Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு

Featured Replies

பொதுநலவாய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடைபெறும் என அமைப்பின் பொது செயலாளர் கே.சர்மா இன்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். 
 
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகமவுடனான சந்திப்பின்போதே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மாநாட்டிற்காக ஏற்பாடுகளை பரிசீலனை செய்த பின்னரே அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58685-2013-02-11-08-07-09.html

  • தொடங்கியவர்

கமலேஷ் சர்மா ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.
 
மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பொது நலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஷ் சர்மா இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.
 
இதுதவிர, அவர் வெளிவிவகார அமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதன் பொருட்டே அவர் இலங்கை வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இலங்கை வந்துள்ள பொது நவலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஷ் சர்மா அதிகார பரவலாக்கம் தொடர்பில் கலந்துரையாடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.


http://www.hirunews.lk/tamil/53185

  • தொடங்கியவர்

கமலேஷ் சர்மா - ஜனாதிபதி சந்திப்பு

 

8(1777).jpg



இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

 

 

அலரிமாளிகையின் இன்று மாலை மூன்று மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும் கலந்துகொண்டார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58694-2013-02-11-10-17-34.html

  • கருத்துக்கள உறவுகள்

இதை இந்தியாவின் மேற்குலகிற்கான செய்தியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்..! :rolleyes:

  • தொடங்கியவர்

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் : கனடா

 

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என கனடா மீண்டும் தனது உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இலங்கையில் நீதிமன்றக் கட்டமைப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவுதம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளுக்கு புறம்பாக இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் கனடா குற்றம் சுமத்தியுள்ளது.


இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் மேற்படி கோரிக்கை விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2976

  • தொடங்கியவர்

பொதுநலவாய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடைபெறும் என அமைப்பின் பொது செயலாளர் கே.சர்மா இன்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். 

 

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகமவுடனான சந்திப்பின்போதே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மாநாட்டிற்காக ஏற்பாடுகளை பரிசீலனை செய்த பின்னரே அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58685-2013-02-11-08-07-09.html

 

இந்த செய்தி உண்மையானதா? இல்லை சிங்களம் அவசரப்பட்டு கூறியதா? என்ற சந்தேகம் உள்ளது.

  • தொடங்கியவர்

CHOGM 2013

11 February 2013

 

Contrary to some media reports, Commonwealth Secretary-General Kamalesh Sharma has not made any statements today with regard to Sri Lanka as host venue of the Commonwealth Heads of Government Meeting (CHOGM) in November 2013.

 

The only public statement issued by the Commonwealth Secretariat thus far is a press release issued by the Secretariat's Official Spokesperson, Richard Uku, on 10 February 2013 announcing the Secretary-General's current visit to Sri Lanka.

 

The Spokesperson's statement indicated that Mr Sharma will be in Colombo to discuss matters of shared interest between Sri Lanka and the Commonwealth, including November's Heads of Government Meeting. It indicated that he will review organisational preparations for CHOGM and discuss possible outcomes that Sri Lanka and Commonwealth leaders will want to achieve at the summit.

 

The Spokesperson's 10 February statement also indicated that Mr Sharma is expected to discuss, among other issues, options for advancing Commonwealth values and principles, including the independence of the judiciary and the separation of powers.


There will be a statement at the end of the Secretary-General's visit to Sri Lanka on Wednesday, 13 February.

 

Media Contact

Richard Uku
Spokesperson / Director of Communications and Public Affairs
Commonwealth Secretariat
Tel (Sri Lanka): +94 (0) 78 888 0384
Tel: +44 (0) 20 7747 6380
Tel Mobile: +44 (0) 7711 187784
Email: r.uku@commonwealth.int

 

http://www.thecommonwealth.org/news/34580/253154/110213chogm2013.htm

தமிழ் செய்தியில் உண்மை இருக்க இல்லையா தெரியாது. அதில் பொது அறிவு காணப்படுகிறது. சர்மா அந்த வாக்குறுதியை தனிப்பட்ட முறையில் மகிந்தாவுக்கு கொடுத்திருக்காவிட்டால் இலங்கை வர மற்றய நாடுகளுக்கும், ஐ.நா வுக்கும் வீசா மறுக்கப்பட்டமாதிரியே இவருக்கும் வீசா மறுக்கபட்டிருக்கும். 

பொதுநலவாய மாநாடு இலங்கையில் என கமலேஷ் சர்மா உறுதிபடுத்தியதாக வெளியான செய்திக்கு பொதுநலவாய நாடுகளின் செயலகம் மறுப்பு
81e47091c38f2291878b3ebc23767a8a.jpg

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறும் என பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா உறுதிப்படுத்தியதாக வெளியான செய்திக்கு பொதுநலவாய நாடுகளின் செயலகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் தலைவர் கமலேஸ் சர்மா தற்போது இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந் நிலையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அனுமுகமவை கோடிட்டு நேற்று உள்ளுர் ஊடகங்களில், பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடக்கும் என்பதை கமலேஸ் உறுதிப்படுத்தினார் என்ற செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால் அவ்வாறான தகவல் எதுவும் கமலேஷ் சர்மாவால் உறுதியளிக்கப்படவில்லை என, பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரிச்சட் உகு

விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது பயணம் மேற்கொண்டுள்ள சர்மா, தமது பயணத்தை நாளை 13ம் திகதி முடித்துக்கொண்ட பின்னர், தமது அமைப்பினால் நிலைப்பாட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனவும் அவ் அறிக்கையில் உகு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கமலேஷ் சர்மா நீதித்துறைச் சுதந்திரம் மற்றும் அதிகாரப் பிரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள், காமன்வெல்த் மதிப்புகள் மற்றும் கொள்கைகளை முன்னெடுப்பது பற்றி விவாதிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் உகு அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

http://onlineuthayan.com/News_More.php?id=748291832012308379

கொமன்வெல்த் சிக்கல் முற்றுகிறது – ஆதரவு கோரி டாக்கா விரைகிறார் பீரிஸ் [ செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013, 00:55 GMT ] [ தா.அருணாசலம் ]

GL-Peiris-495x277.jpgகொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்தும் விவகாரத்தில், ஏற்பட்டுள்ள சிக்கலில், பங்களாதேசின் உதவி கோரி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாளை டாக்காவுக்குப் பயணமாகவுள்ளார். 

கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் தலைமைப் பொறுப்பு தற்போது பங்களாதேசிடமே உள்ளது. 

வரும் ஏப்ரல் மாதம் லண்டனில் நடக்கவுள்ள கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில், சிறிலங்கா விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையிலேயே, பங்களாதேசின் ஆதரவைப் பெறுவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், டாக்கா செல்லவுள்ளார். 

கொமன்வெல்த் அமைப்பின் கோட்பாடுகளுக்கு முரணாகச் செயற்படும் சிறிலங்கா மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தை முன்கூட்டியே கூட்டுமாறு பங்களாதேசுக்கு பல்வேறு கொமன்வெல்த் நாடுகள் பலமாக அழுத்தம் கொடுத்து வருவதாக தெற்காசிய இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். 

கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவில் இருந்து லண்டனுக்கோ அல்லது மொறிசியஸ் தலைநகர் போர்ட் லூயிசுக்கோ மாற்றுமாறும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில், கொமன்வெல்த் விவகாரத்தில் சிறிலங்காவுக்கு எதிராகச் செயற்படும் கனடா உள்ளிட்ட நாடுகளுடன் பங்களாதேஸ் இணைந்து கொள்வதை தடுப்பதை நோக்கமாக கொண்டே, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் டாக்கா செல்லவுள்ளார். 

சிறிலங்காவுக்கு ஆதரவான நிலையில் பங்களாதேஸ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிரான முடிவை எடுக்கும் அதிகாரத்தை பங்களாதேஸ் கொண்டிராத போதிலும், தன் மீதான அழுத்தங்களை குறைப்பதற்கு பங்களாதேசின் ஆதரவு அவசியம் என்று சிறிலங்கா உணர்வதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

http://www.puthinappalakai.com/view.php?20130212107770

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் மாநாடு நடாத்துவது குறித்து பொதுநலவாய நாடுகள் இன்னும் தீர்மானிக்கவில்லை

 

commonwealth-flag-300x219.pngஇலங்கையில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடாத்தப்படுவது குறித்து பொதுநலவாய நாடுகள் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என பொதுநலவாய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடைபெறும் என கமலேஷ் ஷர்மா உறுதி செய்ததாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை பொதுநலவாய செயலக ஊடகப் பேச்சாளர் ரிச்சாட் உக்கு மறுத்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா 10ம் திகதி இலங்கை செல்வார் என்று மாத்திரமே செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை விஜயம் குறித்து பொதுநலவாய நாடுகள் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா, நாளை 13ம் திகதி விசேட அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என ரிச்சாட் உக்கு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
  • கருத்துக்கள உறவுகள்
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு ஆதரவளிப்பதாக ரணில் தெரிவிப்பு

 

பொதுநலவாய நாடுகளின் சட்டத்திட்டங்களுக்கு அமைய இடம்பெறும் அரச தலைவர்களது மாநாட்டுக்கு தாம் ஆதரவு அளிப்பதாக எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கை வந்துள்ள பொது நலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஷ் சர்மாவுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.எவ்வாறாயினும் அரசாங்கம் பொது நலவய நாடுகளின் மாநாடு என்ற பெயரில் வீண் விரையம் செய்து மக்களை இன்னல்களில் தள்ளுவதை தாம் வன்மையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

இதனிடையே, பொது நலவாய நாடுகளின் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட போதும் அதன் வளர்ச்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சி ஆற்றிய பங்களிப்புக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக கமலேஷ் சர்மா இதன் போது குறிப்பிட்டார்.

 

எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தின் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், கட்சின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.