Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான பிரேரணையின் நகலை வெளியிட்டது அமெரிக்கா! – உறுப்பு நாடுகளின் கருத்தறிய முயற்சி!!

Featured Replies

இலங்கைக்கு எதிரான பிரேரணையின் நகலை வெளியிட்டது அமெரிக்கா! – உறுப்பு நாடுகளின் கருத்தறிய முயற்சி!!

 

ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையின் நகலை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. அத்துடன், பிரேரணையின் நகலை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடமும் அமெரிக்கா கையளித்துள்ளது.



குறித்த பிரேரணையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் அங்கத்துவ நாடுகளின் அபிப்பிராயங்களை அறிந்து கொள்வதற்காகவே அமெரிக்கா இவ்வாறு அனுப்பி வருகின்றது.



இதன்பிரகாரம் குறித்த பிரேரணையின் உள்ளடக்கங்களை ஆராய்ந்த பின்னர், அதுதொடர்பில் தமது நிலைப்பாட்டை அங்கத்துவ நாடுகள் அமெரிக்காவிடம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கென வெள்ளை மாளிகை நிர்வாகத்தால் களமிறக்கப்பட்டுள்ள விசேட இராஜதந்திரிகள் குழுவிடமே ஐ.நா. மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகள், இப்பிரேரணை தொடர்பில் தமது கருத்துகளை முன்வைக்கவுள்ளன. அடுத்தவார இறுதிக்குள் அங்கத்துவ நாடுகள் தமது நிலைப்பாட்டை முன்வைக்குமாறு அமெரிக்கா கேட்டுள்ளது.



உறுப்பு நாடுகளின் கருத்துகளை அடிப்படையாகக்கொண்டே பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்வதா என்பது தொடர்பில் அமெரிக்க இறுதியானதொரு முடிவை எடுக்கவுள்ளது.



இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு அதிகாரிகள் மட்டத்திலான குழுவொன்றை அனுப்புவதற்கு இலங்கை அரசு முன்னதாக தீர்மானித்திருந்தாலும் தற்போது அதுகுறித்து மீள்பரிசீலித்து வருகின்றது.



அமெரிக்காவின் இவ்வாறான அதிரடியான செயற்பாடுகளால் அதிர்ச்சியடைந்துள்ள இலங்கை அரசு, அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்றை ஜெனிவா தொடருக்கு அனுப்புவது குறித்து ஆலோசித்து வருகின்றது.



நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டே தனது முன்கூட்டிய முடிவை இலங்கை அரசு அவசர அவசரமாக மீள்பரிசீலித்து வருகின்றது. இந்த விடயம் சம்பந்தமாக இலங்கை அரசு விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளது.



ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடர் இம்மாதம் இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. இருப்பினும் இலங்கை விவகாரம் மார்ச் மாதம் 15 ஆம் திகதியளவில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.



குறிப்பாக இம்முறை அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை கடந்த முறையைவிட கூடுதலான வாக்குகளால் நிறைவேற்றப்படும் என மேற்குலக இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 



ஏனெனில், சுழற்சி முறையிலான அங்கத்துவத்தில் அடிப்படையில் இலங்கையின் நட்பு நாடுகள் சில மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறுகின்றன. சீனா, கியூபா, ரஷ்யா போன்ற நாடுகள் இதில் பிரதானமாகும்.



அத்துடன், இம்முறை மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவத்தை பெறவுள்ள நாடுகள் இலங்கைக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.



 கடந்த முறை இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றமை தெரிந்ததே.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=82a7827c-b586-4a36-b574-8b164b66de87

2/18/2013 4:53:40 PM

  • தொடங்கியவர்

இலங்கை அரசின் விசேட அனுமதி இன்றி இலங்கைக்கு வருவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் -அமெரிக்கா

 
 

amrican-and-srilankan-flag.pngஇலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, ஐக்கிய அமெரிக்காவினால் முன்வைக்கப்படும் யோசனையில், உள்ளடங்கியுள்ள சில விடயங்கள் ஊடகங்கள் மூலம் வெளியாகியுள்ளன.

இந்திய ஊடகங்களினால், இன்று அது தொடர்பில் செய்திக் குறிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.

தற்போது, பொதுநலவாய நாடுகளுடன் இலங்கை இராஜதந்திர ரீதியிலான பிரயத்தனங்களை முன்னெடுத்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இது தவிர, ஐக்கிய நாடுகளின் அமைப்பின் விசேட பிரதிநிதிகளுக்கு இடையூறுகள் இன்றி இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டிருந்த அமெரிக்காவின் யோசனையின் முக்கிய கருத்தாக சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்கையில் தமது பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மை, கருத்தை வெளியிடும் சுதந்திரம், முரண்பாடு தொடர்பான இடையூறு மற்றும் கொலைகள் தொடர்பில் ஆராய்வதற்கான பணிகளை மேற்கொள்ளும் விசேட பிரதிநிதிகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் விசேட அனுமதி இன்றி இலங்கைக்கு வருவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா தமது யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளது

http://nerudal.com/nerudal.55288.html

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவுக்கு ;உலக்கையா; இருக்கிறதை,இந்தியா 'உளிப்பிடி' ஆக்காமல் விட்டால், எதுவும் நடக்கலாம்! :o

ஆக மொத்தத்தில இந்த பிரேரினை அமெரிக்காவுக்கு வேண்டினதாத்தான் இருக்கப் போகிறது.

 

எனவே இதனூடே நாம் அதிகம் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும்.

  • தொடங்கியவர்

ஆக மொத்தத்தில இந்த பிரேரினை அமெரிக்காவுக்கு வேண்டினதாத்தான் இருக்கப் போகிறது.

 

எனவே இதனூடே நாம் அதிகம் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும்.

நாம் போகத்தக்க பாதை "எதிரியின் எதிரி நம்ம நண்பன்."

 

அமெரிக்காவுக்கு பிடித்தது இலங்கைக்கு பிடிக்காது. இலங்கைக்கு பிடிக்காதது எமக்கு பிடிக்கும். போன தடவையைஅ விட கடுமையானத்தாக இருக்கும். எதோ கொஞ்சம் நமக்கும் தேறும். 

நாம் போகத்தக்க பாதை "எதிரியின் எதிரி நம்ம நண்பன்."

 

அமெரிக்காவுக்கு பிடித்தது இலங்கைக்கு பிடிக்காது. இலங்கைக்கு பிடிக்காதது எமக்கு பிடிக்கும். போன தடவையைஅ விட கடுமையானத்தாக இருக்கும். எதோ கொஞ்சம் நமக்கும் தேறும். 

சி..சீ.. எண்டு உதறி தள்ளி போகவேணுமெண்டு நான் சொலவில்லை, அப்பிடிப்போரதுக்கும் வேற இடம் எமக்கென்ன இருக்கு? 

 

ஆனால் இதை அதிகம் நம்பினால் நடக்காமல் போனால் ஏமாற்றம் தான் அதிகரிக்கும். 

 

சிங்களவனுக்கு சின்னனா ஒரு குட்டு விழுந்தால் கூட ஒரு சில்லறை சந்தோசம்தான் அதைவிட சி குட்டி மு வலுக்குமேண்டால் என்னும் சந்தோசம்.

 

நப்பாசைதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.