Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசியல் மற்றும் மனித உரிமை நிலவரம் குறித்து மேற்குலக இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க ரணில் முடிவு!

Featured Replies

இலங்கை அரசியல் மற்றும் மனித உரிமை நிலவரம் குறித்து

மேற்குலக இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க ரணில் முடிவு!

 

நாட்டின்

தற்போதைய அரசியல் மற்றும் மனித உரிமை நிலைவரங்கள் குறித்து இலங்கையிலுள்ள

வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விரிவான விளக்கங்களை அளிப்பதற்கு எதிர்க்கட்சித்

தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க

தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக

கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்களை இன்னும் சில தினங்களில் ரணில்

விக்கிரமசிங்க சந்திப்பாரெனத் தெரியவருகிறது.

ஜெனிவா

கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள தறுவாயில் எதிர்க்கட்சித் தலைவர், மேற்குலக நாடுகளின்

இராஜதந்திரிகளைச் சந்திக்கவுள்ளமை குறித்து அரச வட்டாரங்கள் அதிருப்தி

அடைந்துள்ளன.

இந்தச்

சந்திப்பின்போது, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல

மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிளுடன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முக்கிய பேச்சுக்களை

நடத்தி, இலங்கையின்

சமகால நிலைவரம் குறித்து அவர்களுக்கு விரிவான விளக்கமளிப்பார் என்றும்

தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இம்மாத நடுப்பகுப்பகுதியில்

இடம்பெற்ற யாழ். விஜயம் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது வெளிநாட்டுத்

தூதுவர்களுக்கு அவர் விளக்கமளிக்கவுள்ளார். யாழ். தெல்லிப்பழையில் இடம்பெற்ற

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏற்பட்ட குழப்பம், அதன்போது பொலிஸாரும்,

இராணுவத்தினரும் செயற்பட்ட விதம், இதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிலை தொடர்பில் விரிவான

விளக்கமொன்றையும் அந்த இராஜதந்திரிக்களுக்கு ரணில் அளிக்கவுள்ளார் எனவும்

தெரிவிக்கப்படுகிறது.

தமது

வாழ்வுரிமையை வலியுறுத்தி வலிகாமம் வடக்கு மக்கள் நடத்திய தெல்லிப்பழை உண்ணாவிரதப்

போராட்டத்தைக் குழப்பியடிக்க இராணுவத்தினர் செயற்பட்ட விதம் குறித்து

சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்ல உள்ளதாக முன்னதாகவே எதிர்க்கட்சித் தலைவர்

ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.

மேலும், ஜெனிவா மாநாடு குறித்து

எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை இராஜதந்திரிகளுக்குத்

தெளிவுபடுத்துவதுடன், ஜெனிவா

கூட்டத்தொடர் குறித்த மேற்குலக நாடுகளின் நிலைப்பாடு என்ன என்பதையும்

கேட்டறியவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

நாட்டில்

அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்கள், நீதித்துறை சுயாதீனத்தில்

இடம்பெற்று வருகின்ற அரசியல் தலையீடுகள் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு

விவகாரத்தில் அரசு தொடர்ச்சியான காலங்கடத்தும் நடவடிக்கைகள் என்பவை குறித்தும்

ரணில் இதன்போது தெளிவுபடுத்தவுள்ளார்.

இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழு

அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 50 பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பது குறித்த யோசனைத்

திட்டமொன்றை அரசிடம் சமர்ப்பிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆராய்ந்து வருகின்ற

நிலையில், இதுவிடயம்

தொடர்பிலும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு ரணில் விளக்கமளிப்பார் என்றும்

கூறப்படுகிறது.

ஜெனிவா

மாநாட்டில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட

மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்படும் எனத் தெரிவித்துள்ளநிலையில், குறித்த நாடுகளின்

இராஜதந்திரிகளுடன் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான

முக்கிய சந்திப்புக்களை நடத்தவுள்ளமை மஹிந்த அரசுக்குப் பெரும் தலைவலியைக்

கொடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=9b273ec1-f0ae-4126-9767-c5024154d810

2/25/2013 5:23:18 PM

ஆட்சியை கைப்பற்றும் ஆசை  இருந்தாலும் நாட்டை காப்பாற்றுவதிலும் தமிழரை அழிப்பதிலும் இவர் வல்லவரே !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.