருவரின் உறவினருக்கு சொந்தமான Palatical villa (பலேடிக்கல் வில்லா) இல் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்ததன் பேரில் அங்கு தங்கவைக்கப்பட்டனர்

 

இலங்கையின் "பப்ளிசிட்டி' மன்னரின் புதல்வி ரியாத் நகரில் குடும்ப சகிதம்  வசிக்கின்றார். அங்கு சென்ற பப்ளிசிட்டி சில தினங்களை அங்கு கழித்து தனது பேரக் குழந்தைகளுடன் பொழுதைப் போக்கினார். இவைகளுக்குப் பிற்பாடே றிஷானா நபீக்கின் விடுதலை தொடர்பாக பேச்சு நடத்த இருவரும் ஆயத்தமாகினர் என்பது வேதனைக்குரிய செய்தி.

மரணமடைந்த குழந்தை அல் ஒடைபி வம்சத்தை சேர்ந்தது. இதற்கமைய இந்த வம்சத்தின் தலைவரான ஷேக் பைசாலை சந்தித்தது இந்தத் தூதுக் குழு. றிஷானாவை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டது. ஆனால் அவர்களிடத்தில் றிஷானாவின் குடும்பத்தை பற்றிய போதிய தகவல்கள் இருக்கவில்லை.

 

தாம் கேள்விப்  பட்டதை மட்டுமே பேசினர். இது றிஷானாவை பற்றிய அவர்களின் கடுகடுப்பு போக்கில் ஓரளவாவது மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமையவில்லை.

 

தம்மை சந்திக்க வருபவர்களை நன்கு உபசரிப்பதில் சவூதி அரேபியாவை யாரும் விஞ்சிவிட முடியாது என்பது பலரும் அறிந்த உண்மை. இலங்கையிலிருந்து சென்ற குழுவினரையும் நன்கு உபசரித்தனர்.


அல் ஒடைபி வம்சத் தலைவரின் உபசரிப்பில் திக்குமுக்காடிப் போன குழுவில் இடம் பெற்றிருந்த பப்ளிசிட்டி மன்னர் அங்கிருந்தவாறே இலங்கையின் தமிழ் அரச ஊடகம் ஒன்றுடன் தொடர்பு கொண்டு, உபசரிப்புக்காக வைக்கப்பட்டிருந்த அறுசுவைகளைக் குறிப்பிட்டு "இதற்கமைய றிஷானா விடுதலை பெறலாம்" என ஊகத்தின் அடிப்படையில் கூறி, செய்தியை முன்பக்கமாக பிரசுரிக்குமாறும் கட்டளையிட்டார். (அரச ஊடகங்கள் ஆதாரம்)

 

 

 

இதயசுத்தியோடு செயற்படாத குழு


றிஷானா விடுதலை தொடர்பிலான முயற்சியை இந்தளவுடன் நிறைவு செய்து கொண்ட இலங்கைக் குழு நாடு திரும்பியது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரணமடைந்த குழந்தையின் தந்தையை சந்திக்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லையாம்.

 

 

ஆனால் இக்குழுவினர் வேண்டுகோள் விடுத்திருந்தால் அவர்களைச் சந்தித்து பேச குழந்தையின் தந்தை விருப்பம் கொண்டிருந்ததாக குழந்தையின் தந்தை பின்னர் அறிவித்திருந்தார்.


இலங்கைக் குழு நாடு திரும்பிய போதிலும் குழுவில் இடம் பெற்றிருந்த அந்த "பப்ளிசிட்டி' மன்னர் ரியாத் நகரிலுள்ள தனது புதல்வியின் வீட்டில் சுமார் ஒருவாரம் வரை தங்கியிருந்து விட்டே நாடு திரும்பினார்.

 

இதற்கிடையில் அவர்களால் தெரிவிக்கப்பட்டதாக அரச ஊடகத்தில் வெளியான செய்தி தொடர்பில் இலங்கையிலிருந்த முக்கிய முஸ்லிம் அமைச்சர் ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது "றிஷானா விரைவில் விடுதலையாவார் என்று கூறாமல் எப்படி இவர்களால் நாடு திரும்ப முடியும்? நான் அறிந்த மட்டில் இவர்கள் சுற்றுலா சென்று வந்துள்ளனர்" என்றார்.


றிஷானாவின் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் பிரமுகரை சில மாதங்களுக்கு முன்னர்தொடர்பு கொண்டு றிஷானா குறித்து வினவியபோது அவர் இவ்வாறு கூறினார்.

 

"சவூதி நபர் ஒருவரை எனக்குத் தெரியும். அவர் மூலமாகவே ரிஸானா குறித்த தகவல்களைப் பெற்று வந்தேன். சில காலமாக அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது" என்று பதில் கூறினார். பொறுப்பு மிக்க இந்த முஸ்லிம் பிரமுகரின் பதிலைப் பாருங்கள்.


மர்ஹும் றிஷானா நபீக்கின் விடுதலை தொடர்பில் இலங்கையில் முஸ்லிம் அரசியல்வாதிகள்  இதயச்சுத்தியோடு செயற்பட்டிருந்தால் ரிஸானா என்றோ மூதூர் திரும்பியிருப்பாள்.

 

இதயச்சுத்தியோடு இவர்கள் செயற்படவில்லை என்பதற்கு 2005 ஆம் ஆண்டு றிஷானா சவூதி புறப்படும் போது அவளின் வீடு எப்படியிருந்ததோ அதைவிட பரிதாபகரமாக 7 வருடங்கள் கடந்த பின்பும் அந்த வீடு காணப்படுவது ஒன்றேபோதும்....


றிஷானாவின் பெயரால் ரியாத் நகரிலுள்ள குடும்பத்திருடன் பொழுதைக் கழித்தவர்களும், சுற்றுலா சென்றவர்களும், அறுசுவை உணவுகளை உண்டவர்களும், அரசியல் நடத்தியவர்களும் இன்று முதல் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி அதற்கு பிராயச்சித்தமாக ரிஸானாவுக்காக இறைவனிடம் பிரார்த்தனைகளில் ஈடுபட்டாலே போதும் வேறு எந்த உதவியையும் அவர்கள் செய்யத் தேவையில்லை என்கின்றனர் சம்பவங்களை நேரில் கண்ணுற்ற அதிகார பலமற்ற முஸ்லிம்கள்.


2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஜனவரி 09ஆம் திகதி வரை மேற்சொன்ன அலட்டிக் கொள்ளாத நிலைமைகளே மூதூர் றிஷானா விடயத்தில் நடந்துள்ளன.

 

சவூதி நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அரபு பிரமுகர்களும், சாதாரண மக்களும் ரிஸானா விடுதலையில் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் ஒரு துளியையேனும் எமது நாட்டின் சகல துறைகளிலும் வளம் பெற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்யவில்லை என்பதை  மிக வேதனையுடன் உறுதியாக கூறக்கூடியதாகவுள்ளது.

றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் கிடைத்த மறுநிமிடமே "றிஷானா விடுதலை விடயத்தில் ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிக்கு நன்றி" என்று கூறுமளவுக்கு கல் நெஞ்சம் பிடித்த கொடூரர்கள் "முஸ்லிம் அரசியல் பிரமுகர்" என்ற நாமத்தில் உலாவருவதையிட்டு முஸ்லிம்கள் வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.

 

இந்தச் சந்தர்ப்பத்தில் எவரது நன்றியையும் ஜனாதிபதி எதிர்பார்த்திருக்கவில்லை. ரிஸானா விடுதலை தொடர்பில் ஜனாதிபதி இதய சுத்தியோடுதான் செயற்பட்டார். ரிஸானா விடுதலைக்காக சவூதி சென்ற குழுவினர் சுற்றுலா மேற்கொண்டதைக் கேள்வியுற்று ஆத்திரப்பட்ட ஜனாதிபதி ஒரு போதும் இந்தக் குள்ளநரியின் நன்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார்.


றிஷானாவின் விடுதலைக்காக அரும் பணியாற்றியது மட்டுமன்றி உறுதுணையாகவுமிருந்த சவூதியில் பணியாற்றும் கண்டியைச் சேர்ந்த பல்வைத்திய நிபுணர் டாக்டர் கிபாயா  இப்திகார் நன்றி கூறப்படவேண்டியவர்களில் முக்கியமானவர். சமூக நோக்குடன் அவர் செயற்பட்ட விதம் இறைவனிடத்தில் அபரிமித நன்மையை அடைந்து கொள்ள வழிவகுக்க வேண்டும்.

 

 

 

இரக்கமில்லா கல் நெஞ்சக்காரி

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க றிஷானாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படவிருந்த இறுதித் தருணம் குறித்த சில தகவல்கள் எமக்கு சவூதியில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. கல் நெஞ்சங்களையே உருகவைக்கும் அந்தச் சம்பவம் இது தான்.

 

 

இறுதி நேரத்திற்கு முன்பு றிஷானாவிடம் அவரது இறுதி ஆசை குறித்து வினவப்பட்டது இரண்டு "ரக் அத்' தொழ வேண்டும். தன்னிடம் இருந்த சிறு தொகை பணத்தை ஸதகா செய்யும் வகையில் தனது உறவினர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த இரு கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன.


தான் வறுமையில் வாடிய போதிலும் தனது இறுதி வாழ்வை தெரிந்திருந்தும் பிறருக்கு உதவி செய்ய அந்த பெண் முன்வந்த அந்தச் சம்பவம் அங்கு நின்ற பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் இன்னுமொரு கொடூரமும் நடந்துள்ளது.

 

றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது குறித்து மரணமடைந்த குழந்தையின் தாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கல் நெஞ்சக்காரி சற்றும் மனக்கவலை கொள்ளாது அதனை தானும் பார்வையிட வேண்டுமெனக் கூறி சிறைச்சாலைக்கு வந்துள்ளாள்.


அவளின் முன்பாகவே றிஷானாவின் உயிர் பிரிந்தது. இந்த கல் நெஞ்சக்காரி ஓர் ஆசிரியை. பாவம் ரிஸானா...!

 

 

றிஷானாவின் இறுதி ஆசை;

"இரண்டு "ரக் அத்' தொழ வேண்டும். தன்னிடம் இருந்த சிறு தொகை பணத்தை ஸதகா செய்யும் வகையில் தனது உறவினர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும்....!''

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=8260245728310199

Link to comment
Share on other sites

சில முஸ்லீம் அரசியல்வாதிகள் கூட இந்த சிறுமியின் மரணதண்டனையில் முக்கிய பங்காளிகளே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
    • ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
    • எனக்கும் இதே கொள்கை தான், மற்றும் சொந்த இடம் சாவகச்சேரி தான் என்பதால் நீங்கள் சொல்லும் தகவல் உண்மை என இத்தால் அறிவிக்கப்படுகின்றது 🥹
    • இந்தியா மட்டுமா காரணம் ? சீனா, பாகிஸ்தான் , ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் காரணமில்லையா?   செப்டம்பர் 11 தாக்குதல் ,  நீண்டகால சமாதான பேச்சுவார்த்தை,  கருணா பிரிவு, தொழில்நுட்ப வளர்ச்சி , குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்டாயமாக சேர்தல் ( இதில் பல எதிரானவர்களும் இயக்கத்தில் ஊடுருவினார்கள்), காட்டி கொடுப்பு …… 2004 - 2009 காங்கிரஸ் கூட்டணியில் 16 தொகுதியில் திமுக வென்றிருந்தது. அந்த 16 பேரும் ஆதரவை விழக்கியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா?  பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வென்ற 6 பெறும் ,  தமிழகத்தில்  இரு கம்னியூஸ்ட் காட்சிகளிலும் இருந்து வென்ற 4 பேரும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தார்கள். திமுக , காங்கிரஸ் ஆதரவை விலக்கினால் பாட்டாளி கட்சியும் ஆதரவை நீக்குமா?  இதே கூட்டணியில் இருந்த மதிமுக (4 வேட்பாளர்கள்) 2006 இல் ஆதரவை விலக்கியிருந்தது. அப்படி திமுக, காங்கிரசுக்கு ஆதரவை 2009 ஆரம்பத்தில்விலக்கபூபோவதாக சொன்னால்  ( வன்னியை மெல்ல மெல்லமாக சிங்களப்படைகள் 2009 சனவரியில் இருந்து கைப்பற்றியது) , 3 மாதத்தில் தேர்தல் வருகுதுதானே என்பதினால் காங்கிரஸ் தனது இலங்கைக்கு எதிராக செயல்பட்டிருக்குமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.