Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடகமாடுகிறார் கருணாநிதி... நாம் யாருடன் கூட்டணி வைகோ சிறப்பு பேட்டி.(காணொளி)

Featured Replies

நாடகமாடுகிறார் கருணாநிதி...  நாம் யாருடன் கூட்டணி வைகோ சிறப்பு பேட்டி.(காணொளி)

புறநகருக்கே

என்று இருக்கும் அனலும் கனலுமாக வெயில் தகிக்க, தென்னந்தோப்பில் துண்டை

விரித்து மல்லாந்து படுத்திருந்தார் வைகோ. அவருக்கு ரத்த அழுத்தம்

பரிசோதித்த டாக்டர், 'ஓ.கே’ சொல்லிப் புன்னகைக்க... ''இந்த வண்டி ஓட

வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கே!'' என்று தெம்பாகச் சிரிக்கிறார்

வைகோ.

 ''நடை பயண அனுபவம் எப்படி இருக்கிறது... மக்களின் மனவோட்டத்தை உணர முடிகிறதா?''

''அரிசி

தொடங்கி எல்லாமே இலவசம். அதனால், கிராம மக்கள் சொற்ப வருமானத்தையும்

குடித்து அழித்துவிட்டு, சோம்பிக்கிடக்கிறார்கள். இலவசத்துக்கும்

போதைக்கும் பழகிய மக்கள் வேலைக்குப் போகாததால், வட மாநிலத் தொழிலாளர்கள்

இங்கு குவிந்துவிட்டார்கள். இது தமிழகத்தில் மோசமான விளைவுகளையே

ஏற்படுத்தும். உலகிலேயே உழைப்புக்குப் பெயர்போன தமிழர்களை மதுவும் இலவசமும்

முடக்கிப்போட்டுவிட்டது. அதனால்தான் இந்த நடை பயணம். நான் நடை பயணத்தில்

எங்கேயும் அரசியல் பேசவில்லை; என் கட்சிக்கு ஆதரவும் கேட்கவில்லை.

வேதனையிலும் சோதனையிலும் வெந்து நொந்துகிடக்கும் தமிழர்களின் நிலையை

அவர்களுக்கு உணர்த்தவே இந்தப் பயணம்!''

 

    

        

                                

    

''நடை பயணத்தில் திடீரென்று முதல்வர் ஜெயலலிதாவுடனான உங்கள் சந்திப்பின் பின்னணி என்ன?''

''முதல்வர்

ஜெயலலிதா என்னைத் திட்டமிட்டுச் சந்திக்கவில்லை. சாலையின் எதிர்ப்புறம்

திடீரென முதல்வரின் கார் வருகிறது. நான் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே

முதல்வரின் கார் நிற்கிறது. உடனடியாக அவர் இறங்கிவிட்டார். அவர் மனதில்

முன்னரே என்னைச் சந்திக்கும் திட்டம் இருந்தால், காரில் இருந்து

இறங்குவதற்கான படிக்கட்டைக் கொண்டுவரச் சொல்லி இருப்பார். ஆனால், அவர்

அப்படியே காரைவிட்டு இறங்கி, கொளுத்தும் வெயிலில் குடை கூட இல்லாமல்

என்னுடன் உரையாடிக்கொண்டு இருந்தார்.

நடை பயணத்தின் நோக்கம்

என்னவென்று முதல்வருக்கும் தெரியும். ஆனால், அரசியல் நாகரிகம் கருதி, நான்

சொல்லத் தயங்குவேனோ என்று அவரே எனது கோரிக்கையைக் கேட்டார். முழு

மதுவிலக்கு வேண்டும் என்றேன். அதை அவரும் கேட்டுக்கொண்டார். என்னைப்

பொறுத்த வரை இது ஓர் அரசியல் நாகரிகம். அவ்வளவு தான். இதில் உள்நோக்கம்

எதுவும் கிடையாது!''

''ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கை முதல்வர் நடைமுறைப்படுத்துவார் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?''

''நிறையவே!

மதுவால் பெண்கள் படும் துன்பங்களை அவர் அறிவார். பல கோடிப் பெண்கள்

மதுவிலக்கு வராதா என்று ஏங்குகிறார்கள். அந்த ஏக்கம் ஒரு பெண்ணான அவரது

மனதிலும் வெகு விரைவில் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!''

''

'எனது பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம். என்னைச் சந்திக்க யாரும்

வர வேண்டாம்’ என்றெல்லாம் சொல்லி இருக்கிறார் முதல்வர். காரை விட்டு

இறங்கி வந்து உங்களைச் சந்திக்கிறார். ஜெயலலிதாவின் அணுகுமுறையில் ஏதேனும்

மாற்றம் தெரிகிறதா?''

''அவர் ஈழப் பிரச்னைக்காகக் குரல் கொடுக்கத்

தொடங்கியது முதலே அவரது மனநிலை மாறித்தான் இருக்கிறது. இலங்கை அரசு மீது

பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்கிற சட்டமன்றத் தீர்மானம், மூவர்

தூக்குத் தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு, காவிரி நதி நீர், முல்லைப்

பெரியாறு பிரச்னைகளில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம், ஆசிய

விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னது என

உண்மையாகப் போராடுகிறார் முதல்வர். கருணாநிதியின் நாடகங்களை ஒப்பிடுகையில்,

முதல்வர் ஜெயலலிதாவை நான் பாராட்டுகிறேன். ஆனால், அதே சமயம் அண்ணா

நூற்றாண்டு நூலகத்தை அகற்ற முற்பட்டபோதும், பஸ் கட்டணம், பால் கட்டணம்

உயர்வின்போதும் அவரைக் கண்டிக் கத் தவறவில்லை!''  

''தி.மு.க-வில் தொடர்ந்து நடந்துவரும் அரசியல் கொலைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''தனது

தந்தை இறந்தபோது அவரது ஈமச் சடங்குக்குக்கூடப் போகாமல் தலைவருடன்

சுற்றுப்பயணத்தில் இருந்தவர் தா.கிருட்டிணன். அப்படிப்பட்ட தியாகி

நடுரோட்டில் கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டபோதே, அந்தக்

கட்சியில் பேரறிஞர் அண்ணா ஊட்டி வளர்த்த பாசமும் கொள்கைகளும் சவக் குழியில்

புதைக்கப்பட்டுவிட்டன. நியாயவான்கள் என்றால், அப்பீலுக்குப் போயிருக்க

வேண்டியதுதானே... இப்போது என்ன சொல்ல...''

''பாலச்சந்திரன்...''

(கேள்வியை

முடிக்கும் முன்பே...) ''ஐயோ... பச்சைப் பாலகன் அவன். எதையோ வாயில்

மென்றுகொண்டு வெறித்துப் பார்க்கும் அவன் கண்களைக் கண்டீர்களா? அதைக்

கண்டால், எமனுக்குக்கூடப் பாசக்கயிற்றை வீச மனம் வராதே. அந்தப் பாலகனின்

மார்பில் துப்பாக்கிக் குண்டுகள் தந்த துன்பத்தைவிட, அவன் கண் முன்பாக

ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் எவ்வளவு பெரிய

ரணத்தை அளித்திருக்கும். இனப்படுகொலையை நிரூபிக்க இதைவிட வேறு சாட்சி என்ன

வேண்டும். இப்போதைய உடனடித் தேவை, சுதந்திரமான, பன்னாட்டு விசாரணை!''

''19 ஆண்டுகளாகக் கட்சியை நடத்தி வருவதற்குரிய பலன் இல்லை என்று நினைக்கும்போது விரக்தி மனநிலை உண்டாகிறதா?''

''ராட்சத

பலம்கொண்ட கட்சிகளுக்கு இடையிலும் எத்தனையோ துன்ப துயரங்களுக்கு இடையிலும்

லட்சக் கணக்கான தொண்டர்கள் என்னுடன் இருப் பதே ஒரு சாதனைதான். மக்களின்

அவப் பெயருக்கு ஆளாகாமல் நன்மதிப்பை பெற்று வருகிறேன். 'வெற்றியை

ருசிக்கவில்லை’ என்று எங்களைப் பார்த்துச் சொல்லலாமே தவிர, தவறானவர்கள்

என்று சுண்டு விரலையேனும் நீட்ட முடியுமா? நாங்கள் குடும்பத்துக்காகக்

கட்சி நடத்தவில்லை. நாங்கள் போராளிகள். போராளிகளுக்கு விரக்தியும்

கிடையாது; தோல்வியும் கிடையாது.

முல்லைப் பெரியாறுக்காக 10 லட்சம்

மக்களைத் திரட்டினோம். மிரண்டது கேரளா. சுற்றுச்சூழலை நாசம் செய்த

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி

வருகிறேன். பெல்ஜியத்தில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில்

முதல்முறையாக ஈழப் பிரச்னைக்குப் பொது வாக்கெடுப்புகுறித்துப் பேசினேன்.

இவைதான் எங்கள் சாதனைகள். பதவியில் அமர்வதும்... பகட்டு வேஷங்கள்

போடுவதும்தான் சாதனைகள் என்றால், அது இந்த வைகோவுக்கு ஒருபோதும் தேவை

இல்லை!''

''ஆனால், உங்கள்

நிர்வாகிகள் கட்சியைவிட்டு வரிசையாக வெளியேறுகிறார்களே? நீங்கள் மட்டும்

உற்சாகமாக இருந்தால் போதுமா... தொண்டர்கள் சோர்ந்துபோக மாட்டார்களா?''

''இல்லை...

இல்லை... இல்லை. எங்களைக் கண்டால், சோர்வுக்கே சோர்வு வந்துவிடும்.

நாங்கள் சாஞ்சிக்கே சென்று ராஜபக்ஷேவையும் மன்மோகன் சிங்கையும் அசைத்துப்

பார்த்தவர்கள். சொந்தக் காசைச் செலவு செய்து எங்கள் கட்சியின் போர்

வீரர்கள் டெல்லியை மூன்று முறை முற்றுகையிட்டார்களே... தமிழகத்தில் எந்தக்

கட்சிக்கு இருக்கிறது இந்தத் துணிச்சலும் அர்ப்பணிப்பும். இதில் இருந்து

தெரியவில்லையா... ம.தி.மு.க. முன்பைவிட வலுவாக இருக்கிறது என்று. கட்சி

நிர்வாகிகள் ஓரிருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறி இருக்கலாம்.

அப்படிச் சென்றவர்களையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை.''

''ஆனால், ஓட்டு அரசியலே பிரதானமாக இருக்கும் தமிழக அரசியல் களத்தில் உங்கள் வியூகம் எடுபடுமா?''

''எகிப்தில்

வெடிக்கவில்லையா மல்லிகைப் புரட்சி? அதை யாராலும் கணிக்க முடியவில்லையே!

தானாகத்தானே மக்கள் அங்கு வெகுண்டு எழுந்தார்கள். அப்படி ஓர் எழுச்சி

தமிழகத்திலும் வராமலா போகும். அப்போது அவர்களுக்காக ஒரு மாற்று அரசியல்

இயக்கமாக ம.தி.மு.க. இருக்கும்.''

''மாற்று

அரசியல் இயக்கமாக இருப்போம் என்கிறீர்கள்... ஆனால், கடந்த காலங்களில்

தி.மு.க.,அ.தி.மு.க. என்று மாறி மாறித்தானே கூட்டணி வைத்திருக்கிறீர்கள்?''

''1996

மற்றும் 2001-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் அவர்களுடன் நாங்கள்

கூட்டணி வைக்கவில்லை. அதன் பின்பு நடந்த தேர்தலில் தொண்டர்களின் அன்புக்கு

அடிபணிந்து அ.தி.மு.க-வுடன் உடன்பாடுகொண்டோம். அதன்பிறகும் நாங்கள் எங்கள்

நிலைப்பாட்டில் மாறுபடவில்லை. ஆனால், சுயமரியாதை, தன்மானம் இவை எல்லாம்

எங்கள் உயிருக்கு நிகர். அதனால் நாங்களாக விலகினோம்!''  

''சரி... வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான உங்கள் வியூகம் என்ன?''

''ஏன்

சுற்றி வளைத்து? யாருடன் கூட்டணி என்று வெளிப்படையாகக் கேளுங்களேன். அதைப்

பற்றி இப்போது சொல்ல மாட்டேன். ஆனால், ஒன்று மட்டும் உறுதி... எங்கள்

தன்மானத்தை, சுயமரியாதையை, மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை

யாரிடமும் அடகுவைக்க மாட்டோம். அதே நேரத்தில், இந்த இயக்கத்துக்காக 19

ஆண்டுகாலம் சுகங்களை இழந்து துன்பங் களுடன் உழன்றுவரும் கட்சியின்

தொண்டர்கள், அவர்கள் குடும்பத்தினரின் மன ஓட்டம், மகிழ்ச்சி இவற்றை எல்லாம்

கணக்கில்கொண்டுதான் முடிவுகள் எடுப்பேன்!''

''சட்டென்று

கோபப்படுபவர்; பொசுக்கென்று அழுதுவிடுபவர்; எளிதில் உணர்ச்சிவசப்படுபவரால்

அரசியல் தளத்தில் வெற்றிகரமாக இயங்க முடியாது என்கிற இமேஜ் உங்கள் மீது

இருப்பது தெரியுமா?''

''என் மீது கசப்பு

கொண்டவர்கள் 15 ஆண்டுகளாகச் சொல்லும் விமர்சனம் அது. அவர்களுக்கு என் மீது

குற்றம் சொல்ல வேறு காரணம் கிடைக்கவில்லை. மனிதநேயம் உள்ளவன், பிறர்

துன்பம் கண்டு விழி நீர் சிந்துவான். என் கண்களில் வழியும் கண்ணீரும்

அப்படியே. என் கண்கள் யாரைக் கண்டு பயந்தும் கண்ணீர் சிந்தாது.

அக்கிரமத்துக்கும் அநீதிக்கும் எதிராக மட்டுமே என் கண்கள் சிவக்கும்.

அநாவசியத்துக்கு அல்ல. நான் நடிகன் அல்ல... உண்மையானவன். உண்மையானவனால்

எந்தத் தளத்திலும் வெற்றிகரமாக இயங்க முடியும்.

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13001:vaiko-interviwe&catid=12:politics&Itemid=105

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சின்னவன்......

இவரை பார்க்கும்போதெல்லாம் தமிழனை நம்பாதே . உண்மையில் தமிழன் மானமுள்ளவனோ வீரனோ அல்லது நல்லவனோ கிடையாது . நல்லவற்றை தேர்ந்து எடுப்பவனும் கிடையாது . உண்மையான தலைவர்களை மதிக்காதவன் போலியை கண்டு ஏமாறுபவன் கடைந்தெடுத்த சுயநல வாதி தமிழன் என ஏதோ ஒன்று செருப்பை எடுத்து என் நெஞ்சில் தொடர்ந்து அடிப்பது போல உணர்வு . தவறாக கூட இருக்கலாம். மன்னிக்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.