Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நீங்கள் குடியேறப்போகும் ஊர் மக்களுக்காவது குரல் கொடுப்பீர்களா கமல்?”

Featured Replies

அன்புள்ள கமல் அவர்களுக்கு வணக்கம் ....

 

image001.jpg

1992-93 ஆம் ஆண்டுகளில் இயங்கிய கமல் நற்பணி இயக்க அனைத்துக்கல்லூரி மாணவர் அமைப்பின் பச்சையப்பன் கல்லூரி பொறுப்பாளர் செங்குட்டுவன் எழுதுவது!

இன்றைக்கு யாதவர் சங்கத்தில் உள்ள நண்பர் குணசீலன் அன்று உங்கள் நற்பணி இயக்கத்தின் தலைவர் . நாங்கள் படித்த சென்னை முத்தையா செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நீங்களும் படித்தீர்கள் என்று அன்றைக்கு பெருமைகொள்வோம் நாங்கள் .

1992 ஆம் ஆண்டு தாகம் அனைத்துக்கல்லூரி மாணவர் இதழாய் வெளியிடும் விழாவுக்கு நீங்கள் வருவதாக இருந்து , குணா படத்தின் படப்பிடிப்புக் காரணமாக நீங்கள் வாழ்த்து செய்தி மட்டும் அனுப்புனீர்கள். தாகத்தின் முதல் ஆண்டு விழாவில் கலந்துக்கொள்வேன் என்று சொன்னீர்கள் .

 

"சுட்டி" "தேன்மழை " போன்ற மாணவர் இதழ்கள் போல மாணவர் பருவத்தோடு நின்றுவிடாமல் "தாகம் " தொடர்ந்து வெளிவரவேண்டும் என்று வாழ்த்தினீர்கள். இந்த 22 ஆண்டுகளில் தாகத்தில் உங்களை விமர்சித்து எத்தனையோ க்கட்டுரைகள் வெளிவந்து விட்டது .இன்றைக்கு விஸ்வரூபத்திற்காக நீங்கள் தமிழ் நாட்டை விட்டே செல்கிறேன் என்று சொன்னபோது எனக்கும் கண் கலங்கியது...

ஆனால் கமல், உங்களை 5 வயது முதல் பாராட்டி சீராட்டி இன்று உங்களை கலைஞானியாக,கோடீஸ்வரனாக உயர்த்திய தமிழ் நாட்டை எவ்வளவு எளிதாக உங்களால் தூக்கி வீச முடிகிறது . காஷ்மீர் முதல் கேரளா வரை என்று தமிழ் நாட்டை நீங்கள் தவிர்தபோது இஸ்லாமிய சகோதரனை விட எனக்கு உங்கள் மீது கடும் கோபம் வந்தது !

 

image002.jpg

 

50 ஆண்டுகாலம் உங்களை சுமந்த நாட்டிற்கு ,உங்கள் நாத்துடுக்கால் சிதம்பரம் நிகழ்ச்சியில் பேசிய காரணத்தால்,உங்களை இன்றைய அரசு பந்தாடும் நிலையில்,தமிழர்களும் தமிழ் நாடும் என்ன பாவம் செய்தது உங்களை வளர்த்ததை த்தவிர ? ராசி அழகப்பன்,குணசீலன்,உங்கள் ராஜ்கமல் நிறுவனத்தின் நிழலாக இருந்த டி.என் .யெஸ் (குணா படத்தை தயாரித்து அழிந்து போனவர் ) அய்யா அவர்களின் மகன் சக்தி,

புதுக்கல்லூரி இப்ராஹிம் இப்படி எத்தனையோ தளபதிகள் அன்று உங்களுடன் இருந்தனர். இன்று அவர்கள் எல்லாம் எங்கே ? இந்தியாவில் ஏதேனும் ஒரு மதசார்பற்ற மாநிலத்தில் தங்குவேன் என்று சொல்கிறீர்களே ...கமல் உண்ட வீட்டிற்க்கே ரெண்டகம் செய்கிறீர்களே ,இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர ஒரு மதசார்பற்ற நாட்டை உங்களால் சொல்லமுடியுமா ?

அக்ரகாரத்தில் பிறந்த உங்களை இன்று இந்த மதச்சார்பற்ற நாடுதானே உச்சியில் நிற்க வைத்துள்ளது? ஏதாவது ஒரே ஒரு அக்ரகாரத்து அம்பி உங்களுக்காக இன்று சாலை மறியல் செய்திருப்பானா ? உங்கள் அக்ரகாரத்து எழுத்தாளர்கள் சோ,மதன் , s .v .சேகர், உங்கள் குரு பாலச்சந்தர் உங்களை சந்தித்திருப்பார்களா ? இன்று உங்கள் வீட்டின்

 

முன் அழுதவன் எல்லாம் இளிச்சவாய தமிழன் தானே? எனக்கு அரசியல் கிடையாது ..மதம் கிடையாது என்று சிறு பிள்ளை தனமாக புலம்புகிறீர்களே கமல் ,ஹேராம் ,உன்னைப் போல் ஒருவன் ,விஸ்வரூபம் ,அன்பேசிவம் போன்றப் படங்கள் அரசியல் பேசாமல் எதைப் பேசின ? மதம் பேசாமல் எதை பேசின ?

 1983 இல் ஈழப் படுகொலைக்காக உங்கள் தலைமையில் பல்லாயிரம் ரசிகர்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தினார்களே இன்று உங்களுக்கு அந்த உணர்வே இல்லையா ? ஏன் இலங்கை தீவிரவாதம் பற்றி உங்களால் படம் எடுக்க இயலாதா ?அதற்கு ஒபாமா ஒப்புதல் தரமாட்டாரா ?காரணம் நீங்கள் இந்தியனாகி பல காலம் ஆகிவிட்டது கமல் !

 

image003.jpg

 

தமிழனாக ..பிறகு இந்தியனாக ,,,இந்தியாவில் வாழ முடியாதப் பட்சத்தில் அமெரிக்கனாக ...அடடா...என்ன ஒரு மனித நேயம் உள்ள மனிதர் ..நடிகர் ! இன்றைக்கு இங்கு நடக்கும் கூத்து,உலகில் எங்காவது நடக்குமா கமல்? உங்களை ஆளாக்கிய மண்ணிற்காக நீங்கள் ஒரே ஒரு படம் எடுத்ததில்லை ..

ஆனால் ,உங்களை அமெரிக்காவின் விசுவாசியாக காட்டிக்கொள்ள, கேவலம் ஆஸ்கார் விருதுக்காக பலநூறு ஆண்டுகளாக நம்முடன் பிணைந்திருக்கும் இஸ்லாமிய சகோதரர்களை தொடர்ந்துக் கொச்சைப் படுத்திக்கொண்டே இருப்பீர்கள் ? உங்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற உடன் இங்கிருந்து வெளியேறுவேன் என்று அழுகிறீர்கள் ! வெட்கம் வெட்கம் !

நீங்கள் தமிழர்கள் படும் அவலங்களை வைத்து ஒரு படம் எடுத்து அதற்க்கு தடை என்றால் தமிழகம் உங்களை விட்டுக்கொடுத்திருக்குமா ? நீங்கள் சிறந்த நடிகர்தான் ..ஆனால் தமிழகத்திற்கு நன்றி உள்ள மனிதனா ? என்று உங்களை தொட்டுக் கேட்டுப் பாருங்கள் .

இந்த தமிழ்நாடும் தமிழனும் உங்களுக்கு கோடி கோடியாக அள்ளித்தர வேண்டும், ஆனால் நீங்கள் இந்த மக்களைப் பற்றி படம் எடுக்கவில்லை என்றால் கூடப் பரவாயில்லை எதாவது ஒரே ஒரு தமிழர் பிரச்சனைக்காக நீங்கள் குரல் கொடுத்தது உண்டா கமல் ?

தயவுசெய்து நீங்கள் போகும் ஊரில் உள்ள மக்களுக்காகவாவது குரல் கொடுங்கள்... அவர்களையும் ஏமாற்றி விடாதீர்கள் ? எங்களைப் போல் அவர்கள் ஏமாற மாட்டார்கள் ! போகும் போது இன்று தமிழக ரசிகர்கள் உங்கள் கடன் அடைக்க அனுப்பும் பணத்தையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள் !அடுத்தப் படம் எடுக்க உதவும் !

இந்தக் கடிதம் உங்களுக்கு மட்டும் அல்ல. எங்களை இன்றைக்கு சுரண்டிக்கொண்டிருக்கும் அத்தனை நடிகர்களுக்கும்தான். தயவு செய்து அவர்களையும் உங்களுடன் மதச்சார்பற்ற நாடான குஜராத்திற்கு அழைத்துச் சென்று விடுங்கள்! நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம் !!

என்று அன்புடன்

தாகம் செங்குட்டுவன்

மற்றும் பழைய நற்பணி மன்ற தோழர்கள் .

 

http://www.tamilleader.in/Content.aspx?ArticleId=3303&CategoryId=3#.UQ0L2x0b4hE

 

  • கருத்துக்கள உறவுகள்
முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்காவில் எடுக்கப்பட்ட எத்தனை ஆங்கில படங்கள் தமிழ் நாட்டில் ஓடின? அவை யாவும் தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்டதா??
 
குழராத்தில் முஸ்லிம்களை கொன்ற மோடி எப்படி இந்தியாவின் பிரதமராக வர அனுமதிக்கபடுவார்? (ஏனைய மாநிலங்கள் விஸ்வரூபத்தை அனுமதித்தது.ஆனால் தமிழ் நாடு அனுமதிக்கவில்லை)
 
ஜெயலலிதாவுக்கு (ஜெயா தொலைக்காட்சி) விஸ்வரூபம் உரிமம் கொடுக்கப்பட்டது. பின்னர் அது விஜய் தொலைக்காட்சிக்கு அவ்வுரிமம் மாற்றப்பட்டது ஜெயாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது விஸ்வரூபத்தை தடை செய்ய ஒரு காரணமா??
 
விஸ்வரூபத்தை தடை செய்ய அப்படி எந்த காட்சி முஸ்லிம்களை வேதனைப்படுத்தியது? முஸ்லிம் நாடானா மலேசியாவில் எப்படி வெளியிடப்பட்டது??

 ஆனால் ,உங்களை அமெரிக்காவின் விசுவாசியாக காட்டிக்கொள்ள, கேவலம் ஆஸ்கார் விருதுக்காக

 

 

அரசனை நம்பி கணவனை கைவிட்ட கதையாக கூடாது  <_<

  • கருத்துக்கள உறவுகள்
ரகுமானுக்கு கெட்டித்தனம் இருந்தது.ஆஸ்காரை எடுத்தார். கமலுக்கும் அந்த தகுதி உண்டு. முயற்சி செயவதில் ஒன்றும் தவறில்லையே. அவர் வேறெங்காவது குடியேறுவேன் என்று தான் சொன்னார்.அமெரிக்க விசுவாசி என்பது மிகைப்படுத்தப்பட்டுள்லது. எந்த மிகைப்படுத்தல் எந்த மீடியாவால் செய்யப்படுகிறது என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.
 
90 கோடியை இழந்தவருக்கு, 50 வருடம் தனது வாழ்க்கையை  அர்பணித்தவருக்கு(கலைக்கு ) தமிழ்நாடு அரசு செய்த பிராயச்சித்தம் போன்றன யார் அரசன் யார் புருசன் என்ற கேள்வியை நிச்சயம் அவருக்கு எழுப்பி இருக்கும்.
  • கருத்துக்கள உறவுகள்
கர்நாடக மாநிலத்தில் குடியேறுமாறு கமலுக்கு அழைப்பு

 

kamal.jpgவிஸ்வரூபம் படத்துக்கு சில இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த படம் வெளியிட தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

விஸ்வரூபம் படத்துக்கு எனது சொத்துக்களை அடகு வைத்து ரூ.90 கோடி முதலீடு செய்து இருப்பதாகவும், அது வெளிவரா விட்டால் எனது வீடு உள்ளிட்ட சொத்துக்களை இழக்க நேரிடும் என்றும், அதனால் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறி மதசார்பற்ற மாநிலத்தில் குடியேறுவேன் என்றும் கமல ஹாசன் உருக்கமாக பேட்டி அளித்தார்.

குடியேற எந்த மாநிலமும் கிடைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி மத சார்பற்ற நாட்டில் குடியேறுவேன் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் கமலஹாசன் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம், கர்நாடக மாநிலத்தில் குடியேற வாருங்கள் என்று அம்மாநில துணை முதல் - மந்திரி ஆர்.அசோக் அழைப்பு விடுத்து உள்ளார்.

 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், ‘’விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்து இருப்பது ஏற்புடையது அல்ல. மன வேதனையில்தான் அவர் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறியுள்ளார். அவர் எங்கும் செல்ல வேண்டாம். கர்நாடகாவில் குடியேற அவருக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்ய தயாராக இருக்கிறோம்’’ என்று கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கமலஹாசனின் கலைப்பயண காலத்தில்தான் ஈழம் எரியத்தொடங்கி தீச்சுவாலையாகி இன்று கருகிப்போய் கிடக்கிறது.ஒரு கலைஞனாய்' நடிகனாய் ஈழம் நோக்கிய பார்வை என்ன என்பதை பலதடவைகள் வெளிப்படுத்தியுள்ளார்.புன்னகை மன்னனில் தொடங்கி மன்மதன் அம்புவரை நிறைய படங்களில் நிறையத்தடவைகள் எங்களை நோக்கி அப்பு எய்திருக்கிறார்.எங்கள்மார்பைப்பிழந்து சென்றதே தவிர மானத்தை தாக்கியதா?என்னைப்போல் ஒருவன் பார்த்தவர்களுக்கு தெரியவில்லையா?
மீனம் பாக்கத்தையும் ஸ்ரீ பெருபுதுரையும் மன்னித்தோமோ இல்லையோ மறந்திட்டோம் என எத்தனை தடவைகள் சொல்லியிருப்பார்.மீனம் பாக்கம் ஒரு விபத்து என்பது அனைவருக்கும் தெரியும் .பெரும்புத்தூர் என்ன என்பது உலகுக்கே தெரியும் ஈழத்தில் கமல் அவர்களின் விசுவாச ராணுவம் செய்த கொடுமைகளை மறந்தும் மன்னித்தும் விடவேண்டும் என எதிர்பார்கிறாரா?எங்கள் நாட்டின் தலைவனை உயிருடனோ பிணமாகவோ கொண்டு வா என இன்னொரு நாட்டின் தலைவன் உத்தரவு போடும் போது அதே உத்தரவை நம்மவர் பிரப்பித்ததில் என்ன தவறு கண்டீர்கள்.தோல்வி உங்களது என்மதல்ல.
குருதிப்புனல் ஈழத்தை நோக்கி நீங்கள் விட்ட இன்னொரு அம்பு.அதையும் தாண்டி மன்மதன் அம்பு .சொல்ல வேண்டியதில்லை.இந்த கலையுலக மகானுக்கு காவடி தூக்கும் நம்மவரே தயவு செய்து மீண்டும் ஒருதரம் மன்மதன் அம்பினை குந்தியிருந்து பாருங்கள்.இசுலாமிய தமிழனுக்கு முதல் எனக்குதான் இந்த கோபம் வந்திருக்க வேண்டும்.வரவில்லையே?
நமக்குத்தான் எதுவும் இல்லையே?
அறிவுமதி மட்டுமே தமிழ்நாட்டில் தன் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.ஆனால் இங்கு நாம் விசில் அடித்து படம் பார்த்தோம்.ஈழம் இன்னும் போர்முனையில் நின்றிருந்தால் விஷ்வரூபத்தின் தளம் அதுவாக இருந்து எவ்வளவு கேவலமாக வந்திருந்தாலும் புலம் பெயர்ந்தவர்களால் அது வெற்றி அடைய வைக்கப் பட்டிருக்குமே தவிர எதிராக ஒரு கடுகு கூட வெடித்து இராது.

வழமைபோல் சூடு சொரனையற்ற இந்துக்களுக்கு எதிராக படங்களை எடுத்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது!

கமல் இஸ்லாமியரின் காலில் வீழ்ந்து பிராமண முறைப்படி நமஸ்கரித்து விஸ்வரூபத்தை வெளியிட இருப்பதாக செய்திகள் வருகின்றன!

கமலின் நாட்டை விட்டு ஓடுவேன் என்ற நடிப்பு மிகவும் பிரமாதம்!

முஸ்லிம் மதவாதிகளின் காலடியில் வீழ்ந்தது அதவிட பிரமாதம்!!!

கமல் தனது பிராமணப் புத்தியைக் காட்டி விட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.