Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமார் தர்மசேனவுக்கு எதிர்ப்பு; சென்னையில் த.பெ.தி.க.வினர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
குமார் தர்மசேனவுக்கு எதிர்ப்பு; சென்னையில் த.பெ.தி.க.வினர் கைது
சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013 12:19    
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை நடுவரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர். 
 
இந்தியா - அவுஸ்திரேலியாவுக்கான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேனா என்பவர் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
குமார் தர்மசேனா நடுவராக நியமிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை இந்தியாவை விட்டு வெளியேற்றக் கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று காலை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டிருந்தனர். 
 
பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான கோஷங்களை அவர்கள் எழுப்பியதுடன் அவரது உருவப்படத்தையும் தீ வைத்து எரித்தனர். 
 
இந்நிலையில், உடன் நடவடிக்கை எடுத்த பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்துள்ளனர். (நக்கீரன்)

சர்வதேச அழுத்தங்கள் காரணமாக மகிந்த மீதான சாதாரண சிங்களவர்கள் அதிகரிக்கும் என ஒரு பகுதியினர் கூறுகின்றனர்.

 

ஆனால், இவ்வாறு உலகம் முழுவதும் ஒரு போர்க்குற்றவாளியாக பார்க்கப்பட்டு அதனால் தாங்கள் வெறுக்கப்படுவதையும் உண்மையிலேயே தங்கள் அவ்வாறான குற்றங்களை புரிந்தவர்கள் தான் என அவர்கள் உணரவும் வைக்கப்ப்படும் பொழுது அந்த ஆதரவு இல்லாமல் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
23-chepauk-stadium-300.jpg
 
 
 
சென்னை: சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் நடுவராக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த சிங்களவரான தர்மசேனாவை வெளியேற்ற வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி தமிழகத்தை உலுக்கியது. இந்த புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த முடியாது என்று தமிழக அரசும் அறிவித்திருந்தது.

 

இந்நிலையில் சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சிங்களவரான தர்மசேனா என்பவர் நடுவராக நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

 

இதையடுத்து இன்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

 

http://tamil.oneindia.in/news/2013/02/23/sports-protests-chennai-over-lankan-umpire-170319.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.