Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர் பிரச்சினை: உலகம் முழுதும் ஐநா அலுவலகத்தை முற்றுகையிடத் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர் பிரச்சினை: உலகம் முழுதும் ஐநா அலுவலகத்தை முற்றுகையிடத் திட்டம்
 
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை ஐ.நா. தடுக்கத் தவறியதைக் கண்டித்து உலகம் முழுவதும் உள்ள ஐ.நா. அலுவலகங்களை எதிர்வரும் 12ம் திகதி முற்றுகையிடப் போவதாக தமிழர் அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

மேலும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தின் முன்பு இலங்கை தமிழர் முருகதாசன் போரை நிறுத்த கோரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதன் நினைவாக இந்த போராட்டம் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இலங்கைப்போரின் இறுதி மாதங்களில் சர்வதேச மனிதாபிமான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என ஆராய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்த குழுவினர், தங்களது அறிக்கையை ஐ.நா.விடம் சமர்ப்பித்தது. 

இதற்கிடையில், அந்த அறிக்கையில் இருந்து அகற்றப்பட்டதாகக் கூறப்பட்ட பகுதிகளை பான் கீ மூன் பகிரங்கமாக வெளியிட்டார். 

இலங்கை நாட்டில் சுமார் 30 ஆண்டு காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனப்பிரச்சனையின் ஒருபகுதியாக விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையிலான போர் கடந்த 2009ம் ஆண்டு நின்று போனது. 

இராணுவத்தின் தொடர் தாக்குதலில் வலுவிழந்த விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மவுனிப்பதாக அறிவித்தனர். இதற்கிடையில், தொடர் தாக்குதலில் ஈடுபட்ட ராணுவத்தின் தாக்குதலில் இறந்தவர்கள் எத்தனைபேர், காணாமல் போனவர்கள் எத்தனை பேர், இழந்தவைகள் எத்தனை என இன்னமும் உறுதியான தகவல்கள் சர்வதேச சமூகத்திற்கு கிடைக்கவே இல்லை. 

இறுதிப்போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், சர்வதேச போர் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் இலங்கை அரசு மீது போர்க்குற்றம் புரிந்ததாக ஈழத்தமிழர்கள் கூறி வருகின்றனர். இதுபற்றி ஆராய இந்தோனேசியாவின் மர்சுகி தருஸ்மனைத் தலைவராகவும், தென் ஆப்ரிக்காவின் யாஸ்மீன் சூகா மற்றும் அமெரிக்காவின் ஸ்டீவன் ராட்னர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஐ.நா. சிறப்புக் குழுவை ஐ..நா.பொதுச்செயலர் பான் கீ மூன் அமைத்தார். 

அந்தக்குழு கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி முதல் கட்ட அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையிலேயே 40 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன் இறுதி அறிக்கை ஐ.நாவிடம் சமர்ப்பிக்கவிருந்த நிலையில், அந்த அறிக்கையில் சுமார் 128 பக்க தகவல்கள் அகற்றப்பட்டுள்ளதாகக்கூறி, அதனை பி.பி.சி. தொலைக்காட்சிக்கு சிலர் கசிய விட்டனர். அதனை பி.பி.சி செய்தியாக்கியதை அடுத்து ஐ.நாவை நோக்கி சர்வதேச சமூகத்தின் பார்வை திரும்பியது. 

இறுதிப்போரின்போது ஐ.நா. கடமை தவறியதாகக்கூறும் அந்த அறிக்கையை ஐ.நா.பொதுச்செயலர் பான் கீ மூனும் பின்னர் பகிரங்கமாக வெளியிட்டார். 

ஆனாலும், அந்த அறிக்கையில் பல சரத்துக்கள் கருப்பு மையினால் அழிக்கப் பட்டுள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில் இலங்கை விவகாரத்தில் ஐ.நா. கடமை தவறியதை ஐ.நா.பொதுச்செயலர் பாங் கி மூனும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, பான் கீ மூனையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. 

ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனின் சிறப்புக் குழுவின் அறிக்கையில் இருந்து அகற்றப்பட்டதாகக் கூறப்படும் 128 பக்க அறிக்கையில் பல இடங்களில், இலங்கைப் போர் போன்ற தருணங்களைக் கையாள ஐ.நா. தயாராக இருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், இலங்கையில் பணி புரிந்த ஐ.நா. அதிகாரிகள் கேட்டுக்கொண்டும்கூட இலங்கை அரசாங்கம் பல தருணங்களில் அவர்களின் ஆலோசனைகளுக்கு செவி மடுக்காமல் இருந்ததோடு, அவர்களை பல இடங்களுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறது. 

ஈழத்தமிழர்களும், விடுதலைப்புலிகளும் கேட்டுக்கொண்டும்கூட அதற்கு செவிசாய்க்காத ஐ.நா. பார்வையாளர்கள் இலங்கை அரசின் எச்சரிக்கைக்கு பயந்து போர்ப்பகுதியை விட்டு வெளியேறியதும் அப்பாவி மக்கள் அதிக அளவில் கொல்லப்பட்டதற்கு காரணம் எனவும் ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. 

வன்னிப் பகுதியில் மட்டும் 2008ம் ஆண்டு 4 லட்சத்து 29 ஆயிரம் மக்கள் தொகை இருந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் வசித்தார்கள் என்று குறிப்பிடும் அந்த அறிக்கை, இலங்கை அரசாங்கம் அதனை மறுத்து வெறும் 70 ஆயிரம் பேர் மட்டுமே அங்கு வசித்ததாகக் கூறியதையும் பதிவு செய்துள்ளது. எனவே கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும் என்ற அச்சத்தையும் இந்த ஆய்வறிக்கையின் வரிகள் வெளிப்படுத்துகிறன. 

இலங்கையில் அழிவுகள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது அதுபற்றி ஐ.நா. ஒரே ஒரு அறிக்கை மட்டுமே அளித்ததும் இந்த விவகாரத்தில் ஐ.நா எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருந்தது என்பதைக் காட்டுவதாகவும் நிபுணர் குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர். 

இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைய விருப்பம் தெரிவித்தபோது, அதை ஐ.நா பிரதிநிதிகள் முன்னிலையில் நிகழ்த்தவேண்டும் எனக்கூறியதற்கும் இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்தது. அதை அப்படியே ஐ.நா அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

போரின் இறுதி நாட்களில் ஐ.நா. சபை சரியாகத் திட்டமிடாதது மட்டுமல்லாமல், அதிகாரிகளை சரியான பொறுப்புகளில் அமர வைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், போர் பற்றிய தகவல்களை அலசி ஆராய்வதற்குக்கூட ஐ.நாவில் போதுமான வசதிகள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

மேலும், சர்வதேச அளவில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஐ.நா தன்னை மாற்றிக்கொள்ளாமல் இன்னமும் பழைய முறைகளையும், நுட்பங்களையுமே பயன்படுத்தி வருவதும் இலங்கை விவகாரத்தில் ஐ.நா தோல்வியைச் சந்தித்தற்கு காரணம் என வல்லுனர் குழு காரணங்களை அடுக்கியுள்ளது. 

மேலும், இலங்கையில் போர் நிகழ்ந்து கொண்டிருந்த சூழ்நிலையில் ஐ.நாவின் உயர் அதிகாரிகள் பல முறை அங்கு நேரில் ஆய்வு செய்திருக்க வேண்டும் ஆனால், அந்த முயற்சிகள் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டே வந்துள்ளதையும் நிபுணர் குழுவினர் சுட்டிக்காட்டுகின்றனர். 

இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது, அப்பாவி மக்கள் பாதுகாக்கப்படவில்லை என்பது உண்மையாகும் பட்சத்தில் ஐ.நா. தலைமை அலுவலகத்தில் யார் அதற்கு பொறுப்பேற்பார்கள் என்பது கூட தெளிவற்றதாக உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை நிபுணர் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

ஐ.நா.பாதுகப்புக் குழு இருந்தும்கூட, போர் முடிந்து பல வாரங்கள் வரை ஐ.நா. சபையால் இலங்கை தொடர்பான சரியான தகவல்களைத் தர முடியாத அவலமான நிலை இருந்ததை குறிப்பிட்டுள்ளது. 

இலங்கையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஐ.நா அதிகாரிகளுக்கு அரசியல் குறித்தோ, ஆயுதப் போராட்டம் குறித்தோ போதுமான அறிவோ, அனுபவமோ இல்லாதிருந்ததும் ஐ.நா.. இலங்கையில் தோல்வியடைந்ததற்கு மிக முக்கியக் காரணம் என நிபுணர் குழு கூறியுள்ளது. 

மேலும், உலகின் மிகப்பெரிய இனப்படுகொலைகள் நடைபெற்ற நிலையில், ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தை கூட்ட ஐ.நா. அக்கறை கொள்ளவில்லை என்பதையும் நிபுணர்குழு குறிப்பிட்டுள்ளது. ஆக மொத்தம் இலங்கையில் இறுதிப்போரின்போது அப்பாவி மக்களைக் காக்கத் தவறிய ஐ.நா. மிகப்பெரும் அளவில் தோல்வி அடைந்துள்ளது என அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. 

2005-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, ஒரு நாட்டில் நடைபெறும் இனஅழிப்பு, போர்க்குற்றம், மனித உரிமைகள் மீறல் ஆகியவற்றிற்கு அந்த நாடுதான் பொறுப்பு. மேலும், அந்தப் பொறுப்பை அந்நாடு செவ்வனே செய்து முடிக்க உலக நாடுகள் அந்நாட்டிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

மூன்றாவதாக, அந்த குறிப்பிட்ட நாடு இந்த கடமையில் இருந்து தவறும் பட்சத்தில் ஐ.நா., கண்காணிப்பில், அந்நாட்டின் மீது ராஜாங்க ரீதியாகவும், மனிதாபிமான ரீதியாகவும், வேறு ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொண்டு அந்நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால், இலங்கையில் இவை அனைத்திலும் ஐ.நா. தவறிவிட்டதை அந்த அமைப்பே ஒப்புக்கொண்டுள்ளது. 

 
  • கருத்துக்கள உறவுகள்

வெல்க...வாழ்த்துக்கள்...

அதன் இறுதி அறிக்கை ஐ.நாவிடம் சமர்ப்பிக்கவிருந்த நிலையில், அந்த அறிக்கையில் சுமார் 128 பக்க தகவல்கள் அகற்றப்பட்டுள்ளதாகக்கூறி, அதனை பி.பி.சி. தொலைக்காட்சிக்கு சிலர் கசிய விட்டனர். அதனை பி.பி.சி செய்தியாக்கியதை அடுத்து ஐ.நாவை நோக்கி சர்வதேச சமூகத்தின் பார்வை திரும்பியது. 
 
என்ன இது?

 

பிரான்சு பாரிஸ் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சாசனம் முதல் முதலாக அறிவிக்கப்பட்ட மனிதவுரிமை சதுக்கத்தில் 12/02/2013யில் முற்றுகை போராட்டம்.

இடம்: மனிதவுரிமை சதுக்கம், (Metro: Trocadero Ligne: 6/9)

காலம்: செவ்வாய் 12-02-2013 மாலை 3 மணிக்கு (15h00)

தொடர்பு : mte.france@gmail.com / 06 52 72 58 67

- தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு.

 

====================================================

 

லண்டனில் 12-02-13, ஐ. நாவிற்கு எதிரான போராட்டம்.

தொடர்பாக பங்கேற்க விரும்பும் தோழர்கள் தொடர்பு கொள்ள :

senann@hotmail.com senan@tamilsolidarity.org, contact.may17@gmail.com

 

 



=====================================

http://www.yarl.com/forum3/index.php?showtopic=116605



580460_10200554489728257_2105285948_n.jp

இன்று காலை கேப்டன் தொலைகாட்சியில் தோழர் திருமுருகன் ஐ.நாவின் துரோகங்களையும் முற்றுகை போராட்டத்தினை தேவையை விளக்கிய காணொளி:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணாவிலான். செய்தி பல இடங்களில் பிழையாக எழுதப்பட்டிருக்கிறது.

சி.என்.என். முருகதாஸ் அவர்களின் விவரணம்

 

74012e33b7e4ed04280f6a7067002d86.jpg

The United Nations' top human rights official on Wednesday faulted Sri Lanka for failing to investigate reports of widespread killings and other atrocities toward the end of its bloody quarter-century civil war.

In her report to the 47-nation U.N. Human Rights Council, High Commissioner for Human Rights Navi Pillay also said opposition leaders are still being killed or abducted and the government has made no arrests or prosecutions in cases of disappearances.

 

http://news.yahoo.com/un-faults-sri-lanka-probe-alleged-war-abuses-160652903.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.