Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா முன்றலில் அனைத்து இனமக்களை நெகிழ வைத்த கண் காட்சி

Featured Replies

                         Genewa-exi-260213A-news-321-150.jpg

                                 

கருணை உள்ளம் படைத்த கஜனின் முயற்சியால்,1956இல் இருந்து இன்றுவரை

தொடர்கின்ற தமிழின அழிப்பின் ஆதாரங்களை ,புகைப்பட வடிவிலும் கலர்ப்பட

வடிவிலும், யெனிவா முன்றலில் 25-02-13 திங்கள் கிழமை தொடக்கம் மார்ச் 4ம்

திகதி திங்கள் கிழமை வரைக்கும், அனைத்து இனமக்களின் பார்வைக்கு

வைக்கப்படுகின்றன. அத்துடன் கஜன் அவர்கள் தனது அடையாள உண்ணா விரதத்தையும்

இன்று திங்கள் கிழமை தொடக்கம் மார்ச் 4ம் திகதி வரை நீடிக்கவுள்ளார்.

 

இந்த நிகழ்விற்கான சகல ஒழுங்குகளையும், தமிழர் ஒருங்கிணைப்புக்

குழுவினரும்,இழையோர் அமைப்பினரும் செய்து வருகின்றனர்.கஜன் அவர்களுடன்

சூரிச் நகரில் வாழும்,மனித நேய செயற்பாட்டாளர் திரு.சிவா (64வயது)அவர்களும்

உறுதுணையாக தொடர்ந்து நிற்கின்றார்.

இப்படங்கள்,இலங்கையில் தமிழ் மகக்ளின் உண்மை நிலையினை,அணைத்து இன

மக்களுக்கும் விளங்கக்கூடிய வகையில்,இரவு பகலாக விழித்திருந்து,தனது விடா

முயற்சியால் செயல்ப்படுத்தியுள்ளார். இந்த இனப்படுகொலைக் காட்சிகளை,அனைத்து

இன மக்களும் பார்வையிட்டனர்.அவர்களின் பார்வையில்,இலங்கை அரசின் கொடூர

மனப்பான்மையை புரிந்து கொண்டார்கள் என்பதனைப் புரியக்கூடியதாக இருந்தது.

பல மக்கள் தங்களது வேதனைகளை,கஜனுடன் பகிர்ந்துகொண்டார்கள். நிச்சயம்

உங்களுக்கொரு நல்ல தீர்வு கிடைக்க,தாங்களும் கடவுளிடம் பிரார்த்திப்பதாகக்

கூறினார்கள்.கயன் அவர்கள்,எங்கள் மக்களின் வருகையினையும் தொடர்ந்து எதிர்

பார்க்கின்றார்.

Genewa-exi-260213A-news-321-%283%29.jpg

 

Genewa-exi-260213A-news-448-%281%29.jpg

 

Genewa-exi-260213A-news-448-%282%29.jpg

http://www.seithy.com/listAllNews.php?newsID=76909&category=TamilNews&language=tamil

Edited by மல்லையூரான்

இந்த நிகழ்விற்கான சகல ஒழுங்குகளையும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரும்,இழையோர் அமைப்பினரும் செய்து வருகின்றனர்.கஜன் அவர்களுடன் சூரிச் நகரில் வாழும்,மனித நேய செயற்பாட்டாளர் திரு.சிவா (64வயது)அவர்களும்
உறுதுணையாக தொடர்ந்து நிற்கின்றார.

 

 

மனமார்ந்த   நன்றிகள் !!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்ச்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்...நன்றிகள் பல உறவுகளே

...இதை விட அதிக மக்கள் சனி ஞாயிறு அன்று போவினம் என்று எதிர் பாப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்.எங்களால் முடியாததை நீங்கள் நெய்கிறீர்கள்.

226425_488980557848496_528754441_n.jpg

ஜெனிவா, ஐநா முன்றலில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இளைஞனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா தலைமையிலான குழு சந்தித்துள்ளது.

ஜெனிவா அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ் இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில் இடம்பெறும் கவனயீர்ப்பு நிகழ்வில் இலங்கையிலிருந்து வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா.உக்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேத்திரன, சீ.யோகேஸ்வரன், சி.சிறிதரன், ஆகியோர் இலங்கையின் இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பை பிரதிபலிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்வையிட்டனர்.

இச் செயற்பாட்டை முன்னெடுத்து வரும் தமிழ் இன உணர்வாளன் திரு கஜன் அவர்களுடன் கருத்துப் பரிமாறலிலும் ஈடுபட்டனர்.

 

 

அவ் உணர்வாளன், யார் தமிழன் ஆண்டாலும் எம் உயிரை தியாகம் செய்ய நாம் தயார் என இந் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இளைஞனிடம், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மண்ணில் இருந்து நாம் மக்களுடன் உள்ளோம். உங்கள் பலம் என்றும் எமக்கு தேவை. சர்வதேசம் எம்மைச் சூழ்ந்துள்ளது.

இன்று சில செய்திகள் திரிபுபட்டு வருவதனால் தான் எம்மிடம் சில வேறுபாடு. இதனால் யாரும் குழம்பவும் இல்லை எம்மிடம் குழப்பமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.