Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரான வீமனின் தாயார் தற்கொலைக்கு முயற்சி –

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரான வீமனின் தாயார் தற்கொலைக்கு முயற்சி –
19 பெப்ரவரி 2013
அபாயகரமான நிலையில் வைத்தியசாலையில் அனமதி – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
 
காணாமல் போனரது நிலை பற்றிய தகவல்கள் ஏதும் வெளித்தெரியாத நிலையில் அவர்களது குடும்ப அங்கத்தவர்களது தற்கொலை வீதம் என்றுமில்லாத அளிவில் அதிகரித்துச் செல்கின்றது. இன்று அதிகாலை அவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்த விடுதலைப்புலிகளது மூத்த தளபதிகளுள் ஒருவரான வீமனின் தாயார் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு நித்திரையிலிருந்து எழுந்து அவர் தற்கொலைக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போதும் இன்று காலையே அவர் மீட்கப்பட்டிருந்தார். இதனால் உடலெங்கும் நஞ்சு பரவுண்டு அபாயகரமான நிலையிலேயே அவர் இருந்துவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இதனிடையே குறித்த முன்னாள் போராளிகளது குடும்பத்தவர்கள் மீது இலங்கை படையினர் மற்றும் புலனாய்வு கட்டமைப்புக்கள் முன்னெடுத்துவரும் சித்திரவதைகள் மற்றும் உளவியல் ரீதியாக அச்சுறுத்தும் நிகழ்வுகளும் இத்தகைய தற்கொலைக்கு காரணமென நம்பப்படுகின்றது. இத்தகைய அச்சுறுத்தல்களாலேயே அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறவும் காரணமாகிவிடுவதாக அவதானிகள் கூறுகின்றனர்.
 
யுத்தகாலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கடந்த ஆண்டினில் இலங்கையின் தற்கொலைவீதம் என்றுமில்லாத அளவில் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா இராணுவம் கூட .. இருக்கனுன்னு சம்பந்தனே சொல்லுறாரே..! இமல்டா கூட சொல்லுறாரே..! டக்கிளஸ் கூடித் திரியுறாரே..???! இவங்க எல்லாம் சொல்லுற இராணுவம்.. இப்படி எல்லாம் செய்யும்..????!

 

ஒரு இனப்படுகொலை இராணுவத்துக்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்கி தமிழர்கள் மீது ஏவிவிட்டவர்களை விட அதனை தம்மோடு வைச்சிருக்கனுன்னு சொல்லுறவங்களை எப்படிப் பார்க்கனும்..??!

 

ஏன் சம்பந்தன் சொல்லுறாரில்ல.. சிறீலங்கா இராணுவத்தை விலத்திட்டு பன்னாட்டுப் படையை ஐநா கொண்டு வரட்டென்று..?????!

 

இப்படி ஏதாவது நடந்தால் அன்றி.. துப்பாக்கி ரவைகளும்.. கிளஸ்ரர்களும் செய்த இனப்படுகொலையை.. எனி கிணறுகளும்... தூக்குக் கயிறுகளும் செய்யும்.

 

சிங்களம் எவ்வளவு மோசமான ஒரு பேரினவாத சக்தி என்பதை மறப்போம் மன்னிப்போம் பேர்வழிகள் முதலில் புரிஞ்சு கொள்ளனும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

படையினரிடம் சரணடைந்த வீமனை காணாததால் நஞ்சருந்தினார் தாயார்

 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான வீமனின் தாயார்  சரணடைந்த தனது மகனைக் காணவில்லையென்ற மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயற்சிசெய்து ஆபத்தான கட்டத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 
மிருசுவிலைச் சேர்ந்த ஏகாம்பரநாதன் இராஜேஸ்வரி (வயது62) என்பவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்று யாழ்.போதனா வைத்திய சாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதிகளில் ஒருவரான வீமனும் படையினரிடம் சரணடைந்துள்ளார். அதன் பின்னர் அவர் தொடர்பான எந்தவொரு தகவலும் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்படவில்லை.
 
இந்தநிலையில் தனது மகன் உயிருடன் உள்ளானா? இறந்துவிட்டானா? என்று  தெரியாத நிலையில்,தனது மகனைத் தேடியலைந்துள்ளார்.இதனால் மனதளவில் பாதிப்புள்ளான நிலையில் சாவகச்சேரியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். 
 
தனது மகன் தொடர்பில் எதுவும் தெரியாததுடன், மகனை மீட்பதற்காகச் சில நபர்களிடம் இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்ததாக அவர் தன்னிடம் கூறியதாக வைத்திய நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார்.
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நித்திரைக்குச் செல்லும் போது தனது மகனைக் காணவில்லையென்று அவர் அழுதுள்ளார். இதன் பின்னர் அவர் தற்கொலை முயற்சியுடன் நஞ்சருந்தியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
 
மிகவும் ஆபத்தான நிலையில் யாழ்போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவிக்கப்பட்டது. 

http://onlineuthayan.com/News_More.php?id=630441849420206290

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அம்மாவின் மன வலியை என்னால் புரிந்து கொள்ள முடியுது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.