Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் சோதனை இலங்கைக்கா – அமெரிக்காவுக்கா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் சோதனை இலங்கைக்கா – அமெரிக்காவுக்கா? – ஹரிகரன

 

obama%20un070312.jpgஜெனிவாவில் சோதனை இலங்கைக்கா – அமெரிக்காவுக்கா?
ஜெனிவாவில் இம்மாதம் 25ம் திகதி தொடங்கப் போகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை, ஐ.நா மனிதஉரிமைகள்ஆணையாளர் நவநீதம்பிள்ளை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். முன்னதாக இந்த அறிக்கையின் பிரதி ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க மூலம், அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 18 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையை படித்து விட்டு அரசாங்கம் எதைச் சொல்லப்போகிறது என்பது எவருமே இலகுவாக ஊகித்திருக்கக் கூடிய விடயம் தான். ஏனென்றால், அரசாங்கம் ஒருபோதுமே தனது பக்கம் உள்ள குறைபாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை. இது முதலாவது விடயம். அடுத்தது, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையையே கண்ணில் காட்ட முடியாதபோது, அவரது அறிக்கையை மட்டுமா அரசாங்கம் வரவேற்கப் போகிறது.
வழக்கம் போலவே அரசாங்கம் இது பக்கச்சார்பானது, நியாயமற்றது என்று நிராகரித்து விட்டது. நவநீதம்பிள்ளையின் அறிக்கை காட்டமானதாக இருக்கும் என்பது முன்னரே எதிர்பார்க்கப்பட்டது தான். ஏனென்றால், ஏற்கனவே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒரு ஆண்டு நிறைவடையும் சூழலில் கூட, அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்காத நிலையில், ஏமாற்றமும், கோபமும் அந்த அறிக்கையில் கண்டிப்பாக எதிரொலிக்கும் என்பது தெரிந்ததே.

 

அரசாங்கம் தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டதாக நவநீதம்பிள்ளையின் அறிக்கை கூறுகிறது. போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படவில்லை, போர்குற்றங்கள் குறித்த உள்ளூர் விசாரணைகள் நடுநிலையாகவோ நம்பத்தகுந்த வகையிலோ நடக்கவில்லை, மீறல்கள் குறித்த இராணுவ விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று இந்த அறிக்கையில் அடுக்கப்பட்டுள்ளன குற்றச்சாட்டுகள். அதுமட்டுமன்றி கடந்த ஆண்டிலும் நீதிக்குப் புறம்பான கொலைகள், ஆட்கடத்தல்கள், தொடர்ந்தன, சிறைப்படுகொலைகள் நடந்துள்ளன, மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது தொடர்கிறது, இப்படியே நீளும் மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்படுவதோ தண்டனை அளிக்கப்படுவதோ இல்லை. குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பிப்பதை தடுப்பதற்கு சர்வதேச விசாரணை அவசியம் என்றும் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

 

நவநீதம்பிள்ளையின் தலைமையிலான மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம், தம்மை குற்றவாளிக்கூட்டில் நிறுத்த முனைகிறது என்ற கலக்கம் ஏற்கனவே அரசாங்கத்தில் உள்ள சிலருக்கு வந்து விட்டது. தன்னை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் ஏற்ற சர்வதேசசமூகம் முனைவதாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே பலமுறை வெளிப்படையாக கூறியுள்ளார்.

 

இப்போது யார் குற்றவாளி என்ற பிரச்சினை எழவில்லை.

நியாயமான விசாரணைகளை நடத்து என்று தான் சர்வதேச சமூகம் அரசாங்கத்தை அழுத்திப் பிடிக்கிறது.

அவ்வாறானதொரு விசாரணை, அதாவது சுதந்திரமான உள்ளக விசாரணை என்பது, இலங்கையில் நடக்கக் கூடிய காரியம் அல்ல என்பது, சர்வதேச சமூகத்துக்கு நன்றாகவே தெரியும்.

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் பதவிநீக்கத்தை அடுத்தே இந்த முடிவுக்குப் பல நாடுகள் வந்திருந்தன.

ஆனால், ஒரு முன்னாள் நீதிபதி என்ற வகையில் இதனை நவநீதம்பிள்ளை ஏற்கனவே அறிந்திருந்தார். அதனால் தான், அவர் ஆரம்பத்தில் இருந்தே, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளார்.

 

இந்த சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்குகின்ற அதிகாரம் நவநீதம்பிள்ளைக்கு இல்லை.

ஏன் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்குக் கூடக் கிடையாது.

 

அதனால் தான், அவர், நிபுணர் குழு தனக்கு அளித்த அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்டு விட்டு சும்மாயிருந்தார். அந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவரால் ஒரு சுதந்திரமான விசாரணைக் குழுவை நியமிக்க முடியாது. அதனால் தான், அந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பியிருந்தார். அதேபோன்ற நிலையில் தான் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நிலையும் உள்ளது. அவரால், ஆக மிஞ்சினால், ஒரு அறிக்கையை, மனிதஉரிமைகள் பேரவையிலோ, ஐ.நா பாதுகாப்புச் சபையிலோ சமர்ப்பிக்க முடியும் அவ்வளவு தான். இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற இந்தத் துணிச்சலும், பாதுகாப்புச்சபையில் உள்ள சீனா, ரஸ்யா ஆகிய வீட்டோ அதிகாரமுள்ள நாடுகளின் பக்கபலமும் தான், இலங்கை எதற்கும் மசியாமல் நின்று பிடிக்கிறது.

இலங்கை அரசுக்கு ஒன்று விளங்கி விட்டது.

 

உலகைக் கவரும் பெற்றோலிய வளம் ஏதும் இல்லாவிட்டாலும் கூட, அதற்கு நிகரான இடஅமைவு தனக்குச் சாதகமாக உள்ளது என்பதால், எந்த வல்லரசும் தன்மீது கைவைக்காது என்று இலங்கை உறுதியாக நம்புகிறது. இத்தகைய பின்னணியில் தான், இந்தியா, அமெரிக்கா, மேற்குலகம் என்று மிரட்டல்கள் வந்தாலும் அசைந்து கொடுக்காமல் நின்று பிடிக்கிறது.

இந்தநிலையில்,

வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கப்போகும் இந்த அறிக்கையும் சரி, அதன் பின்னர் அமெரிக்கா கொண்டு வரப்போகும் தீர்மானமும் சரி எதைச் சாதிக்கப் போகின்றன என்ற கேள்வி உள்ளது. ஏனென்றால், மீண்டும் மீண்டும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானங்களின் மூலம், இலங்கை அரசாங்கத்தை பணிய வைக்க முடியாது என்பது நவநீதம்பிள்ளைக்கும் சரி, அமெரிக்காவுக்கும் சரி இந்தளவுக்கும் விளங்கியிருக்க வேண்டும்.

 

உள்நாட்டில் மிகப்பெரிய பலத்துடனும் அரசியல் செல்வாக்குடனும் இருப்பதால், வெளிநாடுகளால் எதுவும் செய்ய முடியாது என்று இலங்கை அரசாங்கம் நினைக்கிறது. அதேவேளை. அடுத்த கட்டமாக ஐ.நா பாதுகாப்புச்சபைக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றாலும் கூட, அங்கு சீனாவும், ரஸ்யாவும் காப்பாற்றத் தயாராக இருக்கின்றன என்ற மிகப்பெரிய மனோபலம் அரசாங்கத்துக்கு உள்ளது.

சிரியாவில் போரும் அழிவுகளும் நீடிப்பதற்கும் இதுவே காரணம்.

 

என்னதான் ஜெனிவா கூட்டத்தொடரில் கண்டனத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டாலும், காட்டமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டாலும், அவையெல்லாம் அரசாங்கத்தை அவ்வளவாக அசைக்க முடியாது. இத்தகைய நிலையில், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கும், அதேவேளை, கடுமையான முடிவுகளை எடுக்க முடியாத நிலைக்குள்ளேயும் தான் மேற்குலகம் சிக்கிக் கொள்ளப் போகிறது. ஜெனிவா கூட்டத்தொடர், இலங்கை அரசுக்கு கடுமையான நெருக்கடிகளைக் கொடுப்பதாக இருந்தாலும் கூட, மேற்குலகிற்கும் கூட இது சோதனையாகவே அமையப் போகிறது.
 

http://www.tbclondon.com/2013/02/18/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95/

 

Edited by nunavilan

 இந்த சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்குகின்ற அதிகாரம் நவநீதம்பிள்ளைக்கு இல்லை.

ஏன் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்குக் கூடக் கிடையாது.

 

 

செயலாளர் நாயகம் பான்  கி மூனுக்கு சுயாதீன ஐ.நா. விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரம் உள்ளது.

 அதேவேளை. அடுத்த கட்டமாக ஐ.நா பாதுகாப்புச்சபைக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றாலும் கூட, அங்கு சீனாவும், ரஸ்யாவும் காப்பாற்றத் தயாராக இருக்கின்றன என்ற மிகப்பெரிய மனோபலம் அரசாங்கத்துக்கு உள்ளது.

சிரியாவில் போரும் அழிவுகளும் நீடிப்பதற்கும் இதுவே காரணம்.

 

 

அண்மையில் இலிபியாவில் முன்னர் ஈராக்கில் மேற்குலகம் வெற்றிகரமாக சீன, உருசிய தடைகளை மீறி ஐ.நா. பிரேரணையை அமுலாக்கின.

இந்தக்கட்டுரையை எழுதிய ஹரிஹரனுக்கு சிங்களம் அந்த பேரினவாதம் பலமாக இருக்கவேண்டும் என விரும்புகிறார்.

இவ்வாறான இந்தியர்கள் பலமான இடங்களில் இருப்பதால் தான் அங்கு மாற்றங்கள், வெளிவிவகார கொள்கை உட்பட, நடக்காமல் உள்ளன.

ஹரிஹரன் வெலவெலத்துப்போய் உளறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவைக் காப்பாற்ற முனைகிறார். :rolleyes:

 

கெடுகுடி சொல்கேளாது. இலங்கையும் அந்த வகைதான்.. ஆனால் இலங்கை கீழே போகும்போது இந்தியாவின் பாவாடையையும் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும்.. :lol:

பாதுகாப்பு சபையில் வரும் 5 நாடுகளின் வீட்டோகளை கூடி மீறி நாடுகள் மேலே போகும். 

 

அரசு தான் நல்ல பிள்ளையாக நடித்தது. கதிகாமர் காலத்தில் இலங்கையை பணத்தை செலவழித்து நிறைய ஆதரவை வாங்கியிருந்தது. இதை மகிந்தா போர் நேரம் கண்டநிண்டபடி பாவித்தார். இப்போது அதில் பாதி தன்னும் இல்லை. இதை சிங்களம் உணரும் நிலையில் இல்லை.

 

சீனா இலங்கையை கடந்த சில மாதங்கள் நன்றாக உலுப்பி எடுத்திருக்கிறது. இதை இலங்கை ஊடகங்களுக்கு மூடி மறைக்கலாம். ஆனால் அரச புலனாய்வு நிறுவனங்களுக்கு அங்கு நடப்பதெல்லாம் தெரியும். சீனாவுக்கு வியாபாரத்திற்கு அமெரிக்கா அளவு முக்கியத்துவமாக இலங்கை இல்லை.  சீனாவுக்கு குறைந்த பட்டசம் இந்தியா அளவு முக்கியத்துவத்தில் இலங்கை இல்லை. அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு மனதாக சீனாவுடன் பேசினால் அதன் பின்னர் ரூசியா இலனகையின் பின்னர் நிற்காது. ரூசியா இலங்கையுடன் நிற்பது இந்தியா அங்கே நிற்பதால் மட்டுமே. இலங்கை இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் காலம் வரும்.

 

வரும் பிரேரணை கடுமையாக இருந்தால் பிரேரணையின் பின்னர் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் முறியும் சந்தர்ப்பம் இருக்கிறது. பிரேரணை பொருளாதாரத்தடை வரைக்கும் போனால் அமெரிக்கா GSP+யை தான் வைத்துகோண்டு  மற்றைய நாடுகளை தடுக்க முடியாது. இன்றைய கடன் நிலைமையில் சீனாவுக்கு நுரை சோலையை கொடுக்க வேண்டியிருக்கிறது. அமெரிக்க GSP+ போனபின்னர், சீனா மீது சில தடை உத்தரவுகள் வந்த பின்னர், மகிந்தாவின் ராஜதந்திரத்திற்காக மட்டும் சீனா கடன் கொடுக்கும் எழுத யாழில் சிலருக்கு விருப்பம். ஆனால் அது யதார்த்தம் அல்ல.

 

இலங்கையின் சீன ஏற்றுமதிகள் எல்லோரும் எதிர்பார்த்திருந்தது போல வளர்ந்திருந்தால் சில வரத்தகத்தை சீனா தொடர முயலலாம். ஆனால் அது இனறைய நிலைமையில் அது எதிர் பார்த்த வெற்றி அளிக்கவில்லை. தேயிலை வியாபாரத்தில் தோன்றியிருக்கும் சிக்கல் சீன - இலங்கை வரத்தகம் எதிர்பார்த்த வெற்றியில் இல்லை என்பது தெளிவு.  

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.