Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைக் கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மனித உரிமைக் கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்
24 பெப்ரவரி 2013
 
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடர் நாளை தினம் சுவிஸ்சர்லாந்தில் ஆரம்பமாகிறது. 
 
நாளை ஆரம்பமாகும் இக் கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளை இலங்கையிலிருந்து ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளார். 
 
அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் இரண்டு அதிகாரிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் 6 சிரேஷ்ட அதிகாரிகளும் உடன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுக்கிறது. 
 
ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் மார்ச் மாதம் 20ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 21ஆம் திகதி ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவர தீர்மானித்துள்ளது. 
 
இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் இடம்பெறம் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை நிராகரிக்கும் இரகசிய அறிக்கை ஒன்றை ஐ.நா பொதுச் செயலர் பான் கீமூனிடம் இலங்கை அரசு கையளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதேவேளை இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜெனீவா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
  • கருத்துக்கள உறவுகள்

UN-session-seithy-150.jpg

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22ம் மாநாடு நாளை சுவிட்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் ஆரம்பாகவுள்ளது. அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழாம் 25ம் திகதி ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளது. மாநாட்டின் போது அமெரிக்கா, உள்நாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக செயற்பட உள்ளன. இதனால் இலங்கை நெருக்கடியான நிலைமையை எதிர்நோக்க உள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றவுள்ளது. இலங்கைப் படையினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சித்தரிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. மார்ச் மாதம் 11, 12 மற்றும் 15ம் திகதிகளில் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=76702&category=TamilNews&language=tamil

 

உலக நாடுகளே!

 

 

563148_486202181441358_69140441_n.jpg

 

 

உலக நாடுகளே

உங்களது கண்களை

உருட்டி பாருங்கள்

 

மூளைச்சலவையென்று சொல்லும்

முட்டாள்களே - எம்மினத்தின்

முன்னேற்றத்திற்கு

முடக்கு போடும்

மூடர்களே

 

 

மலரவிருக்கும் தமிழீழத்திற்காய்

மாவீரர்கள் பல தந்தோம்

சாக விருப்புவது என்பது

செத்து விளையாடும் விளையாட்டா?

 

எங்களுக்கெல்லாம் பைத்தியமா?

 

ஆமாம்! பைத்தியம்தான்

எங்கள் தாய்மண் மீது பைத்தியம்

எங்கள் மக்கள் நலன் மீது பைத்தியம்

 

 

உலக நாடுகளே

தெரிந்தும் தெரிதாதது போல்

நடித்தது போதும்

நாடகமாடியது போதும்

நயவஞ்சகம் செய்தது போதும்

 

அட்டூழியங்களும்

அழிவுகளையும்

அநீதிகளையும்

அடாவடித்தனங்களையும்

அடக்குமுறைகளையும் செய்தவனுக்கு

 

உலக நாடுகளே -இன்னும்

அவனுக்கு துணை போகாதே

 

குருட்டுக் கண்களுக்கு

இருட்டு விலகட்டும்

 

உங்களது கண்களுக்கு

உயிர்ப்புக் கிட்டட்டும்

வாய்மூடி இருந்தவர்களுக்கு

வாய்ப்பூட்டு திறக்கட்டும்

 

வாய்கிழிய பேசியவன்

வாயடைத்து போகட்டும்

வசவுகீதம் பாடியவன்

வாய்பிழந்து பார்க்கட்டும்

----------------------------

வா.சி. ப.ம. த.ம.சரவணகுமார்

 

 

- நன்றி முகநூல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.