Jump to content

நேசக்கரம் கிராம அபிவிருத்தி பட்டப்படிப்பு உதவி.


Recommended Posts

நேசக்கரம் கிராம அபிவிருத்தி பட்டப்படிப்பு உதவி.

diploma_zpsf1d21498.jpg

    

படித்த மாணவர்களை அவர்களின் கிராமங்களை மேம்படுத்தவும் உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தி தொழில்சார் துறைகளில் முன்னேற்றவும் Brightfuture Nesakkaram அமைப்பின் ஒன்றரை வருட கற்கைநெறியினை ஆரம்பிக்கவுள்ளோம்.போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் 19வயது தொடக்கம் 24வயதுக்கு உட்பட்டவர்கள் கிராம அபிவிருத்தி பட்டப்பட்டிப்பில் பங்கேற்க முடியும்.

கற்றலுக்குத் தேவையான தகைமை :- கல்விப்பொதுத்தராதரம் குறைந்தது 3பாடங்கள் சித்தியடைந்திருக்க வேண்டும்.

பாடத்திட்டம் :-

1)    தகவல்தொழில்நுட்பம்

2)    பொருளாதாரஅபிவிருத்தி

3)    அனர்த்தமுகாமைத்துவம்

4)    உளவியல்

5)    சிறுவர்மேம்பாடு

6)    கிராமிய வள முகாமைத்துவம்

கால எல்லை : 1 ½ வருடம் (பாடநெறி : 1 வருடம், செயற்திட்டம் : ½ வருடம்)

பிரதேசம் : யுத்தித்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்

(ஒரு மாவட்டத்தில் ஒரு கற்கை நிலையம்)

செலவு விபரம் மாதாந்தம் மாவட்டம் ஒன்றிற்கு :-

விரிவுரையாளர்கள் கொடுப்பனவு : 10000.00ரூபா

மாணவர்கள் கையேடு : 5000.00ரூபா

உதவியாளர் கொடுப்பனவு : 4000.00 ரூபா

சிற்றூண்டி செலவுகள் : 5000.00ரூபா

மொத்தம் : 24000.00 ரூபா

ஒரு மாவட்டத்திற்கான மாதாந்த செலவு – 24000,00ரூபா (அண்ணளவாக 150€) தேவைப்படுகிறது.

ஒரு மாவட்டத்திற்கான ஒன்றரை வருட மொத்தக் கற்பித்தல் செலவு – 432000,00ரூபா(அண்ணளவாக 2700,00€)

மாவட்டம் ஒன்றுக்கு ஒரு கல்றை நிலையமே முதல்கட்டம் நிறுவப்படும். 300முதல் 500மாணவர்கள் வரை எதிர்பார்க்கப்படுகிறது.

படித்த மாணவர்கள் ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்பற்று தங்கள் எதிர்காலம்

பற்றிய கனவுகளை மட்டும் சுமந்தபடி தங்கள் வாழ்வை மேம்படுத்த வழியற்றுத்

தவிக்கிறார்கள். ஒவ்வொருவராலும் செய்யக்கூடிய முன்னேறக்கூடிய தொழில்சார்

பட்டப்படிப்பை வழங்குவதன் மூலம் தன்னையும் மேம்படுத்துவதோடு தனது கல்வி

மூலம் தான் சார்ந்த சமூகத்தையும் கிராமத்தையும் வளமாக்கும் திறனையும் வழங்க

முடியும்.

கிராமிய அபிவிருத்திப் பட்டப்படிப்பினை நிறைவு செய்வதற்கான கால எல்லை

ஒன்றரை வருடங்கள் ஆகும். முதல் ஒருவருடம் கற்பித்தலும் இறுதி 6மாதங்கள்

செயற்திட்டத்தினை வழங்க வேண்டும். இறுதிச் செயற்திட்டத்திற்கு 50வீதமான

புள்ளிகள் வழங்கப்படும். செயற்திட்டத்தில் வழங்கப்படும் புள்ளிகள்

அடிப்படையிலேயே சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இறுதி செயற்றிட்டத்திற்கு கிராமிய கடன் அடிப்படையில் நிதியுதவி

வழங்கப்படும். இக்கடனுதவியை குறித்த மாணவரின் நிரந்தர வாழ்வாதார

மேம்பாட்டிற்கான ஆதாரமாக அமைகிற நேரம் கிராமங்கள் சுயதொழில்

முன்னேற்றத்திலும் ஏற்றம் காண முடியும்.

தங்கள் தங்கள் மாவடங்கங்களில் வாழும் படித்த மாணவர்களின் வாழ்வை

மேம்படுத்தி அவர்கள் மூலம் அந்த சமூகத்தை மேம்படுத்தக்கூடிய வாய்ப்பை வழங்க

உலகுவாழ் தமிழர்கள் அனைவரையும் ஆதரவு தருமாறு அன்போடு வேண்டுகிறோம்.

இம்முயற்சியில் நீங்கள் தருகிற ஆதரவுகள் மூலமே எங்கள் எதிர்கால இளைய

தலைமுறையின் வாழ்வாதாரம் தங்கியிருக்கிறது என்பதனை புரிந்து கொண்டு உங்கள்

ஆதரவை நல்குங்கள். ஆரோக்கியம் மிக்க கிராமங்களையும் தமிழ் மாணவர்களையும்

வளர்த்தெடுப்போம்.

செயற்றிட்ட அறிக்கை :-

DiplomaCourse_zps157e38a5.jpg

இத்திட்டத்திற்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரம் :-

Bank information

Germany:

NESAKKARAM e.V.

55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

Paypal Account – nesakkaram@gmail.com

Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

http://nesakkaram.org/ta/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/

Link to comment
Share on other sites

வெறும் வெற்றுப்பேச்சுக்களும் ,  பப்படா கதைகள் நிறைந்த புலத்து தேசியவாதிகள் மத்தியில் நேசக்கரம் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளப்படுவது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டும் .  எல்லோரும் 10 யூறோ போட்டாலே பெரியதொகையாகிவிடும் . புலத்து தேசியவாதிகள் சிந்திப்பார்களா ????????

Link to comment
Share on other sites

வெறும் வெற்றுப்பேச்சுக்களும் ,  பப்படா கதைகள் நிறைந்த புலத்து தேசியவாதிகள் மத்தியில் நேசக்கரம் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளப்படுவது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டும் .  எல்லோரும் 10 யூறோ போட்டாலே பெரியதொகையாகிவிடும் . புலத்து தேசியவாதிகள் சிந்திப்பார்களா ????????

 

கோமகன்,

நீங்கள் ஒரு விடயத்தை பாராட்டுவதற்காக  மற்றவர்களை தூற்ற வேண்டும் என்று இல்லை. புலத்து தேசியவாதிகள் என்று பொதுப்படையாக குறிக்கும் போது தமிழ் தேசியத்துக்காக வாழ்க்கையையே இழந்தவர்களும், நேர்மையுடன் செயல்படுகின்றவர்களும் அடக்கம் என்பதை மறக்க வேண்டாம். குறிப்பிட்ட சிலரில் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை இப்படியான திரிகளிலும் காவித் திரிகின்ற போக்கின் அடிப்படையில் தான் இந்த பதிலையும் நீங்கள் எழுதியதாகத்தான் நோக்குகின்றோம். யாழில் அண்மையில் அதிகரித்து வரும் குழுப் போக்கின் இன்னொரு அம்சம் இது.

 

.

Link to comment
Share on other sites

இங்கு ஒவ்வொரு விடயத்தையும் பதிவு செய்யும் போதும் அதற்கான பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இங்க பதிவிடுகிறேன். ஒரு சமூகத்தின் மாற்றத்தை நோக்கிய சின்னச் சின்ன இத்தகைய முயற்சி பெரியளவில் மாற்றம் காண ஆதரவு தேவையென்பதற்காகவே இங்கு மினக்கெடுகிறேன். இதில்  தேவையற்ற வேண்டாத கருத்துக்களை தவிர்த்து கருத்தாளர்கள் ஆதரவினை தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

இத்திட்டத்திற்கு யாராவது கிராமங்கள் அல்லது ஊரவர்கள் இணைந்து உதவினால் பல கல்வி கற்ற மாணவர்களை வைத்து கிராமங்களை வளர்ச்சியடைய வைக்கலாம். நாங்கள் கொடுக்கிற கிராமங்களையே இறுதி ஆறுமாத செய்முறையில் விருத்தியாக்கி காட்ட வேணும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்கள் care ஐ அல்லது don’t care ஐ வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். அம்மஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லை. கஸ்தூரி பற்றிய திரியில் சம்பந்தமே இல்லாமல் சாதிய வசை சொல்லை பாவித்து, தெரிந்து கொண்டே பாவித்து, அதில் என்னையும் இழுத்து, எனக்கும் கருணாநிதிக்கும் ஒரு சாதிய பாசமோ? என்ற தொனிப்பட நீங்கள் எழுதியதற்கான எதிர்வினையே இதுவரை நடந்தது. அதில் இனதூய்மைவாத, சாதிய வாத, பிரதேசவாத பழைய உதாரணங்களை எடுத்து காட்டும் படி ஆகிற்று.
    • நாம் கதைத்து கொண்டிருப்பது பிள்ளையானுக்கு வீழ்ந்த, விடும் வாக்குகள் பற்றி. பிள்ளையானின் அரசியல், அதை நீங்கள் இன்றும்(?) ஆதரிப்பது பற்றியது. இதில் ஏன் கருணாவுக்கு வீழ்ந்த வாக்குகள் எண்ணப்படுகிறன. அப்படியே ஆயினும், முஸ்லிம் ஆதிக்கம், கல்முனை தரமுயர்த்தல் இரெண்டும் கருணா, பிள்ளையானால் தீர்க்கப்பட்டு விட்டதா? ஆகவே உங்கள் ஹீரோக்களும் சீரோக்கள்தான்.  மற்றையவர் தேசிக்காய்கள் என்றால் உங்கள் ஹீரோக்கள் சுண்டங்காய்கள்🤣. அவர்கள் எலக்சனுக்காக பேசுவதை அப்பாவி பாமர மக்கள் நம்பினால் கூட பரவாயில்லை. ஆனால் படித்தவர்கள் கூட? அப்படியே ஆயினும், மகிந்த இனவாதிதான், இனப்படுகொலையாளந்தான் ஆனால் முஸ்லீம்களின் வாலை வெட்டினார், வீதிகளை புனரமைத்தார் எனவே அவருக்கு நான் பிரச்சாரம் செய்கிறேன் எனும் சிங்கள வாக்காளருக்கும் உங்களுக்கும் ஒரு வேறுபாடுமில்லை. அவர் இனவாதி. நீங்கள் …. இது அந்த சமயம் நீங்கள் யாழில் எழுதியமைக்கு மாற்றாக உள்ளது.  அந்த தேர்தலில் பிள்ளையான் மட்டிலும், கருணா அம்பாறையிலும் கேட்டார்கள். நீங்கள் தெளிவாக சொல்லி இருந்தீர்கள்…இந்த முறை உங்கள் வாக்கும், உங்களை சூழ உள்ளோர் வாக்கும் இவர்களில்ளுக்கே என்பதை நீங்கள் உறுதி செய்வீர்கள் என. ஆதாரம் கேட்டு திரியை நீளடிப்பதாயின் அது உங்கள் விருப்பம். எனக்கு இந்த ஆதாரம் காட்டும் விடயத்தில் முன்பு போல் ஆர்வம் இல்லை, அதே போல் யாழில் இப்போ தேடுவதும் கடினமாக உள்ளது - இது மாத்தி மாத்தி எழுதுவோருக்கு வசதியாயும் போய்விட்டது.
    • இதுதான் பிரச்சினையே  கருணாவிற்கு அன்று வாக்கு விழுந்தது கல்முனை பிரதேச சபை தரமுயர்த்தல் , முஸ்லிம்களிடமிருந்து வரும் அரசியல் நெருக்குவாரங்களில் இருந்து பாதுகாப்பு இந்த இரண்டையும் பட்டவர்த்தனமாக சொல்லி வேறு எந்த தமிழரும் போட்டியிடவில்லை. கரெக்ட்டு ஆனால் டிக்கடித்தது செல்வம் அடைக்கலநாதனும் கூத்தமைப்பு மத்திய சபையும். அதனால் தான் பிள்ளையான் பிரதேசவாதத்தால் வெல்லவில்லை என்று சொல்கிறேன். திருமலையில் வத்சா, மட்டுநகரில் தனுசிகா இரண்டும் பிள்ளையான் குழுவின் கைங்கர்யம் தான்,  பிள்ளையான் மீது எவ்வளவு காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் பிள்ளையான் செய்த அபிவிருத்திகள் அப்படி அதனை மறுக்கமுடியாது.  ஆனால் நிட்சயமாக பிள்ளையானுக்கு வாக்கு போட்டிருக்கமாட்டேன். மட்டுநகருக்கு என்னுடைய வாக்குரிமை மாற்றப்பட்ட பின் இரண்டு முறை வாக்களித்திருக்கிறேன் இரண்டும் பிள்ளையானுக்கு இல்லை. கல்முனையில் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தலுக்காக கருணாவிற்கு ஒரு முறை. ஒன்று கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக யார் வந்து நின்றாலும் வாக்குப்போடுவேன் ஏனென்றால் அது என் ஆன்மா. நான் பிறந்து வளர்ந்த ஊரிலேயே இந்த ஒன்றை பிடுங்க முடியாமல் உலகில் எங்கு போய் எதை பிடுங்கினாலும் அது எனக்கு ஹைகோர்ட் மட்டுமே இந்த லட்சியம் உங்களுக்கு மேலே சொல்வது போல் தெரிந்தால் I don't care.
    • செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்து! அண்ணன் 2025 சட்டசபைத் தேர்தலில் தன்னுடைய தொகுதியில் கட்டுக்காசை பெற முப்பாட்டன் முருகன் அருள் கிடைக்கட்டும்!
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.