Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கோரிக்கை : இத்தாலி கோர்ட் நிராகரிப்பு

Featured Replies

ஹெலிகாப்டர் ஒப்பந்தம் முறைகேடு தொடர்பாக, இந்தியாவிடம் அதற்கான ஆவணங்களை பகிர்ந்து ‌கொள்ள வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை, இத்தாலி கோர்ட் மறுத்துள்ளது.

 

இவ்விசாரணையின் பொருட்டு, மத்திய புலனாய் துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளடக்கிய இந்தியக்குழு, இத்தாலி செல்ல உள்ள நிலையில், இத்தாலி கோர்ட்டின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

 

http://tamil.yahoo.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87-%E0%AF%8D-%E0%AE%B2-103100807.html

551319_561441613874093_2063316504_n.jpg

  • தொடங்கியவர்

இந்திய வி.வி.ஐ.பி.,க்களுக்கு ரூ. 3600 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, மத்திய பாதுகாப்புத்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் அடங்கிய குழு, நாளை இத்தாலி செல்லவுள்ளது.

 

இத்தாலி அரசுக்கு சொந்தமான, பின்மெக்கானிகா விமான தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து, 12, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் வாங்க, மத்திய அரசு, 2010ல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில், 360 கோடி ரூபாயை, இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு வழங்கிய, இத்தாலி நிறுவன தலைவர், குய்செப்பி ஓர்சி மற்றும் ஹெலிகாப்டர் விற்பனை பிரிவின் தலைவர், ஸ்பாக்னோலினி ஆகியோர், கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவர் வீடுகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், சாய்னி என்ற பெயரில், இந்திய விமானப்படை தளபதி, தியாகியின் உறவினர்களுக்கு, கமிஷன் தொகையை வழங்கியிருந்தது தெரிய வந்தது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த இடைத்தரகர்கள், குய்டோ ஹஸ்கே மற்றும் கார்லோ ஜெரோசா மூலம், பணம் கைமாறியுள்ளது.

 

எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும், இத்தாலி போலீசார், இடைத்தரகர்கள் இருவரையும், இத்தாலிக்கு கொண்டு வர முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

 

இந்த பிரச்னை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த ஊழல் பிரச்னை தொடர்பாக விசாரிக்க, சி.பி.ஐ.,யை மத்திய பாதுகாப்புத்துறை கேட்டுக்கொண்டது. ஏற்கனவே இவ்விவகாரம் தொடர்பாக, இத்தாலி அரசு மேற்கொண்ட விசாரணை அறிக்கையை இந்தியா கேட்டும், இதுவரை பதில் ஏதுமில்லை. இந்நிலையில், சி.பி.ஐ., மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு நாளை இத்தாலி செல்லவுள்ளது. இக்குழுவில், டி.ஐ.ஜி., அந்தஸ்துள்ள இரண்டு சி.பி.ஐ., அதிகாரிகளும், பாதுகாப்புத்துறையிலிருந்து சட்டநிபுணர்களும் செல்லவுள்ளனர். விசாரணை அதிகாரிகள் இத்தாலி செல்லவுள்ளதையடுத்து, அங்குள்ள இந்திய தூதரகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் இன்டர்போல் உதவியும் கோரப்பட்டுள்ளது. இத்தாலியில் அந்நாட்டு சட்டநிபுணர்களை சந்திக்கும் குழுவினர், இந்த விவகாரத்தில் தங்களுக்குத் தேவையான ஆவணங்களைப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://tamil.yahoo.com/%E0%AE%B9-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-%E0%AF%8D-%E0%AE%B2-102900863.html

யாருக்கோ, யாருக்கோ !?

யாருக்கு என்று சொல்லுங்கப்பா சீக்குரம், தலையே வெடிச்சுடும் போல இருக்கு !

362 கோடி கமிஷன் இந்தியாவில் ‘யாருக்கோ’ கைமாறியதாக இத்தாலிய விசாரணையில் தெரியவந்தது!, ஏன் யாருக்கு என்பதை அவர் இன்னும் சொல்லவில்லையா? , யாருக்கோ, யாருக்கோ என்று , போர்ப்ஸ் மாதிரி புதைக்க படுமோ?, இந்த போர்பசை மறைக்க தமிழன தூக்கில போட்டா போச்சு !

66702_611776358849450_767447524_n.jpg
574643_611776398849446_678551894_n.jpg
17109_611776502182769_937188456_n.jpg

சீனா பில்லியன் கணக்கிலை (இலங்கைக்கிலாலும், நேராகவும்)கொடுத்து இந்திய பாதுகாப்பு கொள்கையையே துவம் செய்துவிட்டது.  சும்மா போய் இத்திய சின்ன நாட்டு கம்பனி ஒன்றை உரிக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள்.

 

ரஜீவே இந்திய பிராந்திய புவிசார் அரசியலாக இந்த லௌகீக விளையாடுக்களைத்தான் செய்து முடிய... மலையாள அந்தனிக்கு இந்த பதவி வநதால் கக்கீம் நீதிதுறையை கைவிட்டுவிட்டு கப்பல் துறையை தேடுவதற்கு சமன்.

அரசியலுக்கு வருவதே ஊழல் செய்து சொத்துச்சேர்ப்பதே என்பது வழமையாகிவிட்ட இந்தியாவில் ஊழல் பின் ஊழல் நடைபெறுவது இயல்பு.நாம் இதனைக்
கண்டு அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இதில் இத்தாலி சம்பந்தப்பட்டிருப்பதால் இதனை இரண்டாவது போபர்ஸ் ஊழல் என்கிறார்கள்.அதனால்
சிறிது பொறுத்திருந்து பார்ப்போம்.

 

A chopper deal, an ex-IAF chief, another defence scam busts out  /oli

India Makes Fresh Request To Italy For Info In Chopper Scam /tehelka

Finmeccanica boss Orsi steps down amid corruption probe   /bbc

AgustaWestland denies corruption charges over India helicopter deal  /gdn 17 Feb 2013/

  • தொடங்கியவர்

ஹெலிகாப்டர் ஊழல் ஆவணங்கள் அழிப்பு?

இன்று இத்தாலி செல்கிறது அதிகாரிகள் குழு

 

ஹெலிகாப்டர் பேரத்தில், 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயம் தொடர்பான,அனைத்து ஆதாரங்களையும், இந்த பேரத்தில் இடைத் தரகராக செயல்பட்ட, குயிடோ ஹஸ்கே, அழித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இத்தாலி அரசுக்கு சொந்தமான, பின்மெக்கானிகா நிறுவனத்திடமிருந்து, வி.வி.ஐ.பி.,க்கள் பயணிக்க, 12 ஹெலிகாப்டர்களை வாங்க, மத்திய அரசு, 2010ல், ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு, 3,600 கோடி ரூபாய்.இது தொடர்பான பேரத்தில், இந்தியாவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு, இத்தாலி நிறுவனம், 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது அம்பலமானது. இதையடுத்து, பின்மெக்கானிகா நிறுவன தலைவர், குய்சொப்பி ஒர்சி, ஹெலிகாப்டர் விற்பனை பிரிவு தலைவர், ஸ்பாக்னோலினி ஆகியோர், இத்தாலி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.ஹெலிகாப்டர் பேரத்தில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த, குயிடோ ஹஸ்கே, கார்லோ ஜெரோசா ஆகியோர், இடைத் தரகர்களாக செயல்பட்டனர். இத்தாலி அதிகாரிகளின் அறிக்கையை, அந்நாட்டு பத்திரிகையான, ரிபப்ளிகா வெளியிட்டுள்ளது.


அதில் கூறப்பட்டு உள்ளதாவது:ஹெலிகாப்டர் பேரத்தில், இந்தியாவை சேர்ந்தவர்களுக்கும், பின்மெக்கானிகா நிறுவனத்துக்கும் இடையே, இடைத்தரகராக செயல்பட்டதில், குயிடோ ஹஸ்கேவுக்கு முக்கிய பங்கு உண்டு.இந்திய அரசு தரப்பில் இடைத் தரகர்களாக யார் யார் செயல்பட்டனர், இரு தரப்புக்கும் இடையே, பணப் பரிமாற்றங்கள் எப்போது நடந்தன, எவ்வளவு பணம், கைமாறியது போன்ற விவரங்கள் அனைத்தும், குயிடோவுக்கு தெரியும்.இவை அனைத்தையும், தன் கம்ப்யூட்டர் டிரைவில், பனோரமா பாக்ஸ் என்ற பெயரில், பதிவு செய்து வைத்திருந்தார்.

 

ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான விவகாரம், பெரிதானதை அடுத்து, இந்த தகவல் அனைத்தையும், குயிடோ அழித்து விட்டார்.இதையடுத்து, விசாரணை அதிகாரிகள், குயிடோவின் தாயார் வீட்டில், அதிரடிச் சோதனை நடத்தினர். அங்கிருந்த, சூட்கேசில், ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான. சில விவரங்களை, ஹார்டு டிஸ்க்கில், அவர் மறைத்து வைத்து இருந்ததை, அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.அந்த, ஹார்டு டிஸ்க்கையும், ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான சில ஆவணங்களையும், அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த ஆவணங்கள் தற்போது, இத்தாலி அரசின் வழக்கறிஞர், பஸ்டோ அரிசோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில், ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான அனைத்து விஷயங்களும் இடம்பெற்றிருக்குமா என்ற, சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு இடையே, ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான அனைத்து விவரங்களையும், அறிக்கையாக, தங்களிடம் தாக்கல் செய்ய வேண்டும் என, ராணுவ அமைச்சகத்திடம், மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் வலியுறுத்திஉள்ளது.ஆனாலும், ராணுவ அமைச்சகத்தில் உள்ள, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, இது தொடர்பான அறிக்கையை தயார் செய்வதற்கு, அதிகபட்சமாக நான்கு மாதங்கள் வரை ஆகும் என, தெரிவித்துள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், இத்தாலியின் சட்ட நடைமுறை குறித்த விவரங்களை தெரிந்து கொள்வதற்காக, அங்குள்ள வழக்கறிஞர் களின் உதவியை, சி.பி.ஐ., நாடியுள்ளது.


இதனிடையே ஹெலிகாப்டர் பேரத்தில், 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரம் குறித்து விசாரிக்கவும் ஆவணங்களை திரட்டவும், சி.பி.ஐ., அதிகாரிகள் மற்றும் ராணுவ அமைச்சக பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழு, இன்றுஇத்தாலி செல்கிறது. அங்கு அந்நாட்டு வழக்கறிஞர் உதவியுடன்,ஹெலிகாப்டர் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள இந்தியர்களின் விபரங்களைஅதிகாரிகள் திரட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

 

http://tamil.yahoo.com/%E0%AE%B9-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-183200495.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவும் இத்தாலியும் சுத்துமாத்து விசயத்திலை இரட்டை சகோதரங்கள்.

இந்தியாவிலை தாதா....
இத்தாலியிலை மாபியா...
i_zps2fc65fb6.jpgioo_zpse9a4ccad.png
அவையின்ரை தேசியகொடியிலையும் பெரிய வித்தியாசமில்லை........கொடியை சரிச்சு கவிட்டு பாக்க கன ஒற்றுமை தானகவே வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.