Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவற்குழியில் இந்திய வீட்டுத்திட்டத்தில் சிங்களவர்களை குடியேற்ற ஒட்டுக்குழு தலைவர் டக்ளஸ் நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாவற்குழியில் இந்திய வீட்டுத்திட்டத்தில் சிங்களவர்களை குடியேற்ற ஒட்டுக்குழு தலைவர் டக்ளஸ் நடவடிக்கை
பிப் 1, 2013
     
நாவற்குழியில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த காணியை ஆக்கிரமித்து அதற்குள் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு அந்த காணிகளை நிரந்தரமாகப் பெற்றுக்கொடுத்து அதற்குள் அனைத்து வசதிகளுடனும் கூடிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
 

Douglas%20-%20Manmohan%20Singh.jpg

ஆனால் கொதிப்படைந்துள்ள நாவற்குழி மக்களைச் சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் தற்போது டக்ளஸ் ஈடுபட்டு வருகின்றார். தனியே சிங்கள மக்களுக்கு காணிகளை வழங்காமல் சில தமிழ்க் குடும்பங்களுக்கும் காணிகளை வழங்கினால் எதிர்ப்புக்களைச் சமாளிக்கலாம் என்பதால் நாவற்குழியைச் சேர்ந்த ஒருசில தமிழ்க் குடும்பங்களுக்கும் காணிகளை வழங்குவதற்கு டக்ளஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஓட்டுக்குழு அமைச்சர் டக்ளஸின் பெயர் தற்போது தென்னிலங்கையில் மங்கிவிட்டது. மகிந்த ராஜபக்ச டக்ளஸ் தேவானந்தாவை மட்டந்தட்டத் தொடங்கியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது டக்ளசின் ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரகுமாருக்கு பிரதியமைச்சர் பதவி கிடைக்குமென்று டக்ளஸ் கனவு கண்டார்;. ஆனால் மகிந்த இவரைக் காய் வெட்டிவிட்டார். இந்த நிலையில் மகிந்தவிடம் நற்பெயரைப் பெறுதற்காக நாவற்குழியிலுள்ள மக்களுக்கு அவர்கள் தங்கியிருக்கும் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியை பெற்றுக்கொடுக்க டக்ளஸ் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

மேற்படி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான நாவற்குழியிலுள்ள பல ஏக்கர் கணக்கான காணியில் பல தசாப்த காலமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் சீலன் நகர் என்று பெயர் சூட்டப்பட்டிருந்த இடத்தின் முற்பக்கமாக இந்தக் காணி அமைந்துள்ளது. சிறிலங்கா படையினர் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பு யுத்தம் காரணமாக இந்த இடத்திலிருந்த மக்கள் இடம்பெயர்ந்தனர். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த மக்கள் தமது இடங்களில் மீளக் குடியேறத் தயாராக இருந்தனர்.

இந்த நிலையிலேயே கடந்த 2011 ஆம் ஆண்டு முற்பகுதியில் தென்னிங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த அறுபது சிங்களக் குடும்பங்கள் தாங்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தங்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்து யாழ் புகையிரத நிலையத்தில் தவம் கிடந்தனர்.

தாங்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோது அரியாலை-பூம்புகாரில் வாழ்ந்தாகவும் தற்போது அங்கு தமிழ் மக்கள் வாழ்வதால் தங்களை வேறு இடத்தில் குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்;து ஒரு மாதகாலம் புகையிரத நிலையத்திலேயே தங்கியிருந்தனர். ஆனால் அப்போதைய யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி இந்த விடயத்தில் அதிக அக்கறை எடுக்கவில்லை. ஆனால் தென்னிலங்கையிலிருந்து அதிரடியாக வந்த மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரக்கோன் இந்த மக்களுக்கு ஆறுதல் கூறிச் சென்றார்.

இவ்வாறான நிலையில் ஒரு நாள் நள்ளிரவு இராணுவத்தினரால் ஏற்றிச் செல்லப்பட்ட இந்த அறுபது சிங்களக் குடும்பங்களும் நாவற்குழி சீலன் நகரிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் குடியேற்றப்பட்டனர். விடிந்த பின்னர் நிலமையை உணர்ந்த தமிழ் மக்கள் சென்று இந்த இடம் தங்கள் இடமென்றும் அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறும் கோரினர். ஆனால் இராணுவப் புலனாய்வாளர்களின் உதவியுடன் தமிழ் மக்களை விரட்டிய சிங்களவர்கள் அந்தக் காணியில் கொட்டில்களை அமைத்து வாழத் தொடங்கினர். அவர்களுக்கு இரவு பகலாக சிங்களப் படையினர் பாதுகாப்பு வழங்கினர். இவர்கள் இந்த இடத்தில் ஒரு பௌத்த ஆலயத்தையும் அமைத்துள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே இந்தக் காணிகளை அவர்களுக்கு நிரந்தரமாக எழுதிக்கொடுத்து கொட்டில்களில் வாழ்கின்ற இந்த மக்களுக்கு நிரந்தர வீடுகளையும் மலசலகூடம் மற்றும் இதர வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதற்கு டக்ளஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். கடந்த வாரம் நாவற்குழிக்குச் சென்ற டக்ளஸ் மேற்படி மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் விரைவில் காணி எழுதித் தரப்படுமென்றும் அந்தக் காணிகளுக்குள் வீடுகள் அமைத்துத் தரப்படுமென்றும் உறுதியளித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். குடாநாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மற்றும் இராணுவத்தால் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் என்றவாறு பல்லாயிரக்கணக்கான மக்கள் யாழ். குடாநாட்டில் காணிகளற்ற நிலையில் வாழ்கின்ற நிலையில் ஒட்டுக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தா சிங்களவர்களிடம் நல்ல இடம் பிடிப்பதற்காக அவர்களுக்கு காணிகளை எழுதிக்கொடுக்கு முற்பட்டிருப்பது தமிழ் மக்களிடையே கடும் விசனத்தைத் தோற்றுவித்திருக்கிறது.

மேற்படி காணியில் பல தசாப்த காலமாக வசித்த மக்களில் சிலர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் காலம் காலமாக வசித்த இடங்களை சிங்கள மக்கள் ஆக்கிரமித்திருக்கின்றனர். சில மாதங்கள் இருந்துவிட்டு அவர்கள் வேறிடத்திற்குச் செல்வார்கள் என்று நாம் நம்பியிருந்தோம். ஆனால், ஈ.பி.டி.பி கட்சி செய்கின்ற நாசகார வேலையால் எல்லாமே நாசமாகிப் போய் நாங்கள் நடுத்தெருவிற்கு வந்துவிட்டோம்” என்று தெரிவித்தனர்.

- சங்கதி24ற்காக தாயகத்திலிருந்து வீரமணி

http://www.sankathi24.com/news/26459/64//d,fullart.aspx

வடக்கின் அபிவிருத்தி தலைவர்களுக்காகவா?

 

யாழ். குடாநாட்டிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போகப் போகிறார் என்றதும் தடல்புடலாக பல முன்னேற்பாடு வேலைகள் நடைபெற்றன பாருங்கோ... கடைசியில அவரின் பயணம் பின்தள்ளப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியானதும் தொடங்கின வேகத்திலேயே அனைத்து வேலைகளும் நின்று விட்டன.

 

நாட்டின் தலைவர் வட பகுதிக்கு விஜயமாகிறார் என்ற செய்தியை யார் முதலில் மக்களுக்குத் தெரியப்படுத்துவதென்பதில் மூன்று தரப்பினரிடம் பெரும் போட்டா போட்டியே நடந்திருக்குப் பாருங்கோ...

 

ஜனாதிபதி வரப்போகும் இடங்களின் வீதிகள் அவசர அவசரமாக இர வுபகலாக காப்பேற் போடும் பணிகள் நடைபெற்றன. அந்த வீதியிலிருக்கும் அரசாங்க கட்டிடங்கள் எல்லாம் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்றன. சில முக்கியஸ்தர்களின் வீடுகளும் வண்ணமயமாகின.

 

பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இப்ப அவர் காலநிலை சரியில்லாததால் வரமாட்டார் என்றதும் தொடங்கின வேலைகள் எல்லாம் அப்படியே நின்று விட்டன பாருங்கோ.... பிரதான வீதிகளை மறித்து தடல்புடலாகத் தொடங்கப்பட்ட வேலைகள் அப்படியே கைவிடப்பட்டுள்னதால் சனத்தின்ர பயணங்கள் மாற்று வழிப் பாதையிலேயே தொடர்ந்து நடைபெறப் போகும் நிலை ஏற்படப்போகுது பாருங்கோ....

 

சரி அதே வேகத்தோட முடிப்போமே என்று நினைத்து அவற்றை முடிக்காமல் போட்டதை போட்டபடியே விட்டுவிட்டு அடுத்த அறிவிப்பு வரும் வரை காத்திருக்கினம் போல... தலைவர்மாரின் சொகுசுப் பயணங்களுக்கான முன்னேற்பாடுகளை வலும் மும்முரமாகச் செய்கிறவயள் நாட்டு மக்களின் நலன்களில் அதேபோன்ற அக்கறையைக் காட்டுவதில்லைப் பாருங்கோ.....

 

ஏதோ நாட்டின் தலைவரின் வருகையை ஒட்டியாவது வடக்கில் சில அபிவிருத்திப் பணிகள் துரிதமாக நடக்கத் தொடங்கியிருக்கு. இப்படி அடிக்கடி ஜனாதிபதி ஒவ்வொரு வடக்கின் இடத்துக்கும் வந்து போனால் நல்லதென்று சனம் விரும்புதுகள் பாருங்கோ..... அவரைச் சாட்டியாவது றோட்டுகள் விரைவாகத் திருத்தப்படும் என்ற எதிர்பார்ப்புத்தான்.....

 

http://www.yarlmann.lk/viewsingle2013.php?id=1423

  • கருத்துக்கள உறவுகள்

குடியேற்றாமல் இருந்தால்தான் இவரின்ட தப்பு ..நல்லது ரொம்ப நல்லது..  அந்த வீடு எந்த நேரத்தில்  இடிந்து விழும் என நமக்கு தெரியாதா..


டிஸ்கி:

உண்மையிலே ஒட்டு குழு தலைவர் மனசாட்சி உள்ளவர் என்றால் இன்சுரன்ஸ்ம் கையோட தர வேண்டும்...
 

ஜென்மத்துக்கும் திருந்தாத சொறிநாய் இந்த டக்லஸ் இவன் செய்தி எல்லாம் ஒரு செய்து என்று நாம் வாசிக்கிறோம் அதான் பெரிய சுமை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.