Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ள இலங்கை மில்லியன் கணக்கில் செலவிட தீர்மானம்

Featured Replies

ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ள இலங்கை மில்லியன் கணக்கில் செலவிட தீர்மானம்

 

ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை சமாளிக்க, மில்லியன் கணக்கான ரூபா செலவில் பொது உறவு முகவர் அமைப்புகளை பணிக்கு அமர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்வதற்கு வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு உதவ, நிபுணர் குழு மற்றும் பொதுஉறவு முகவர் அமைப்புகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதனை இலங்கை வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம உறுதிப்படுத்தியுள்ளார்.

 

ஜெனிவாவில் நிலைமைகளை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். கடந்து ஆண்டைப் போலவே இம்முறையும் அமெரிக்காவின் தீர்மானம் இறுக்கமானதாக இருக்கும்.ஆனால் நாம் அதை எதிர்கொள்வதற்கு அடிப்படை வேலைகளை செய்துள்ளோம்.


கடந்த ஆண்டைப் போலவே நிபுணத்துவம் வாய்ந்த குழு ஜெனிவாவில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும்.

அத்துடன் வெளிநாட்டு பொதுஉறவு முகவர் அமைப்புகள் எமது தூதரகங்களின் பின்னால் இருந்து இலங்கைக்கு ஆதரவான பரப்புரைகளை மேற்கொள்ளும் என்றும் இலங்கை வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2791

Edited by akootha

  • தொடங்கியவர்

Editorial(91).jpg

வெளிநாட்டு பொதுஉறவு முகவர் அமைப்புகள் எமது தூதரகங்களின் பின்னால் இருந்து இலங்கைக்கு ஆதரவான பரப்புரைகளை மேற்கொள்ளும்

 

Investment Advice

 

Bell Pottinger Private Ltd: Buy?,sell?, Hold?

 

"BUY"

 

:lol:

  • தொடங்கியவர்

பல மில்லியன்களை செலவழிக்கின்றது,
பல பில்லியன்களை இராணுவத்திற்கு செலவழிக்கின்றது.

 

 

சிங்களத்தை புலம்பெயர் தமிழர்கள் புறக்கணித்தால் இந்த பணம் குறையலாம்..

எமது மக்களின் விடிவும் விரைவாகும்

ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ள இலங்கை மில்லியன் கணக்கில் செலவிட தீர்மானம்

 

அத்துடன் வெளிநாட்டு ராஜதந்திரிகளை "உபசாரம்" செய்ய பெருமளவு சிங்கள பெண்களையும் கூட்டிச் செல்வார்கள்!

 

  • தொடங்கியவர்

கடந்த ஆண்டு மார்ச் மாதம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரவுள்ளது குறித்து, ஜெனிவா கூட்டத்துக்கு முன்னர் கொழும்பு வந்திருந்த தெற்கு, மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக்கோ அல்லது  மனிதஉரிமைகள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்துக்கான கீழ் நிலைச் செயலர் மரியா ஒரேரோவோ உறுதியாக கூறவில்லை.

 

ஜெனிவாவில் தீர்மானத்தை முன்வைக்கப்போவது அமெரிக்காவா அல்லது வேறு நாடா என்ற கேள்வி கடைசிநேரம் வரை இருந்து கொண்டேயிருந்தது. ஆனால் இம்முறை, நிலைமை அப்படியில்லை. தாமே தீர்மானத்தை முன்வைக்கவுள்ளதாக அறிவித்துவிட்டது அமெரிக்கா.

 

இது கடந்த ஆண்டில் இருந்த நிலையைவிட இறுக்கமான நிலையில் அமெரிக்கா உள்ளது என்பதற்கான ஆதாரம். அதுவும், கடந்தமுறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரும் வகையில் பொதுப்படையாக வலியுறுத்தப்பட்டது. இம்முறை கொண்டு வரப்படும் தீர்மானம், போர்க்குற்ற விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்தமுறை, தீர்மானத்தில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட சில விடயங்களை, இந்தியாவின் ஆலோசனையின் பேரில் நீக்குவதற்கு அமெரிக்கா இணங்கியிருந்தது. ஆனால் இந்தமுறை நேரடியாகவே போர்க்குற்ற விவகாரங்களை ஜெனிவாவில் முன்னிலைப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=116087

  • கருத்துக்கள உறவுகள்
அரசாங்கம் அழுத்தங்களுக்கு ஒரு போதும் அஞ்சாது!

 

images.jpgஜெனீவாவில் நடைபெற உள்ள மனித உரிமை பேரவை கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது. தவறு செய்த உணர்வு அரசாங்கத்துக்கு இல்லாத நிலையில் இத்தகைய அழுத்தங்களுக்கு நாம் அஞ்சவில்லை. புலிகளுக்கு உதவிய குழுக்கள் தொடர்ந்து செயற்படுவதாலே இடைக்கிடை இவ்வாறு சவால்கள் எழுவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளில் பாதிக்கு மேல் அமுல் படுத்தப்பட்டுள்ளது. மத்திய கால சிபார்சுகள் அமுலாகி வருவதோடு நீண்டகால திட்டங்களை அமுல்படுத்த கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறிய அமைச்சர் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என்று கருதவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனிதஉரிமை பேரவை குறித்தும் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர உள்ள பிரேரணை குறித்தும் வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் எமக்கு இதுவொன்றும் புதிய விடயமல்ல. புலிகள் ஒழிக்கப்பட்ட நாள் தொடக்கம் காலத்துக்குக் காலம் அழுத்தங்கள் வரவே செய்தன.

யாரின் அழுத்தம் காரணமாகவும் அன்றி யுத்தகால நிலைமைகள் குறித்து ஆராய ஜனாதிபதி தாமாகவே நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நியமித்தார். அதிலுள்ள சிபாரிசுகள் குறுங்கால, மத்திய கால, நீண்ட கால திட்டங்களாக செயற்படுத்தப்படுகின்றன. நீண்ட கால திட்டங்களை அமுலாக்க அரசிய லமைப்பிலும் திருத்தம் செய்ய நேரிடும்.

பிரபாகரனுக்காக குரல் கொடுப்போரூடாக வரும் சகல சவால்களையும் தோற்கடிக்க நாம் தயாராக உள்ளோம்.

கடந்த முறை எமக்கு எதிராகவே இந்தியா, வாக்களித்தது. எமது நெருங்கிய நட்பு நாடான இந்தியா எமக்கு பல தடவைகளில் உச்சளவில் உதவியுள்ளது. தமது சர்வதேச அரசியல் கொள்கைப்படி இம்முறை அந்தநாடு முடிவு எடுக்கும். ஆனால் எமக்கெதிரான பிரேரணைகளை முறியடித்து வெற்றிகொள்ளும் நம்பிக்கை எமக்குள்ளது. இதற்காக கடந்த காலங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவிகள் பெறப்பட்டன. இம்முறையும் தேவையெனின் அவற்றின் உதவி பெறப்படும்.

30 வருட யுத்த முடிவில் எமக்கெதிராக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. நாட்டு பிரச்சினையை தீர்க்க எமது அரசு நேர்மையுடன் செயற்பட்டு வருகிறது. எமது மனசாட்சிக்கு உட்பட்டு நேர்மையாக நடந்து வருகிறோம்.

புலிகளுக்கு அன்று உதவிய சர்வதேச கட்டமைப்புகள் இன்றும் இயங்குகின்றனர். அதனுடன் தொடர்புள்ளவர்கள் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன. இந்த நிலை சில வருடங்கள் தொடரலாம்.

எமது நாட்டில் கொலைகள் செய்யவும் சமாதான நிலைமையை குழப்பவும் நாட்டைத் துண்டாடவும் டயஸ் போராக்கள் செயற்பட்டு வருகின்றன. கடலுக்கு வெளியில் இருந்து இவை செயற்படுகின்றன என்றார்.

இதேவேளை அரசியலமைப்பை திருத்துவது குறித்து ஆராய்வதற்காக விரைவில் பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசியலமைப்பை முழுமையாக மாற்றுவதா சில பிரிவுகளை மட்டும் திருத்துவதா என்பது குறித்து தெரிவுக்குழுவில் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரசியலமைப்பை திருத்துவது குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க இருப்பதாக ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.