Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளியவளையில் தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க தீவிர முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளியவளையில் தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க தீவிர முயற்சி

28 பெப்ரவரி 2013
 

mullaitivu1_CI.jpg

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமது பூர்வீக கிராமங்களான, கொக்குத் தொடுவாய், நாயாறு பகுதிகள் சிங்களக் குடும்பங்களால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டு பெயர்களும் மாற்றப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை பகுதியில் தமது சொந்தக் கிராமத்தில் வாழ்ந்து வரும் தமிழ்க் குடும்பங்களை பலாத்காரமாக வெளியேற்றிவிட்டு ஆக்கிரமிக்க அமைச்சரொருவரின் பின்னணியில் அவரின் ஆதரவாளர்கள் புல்டோசர்கள் சகிதம் வந்து மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கியத்துவமிக்க பல பகுதிகளில் வேறு இனத்தவர்களை குடியேற்றும் முயற்சிகள் மிக மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதன் ஒரு கட்டமாகவே தமது பூர்வீக இடங்களில் வாழும் தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றி விட்டு வேறு இனத்தவர்களை குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கும் இம் மக்கள் மேலும் கூறியதாவது;


கொக்குத் தொடுவாய், நாயாறு பகுதிகளில் நாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்தோம். 1983 ஆம் ஆண்டு டிசம்பர்  23 ஆம் திகதி அங்கிருந்து இடம்பெயர்ந்தோம். பல வருடகாலமாக அப்பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாக இருந்த நிலையில் இப்போது நாம் மீள்குடியேறச் சென்றால் எமது காணிகளில் வேறு இனத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் கிராமங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.


கொக்குத் தொடுவாயில் முன்னர் ஆரம்ப காலத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த 28 சிங்களக் குடும்பங்களே இருந்தன. தற்போது 225 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.


கொக்குத் தொடுவாயில் தமிழ் மக்களுக்கு சொந்தமான முந்திரியம்குளம் என்றழைக்கப்படும் உத்திராயன்குளம், ஆமையன் குளம், சின்னக்குளம், கூடமாடிக்கண்டல், நாயடிச்சமுறிப்பு, எரிஞ்ச காடு போன்ற பல பகுதிகளும் தமிழர்களுக்கு சொந்தமான வயல்நிலங்களும் வெலி ஓயா திட்டத்தின் கீழ் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டு சிங்கபுரம், ஜனகபுரம், கிரிகாவௌ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளன. எங்களுடைய இடத்தில் எம்மை காலடி வைக்கக்கூட அனுமதிக்கின்றார்கள் இல்லை.


இப்போது எம்மை வெற்றுக் காணிகளில் விட்டுள்ளனர். இவை வெறும் மணல், காணிகள் எவ்வித பயிர்ச் செய்கைகளையும் செய்ய முடியாது. எமது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் எம்மிடம் உள்ளன. அந்த ஆதாரத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இது தொடர்பில் அரச அதிபர் உட்பட பலதரப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் எவருமே கவனத்தில் எடுக்கவில்லை. எனவே பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இதேபோன்று முள்ளியவளை மத்தியில் தமது பூர்வீக இடங்களில் வாழ்ந்து வரும் 60 க்கு மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்ற வட பகுதி அமைச்சர் ஒருவரின் பின்னணியில் அவரின் ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனர். புல்டோசர்களைக் கொண்டு வந்து எம்மை இங்கிருந்து வெளியேறுமாறு பலவந்தப்படுத்துகின்றனர்.


வவுனியா  நெடுங்கேணி இணைப்பு வீதியில் உள்ள கரட்டக்காடு பகுதியிலும் 1425 சகோதர இனக் குடும்பங்களை குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இவை தொடர்பில் எமக்கு நீதி கிடைக்காது விட்டால் நாம் போராடுவோம். நாம் இனவாதிகளோ, மத வாதிகளோ அல்ல.


முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகள் உள்ளன. அதில் அவர்கள் குடியேற்றப்படுவதை வரவேற்கின்றோம். அதனை யாராவது தடுத்தால் அதனை தட்டிக் கேட்கவும் நாம் தயாராகவுள்ளோம். ஆனால் அதற்காக எமது பூர்வீக இடங்களை பலாத்காரமாக பறித்து வேறு இனங்களை குடியேற்ற அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்தனர்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89159/language/ta-IN/article.aspx

 

இப்படியான செய்திகளை வாசிக்கும் நாம், புலம்பெயர் தமிழர்கள், இதை தடுக்க என்ன செய்யலாம் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.