Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்த சீரழிவுகளை சரிசெய்வோம்: ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahimda3(17).jpg
-எஸ்.கே.பிரசாத்

'30 வருடங்களான நாட்டில் நிலவிய யுத்தம் சீரழித்த எல்லா விதமான வசதிகளையும் நாங்கள் ஏற்படுத்துவோம். எதிர்கட்சிகள் என்ன சொன்னாலும் நாங்கள் உங்களை மறக்கமாட்டோம். எதிர்கட்சிகளின் கருத்தைக் கேட்டு மக்கள் தவறான பாதையில் போக வேண்டாம்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

யாழ் போதனா வைத்திசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தொகுதி, ஜனாதிபதியினால் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

'இந்த நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக நீடித்து வந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து எல்லா மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய நிலையை உருவாக்கியதே இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் செய்த பெரிய விடயமாகும். 

வடக்கின் வசந்தம் மூலம் வடபகுதியை நாங்கள் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வோம். வடக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளைக்கொண்டு மக்கள் தவறான பாதையில் போக வேண்டாம்' என்று ஜனாதிபதி கூறினார். 

'இங்குள்ளவர்களும் வெளிநாடுகளில் வாழ்பவர்களும் சில விடயங்களை ஜெனீவா வரை கொண்டு செல்கின்றார்கள். யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் நாங்கள் செய்த நல்லவற்றை எல்லாம் இவர்கள் பேச மாட்டார்கள் இதுவே மனித இலட்சனம்' என்றார்.

'கடந்த காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் பிள்ளைகளை ஒழித்து வைத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டு வந்தது. இந்த நிலைமை இப்போது மாற்றப்பட்டுள்ளது. இதைவிட இன்னும் நாங்கள் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். 

30 வருட யுத்தம் சீரழித்த எல்லா விடயங்களையும் நாங்கள் கொண்டு வருவோம். நாங்கள் எல்லோரும் ஒரு நாட்டு மக்கள். எதிர்கட்சிகள் என்ன சொன்னாலும் நாங்கள் உங்களை மறக்கமாட்டோம். 

இன்று இங்கு ஆரம்பிக்கப்பட்டு நவீன வசதிகள் கொண்ட இந்த கட்டித்தொகுதியை பார்வைத்தபோது எனக்கு மகிழ்சியாக உள்ளது இதன் மூலம் இங்குள்ள 5 லட்சம் மக்களின் வைத்திய தேவை பூத்தி செய்யக் கூடியதாக இருக்கும் என்று நம்புகின்றேன் யாழ்ப்பாணம் மட்டுமின்றி ஏனைய மாவட்டங்களில் இருந்து வருகை தருபவர்களுக்கும் அந்த வைத்தியசாலை பயன்தரும் என்று நம்புகின்றேன்' என்று ஜனாதிபதி மேலும் கூறினார். 

ஜப்பான் அரசாங்கத்தின் 2,555 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் ஜெய்க்கா நிறுவனத்தால் யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்படி புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் எஸ்.பவானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பாராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர், இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், மு.சந்திரகுமார், சில்வெஸ்திரி அலென்ரின், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

'இங்குள்ளவர்களும் வெளிநாடுகளில் வாழ்பவர்களும் சில விடயங்களை ஜெனீவா வரை கொண்டு செல்கின்றார்கள். யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் நாங்கள் செய்த நல்லவற்றை எல்லாம் இவர்கள் பேச மாட்டார்கள் இதுவே மனித இலட்சனம்' என்றார்.

நீங்களும் தானே ஜே.வி.பி. காலத்தில் ஜெனீவா சென்றீர்கள் !

 

'கடந்த காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் பிள்ளைகளை ஒழித்து வைத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டு வந்தது. இந்த நிலைமை இப்போது மாற்றப்பட்டுள்ளது. இதைவிட இன்னும் நாங்கள் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

நேற்றுத்தானே இரண்டு பிள்ளைகளை சிறையால் விட்டீர்கள். அத்துடன் 14 வயதே நிரம்பிய ஒரு சிறுவன் உங்கள் சிறையில் உள்ளானே. லலித்/குகன் எங்கே?? அதை விட எத்தனை தமிழர்களை அடைத்து வைத்துள்ளீர்கள்?

சிங்களப் பயங்கரவாதிகளையும் நாம் சரிக்கட்டுவோம்!

இந்த நாலு வருடத்தில் செய்யமுடியாத, செய்ய விரும்பாத புனரமைப்பை நீங்கள் என்றுமே செய்யமாட்டீர்கள்.

 

மாறாக குடியேற்றத்தை வேகமாக செய்வீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
போரில்லாத சூழ்நிலையில் ஏன் இலட்சக்கணக்கான இராணுவத்தினர் தமிழ் மக்களை அச்சுறுத்திய வண்ணம் உள்ளனர்? மக்களின் காணிகளில் இராணுவம் உள்ள போது எப்படி யாழ் தேவி காங்கேசன் துறைக்கு போகும் என கேட்ட போது அது வேலியை பிச்சுக்கொண்டு போகும் என்பது ஒரு இனத்தின் உணர்வுகளை எள்ளி நகையாடுவது போலில்லையா?? இதற்கு ஜால்ரா போட்ட டக்ளசை என்ன என்பது?
 
இவ்வளவு இராணுவத்தையும் சிங்கள இடம் ஒன்றில் மக்களோடு குடியேற்ற மாட்டீர்கள் என்பது தெரியும்? ஏனெனில் தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகள்.

சம்பந்தர், சுமந்திரன், சுரேஸ், சிறிதரன் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் அடிப்படை உரிமைகளை மட்டும்தான் பேச வேண்டும். அரசுடன் பிச்சை பணம் பங்கிடும் ஏமாற்றுக்களுக்கு ஏமாறக் கூடாது.

 

எங்களை எங்கள் பாட்டுக்கு விட்டிருந்தால் போதனா வைத்தியசலை கட்டிடம் 1948லிருந்து வளர்ந்து இன்று வானை தொட்டிருக்கும். இது சிங்களவர் வைத்தியம் செய்த்து, சிங்கள ஆமி வைத்தியம் பெறக் கட்டப்பட்டது.

 

அது யப்பான் கட்டியது. மானம் கெட்ட மகிந்தா வந்து திறந்தார்.



இதே யப்பான் தான் வாக்குறுதி அளித்த 2.5 பில்லியன் பணத்திலிருந்து இது வரையில் தெற்கில் பல முன்னேற்றங்களை செய்த்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
US opens two hospitals in Sri Lankat
 

 The US embassy said Wednesday it has opened two new hospitals at a cost of over $1 million to provide services in conflict affected areas in Sri Lanka's north.

Deputy Chief of Mission William Weinstein opened the Mulankavil Base Hospital in Kilinochchi and the Oddusuddan Divisional Hospital in Mullaitivu districts Tuesday.

 

http://en-maktoob.news.yahoo.com/us-opens-two-hospitals-sri-lanka-104814532.html

The event was attended by government representatives, a statement said.

Weinstein said: "These two hospitals will provide easier access to better and higher quality medical care to the people of Kilinochchi and Mullaitivu.

"The US is helping to improve the lives and health of some of the most vulnerable people in the north," he added.

மகிந்த ஜப்பான் காசில் கொள்ளையடித்தது போக மிச்சத்தை போட்டு திறக்க,

அமெரிக்கா அதே தினத்தில் முழங்காவிலிலும் ஒட்டிசுட்டானிலும்   திறக்கின்றது.

 

எல்லாம் நன்மைக்கே !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.