Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆஸ்கார் விருதுகள் .

Featured Replies


 

அதிகாலை டொன்வலியில் பனிமழைக்குள்
எனது வாகனம் மெதுவாக ஊர்ந்துகொண்டிருக்க ஏதும் தமிழ்பாட்டு கேட்பம் என்று CMR  ஐ தட்டினால்  ஒரு  பெண் ஒலிபரப்பாளர் நீங்களும் போய் CMR  முகபுத்தகத்தில் இந்த வருட
ஆஸ்காரில் சிறந்த படம் எது என்பதை வாக்கிடுங்கள் என அறிவிக்கின்றார்.



ஆஸ்கார் ? ACADAMY AWARDS . எனது கார் சயிக்கிளாகி
யாழ் ரீகல் தியேட்டரை சுற்ற ஆரம்பித்துவிடுகின்றது . ரீகல் தியேட்டர்
அமைந்திருக்கும் இடம் தான்   யாழ்பாணத்தில் எனக்கு மிகவும் பிடித்த
ஒருபகுதி.யாழ் கோட்டை,முனியப்பர் கோவில்,துரையப்பா விளையாட்டு அரங்கு ,யாழ்
நூலகம்,மணிக்கூட்டு கோபுரம் என்று ஓ/எல் பாஸ் பண்ணிவிட்டு படிப்பு ,டியுஷன் என்று  பெல்போட்டத்துடன் அலைந்த இடங்கள்.வீட்டிற்கு
தெரியாமல் கள்ளமாக பார்க்க  ஆங்கிலப்படம்
தான் மிக வசதி. காட்சி நேரம் நாலு முப்பது மணிக்கு,அதைவிட படமும் இரண்டு மணித்தியாலம்
தான் ஓடும்.எனவே பாடசாலை முடிய டியுசன் என்று போய் ஆங்கில படத்தை பார்த்துவிட்டு
ஏழு மணிக்கு நல்ல பிள்ளையாக வீடு போய்விடலாம் .



இப்படியாக நண்பர்களுடன்
போய் பல ஆங்கில படங்கள் பார்த்திருக்கின்றேன்.அது
சண்டை,காதல்,நகைச்சுவை,துப்பறியும் என்று எதுவாகவும் இருக்கலாம் .வெளிநாட்டு
காட்சிகளுக்காகவே அவற்றை பார்க்க ஒரு சந்தோசம் பிறக்கும்.ஆங்கிலப்படங்களை பற்றிய
அறிவு அவ்வளவு இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு ஒட்டியிருக்கும் போஸ்டரை வைத்து படத்தின்
தரத்தை பிடித்துவிடுவோம்.



GOOD BAD AND UGLY, CRAZY
BOYS,KILL THEM ALL AND COME BACK ALONE, DR.NO. EL CONDOR என்று பார்த்து புல்லரித்த காலங்கள் அது .சில காலம் போக ஜேம்ஸ்
போன்ட்,சாள்ஸ் புரோன்சன் ,கிளின்ட் ஈஸ்ட்வுட்,யூல் பிரைனர்,ஜிம் பிரவுண் என்று
பிரபல ஆங்கில நடிகர்களின் பெயர்களும் பரீட்சயமாகி இவர்கள் படம் என்றால் கட்டாயம்
பார்ப்பதும் என்றாகிவிட்டது.அதைவிட ஆங்கில படங்களில் இருக்கும் சில அந்தமாதிரி
காட்சிகளும் எங்களை கிளுகிளுப்பு ஊட்டி அப்படி காட்சிகள் வராத என ஓரளவிற்கு
அனைத்து படத்தையுமே பார்ப்பவர்களாகிவிட்டிருந்தோம்.



அப்படியான ஒருநாளில்
தான்  ஒஸ்காரில் சிறந்த படமாக  தெரிவானது என்ற விளம்பரத்துடன்  ONE FLEW OVER THE 
CUCOOS NEST  இற்குள்  புகுந்தோம்.(அந்த நேரம் JACK NICHOLSON யாரென்றும் தெரியாது)  .படம் விளங்கியும்
விளங்காமல் இருந்தது ஆனால் அந்த விளங்காத வித்தியாசம் உதில் என்னவோ இருக்கு என்று
சொல்லியது மாதிரி இருந்தது. மீண்டும் அந்த படத்தை ஒருமுறை பார்த்தோம். அதன்
பின்னர் ஒஸ்கார் விருது வென்ற படமென்றால் ஒழுங்காக பார்க்கத்தொடங்கியதுதான்
இன்றுவரை தொடர்கின்றது .



ஆஸ்காரில் சிறந்த படமாக
தெரிவு செய்யப்படும் படங்களைவிட பல நல்ல படங்களையும் பார்த்திருக்கின்றேன் அது
எனது தெரிவே ஒழிய அவர்களுக்கானதல்ல.ஆஸ்காரில் தெரிவானான படங்கள் பெரும்பாலும் மிக
சிறந்த படங்களே .



DEER HUNTER ,KRAMER VS KRAMER  .GHANDI ,RAIN MAN ,PLATOON ,DANCES WITH WOLVES,SCHINDLER’S
LIST,THE ENGLISH PATIENT,AMERICAN BEAUTY,THE CRASH,TITANIC,GLADIATOR,A
BEAUTIFUL MIND,NO COUNTRY FOR OLD MEN,SLUMDOG MILLIONAIRE.



இப்படி பட்டியல் ரொம்ப நீளம்..



இதில் 2009 SLUMDOG MILLIONAIRE   சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்டு அதற்கு
இசையமைத்த ஏ ஆர் ரகுமானுக்கு இரண்டு விருதுகள் கிடைத்ததும்
மறக்கமுடியாதது.முதன்முறையாக ஒரு தமிழனுக்கு ஒஸ்கார் கிடைத்தது தமிழர்கள்
எல்லோருக்கும் பெருமைதான் .



இம்முறையும் LIFE OF PIE என்ற ஆங்கில படத்தின் தொடக்க
பாடலாக வரும் “ கண்ணே மணியே “ என்ற பாடலை பாடியதற்காக பொம்பே ஜெயசிறியும் தெரிவாகியுள்ளர்.அவரும்
வெற்றி பெற வாழ்த்துவோம்.



 



இனி இந்தமுறை ஆஸ்கார் அதாவது 85 TH
ACADAMY AWARDS 
 பற்றி பார்ப்போம் .போட்டியிடும் படங்கள் ஒன்பது.



Amour,
Argo, Beasts of the Southern Wild, Django Unchained, Les Misérables, Life of
Pi, Lincoln, Silver Linings Playbook, Zero Dark Thirty.



இந்த
ஒன்பது படங்களில்



AMOUR –இது ஒரு ஜேர்மனிய படம்.எண்பதுகளில்
நடக்கும் ஒரு வயது போன சங்கீத ஆசிரியர்களின் தம்பதிகளுக்கும் சங்கீத ஆசிரியையான
மகளுக்குமான  கதை .



ARGO-இவ்வருட விருதை இந்தப்படம்தான்
தட்டிச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது .1979 ஆண்டு
ஈரானில் பயண கைதிகளாக பிடிக்கப்பட்டு சி ஐ ஏ-கனேடியன் கூட்டு நடவடிக்கையால் தப்பிய
அமெரிக்கர்களின் கதை.



BEASTS OF THE SOUTHERN WILD – ஒரு
ஒதுக்கு புறமான கிராமத்தில்  ஐந்து வயது
சிறுமியும்  உடல் நலம்குன்றிய கோபக்கார
அப்பாவும் எதிர்கொள்ளும் போராட்டங்கள் பற்றியது .



DJANGO
UNCHAINED-ஒரு கறுப்பன அடிமை தனது மனைவியை ஜேர்மன்காரன் ஒருவனது
உதவியுடன் ஒரு பணக்கார முதலாளியிடம் இருந்து மீட்க நடாத்தும் போராட்டம் .QUENTIN TARINTINO வின் படம் VIOLENCE பற்றி சொல்ல தேவையில்லை .எனக்கு மிக பிடித்த படம்.



LE
MISERABLES- எல்லோருக்கும்
தெரிந்த கதை,பாடாசாலையில் படிக்கும் புத்தகமாக ,நாடகமாக ,முன்னர் படமாக வேறு
வந்திருக்கு.இம்முறை சிறந்த நடிக,நடிகைகளுடன் அழகாக மிக தத்ரூபமாக வந்திருக்கு.



LIFE
OF PIE- அநேக
எம்மவர்கள் பார்த்திருப்பார்கள் என நம்புகின்றேன்.பாண்டிச்சேரியில் இருந்து
கனடாவிற்கு கப்பலில் புறப்பட்டு கடலின் சீற்றத்தால் ஒரு படகில் ஏறி பெங்கால்
புலியுடன் பயணிக்கும் இளைஞனின் உயிர்போராட்டம்.கடவுள் நம்பிக்கை பற்றி நம்பிக்கை
கொடுப்பதால் சிலவேளை விருதுகள் வெல்ல சந்தர்ப்பம் உண்டு.



LINCOLN-
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி
ஆபிரகாம் லிங்கனின் சுயசரிதையில் சிவில் யுத்தம்,,உள்ளக அரசியல் பிரச்சனைகள்
போன்ற  முக்கிய காலங்களை படமாக்கியுள்ளார்
ஸ்பீல்பெர்க்.  லின்கனாக நடிப்பவர் டானியல்
டே லூயிஸ் .மிக சிறந்த நடிகர் .இம்முறை அந்த விருதை வெல்வார் என எதிர்பார்க்கலாம்
.



SILVER
LINING PLAYBOOK-மன நல
காப்பகத்தில் இருந்து பெற்றோரிடம் திரும்பும் கணவன் மனைவியுடன் சேர எடுக்கும்
முயற்சிகளும் அதை எதிர்கொள்ளும்  மனைவியின்
நிலைபாடும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கின்ற படம் .



ZERO
DARK THIRTY-9/11 இன் பின்னர் நடக்கும் பின் லாடனின்
தேடுதல் வேட்டை .பின் லாடனின் கொலையுடன் முடிகின்றது .அமெரிக்க புலனாய்வு எதையும்
எப்படியும் செய்யும் என்பதை அழகாக படம்பிடித்திருக்கின்றார்கள் .கதாநாயகி மிக
சிறப்பாக நடித்துள்ளார் .



சிறந்த
நடிகர்



Bradley
Cooper, Daniel Day-Lewis, Hugh Jackman, Joaquin Phoenix, Denzel Washington



சிறந்த
நடிகை



Jessica
Chastain, Jennifer Lawrence, Emmanuelle Riva, Quvenzhané Wallis, Naomi Watts



சிறந்த
இயக்குனர்



Amour
(Michael Haneke), Beasts of the Southern Wild (Benh Zeitlin), Life of Pi (Ang
Lee), Silver Linings Playbook (David O. Russell), Lincoln (Steven



இதை
விட இன்னமும் இருபது விருதுகள் சிறந்த துணை நடிக நடிகையருக்கும்,தொழில் நுட்ப
கலைஞர்களுக்கும் ,விபரண ,காட்டூன் ,பிறமொழி படங்களுக்கும் என்று
வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது.



MICHAL
MOORE தனது முகப்புத்தக பக்கத்தில்
இம்முறை ACADAMY
AWARDS இற்கு தெரிவு செய்யபட்டிருக்கும்
அனைத்து ஆவணபடங்களும் அருமை என பதிவிட்டிருக்கின்றார் .எதுவும் பார்க்க
சந்தர்ப்பம் கிடைக்கவில்லை ,முடிந்தவர்கள் கட்டாயம் பார்க்கவும் .



அனைத்து
கலைஞர்களுக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

பூபாளம்

மாசி 2013.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ரீகல் தியேட்டரை சுற்ற ஆரம்பித்துவிடுகின்றது . ரீகல் தியேட்டர்

அமைந்திருக்கும் இடம் தான்   யாழ்பாணத்தில் எனக்கு மிகவும் பிடித்த

ஒருபகுதி.யாழ் கோட்டை,முனியப்பர் கோவில்,துரையப்பா விளையாட்டு அரங்கு ,யாழ்

நூலகம்,மணிக்கூட்டு கோபுரம் என்று ஓ/எல் பாஸ் பண்ணிவிட்டு படிப்பு ,டியுஷன் என்று  பெல்போட்டத்துடன் அலைந்த இடங்கள்.வீட்டிற்கு

தெரியாமல் கள்ளமாக பார்க்க  ஆங்கிலப்படம்

 

நீங்கள் போட்டிருக்கின்ற படங்களின் பெயர்களைப் பார்க்க, நல்லாக் கிட்டடியில வந்திட்டியள் போல கிடக்கு!

 

நாங்கள் போகிற நேரம், விடுதியில எல்லாரும் படுத்தாப் பிறகு தான்! இப்பிடித்தான் 'Ideal Marriage' எண்டு ஒரு படம்! விழுந்தடிச்சு, இருட்டில போய்ச் சேர்ந்தால், ரீகல் தியேட்டர் காரன், அண்டைக்குப் படத்தை மாத்திப் போட்டான் எண்ட விசயம் எங்களுக்குத் தெரியாது. எழுத்தோடி முடியத்தான் நாங்க உள்ள போனது!  படத்திலை ஒண்டையும் காணேல்ல.  :D .

படத்தில வாற ஆக்கள், கதிரையை இழுத்துப் போண்டுக்கொண்டு,மாறி மாறிக் கதைச்ச படி! :o

 

பிறகென்ன, குடுத்த காசுக்கு, மூட்டைக்கடியும் வாங்கினபடி, இடைவேளையோட எழும்பி வந்திட்டம்! :wub:

 

இணைப்புக்கு நன்றிகள், அர்ஜுன்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் நண்பிகளுடன் எத்தனையோ படம் பாக்க ஆசைப்பட்டும் ஒரு படம்தான் பாத்தது.
அதை இப்ப நினைச்சாலும் கவலை. ஆண்கள் அதில் குடுத்து வைத்தவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.