Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிராயச்சித்தம் செய்யாமல் வேதம் ஓதும் பிரிட்டன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிராயச்சித்தம் செய்யாமல் வேதம் ஓதும் பிரிட்டன்

இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் டொமினிக் சில்க் கொட் கொழும்பில் நடந்த பகிரங்க நிகழ்வு ஒன்றில் இலங்கை அரசுக்கு அறிவுரையும், விடுதலைப் புலிகளுக்குப் புத்திமதியும் கூறியிருக்கின்றார். விடயம், விவரம் புரியாமல் சரித்திரம் தெரியாமல் அவர் "தத்துவம்" பேசியிருப்பதை அவதானிக்கும் போது ஈழத்தில் அவலப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

நாட்டின் இலங்கைத் தீவின் இன்றைய இழிநிலைக்கு வினை விதைத்தவர்களே பாவத்துக்குக் காரணமானவர்களே பாவவிமோசனத்துக்கான உபாயம் உரைப்பது நகைப்புக்கு இடமானது.

சர்வதேச பொலீஸ்காரனுக்குக் காவடி தூக்கும் "சிறப்பை" வைத்துக்கொண்டு எதையும் எங்கும் உபதேசிக்கலாம் என்று சீமைக்காரர்கள் எண்ணக் கூடாது. இலங்கைத் தீவை இத்தகைய இன மோதலுக்குள் கொடூர யுத்தத்துக்குள் பிரதேச முரண்பாட்டுக்குள் ஆழ்த்துவதற்கு அடிப்படைக் காரணமாகவும் மூலமாகவும் அமைந்தது தமது காலனித்துவ ஆட்சியின் பொறுப்பற்ற போக்குத் தான் என்பதை முற்றிலும் மூடிமறைத்து விட்டு இலங்கை மக்களைப் பார்த்துத் தத்துவம் உரைக்கின்றார் இங்கிலாந்துத் தூதுவர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சூறையாடிச் சுரண்டுவதற்காக ஆக்கிரமித்தவர்கள் பிரிட்டிஷார். தங்களின் சுரண்டல் கைங்கரியத்துக்காக அவர்கள் புரிந்த திருவிளையாடல் தான் இன்று இலங்கைத்தீவை இந்த இக்கட்டு நிலைக்குள் கொண்டு போய் வீழ்த்தியிருக்கின்றது.

இந்த இலங்கைத் தீவு இரண்டு தனித்தனி தேசங்களின் தேசியங்களின் தாயகம். வெவ்வேறான மொழி தனித்துவமான பாரம்பரியங்கள், வாழ்க்கை முறைகள், வழக்காறுகள் தெளிவாகவும் வரையறையாகவும் பிரிக்கப்பட்டதும் நிலத்தினால் தொடர்புபட்டதுமான தனித்தனித் தாயகங்களைக் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் சிங்களவர்களும் தமிழர்களும். கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இலங்கையில் இரு வேறு தேசிய இனங்களின் பிரத்தியேக தனித்துவம் வேரோடியிருந்தமைக்கு சரித்திரச் சான்றுகள் அளவுக்கு அதிகமாக உண்டு.

தங்களுடடைய நிர்வாக வசதிக்காக இரண்டு தனி இனங்களின் இறைமைகளைக் கவனத்தில் எடுக்காமல் புறக் கணித்து அவற்றை ஒன்று சேர்த்த பிரிட்டிஷ் காலனித்துவம், இந்தத் தீவை விட்டு வெளியேறும்போது தாம் புரிந்த தவ றைத் திருத்தாமலேயே சிறுபான்மையினரான தமிழர்களின் இறைமையைப் பெரும்பான்மையினரான சிங்களவர்களின் ஆதிக்கத்துக்குள் ஒப்படைத்து விட்டு வெளியேறியதன் மூலம் இந்த நாட்டின் தீராத தலைவலிக்கு வழிசமைத்துச் சென்றது.

அப்போது அவர்கள் விட்டுச் சென்ற இடியப்பச் சிக்கலைத் தான் இப்போதும் இன யுத்தமாக அவிழ்த்துக் கொண்டிருக்கின் றார்கள் இலங்கைத் தீவின் மக்கள் என்பதை பிரிட்டிஷ் தூது வர் மறந்து விட்டார் போலும். இந்த விவகாரத்தை பல தடவை கள் விளக்கமாகவும் விஸ்தீரமாகவும் இப்பத்தியில் அலசி விட்டதால் இதற்கு மேல் இதனை அவிழ்க்காமல் விவரிக் காமல் பிரிட்டிஷ் தூதுவரின் மற்றைய கருத்துக்குச் செல்வோம்.

""கடந்த கால அல்லது தற்போதைய ஆதங்கங்கள் விச னங்கள் என்பன எவ்வாறாக அமைந்தாலும் இலங்கையில் பயங்கரவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்தி விட முடியாது.

"தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஆயுதங் களையும், வன்முறை ஈடுபாட்டையும் துறந்து விட்டு பயங் கரவாதம் மூலம் அல்லாமல் பேச்சுகள் மூலம் தனது முரண் பாடுகளைத் தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும். அவர்கள் தங்களின் அரசியல் அபிலாஷைகளை நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புகள் ஊடாக அடைய முயற்சிக்க வேண்டுமே தவிர குண்டுகள் மற்றும் சன்னங்கள் மூலமாக அல்ல'' என் றும் பிரிட்டிஷ் தூதுவர் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

இதே தூதுவரின் சாம்ராஜ்யம் இந்தத் தீவில் விதைத்துச் சென்ற வினையை சிக்கலை அவிழ்ப்பதற்கும் அதிலி ருந்து விடுபட்டு சுதந்திரமான கௌரவமான நீதி நியாயமான வாழ்வைப் பெறுவதற்குமாக பிரிட்டிஷ் தூதுவர் குறிப்பிட்டது போல இந்தத் தீவில் சிங்களப் பெரும்பான்மையினரின் அடக்கு முறை ஆட்சிக்கு உட்பட்ட ஜனநாயகக் கட்டமைப்புகள் ஊடாக அஹிம்சை வழியில் சாத்வீக முறையில் காந்தீய நெறியில் சுமார் மூன்று தசாப்த காலம் ஈழத் தமிழர்கள் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்தமையையும் அந்த நியாயப் போராட்டங்கள் எல்லாம் சிங்களப் பெரும் பான்மையின் அடக்குமுறை ஆட்சியாளர்களினால் ஆயுத முனையில் பலாத்காரமாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட நிலையில் அந்த அடக்குமுறை ஆட்சியின் ஒடுக்குமுறை நடவடிக் கைகளில் இருந்து ஈழத் தமிழர்களுக்கு இதே பிரிட்டிஷ் சாம் ராஜ்யம் உட்பட சர்வதேச சமூகம் நீதி, நியாயம் பெற்றுத் தரத் தவறிய சூழலில் வேறு மார்க்கமன்றி, அரச பலாத்காரத்தை அரச பயங் கரவாதத்தை அரச ஒடுக்குமுறையை எதிர் கொள்வதற் காக ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தமிழ் இளைஞர்கள் தள்ளப் பட்டனர் என்பதையும் ஒரேயடியாக மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு இப்போது உபதேசம் புரிகின்றார் பிரிட்டிஷ் தூதுவர்.

தமிழர்கள் இந்தத் தீவில் அடக்கி, ஒடுக்கப்படுவதற்கு மூல காரணகர்த்தாக்களாக அமைத்தவர்களே தமிழர்களுக்கு நீதி, நியாயம் பெற்றுத் தர வேண்டிய கடமைப்பாடும், பொறுப்பும் உடையவர்களே தமிழர் தரப்பை இழிவுபடுத்தும் விதத்தில் இவ்வாறு நியாயம் உரைக்க முயல்வது முறையற்றது.

பிரிட்டிஷ் தூதர் அவர்களே!

இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் நீதி உரைக்கும் நியாயதேவனின் ஆசனத்தில் நீங்கள் இல்லை. இந்த மண் ணில் இத்தனைக் கொடூர உயிர் உடைமை அழிவுகளுக்கு கார ணமான இனமுரண்பாடுகளுக்கு வித்திட்ட குற்றவாளிக் கூண்டில்தான் உங்கள் நாடு உள்ளது என்ற உண்மையை மறந்து மறைத்து நீங்கள் நியாயம் பிளக்கின்றீர்கள் என் பதை ஒரு கணம் உங்களுக்கு நினைவூட்டுவது, உங்களின் செயற்பாட்டினாலும் நடவடிக்கைகளினாலும் பாதிக்கப்பட்டு நிற்கும் தமிழர்களின் கடமை எனக் கருதுகிறோம்.

செய்த பாவத்துக்கு தவறுக்கு பிராயச்சித்தம் செய்யும் வகையில் செயல்படுவதை விடுத்து, பாவத்தை நியாயப் படுத்தும் "நீதிவானாக" நீங்கள் "அறிவுரை" கூற முற்படுவது பொருத்தமற்றவர் வேதம் ஓதுவது போல நாரசமாக நம் காதில் வீழ்கிறது!

-உதயன்

þó¾¢Â¡¨Å Å¢ðÎ À¡¸¢Í¾¡ý À¢Ã¢ó¾Ð §À¡ø ±õ¨ÁÔõ À¢Ã¢òÐ ¾óÐŢ𧼠§À¡Â¢Õì¸ §ÅñÎõ. ¯ñ¨Á¾¡ý ¬É¡ø À¡¸¢Í¾¡É¢Â÷¸Ù측¸ §À¡Ã¡¼ ƒ¢ýÉ¡ þÕó¾¡÷ ±õÁ¢¼õ «ôÀÊ Â¡Õõ þÕì¸×õ þø¨Ä ¿¡õ ±õ¨Á ¾É¢Âú¡¸ «í¸£¸Ã¢ìÌõ ÀÊ §¸ðì¸×õ þø¨Ä. 1948 þø þÕó¾ ®Æò¾Á¢ú ¾¨ÄÅ÷¸û ´ðÎ ¦Á¡ò¾ þÄí¨¸ìÌõ ¾¡§Á ÓÊ¡ÇÄ¡õ ±ýÈ ¿ôÀ¡¨ºÂ¢ø þÕ󾾡ø Åó¾ Å¢¨Ç× þÐ.

¾¨ÄÅ÷¸Ç¢ý Í¿Äô §À¡ìÌ, ¾Á¢ÆÃ¢¼§Á À¢Ã¢óÐ §À¡Ìõ ±ý½õ þøÄ¡Áø þÕó¾¨Á, ÁüÚõ Áì¸Ç¢¼Óõ ¾¨ÄÅ÷¸Ç¢¼Óõ ±¾¢÷¸¡Äõ ÀüȢ àà §¿¡ì¸¢øÄ¡Áø þÕó¾Ð. þ¨Å¾¡ý 1948§Ä§Â ¾É¢ò¾Á¢ú «Ã¨º ²üÀ¼¡Áø ¦ºö¾ À¢Ã¾¡É ¸¡Ã½í¸û.

¯ñ¨Á þôÀÊ þÕì¸ 50 ÅÕ¼í¸Ç¢ý À¢ý À¢Ã¢ðʺ¡¨Ã §¿¡ÅÐ Íò¾ §¸Ä¢ò¾Éõ.

¿¡í¸û §¸ð측¾ ´ý¨È ¾ÃÅ¢ø¨Ä§Â ±ýÚ ºñ¨¼ À¢ÊôÀÐ ¿¢Â¡ÂÁ¢ø¨Ä

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.