Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

த.தே.கூ.வின் உயர்மட்டக்குழு அமைவதில் சந்தேகம்: ஆனந்த சங்கரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images(825).jpg

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவொன்று அமைவதென்பது சந்தேகமாகவே உள்ளது. கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போதும் இது தொடர்பான தீர்மானம் எட்டப்படாத நிலையில் அடுத்த மாதம் 20ஆம் திகதிக்கு அது ஒத்திவைக்கப்பட்டது. இதனால், உயர்மட்டக் குழுவொன்று அமைவதில் சந்தேகமே' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

'தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாக கூறப்படும் ஐந்து கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையகத்தில் நடைபெற்றபோது உயர்மட்டக்குழுவும், மாவட்ட குழுவும் அமைப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டது. சில தலைவர்கள் ஜெனீவா செல்வதால் அடுத்த மாதம் 20ஆம் திகதி மீண்டும் கூடி தமிழரசு கட்சியின் கருத்துக்களையும் கேட்டறிந்து அக்கட்சியின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டபோதும் இது சம்பந்தமாக எதுவித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் இன்றைய சூழ்நிலைக்கேற்ற முடிவாக அம்முடிவு எனக்குத் தோன்றவில்லை. காலம் கடந்த செயலாகவே எனக்கு பட்டது. நான் அக்கூட்;டணியில் இருக்கின்றேனா இல்லையா என்ற சந்தேகத்துடன் இருந்து கொண்டிருக்கும் என் கருத்து ஏனையவர்கள் சிலருக்கு பிடித்திருக்காது என்ற ஐயம் எனக்கு இருந்து கொண்டிருக்கிறது. 

'கூட்டமைப்பு தனியாக போட்டியிடுவது தமிழ் மக்களின் நலன்களுக்கு நல்லதல்ல என்றும், ஒன்றிணையுமாறும் ஆனந்தசங்கரி வேண்டுகோள்'; என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 16-01௨011 ஞாயிற்றுக்கிழமை தினசரியொன்றின் முன்பக்க பிரதான செய்தி. அதேபோல் அதேதினம் இன்னுமொரு தினசரி 'அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்- தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அழைப்பு' என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 

அன்று தொட்டு இன்று வரை இரண்டு ஆண்டுகளும் ஒரு மாதமும் ஏழு நாட்களும் ஓடி விட்டன. இதற்கிடையில் வட மாகாணத்தில் இரண்டாக பிரித்து நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முழு ஆதரவு வழங்கியது. அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழர் விடுதலைக் கூட்டணி இரு உள்ளூராட்சி சபை தேர்தல்களை தனித்து நின்று வென்று கொடுத்தது. 

கிழக்கு மாகாணசபைத் பொதுத் தேர்தலில் சொந்த செலவிலேயே பல்லாயிரக்கணக்கான மைல் பிரயாணம் செய்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டேன். அதேபோன்று புளொட் இயக்கமும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இந்த காலத்தில் பல தடவைகள் நாம் ஒன்று சேர வேண்டுமென வற்புறுத்தி வந்துள்ளேன். ஒரு வருடத்துக்கு முன்பு அதாவது 01௧2௨011 திரு இரா.சம்பந்தனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில், 

'இந்நாட்டு தமிழ் மக்கள், குறிப்பாக வட - கிழக்கில் வாழ்பவர்கள் எதிர்நோக்கும் இருண்ட எதிர்காலம், நாளுக்குநாள் மோசமடைந்துவருகிறது என்றும் தற்போதைய நிலைமையில் செய்வதறியாது தவிக்கும் தமிழ் மக்ககளின் குரலுக்கு செவிமடுத்து செயற்பட வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் தமிழ் தலைவர்களில் நானும் நீங்களுமே அரசியலில் முதிர்ந்தவர்கள் என்பதால் முறையான தலைமையை வழங்கவேண்டிய கடமை எமக்குண்டு' எனவும் குறிப்பிட்டிருந்தேன்.

அக்கடிதத்திற்கு பின்பும் ஓராண்டுகளுக்கு மேல் ஒற்றுமையை வலியுறுத்தி வந்தபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவற்றுக்கும் செவிமடுக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் நீங்கள் பல்வேறு அயல்நாட்டு பிரமுகர்கள், இந்திய பிரமுகர்கள் என சந்தித்த போதும் அங்கு என்ன பேசப்பட்டன என்பதை இன்றுவரை நாமறியோம். ஆனால் செய்திகள் எல்லாம் கூட்டமைப்பின் பெயரிலேயே வெளிவருகின்றன. 

தேர்தல்களின் போதும் அதற்குப் பின்பும் புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த பொருள் உதவிகள் பற்றி எமக்குத் தெரியப்படுத்தவில்லை. கூட்டமைப்பின் பெயரால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள்; பற்றி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கோ அல்லது புளொட் அமைப்புக்கோ தெரியப்படுத்துவதில்லை. இருந்தும் எதுவித ஆட்சேபனையும் இன்றி மௌனமாக வேதனையடைந்தும் முரண்படாமல் த.தே.கூ இன் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டு ஐக்கியத்தை வலுப்படுத்தி வந்துள்ளேன். மேலும் 24-09௨011 தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநில மாநாட்டிலும், 29௧2௨012 பொதுச்சபை கூட்டத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் 

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இறுக்கமான உறவை பேணுவதோடு தமிழ் மக்களினதும், தமிழ் கட்சிகளினதும் ஒற்றுமைக்காக உழைப்பதாக உறுதி கொள்கிறது என்றும் ஒற்றுமை வலுவடைய வேண்டுமாயிருந்தால் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தாம் எடுக்கும் முடிவுகள் தங்கள் கட்சியை சார்ந்ததா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பை சார்ந்ததா என்பதை தெளிவுப்படுத்த வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி பங்காளி கட்சிகளை கேட்டுக்கொள்கிறது என்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அங்கத்தவர்கள் தான்தோன்றித்தனமாக எடுக்கும் முடிவுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறது என்றும் மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியது. 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்த தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கும், தொண்டர்களுக்கும் அக்கட்சியால் தடை விதிக்கப்பட்டிருந்த போதும் எமக்குள் இருந்த வேற்றுமையை வெளிக்காட்டாது தமிழ் மக்களிடமும், தமிழ் அரசியல் கட்சிகளிடமும் ஒற்றுமையை பேணுவதென்று தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானங்களுக்கு முரணாக சில தமிழரசு கட்சி அங்கத்தவர்கள் தொடர்ந்து செயற்படுவது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தையும் எமக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. 

அத்தகைய சில விடயங்கள் பின்வருவன.

•    ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பற்ற முறையில் பத்திரிகைகளுக்கு எழுதிய ஒரு கட்டுரையில் பல்வேறு தியாகங்கள் மத்தியில் உற்றார் உறவினரை பிரிந்து உயர் கல்வியை துறந்து, பல்வேறு இயக்கங்களில் இணைந்து ஆயுதமேந்தி போராடிய போராளிகளையும், அவர்களின் தியாகங்களையும் அவமதிக்கும் வகையில் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கி போராடியவர்கள் வேலையற்றவர்களும் அரசுக்கு எதிரானவர்களுமே என குறிப்பிட்டுள்ளார். இது சம்பந்தமாக வெந்து போன இவ் உள்ளங்கள் சாந்தியடைய தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைப் பீடம் எடுத்த நடவடிக்கைதான் என்ன? இச்செயலானது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளையே அவமதித்த செயலாகும். 

•    ஜெனீவா மாநாட்டுக்கு செல்லவிருக்கும் ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர், கடந்த வருடம் ஊடகமொன்றுக்கு விடுத்த செவ்வி தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடித்தளத்தையே அதிர வைத்தது. இவர் ஜெனீவா செல்வது ஏற்கக்கூடியதல்ல. அவரின் பங்களிப்பு சிலரை தலை குனிய வைக்கும் என்பதால் அவர் அங்கு செல்லாமல் இருப்பதே பலரின் விருப்பமாகும். அதே உறுப்பினர்தான் இறுதி யுத்தத்தின்போது பொதுமக்கள் அரசின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு செல்லும் வரை பொறுத்திருக்கும்படி கேட்டதாக கூறியதில் உண்மையில்லையென பலர் கருதுவதால் அந்த விடயத்தை தெளிவுப்படுத்த வேண்டிய தார்மீகக் கடமையை செய்ய தவறியது பாராதூரமான குற்றமாகும். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத காலத்தில் அரசுக்கும் புலிகளுக்கும் தான் எழுதியதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். 

எல்லாவற்றுக்கு மேலாக 2003ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி பிளவுபட்டு இரண்டாக பிரிந்தமைக்கு காரணம் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிகள் என்பதை அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகிய நான் ஏற்றுக்கொள்ளாமையே. அதை நான் ஏற்றிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக நானே இன்றும் இருந்திருப்பேன். 

அன்று அவர்களை ஏகபிரதிநிதிகளாக ஏற்கவில்லையே தவிர அரசுடனான பேச்சுவார்த்தைகளுக்கு அவர்கள் போவதையே விரும்பினேன். அந்த உண்மை மக்களுக்கு மறைக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அந்த பாராளுமன்ற உறுப்பினர் கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். இவற்றுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை என்ன விளக்கம் தருகிறது என்று தமிழ் மக்கள் ஒருவருடமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

•    இது ஒருபுறமிருக்க தமிழ் மக்கள் எல்லோரையும் குழப்பிக் கொண்டிருக்கின்ற ஒரு விடயம் கடந்தவருடம் ஜெனீவாவுக்கு போகாமைக்கு கொடுக்கப்பட்ட காரணங்களும் இன்று விழுந்தடித்துக் கொண்டு ஜெனீவாவுக்கு செல்;கின்ற புதுமையும் ஆகும். 

•    கடந்த வருடம் மார்ச் மாதம் 03ம் திகதி சனிக்கிழமை ஒரு தமிழ் தினசரி தலைவர் ஒருவரின் படத்துடன் 'ஜெனீவா செல்வதில்லை. கூட்டமைப்பு திட்டவட்டம்' கூடி ஆராய்ந்து முடிவு அறிவித்தது' என்ற தலைப்புடன் செய்தியை பிரசுரித்திருந்தது, '02-03௨012 காலை 11.30 மணி தொடக்கம் பி.ப 6.30 மணிவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையகத்தில் கட்சியின் நாடாளுமன்றக்குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா கூட்டத்தொடரின் போது த.தே.கூ பிரதிநிதிகள் ஜெனீவாவில் பிரசன்னமாகியிருப்பர் என முதலில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டத்தொடர் ஆரம்பிக்க இரு நாட்களுக்கு முன் இந்தக் கூட்டத் தொடரில் பிரசன்னமாவதில்லை என குழு முடிவெடுத்தமையே உண்மை நிலையாகும். 

•    ஆனால் மக்களை எதையும் சொல்லி ஏமாற்றலாம் என்று தலைவர்கள் நினைப்பது அப்பாவி மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும். ஜெனீவாவுக்கு செல்லாமையால் தமிழரசு கட்சியை சார்ந்த சில உறுப்பினர்களால் வெளியிடப்பட்ட ஒன்றுக்கொன்று முரண்பட்ட காரணங்கள் இவை. முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் முறையில் கௌரவமிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 'ஜெனீவாவுக்கு சென்றிருந்தால் த.தே.கூ இன் பதிவு இரத்தாகி இருக்கும்.' எனக் கூறியுள்ளார்.

கூட்டமைப்பு எப்போது பதியப்பட்டது? என்று கேட்க முற்பட்டவர்கள் பலாத்காரமாக மண்டபத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். 'சம்பந்தப்பட்ட 47 நாட்டுத் தூதுவர்களுடனும் எடுத்துக்கூறியதாக,' தெரிவிப்பது உண்மைக்கு புறம்பானதாகும். இதுதான் உண்மையெனில் இதை எல்லோருமே ஒரே காரணமாக சொல்லி தீர்த்திருக்கலாம். அதற்குமாறாக இன்னுமொரு முக்கிய தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கூற்று, 

'அனுமதி கிடைக்காது என்பதால் ஐ.நா நிகழ்வுக்கு செல்லவில்லை,' எனவும், 'இராஜதந்திர ஆலோசனையின்படியே கூட்டமைப்பு ஜெனீவா பயணத்தை தவிர்த்தது. தியாகங்களை மறந்து நாம் ஒருபோதும் செயற்பட மாட்டோம்.' என்றும்  இதே உறுப்பினர் வன்னியிலும் 05-03௨012 இத்திகதியில் வௌ;வேறு தினசரிகளுக்கு கூறியுள்ளார். மேலும் 'ஜெனீவா அமர்வில் கலந்து கொள்ளாவிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேசத் துரோகிகளா? அங்கு எதனையும் சாதிக்க முடியாது'  என இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு ஜெனீவா செல்லாததன் தாற்பரியத்தை மக்கள் விரைவில் உணர்வார்கள் என்றும் மற்றுமொருவர்; 'கூட்டமைப்பின் இராஜதந்திரமே ஜெனீவாவால் கொண்டுவரப்பட்ட பிரேரணை வெற்றியளிக்க காரணம்'  முறையே 06-03௨012 இலும், 20-03௨012 இலும் 27-03௨012 இலும் பல்வேறு தினசரிகளுக்கு தெரிவித்திருந்தனர். 

•    இன்னுமொரு  நாடாளுமன்ற உறுப்பினர் பொதுமக்கள் பிரச்சனை பற்றி ஆராய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த 2011 ஒக்டோபர் மாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேசியதாகவும், 2012 தை மாதம் பேச்சு நடத்துவதற்கே தான் அங்கு மீண்டும் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அம் முயற்சிகளின் பெறுபேறே இந்தத் தீர்மானமென தம்பட்டம் அடித்து தன்னையே தான் உயர்த்திக் கொள்கிறார். இது அமெரிக்க அரசை மட்டம் தட்டி தன்னை உயர்த்துகின்றவொரு செயலாகும். இந்த புளுகை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அமெரிக்க அரசு அறிந்தால் கதை வேறாகிவிடும். இது இவர் கூறும் மூன்றாவது கருத்தாகும்.  

•    இலங்கையில் அமெரிக்க தூதரகத்தின் கூட்டு முயற்சியே அத்தீர்மானமாகும். போராட்டத்தின் வரலாறு தெரியாதவர்களுக்கு சொல்ல வேண்டிய கதை இது. வேலையற்றவர்களே ஆயுதம் தாங்கி போராடியவர்கள் என்ற கூற்றும் இவருடையதே.

•    அந்த உறுப்பினர் ஒருவர் ஒரு ஐயா பல ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் ஜெனீவா மாநாடு தொடங்குவதற்கு முன்னரே சென்று தனித்தனியாக நாட்டு தலைவர்களையும் இராஜதந்திரிகளையும் சந்தித்து கலந்துரையாடியது ஏன் என்பதையும் எதற்காக என்பதையும் எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென கூறியுள்ளார். இது உண்மையெனில் அந்த முழு விபரத்தையும் தந்தால் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தலாம்.அன்றேல் அக் கதையை யாரும் நம்ப மாட்டார்கள். 

•    மொத்தத்தில் இவர்கள் ஒருவருக்கொருவர் சரியான நிலை புரியாது முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு தம்மை தாமே திருப்தியடையச் செய்கின்றனரே அன்றி மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகவே எமக்குத் தோன்றுகிறது.

•    ஒரு சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவர் தாங்கள் ஒருபோதும் புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இறுதி யுத்தத்தின் போது புலிகளும் இராணுவமும் பொது மக்களை சுட்டுக் கொன்றனர் என்றும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் மீது போர்குற்ற விசாரணைகள் நடத்தப்பட்டால் விடுதலைப் புலிகள் மீதும் போர்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென கூறி தனது அறியாமையையோ அன்றி திறமையையோ வெளிப்படுத்தியுள்ளார். 

ஆனால் ஒரு அரசாங்கத்துக்கும் சட்ட விரோதமாக இயங்கிவந்த ஒரு குழுவுக்கும் உள்ள வித்தியாசம் விளங்காது நிதானமற்று பேசுகிறார். விடுதலைப் புலிகளை விசாரிப்பதென்றால் யார் யாரை விசாரிக்க வேண்டுமென்பதை அடையாளம் காட்டினாரா? யாரை திருப்திப்படுத்த இந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இக் கருத்து வெளியிட்டபின் எந்த முகத்துடன் ஜெனீவா செல்வார்?

•    தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகளின் தலைவர்கள் எவரிடமும் கலந்தாலோசிக்காமல் எதிர்பாராதவிதமாக திரு.இரா சம்பந்தனின் கையில் தேசிய கொடியை திணித்த ஒரு கட்சி தலைவரோடு கைகோர்த்து நின்று, கையை உயர்த்தி புதிய எதிர்கட்சி கூட்டணியை உருவாக்கியதை உறுதிப்படுத்தி தனது உள் நோக்கத்தை வெளிப்படுத்தி தான்தோன்றித்தனமாக செயற்படும் இந்த உறுப்பினர் எத்தகைய கட்டுப்பாடுமின்றி செயற்படுவது நல்ல சகுணமல்ல.

இத்தகைய முன் சிந்தனையற்ற செயற்பாடுகளும் கூற்றுக்களும் ஏற்படுத்தும் குற்றம் குறைகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியோ, புளொட் அமைப்போ எத்தனை காலம் பாராமுகமாக இருக்க முடியும். தமிழரசு கட்சியின் பெயரால்; மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி பங்காளியாக இருக்க முடியாது. 
இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையை சரியாக புரியாது பிரச்சினை தீர வேண்டுமென்று செயற்படுவார்களேயானால் இம் மாதம் 14 தொடக்கம் 22 வரை அவசர அவசரமாக கொழும்பில் கூடி நிலைமையை உணர்ந்து நடவடிக்கை எடுக்காது நான்கு வாரங்களின் பின் இவ்வமைப்புக்கள் பற்றி பேசுவோம் என்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை மக்களின் அவல நிலையை உணராது எடுக்கப்பட்ட ஓர் செயலென நான் கருதுகிறேன். 

•    இந்த காலத்தில் ஓரிரு மணித்தியாலத்தை ஒதுக்கி பேசி முடிவெடுத்திருக்கலாம். இதற்கு மறுதினமே தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூடியுள்ளது. இந்த உண்மை என்ன காரணத்திற்காக எமக்கு முதல்நாள் மறைக்கப்பட்டு ஒரு மாதம் தவணை கேட்டகப்பட்டது ஏன்? என்பது இவர்களின் உள்நோக்கத்தை அம்பலமாக்க இந்த ஒரு சம்பவமே உதாரணமாகும்.  

அன்றைய தினமே தமிழரசு கட்சியின் செயற்குழுவை கூட்டி முடிவெடுத்திருக்கலாம். அன்றேல் தலைமை பீடத்தின் முக்கிய மூவர் பிரசன்னமாக இருந்தபோது தற்காலிகமாக அந்த மூவரையும் தமிழரசு கட்சி சார்பில் இணைத்து இம் மாதம் 23ம் திகதிக்கு முன்பே ஒரு முடிவு எடுத்திருக்கலாம். இந்தச் சூழ்நிலையில் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தொடங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகி இன்று வரையும் நடந்தேறிய பேச்சுவார்த்தைகளில் ஒன்றிலாவது எம்முடன் கலந்தாலோசனை நடத்தாத பட்சத்தில் தொடர்ந்து இத்தகைய செயற்பாடுகளில் திட்டமிட்டு ஈடுபடும் தமிழரசு கட்சியினருடன் இணைந்து செயற்பட முடியுமா என்று மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். 

60 ஆண்டுகால அரசியலில் பொய் புரட்டு இன்றி தமிழினத்தின் நன்மையையே குறிக்கோளாக கொண்டு அரசியல் செய்து வருபவன் நான். இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களை மனச்சாட்சிக்கு புறம்பான நடவடிக்கைகள் மூலம் எனது சேவையை மக்களுக்கு வழங்க முடியாது பல்வேறு சக்திகளை பாவித்து என்னை வீழ்த்தியவர்கள் தொடர்ந்தும் தம் செயற்பாடுகளை நிறுத்தாமை வேதனைக்குரிய விடயமாகும்.

எத்தகைய இடைஞ்சல்களை இவர்கள் கொடுத்தாலும் தமிழ் மக்களின் நன்மைகருதி இவர்கள் எடுக்கின்ற நியாயபூர்வமான போராட்டம் எனக் கருதும்பட்சத்தில் பூரண ஒத்துழைப்பு இவர்களுக்கு கிடைக்கும் என்பதை இறுதியாக கூற விரும்புகின்றேன்' என்று கூறியுள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59522-2013-02-24-17-08-08.html

 

 60 ஆண்டுகால அரசியலில் பொய் புரட்டு இன்றி தமிழினத்தின் நன்மையையே குறிக்கோளாக கொண்டு அரசியல் செய்து வருபவன் நான். இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களை மனச்சாட்சிக்கு புறம்பான நடவடிக்கைகள் மூலம் எனது சேவையை மக்களுக்கு வழங்க முடியாது பல்வேறு சக்திகளை பாவித்து என்னை வீழ்த்தியவர்கள் தொடர்ந்தும் தம் செயற்பாடுகளை நிறுத்தாமை வேதனைக்குரிய விடயமாகும்.

 

 

எத்தகைய இடைஞ்சல்களை இவர்கள் கொடுத்தாலும் தமிழ் மக்களின் நன்மைகருதி இவர்கள் எடுக்கின்ற நியாயபூர்வமான போராட்டம் எனக் கருதும்பட்சத்தில் பூரண ஒத்துழைப்பு இவர்களுக்கு கிடைக்கும் என்பதை இறுதியாக கூற விரும்புகின்றேன்' என்று கூறியுள்ளார்.

 

 

 

தமிழர்கள் செய்த பல முன்னைய நியாயமான போராட்டங்களுக்கு நீங்கள் உண்மையான முழுமையான ஆதரவை தந்து இருந்தீர்களானால் தமிழர் தலைவிதியே வேறு விதமாக மாறி இருக்கலாம்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.