Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஸ்வருபம் தரும் புதிய திரை அனுபவம்

Featured Replies

திரைபடம் பார்த்து முடிந்தவுடன் முடிவு சப்பென்று இருந்தது .ஏதும் பெரிய திருப்பமின்றி  தொடரும் என்று சின்னதிரை சீரியலில் முடிவில் இருந்த மாதிரிஇருந்தது . இதையும் மீறி இந்த திரைபடத்தை தமிழகத்தில் உண்மையில் தடை செய்வதற்க்கு இதில் அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லேயே என்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு வெளியில் வந்த பொழுது  அவர் சொன்னார் ..உதிலை பெரிய அரசியல்  இருக்கு உங்களுக்கு விளங்கவில்லை ...விளங்கிறதுக்கு கொஞ்சம் ஞானம் வேண்டுமென்றார். ஞானத்துக்கு நான் எங்கை போறது  எனக்கு உந்த ஞானம் அடைந்தவர்கள் பலரை தெரியும் அவர்களின் இன்றைய நிலைப்பாடும் தெரியும் என்று  சொல்ல வாய் உதறியது ,தேவையில்லாமால் உவருடன்  மல்லு கட்டுவான் என்று என் பாட்டில் என் பாதையில் நடந்தேன்

 

 

 
 
 

நேரம் கிட்ட தட்ட முன்னிரவில் ஒரு மணியாகி இருந்தது .லண்டன் தூக்கத்துக்கு போயிருந்தது ..இன்னும் கொஞ்சம் நேரத்தில் எழும்பி பழைய மாதிரி வீறு கொண்டு எழுந்து விடும் .தெரு வெறிச்சோடி கிடந்தது.இந்த நேரத்தில் உலாவிறது கவனம் என்று ஒரு நண்பன் சொன்னது ஞாபகம் வர ...இந்த படத்தில் கமலகாசன் திருக்குர்ஆன் ஓதி விட்டு சண்டையிடும் முதல் சண்டைக் காட்சி நினைவில் வர .திரைக்குள் எங்களை பார்த்து திரைக்குள் வெளிய அதை வெளியில் கொண்டு வர அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை முயற்சி செய்த நாங்கள் இதற்கு எல்லாம் பயப்படலாமா அதே மாதிரி அடிபட வேண்டியதானே என்று  என்னோடையே நான் நகைத்து கொண்டேன்

 

.அந்த சண்டை காட்சி எடுத்த விதம் அற்புதமாக இருந்தது .தியேட்டரே ஒருமித்து கூவி ஆர்பர்த்தரித்த்து.எத்தனை திரைபடத்தில் எத்தனை சண்டை காட்சிகள் பார்த்திருப்போம். ஆனால் ஏதோ  வித்தியாசமாக இருந்த்து தொழில் நுட்பத்தின் புதிய பரிமாணத்தை கண்டு வியக்க வைத்தது.தமிழில் அறிமுகபடுத்துகின்ற கமலுக்கு நன்றியாக சொல்லியாக வேண்டும் .இப்படி நான் பிரமிக்கும்  பொழுது சிலர் சொல்ல வருவார்கள் ..பேமாரி ...ஹாலிவூட் படங்களிலும் இதை மாதிரி எத்தனையோ படங்களில் நாம் எல்லாம் பார்த்து இருக்கிறோம் இது எல்லாம் பெரிய விசயமில்லை என்று .நாகேஸ் ஒரு படத்தில் கெளவரமாக  இங்கிலீஸ் படம் ஒன்லி தான் பார்ப்போம் என்று சொல்லுற மாதிரி .நாங்கள் தமிழ் படம் ஒன்லி  தான் பார்ப்போம் .அதாலை இது வரை  வந்த தமிழ் படங்களில் விஸ்வரூபம் அதி சிறந்த தொழில் நுட்பத்துடன்  காட்சிகளை அமைந்து இருக்குது என்றால் நான் சொன்னால் மிகையாகாது என்று நினைக்கிறேன்

 

 

 

முக்கியாமாக இந்த படத்தின் ஓலித்தரம்  புதிய அனுபவமாக இருந்தது .முக்கியமாக இந்த ஓலிக்காகவே கட்டாயம் தியேட்டரில் கட்டாயம் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது .DTH யிலோ வேறு முறைகளிலோ இந்த படத்தை பார்த்தால் அந்த அனுபவத்தை தராது என்று நிச்சயம் சொல்லலாம் . தியேட்டர் ஒலி குறிப்புகளை தவற விட்டு பார்த்தால் தமிழ் நாட்டு  முஸ்லிம் கூட்டமைப்பு சொன்ன மாதிரி ஒரு டாக்குமென்றி  படம் போல சில வேளை தோற்றமளிக்க கூடும் . திரைகதையின் சில நகர்வுகளின் குழப்பங்கள் காரணமாயிருக்கலாம்

 

 

ஆப்கான் புவிபரப்பு காட்சிகளை இந்தியாவில் வடிவமைத்து தமிழ் நாட்டிலும்  வேறு பகுதிகளிலும் படமாக்கினார்கள் என்று சொல்லும் பொழுது நம்ப மறுக்கிறது .அப்படி தத்துரூவமாக இருந்த்து .ஹெலிகொப்டர்கள் பறக்கும் பொழுது  தியேட்டரில் இருந்து திரைக்குள் சென்று பறப்பது மாதிரி ஒரு அனுபவத்தை தந்தது

 

 
 
 

 

ஆப்கான் தலபான் 

அமெரிக்க எப்ஜ, றோ என முடிச்சு போட்டு திரைக்கதை அமைத்து இருக்கிறார் . இந்த தில்லர் திரைபடத்துக்கு பல காட்சிகளை அமைக்க இந்த களம் வசதியாக நிச்சயமாக இருந்திருக்க கூடும்  அதில் அவர் வெற்றியும் அடைந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.இது பெரிய கலை படைப்பு அது இது என்று சொல்ல எனக்கு தெரியாது சொல்லவுமில்லை .தலாபான் பயங்கரவாத்த்தை காட்டியவர் . அமரிக்க அரச பயங்கரவாதம் செய்யும் காட்சிகளை ஒரு இரு காட்சிகளில் காட்டி இருந்தாலும் தலபான் பயங்கரவாத்த்தை காட்டியளவுக்கு காட்டியிருக்கலாம்.இந்திய றோ அதிகாரி கதாநாயகனாக பாத்திரம் அமைந்திருக்கும் பொழுது அப்படி ஒரு முயற்சிக்கு போக முடியாது தானே

 

 

கமல் இந்த படத்தில் ஒரு வசனம் சொல்லுவார் ...ஹீரோவும் நானே வில்லனும் நானே என்று  அது உண்மை  தான் படத்தை பொறுத்தவரை மட்டுமல்ல  .அவரது இன்றைய நிலையில் தனிப்பட்ட நிலைபாட்டுக்கும் பொருந்தும்.இது போன்ற தில்லர் திரைக்கதைக்கு கமல் ஆப்கான் வரை இவ்வளவு தூரம் போயிருக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.கொஞ்சம் பாக்கு நீரிணையை கடந்தால் கிடைத்திருக்குமென்று நினைக்கிறேன். .றோ அதிகாரியாக நடித்து சாகசம் செய்வது இந்தியனாக சில வேளை பெருமைப்பட்டு கொள்ளலாம்..மற்றவர்களை பொறுத்த வரை வில்லத்தனமாகவே தோற்றமளிக்கும் வரலாறுகள் சாட்சியாக இருப்பதால் ..முக்கியமாக தமிழர்களை பொறுத்தவரையில்

 

 
 
 

 

தமிழ் திரைபடம் என்ற ரீதியில்..தொழில் நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று இருக்கிறார் .பார்க்க வேண்டிய படம் தான் ..புதிய சினிமா அனுபவத்தை நிச்சயம் தரும்

 

 

http://sinnakuddy1.blogspot.co.uk/2013/02/blog-post_3883.html

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கவேண்டிய படம் என்று சின்னக்குட்டியர் வேறு சொல்லுகின்றார். நானும் இருக்கும் மட்டுமட்டான நேரத்திற்குள் தியேட்டரில் பார்க்கலாம் என்று online இல் book செய்யப்போனால் கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல்லாக இருந்தது. சரியென்று ஐந்தாவது வரிசையில் (அதில் இருந்து படம் பார்த்தே பழக்கம் இல்லை) இரண்டு ஆசனங்களை தெரிவு செய்து படம் தொடங்க சற்று முன்னர் விளம்பரம் போகும்போது உள்ளே போனால் தியேட்டர் நிரம்பி வழிந்திருந்தது. எமது இருக்கைகளில் வேறு நபர்கள் இருந்தார்கள். உள்ளே போகமுடியாமல் இருந்ததால் கைகாட்டிக் கூப்பிட்டபோதும் ஒருவர் தெரியாதமாதிரி இருக்க மரியாதைப் பன்மையில் கதைக்காமல் ஒருமையில் கதைத்து ஆளை எழுப்பவேண்டியதாகப் போய்விட்டது. எழுப்பியவர்கள்  தமது இருக்கைகளில் இருந்தவர்களை எழுப்பமுடியாமல் தியேட்டரை விட்டு வெளியேறிய கூத்தும் நடந்தது.

 

படம் ஓஹோ என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. இறுதிக்கட்டம் விறுவிறுப்பாகவும் இல்லை. எனினும் கமல் ஒரு ஹொலிவூட் படத்தை எடுக்க முயற்சித்ததற்குப் பாராட்டவேண்டும். தமிழில் அதிகம் உரையாடாமல் தமிழ்நாட்டில் ஒரு சீன் கூட இல்லாமல் எடுத்து எப்படித்தான் தமிழ் நாட்டில் இதை வெளியிட்டு காசு பார்க்கப்போகின்றாரோ தெரியவில்லை. அதேவேளை தமிழ்நாட்டில் வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் விஸ்வரூபம் 2 எடுப்பதற்கு பணத்தை ஈட்டித் தரும் என்றும் நம்பவில்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/nO7zm7MDe2c

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்
விசுவரூபம் பார்த்தேன்...தமிழ்பட‌மா,ஆங்கிலப் பட‌மா.அர‌புப் பட‌மா என விளங்கவில்லை :unsure: ...இதே கதையமைப்பில் இதை விட‌த் திறமான ஹிந்திப் பட‌ங்கள் எப்பவோ வந்திட்டுது...கமலின் கதக் நட‌னமும்,கமலின்ட‌ மனிசியாக நடித்தவரும் தான் என்னைக் கவர்ந்தது
டொன் சீடலின் நடிப்பில் 2008ம் ஆண்டு வெளியான ற்றெயிற்றர் (துரோகி) என்ற ஹொலிவுட் படத்தோடு ஏகப்பட்ட பொதுமை விசுவரூபம் கதையில் உள்ளது. கமலஹாசனிற்கு ஒரு ஹொலிவுட் படம் மாதிரியான படம் எடுக்கணும் என்ற ஆசை இருந்திருந்தால் அதில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். ஆனால் எப்பிடி அமெரிக்காவின் ஆரோக்கியக்கேடான மலிவு உணவுகள் அனைத்தும் நாகரிகமான விலையுயர்ந்த உயர்தர உணவுகளாக இந்தியர்களால் தற்போது இந்தியாவில் போற்றப்படுகிறனவோ அதுபோன்றே இந்த மலிவு ஹொலிவுட் படமும் இந்தியர்களால் மட்டும் தான் உயர்வாகக் கொண்டாடப்படும்--இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களால் என்று கூட ஒருவேளை இருக்கலாம்.
 
எல்லாக் கமல் படம் போல, பிராமணத்திகளிற்குப் பிடித்த ஒரு பாடலும் நடனமும், தொழில்நுட்பத்தில் இந்தியர்களிற்கு அனைத்தும் புரிந்தது போல சில காட்சிகள் இப்படி தற்போதைய கமலின் கலவை மாறாது இருக்கிறது. F.B.I இற்கு, நாடே அதிர்கின்ற அதியுச்ச பிரச்சினையான நேரத்தில் கூட, அணுகுண்டின் தன்மைகள் பற்றி விளக்குவதற்கு கமல் கூடவே கூட்டிவந்த ஒரு இந்தியச்சி தான் தேவைப்படுவது போன்றும், எப்.பி.ஐ பணியமர்த்தியிருக்கும் Bob என்றவனிடம் பி.எச்.டி கிடையாது ஆனால் நிருபமா என்ற இந்தியச்சி மட்டும் பி.எச்.டி வைச்சிருப்பதால் எல்லாம் தெரிந்தவளாகி எப்.பி.ஐ இனைக் காப்பாத்துவது போன்றும் வருகின்ற வழமையான தற்போதைய கமல்பட காட்சிகள் வழமைபோல் கடுப்பேத்துகின்றன. கமல் எப்.பி.ஐ வேசம் போட்டவனுகளுடன் கூட ஓடனும் என்றால் சொந்தக் காசில தான் பணம் எடுக்கணும் என்று மீண்டும் ஒரு தரம் நிறுவப்பட்டிருக்கிறது.
 
ஆனால் மன்மதன் அம்பு போன்ற கமலின் அண்மைக்காலக் குப்பைக்களைக் காட்டிலும் குறைந்த பட்சம் இப்படம் பார்த்து முடிக்கக் கூடியவகையில் இருந்தது.
  • தொடங்கியவர்

விஸ்வரூப திரைபடத்தில் பலரால் பேசப்படும் சண்டை காட்சி கீழே

 

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=n77zahtWcaY

Edited by matharasi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.