Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலை ஜனாதிபதியாக ஆக்கிப் பாருங்கள் பாம்பு சாரையா? புடையனா? என்பது தெரியும்

Featured Replies

மன்னர் சபைக்கு வந்த நெசவாளி ஒருவன் அறி ஞர்களுக்கும் நல்லவர்களுக்குமே நான் கொண்டு வந்துள்ள ஆடை தெரியும் எனக் கூறுகிறான். இரண்டு கைகளையும் உயர்த்தி இதோ! எனது கரத்தில் இருக்கும் இந்த ஆடை மன்னர் பெரு மானுக்கு மிகவும் பொருத்துடையது என்கிறான். அவனின் கையில் எந்த ஆடையுமில்லையாயி னும் அறிஞர்களுக்கும் நல்வர்களுக்குமே குறித்த ஆடை தெரியும் என்று நெசவாளி கூறிய தால் சபையிலிருந்த மன்னன் முதல் மந்திரி பிர தானிகள் வரை அனைவரும் நெசவாளி கொண்டு வந்த ஆடை மிகவும் அற்புதமானதென்றனர்.

 

 

இப்போது, தான் கொண்டுவந்த ஆடையை மன்னனுக்கு அணிவிக்கப் போவதாக அவன் கூற, மன்னன் தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்து கொள்கிறான். அதோ! மன்னன் நிர்வாணமாக நிற்கிறான். நெசவாளி, தான் கொண்டுவந்த ஆடையை மன்னனுக்கு அணிவிப்பது போல பாவனை செய்கிறான். ஆடையிருந்தால் தானே அம்மணம் மறைக் கப்படும். மன்னன் நிர்வாணமாக நிற்பதை அனைவரும் உணர்ந்தாலும் அறிஞர்களுக் கும் நல்லவர்களுக்குமே ஆடை தெரியும் என்று நெசவாளி கூறியிருந்தமையால் மன்னா... மா மன்னா... ஆடை பிரமாதம் என்றனர் சபையோர். இப்போது மன்னன் நாட்டை சுற்றிவருகிறார்.

 

அனைவருக்கும் மன்னன் நிர்வாணமாக நிற் பது தெரியினும் யாரும் எதுவும் பேசிலர்.

அச்சமயம் சிறுவன் ஒருவன் மட்டுமே ஆஹா... கூக்கூ... எங்கள் மன்னன் நிர்வாண மாய் போகிறார் சீ... சீ... என்றான். அந்தச் சிறு வன் கூறிய போதுதான் அனைவரும் தங் களுக்குத் தெரிந்ததை வெளிப்படுத்தினர். நெச வாளி ஏமாற்றி விட்டான் என்பதையும் உணர்ந்து கொண்டனர்.  இத்தகைய நிலைமைகள் வெறும் கதைகளாக மட்டுமல்ல;

 

யதார்த்தங்களாகவும் இருக்கவே செய்கின்றன. இந்த யதார்த்தங்களைப் புரிந்து கொள்வதில் தமிழர்களாகிய எங்களிடம் மிகப்பெரும் பல வீனம் உண்டென்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக் கின்ற ரணில் விக்கிரமசிங்க எங்களுக்காகப் பேசுவதெல்லாம் எதிர்க்கட்சியில் இருக்கும் வரைக்கும் தான்.

 

அவரை ஒருமுறை ஜனாதிபதியாக்கிப் பாருங் கள். அவரும் இந்த நாட்டின் கடந்தகால - நிகழ் கால ஜனாதிபதி (களின்) யின் இயல்பை இம்மி யும் பிசகாமல் பின்பற்றுவார். உதாரணத்திற்கு அரசியலில் இணையாத போது இருந்த சந்திரிகாவும் எதிர்க்கட்சியில் இருந்த சந்திரிகாவும் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகாவும் தமிழர்களின் விடயத்தில் வெவ் வேறு கோணங்களை - கொள்கைகளை வெளிப் படுத்தியிருந்தார்.  இந்த நிலைமை சிங்களவர்கள் அனை வருக்கும் பொருத்துடையதே. அந்தவகையில் ரணில் கூறுகின்ற நியாயங்கள் என்பது பதவி இல்லாததால் எழுந்த சாரைத்தனம். அவரை ஜனாதிபதியாக்கினால் அவர் சாரையா? புடை யனா என்பது தெரியவரும்.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=580:2013-02-19-04-37-08&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

  • கருத்துக்கள உறவுகள்

சாரையுமல்ல ..புடையனுமல்ல.....நாகம்......இப்ப நடிக்குது...நல்லா நடிக்குது....உது த .தே.கூ வின் வாக்கு வங்கியை உடைத்து ..தமிழரை மஹிந்த விற்குஅள்ளிக்கொடுக்க இப்ப நடிக்குது. இது விளங்காததுகள் வல்லிபுரக் கோவிலுக்கும் ....வடை அப்பம் தின்னவும் கூட்டிக்கொண்டு திரியுதுகள்....பாதிக்கப் பட்ட சனத்தை...காலிலும் விழ வைக்குதுகள்...பதவிமோகம் பிடித்த எமது சனம் இருக்கும்வரை விடுதலை கிடையாது....

  • கருத்துக்கள உறவுகள்

ரனிலின் குள்ள நரித்தனம் பற்றி தமிழ் மக்கள் சொல்லி  தெரிய வேண்டியதில்லை.அனுபவத்தில் கண்டவர்கள்.தமிழ் மக்களை கிளறி விட்டு தனது அரசியல் லாபங்களை அடைய முயலும் குள்ள நரி பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.