Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்தத்தில் நீங்களும் வாகனத்தை தொலைத்தவரா ? (படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

711350330Untitled-1.jpg

 

இறுதி யுத்ததின் போது கைவிடப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினர் ஈடுப்பட்டு வருகின்றனர். 

வன்னியில் கைவிடப்பட்ட நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் இந்த கைவிடப்பட்ட வாகனங்கள் ஓரிடத்தில் குவிக்கபட்டிருக்கின்றன. இந்த இடங்களுக்கு கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் சென்று வாகனங்களை பரிசோதித்து அதன் வாகன இலக்கம், இயந்திர இலக்கம், அடிச்சட்ட இலக்கம் போன்றவற்றை பதிவு செய்கின்றனர். 

பின்னர் நல்ல நிலையிலுள்ள வாகனங்கள் பாவிக்கமுடியாத வாகனங்கள் என தரம்பிரித்து அவற்றினை மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரனிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் அதனை உரிமையாளர்களிடம் கையளிப்பதோ அல்லது ஏலத்தில் விடுவதோ என்ற இறுதி தீர்மானத்தினை மேற்கொள்வார் என மோட்டார் போக்குவரத்து தீணைக்களத்ததின் வருகைதந்திருக்கும் அணிக்கு தலைமை தாங்கும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள பரிசோதகர் ஜயம்பத் தெரிவித்தார். 

இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பரிசோதகர் ஜயம்பத் தலைமையில் வருகைதந்துள்ள பதினொரு பேர் கொண்ட குழுவினர் ஏற்கனவே முல்லைத்தீவில் தமது பணிகளை முடித்து நேற்றைய (07) தினம் வவுனியாவிலும் இன்று (08) கிளிநொச்சியிலும் தங்களது மேற்படி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மழையிலும் வெயிலிலும் கிடந்து துருப்பிடித்த நிலையில் வெறும் இரும்புகளாக காணப்படும் இந்த வாகனங்கள் தெரிவுசெய்யப்பட்ட குறிப்பிட்ட இடங்களுக்கு கொண்டுவந்த ஆரம்ப நாட்களில் பல தரப்பினர்களும் திருட்டுத்தனமாக வாகனங்களில் காணப்பட்ட நல்ல நிலையிலுள்ள உதிரிபாகங்கள் மற்றும் சில நல்ல வாகனங்களையும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் தற்போது வெறும் இரும்புகள் மாத்திரமே காணப்படுகிறது. இந்த இரும்புகளும் கடந்த நாட்களில் களவாடப்பட்டே வந்தமையும் குறிப்பிட்டத்தக்கது. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.