Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யோவ் எத்தின நாளைக்கு தான் விமானம் செஞ்சு விடுவம் என்று கதை விடுவிங்க பொறுமை இழந்து விட்டேன்: அந்தோணி கோபம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு: ""இலகுரக போர் விமானம், "தேஜஸ்'தயாரிப்பில் ஏற்படும் தாமதத்தால் எனது பொறுமை தீர்ந்து வருகிறது. அடுத்த ஆண்டிலாவது தயாரிக்கப்பட வேண்டும்,'' என, ராணுவ அமைச்சர், அந்தோணி தெரிவித்துள்ளார்.போரில் பயன்படுத்த, "தேஜஸ்' என பெயரிடப்பட்ட, இலகு ரகவிமானத்தை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதற்கான திட்டம், 20 ஆண்டுகளுக்கு முன் துவக்கியும், இன்னும் விமானம் முழு அளவில் தயாரிக்கப்படவில்லை.பெங்களூரு நகருக்கு அருகில் உள்ள எலகங்கா விமான தளத்தில், சர்வதேச விமான கண்காட்சி துவங்கியுள்ள நிலையில், பெங்களூருவில் நேற்று நடந்த சர்வதேச கருத்தரங்கில், அமைச்சர் அந்தோணி பேசியதாவது:டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தின் சாதனைகளை நான் மெச்சுகிறேன். அதே நேரத்தில், "தேஜஸ்' இலகு ரக போர் விமானம் தயாரிப்பில் ஏற்படும் தாமதம், என்னை மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது; என் பொறுமை எல்லாம் தீர்ந்து

விட்டது. ஆராய்ச்சி, சோதனை என, இன்னும் காலத்தை விரயமாக்காமல், விமானத்தை விரைந்து தயாரிக்கும் வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள். ராணுவ தயாரிப்பு ஆராய்ச்சியில் மத்திய அரசு ஏராளமாக நிதியுதவி செய்கிறது. அந்த அளவிற்கு தனியார் நிறுவனங்கள் செய்வதில்லை.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்திற்கு போட்டியாக மற்றொரு நிறுவனம் வந்தால் தான், இதன் செயல்பாடு மேம்பாடு அடையும் என நான் நினைக்கிறேன். இவ்வாறு, அமைச்சர் அந்தோணி பேசினார். விமானப்படை தளபதி, ஏர் சீப் மார்ஷல், பிரவுனி பேசும் போது,

""குறிப்பிட்ட காலத்திற்குள் ராணுவ தயாரிப்புகளை மேற்கொள்ளாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவியை திரும்ப பெற வேண்டும்,'' என்றார். மத்தியில் ஆளும், காங்கிரஸ் அமைச்சர்களில், "கைசுத்தமானவர்' என்பதால், அந்தோணிக்கு, அமைச்சரவையிலும், ராணுவத்திலும் மதிப்பு அதிகம் உண்டு.அமைதியான அவர், சில நேரங்களில் நியாயமான தன் கோபத்தை வெளிப்படுத்தவும் தவறுவது இல்லை.

தினமலர்

 மத்தியில் ஆளும், காங்கிரஸ் அமைச்சர்களில், "கைசுத்தமானவர்' என்பதால், அந்தோணிக்கு, அமைச்சரவையிலும், ராணுவத்திலும் மதிப்பு அதிகம் உண்டு.அமைதியான அவர், சில நேரங்களில் நியாயமான தன் கோபத்தை வெளிப்படுத்தவும் தவறுவது இல்லை.

 

சிங்கள அரச பயங்கரவாதிகளிடம் கைகட்டி கொடுப்பதை யாருக்கும் தெரியாமல் சுத்தமாக பெற்று அனுபவிப்பதாலும் இவர் மேல் "மதிப்பு" உயர்வாக இருக்கலாம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.