Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிக் குழு உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறுகின்றது: � நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

Featured Replies

அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிக் குழு உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறுகின்றது: � நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன். 

[Thursday, 2013-02-07 23:40:16]
Sritharan_MP-150-seithy.jpg

அண்மையில் சிறிலங்கா சென்று திரும்பிய அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் உபதலைவரான Julie Bishop தலைமையிலான குழு சிறிலங்கா தொடர்பிலும் தமிழ்மக்கள் தொடர்பிலும் அவுஸ்திரேலியாவில் தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேல்பேணிலிருந்து இயங்கும் தமிழ்க்குரல் வானொலிக்கு 06.02.2013 அன்று அளித்த செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

  

சிறிலங்காவிலிருந்து திரும்பியபின் Julie Bishop, Scott Morrison ஆகியோர் அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு தமது சிறிலங்காவுக்கான பயணம் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். அவற்றில்> தமிழ்மக்கள் சிறிலங்காவில் சுபீட்சமாக வாழ்கிறார்கள்> அவர்கள் அரச அடக்குமுறையை எதிர்கொள்ளவில்லை> அமைதியாகவும் நிம்மதியாகவும் அவர்கள் அங்கே வாழ்க்கை நடாத்துகிறார்கள்> அவுஸ்திரேலியாவுக்கு அகதியென்ற போர்வையில் வருபவர்கள் அனைவரும் சுகபோகமான ஆடம்பர வாழ்வுக்காகவே வருகிறார்களேயன்றி அவர்கள் உண்மையான அகதிகளல்லர் போன்ற கருத்துக்களை அவர்கள் முன்வைத்திருந்தனர்.

மேலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்களை தாம் சந்தித்துப் பேசியதாகவும்> தமிழ்மக்கள் அங்கே அரச அடக்குமுறையை எதிர்கொள்கிறார்கள் என்று அவர்கள் தமக்குத் தெரிவிக்கவில்லையென்றும் மேற்படிக் குழு கருத்துத் தெரிவித்திருந்தது.

மேற்படிக் குழுவை வன்னியில் நேரடியாகச் சந்தித்து மக்களின் அவலங்களைச் சுட்டிக்காட்டியவரும் கேப்பாப்புலவு புதிய குடியேற்றத் திட்டத்திற்கு நேரடியாக இவர்களை அழைத்துச்சென்று மக்களின் அவலங்களைக் காட்டியவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் கனடிய வானொலிக்கு வழங்கிய செவ்வியில்> தான் இக்குழுவினருக்கு தமிழ்மக்களின் அவலங்களை விலாவாரியாகவும் ஆதாரபூர்வமாகவும் எடுத்தியம்பியதாகவும்> தனது அலுவலகத்தில் நடந்த அடாவடியையும் தனது பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டு புலனாய்வுத்துறையால் விசாரிக்கப்படும் சம்பவங்களையும் விளக்கியதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் சிறிதரன் அவர்களின் செவ்வியை அடிப்படையாகக் கொண்டு அவுஸ்திரேலிய ஊடகமொன்று Scott Morrison ஐச் செவ்வி கண்டபோது சிறிதரனுடனான தமது சந்திப்புத் தொடர்பில் மழுப்பலான பதில்களையே அவர் வழங்கியிருந்தார் என்பதோடு தமிழ்மக்களுக்கு அங்கே எவ்வித பிரச்சனையுமில்லை என்ற ரீதியிலேயே தமது கருத்துக்களைத் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தார்.

அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியினரின் இந்தப் பரப்புரையை அடுத்து 'தமிழ்க்குரல்' வானொலி சிறிதரன் அவர்களின் கருத்துக்களைத் தொகுத்து வழங்கியது. அதில் எதிர்க்கட்சிக் குழுவின் கருத்துக்கள் தொடர்பாகக் கேட்கப்பட்டபோது> தாம் எவ்வாறு அக்குழுவினருக்கு தமிழ்மக்களின் அவலங்களை ஆவணங்களுடன் ஆதாரபூர்வமாக விளக்கினாரென்றும்> பல்கலைக்கழக தமிழ்மாணவர் கைது> முன்னாட் போராளிகள் மீதான வன்முறை> தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாட்போராளிகள் மீளவும் கடத்தப்படுவது> மக்கள் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படாமலுள்ளமை> நிலங்கள் பறிபோவது> சிங்களக் குடியேற்றங்கள்> படைமுகாம்களினதும் படையினரதும் எண்ணிக்கை> படைநிலைகளின் விஸ்தரிப்புக்கள் என எல்லாவற்றையும் விலாவாரியாக அவர்களுக்கு எடுத்தியம்பினாரென்றும் திரு சிறிதரன் அவர்கள் செவ்வியில் விளக்கினார்.

மேலும் கேப்பாப்புலவு மக்களிடம் அவர்களை அழைத்துச்சென்று மக்களின் அவலங்களைக் காட்டினாரென்றும் எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் அம்மக்கள் தவித்துக்கொண்டிருந்ததை இக்குழு கண்கூடாகக் கண்டது என்றும் கருத்துத் தெரிவித்த திரு சிறிதரன் அவர்கள்> ஆனால் Julie Bishop உட்பட்ட இக்குழுவானது தமிழரின் பால் கரிசனை கொண்டிருக்கவில்லையென்பதை தாம் அப்போதே உணர்ந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சிநிரலோடு வந்திருந்த அக்குழு ஒரு கண்துடைப்புக்காகவே தமிழர் பகுதிகளுக்கு வருகை தந்திருந்ததை தாம் அறியக்கூடியதாக இருந்தது என்றும்> இப்போது அவர்கள் திட்டமிட்டே தமிழரின் அவலங்களை இருட்டடிப்புச் செய்வது மட்டுமன்றி உண்மைக்குப் புறம்பான முறையில் தமிழ்மக்களின் நிலைகுறித்துக் கருத்துத் தெரிவிக்கின்றனர் எனவும் சிறிதரன் குறிப்பிட்டார்.

மேற்கத்தைய நாடொன்றின் அரசியற்கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று இவ்வாறு மனச்சாட்சியற்ற முறையில் திட்டமிட்டுப் பொய்ப்பரப்புரை செய்வது எமக்கு வேதனையளிக்கின்றது எனவும் அவர் தனது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=75531&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.