Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமண உணவில் புழு; உணவக உரிமையாளருக்கு பிணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images1(220).jpg
-நவரத்தினம் 

வவுனியா, இறம்பைக்குளத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமண வைபவத்தின்போது பரிமாறப்பட்ட உணவில் புழுக்கள் இருந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த உணவகத்தின் உரிமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை நேற்று திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்ள்ளது.

வவுனியா நீதிவான் நீதிமன்றில் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் சி.கிரிதரனினால் கடந்த மாதம் 28ஆம் திகதி தாக்ககு எடுத்தக்கொள்ளப்பட்டபோதே உரிமையாளரை ஒரு இலட்சம் ரூபா காசுப்பிணையிலும் 3 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் நீதிமன்றம்  விடுவித்தது. அத்துடன், வழக்கை மே மாதம் மாதம் 30ஆம் திகதிவரை ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றையதினம் வரையிலும் திருமண மண்டபத்தினை மூடுமாறும் உத்தரவிட்டுல் செய்யப்பட்ட வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இறம்பைக்குளத்தில் உள்ள உணவகத்தில் திருமண வைபவத்தில் கடந்த மாதம் 28ஆம் திகதி பரிமாறப்பட்ட உணவில் உயிருள்ள புழுக்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில்  திருமண வீட்டார் உடனடியாக பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல்களை வழங்கினர்.

பரிசோதனையில்  ஈடுபட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் புழுக்கள் இருக்கின்றமையை உறுதிசெய்துகொண்டு  அன்றையதினம் வழக்குத் தாக்கல் செய்தனர். 

இந்நிலையில் திருமண மண்டபத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், வழக்கும்  நேற்று திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதனடிப்டையில் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி அலெக்ஸ்ராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது திருமண மண்பத்தின் உரிமையாளரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

வழக்கினை விசாரணை செய்த நீதிபதி உரிமையாளரை ஒரு இலட்சம் ரூபா காசுப்பிணையிலம் 3 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ததுடன், திருமண மண்டபத்தை மே மாதம் 30ஆம் திகதிவரை  மூடுமாறும் உத்தரவிட்டதுடன் அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.