Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ராணுவத்துக்கு உதவும் இந்தியா

Featured Replies

இலங்கை ராணுவத்துக்கு உதவும் இந்தியா

- புலிகளின் கப்பல்படை தளபதி சூசை சிறப்புப் பேட்டி!

அமைதி பேச்சு வார்த்தையை நடத்துவதில் அக்கறை காட்டாமல் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டவரான இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, புலிகளுடன் நேரடி பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்திருக்கிறார்.

அதிபரின் இந்த திடீர் மனமாற்றத்திற்குக் காரணம்... பேசாலை பகுதியில் அண்மையில் கடற்புலிகள் நடத்திய தாக்குதல்கள்தான். இதில்தான் மிரண்டது இலங்கை. இந்த அசாதாரண சூழ்நிலையில் புலிகளின் கடற்படை தளபதி சூசையின் பேட்டிக்காக நக்கீரன் பல கேள்விகளை இ-மெயிலில் அனுப்பி வைத்தது. ஒருவார கால இடைவெளிக்குப் பிறகு சூசையிடமிருந்து பதில்கள் சீறி வந்தன.

நக்கீரன் : ஒரு நாட்டிற்கான கடற்படை வலிமை என்பது உங்களிடம் இருக்கின்றதா?

கேணல் சூசை : "நாங்கள் வலிமை உள்ளவர்கள்" என்று நாங்களாகவே சொல்லக்கூடாது. எங்களுடைய வலிமையை மற்றவர்கள்தான் அளவீடு செய்ய வேண்டும். அளவீடு செய்து கொண்டிருக்கிறபடியால்தான் எங்களின் கடற்படைகளைக் கண்டு எல்லோருக்கும் அச்சமாக இருக்கிறது. சிறிலங்காவின் கடற்படையில் அரைவாசிக்கு மேல் நாம் தகர்த்தெறிந்திருக்கிறோம்.

ஜாஓப்னாவை (யாழ்ப்பாணம்) மீட்க நாங்கள் அதனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது, ஜாஓப்னாவில் இருக்கின்ற 40 அயிரம் துருப்புகளையும் பாதுகாக்க வேண்டுமே என்ற பயம் சிறிலங்கா அரசுக்கு வந்தது. அவர்களை அப்புறப்படுத்த அவர்களால் இயலவில்லை. உடனே சிறிலங்கா அரசு இந்தியப்படையிடம் உதவிக்குப் போய்நின்றது.

"தேவையான கப்பல்களைக் கொண்டுவந்து எங்கள் கடற்படையைக் காப்பாற்றுங்கள்" என்று இந்தியாவிடம் சிறிலங்கா அரசு கெஞ்சியது. அப்போது சிறிலங்காவின் கடற்படையிடம் இருந்தது 200 கடற்கலங்கள். அனால் 12ற்கும் குறைவான கடற்படை படகுகள் மட்டுமே வைத்துக்கொண்டுதான் நாங்கள் அவர்களுக்கு ஒரு நடுக்கத்தையே எற்படுத்தினோம். எங்களுடைய 12 கடற்படைப் படகுகளின் பாய்ச்சல்தான் இந்திய கடற்படையிடம் உதவி கேட்கும் அளவிற்குப் போனது. அன்று 12 கடற்படை படகுகள்தான். இன்று நிறைய வளர்ச்சியடைந்திருக்கிறோம்.

நக்கீரன் : கடலில் அதிக்கம் செலுத்தி நடுக்கத்தை எற்படுத்துவது, மக்களை பயமுறுத்துவதாக இருக்கிறதே? ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்திற்கு இது உகந்ததுதானா?

கேணல் சூசை : எங்களுடைய நிலப்பரப்பை மீட்பதற்கு எங்களுடைய கடலில் எங்களுடைய ஆதிக்கம் மிக முக்கியமான ஒன்று. எங்களுடைய போராட்டத்திற்கான பொருளாதாரம் என்பது எமது மக்கள் தான். எனெனில், எந்த நாடுகளின் பின்புலமும் எங்களுக்கில்லை. எங்களுடைய மக்கள்தான் எங்களுக்கு பின்புலம். அகவே எமது விடுதலைப்போராட்ட பின்புலத்தில் இருக்கின்ற எமது மக்களின் மிகப்பெரிய பொருளாதாரம் மீன்பிடி தொழில். அனால், இந்த மீன்பிடி தொழிலை முற்றுமுழுதாக இடைநிறுத்தி வைத்துள்ளது சிங்களம். ஒரு சுதந்திரமான மீன்பிடித் தொழிலுக்கு வழிகோலக்கூடிய நடவடிக்கைகளை நாங்கள் எடுப்பதற்காகத்தான் கடலில் எமது நடவடிக்கைகள் இருக்கிறது. தவிர, யாரையும் அச்சத்திற்குள்ளாக வைக்க வேண்டும் என்பதாக எங்கள் நடவடிக்கைகளோ அதிக்கமோ இருப்பதில்லை.

நக்கீரன் : சமாதான காலத்தில் தமிழீழ மக்கள் படையை உருவாக்கி மக்களுக்கு ராணுவ பயிற்சி அளிப்பது சரிதானா? ஆயுதப் பயிற்சி எடுத்துக் கொள்கிற மக்கள் தாக்குதலை நடத்தினால் சமாதானம் முறிந்து போகாதா?

கேணல் சூசை : மட்டக்களப்பு நகர் பகுதிக்குள் கருணா குழு நுழைந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டு போகிறது. இதனை ஆதாரமாக "யுனிசெப்"புக்கு திரட்டிக் கொடுத்தோம். அனால் நடவடிக்கை இல்லை. அவர்களுக்கு ஆசீர்வாதத்தை கொடுப்பது யார்? சிறிலங்கா அரசபடைகள் தான். இவர்களின் ஆசீர்வாதத்தால்தான் மக்கள் மீது கிளைமோர் தாக்குதலை நடத்துகிறார்கள். மக்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டதா? இல்லையே? மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் மக்கள் மீது நடத்தப்பட்டு வருகிற தாக்குதல்களை சர்வதேச நாடுகளும் கண்டிக்காத நிலையில், தங்களைத் தற்காத்துக் கொள்ள தங்களுக்கு ராணுவ பயிற்சி அவசியம் என்பதை உணர்ந்து அந்தப் பயிற்சியை விருப்பத்துடன் எடுத்துக்கொள்கிறார்கள்.

நக்கீரன் : வவுனியா அருகே பேருந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலுக்கு புலிகள்தான் காரணம் என இலங்கை அரசு குற்றம்சாட்டுகிறது. நீங்களோ மறுக்கிறீர்கள். அந்தச் சம்பவத்திற்கு யார்தான் காரணம்?

கேணல் சூசை : மட்டக்களப்பில், ஜாஓப்னாவில், திரிகோணமலையில் என பல இடங்களில் எமது மக்களைக் கொல்கிறார்கள். புலிகளுக்கு எதிரான துரோக கும்பல்களை வைத்து மக்களை சொல்கிறார்கள் ராணுவத்தினர். அவர்களின் திட்டமிட்ட சதிகளால்தான் இப்படிப்பட்ட கிளைமோர் தாக்குதல்கள் நடக்கிறது. கொல்லப்படுகிற மக்களின் ஆத்மா அமைதிகொள்ள பழிவாங்கும் நடவடிக்கையாக நாங்கள் செய்திருந்தால் எத்தனையோ கிளைமோர் தாக்குதலை நடத்தியிருப்போம். ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் அப்படியொரு கிளைமோர் தாக்குதலை நடத்தவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. அதில் உடன்பாடும் இல்லை. அந்தப் பேருந்து தாக்குதலில் இறந்துபோனவர்கள் எல்லாம் கிராமப்புற மக்கள், குழந்தைகள், அதிலும் கர்ப்பிணித் தாய்மார்கள். இவர்களைக் கொல்ல ஒருபோதும் நாங்கள் சிந்தித்தது கிடையாது. எப்போதுமே எங்கள் இலக்கு படையணியினர் தான். அவர்களைத்தான் தாக்குவோமே தவிர, அப்பாவி மக்களை அல்ல. எங்களுக்கு "அப்பாவி" என்பதில் தமிழர்களும் ஒன்றுதான், சிங்களவர்களும் ஒன்றுதான்.

அந்தச் சம்பவம் காலை 7 மணிவாக்கில் நடந்திருக்கிறது. அந்தப் பகுதி சிங்களவர்களுக்கான பகுதி. அந்தப் பகுதிக்குள் அந்த சமயத்தில் ஊடுருவி போய்த் தாக்குதலை நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

சிறிலங்கா படைத்தரப்பினரைப் பற்றி பல கண்டனங்கள் பல்வேறு திசைகளிலிருந்து வந்துகொண்டிருக்கிறது. தவிர அல்லைப்பிட்டி சம்பவம், திரிகோணமலை சம்பவம், ஜாஓப்னா சம்பவம் என மக்கள் மீதான பல தாக்குதல்களில் கருணா குழுவிற்கும், சிறிலங்கா படைத்தரப்பினருக்கும் இடையே உள்ள தொடர்புகளால் மனித உரிமை மீறல்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த மனித உரிமை மீறல்களை திசைதிருப்பி அதனை உடைப்பதற்காகவே இவர்கள் மேற்கொண்ட சதிதான் கொப்பிற்றிக்கொலவ பேருந்து தாக்குதல் சம்பவம்.

நக்கீரன் : இலங்கை ராணுவத்தினர் 710 பேர் சென்ற கப்பலை முற்றுகையிட்டு சிறைப்பிடித்தீர்கள்? இவர்களுக்கு பாதுகாப்பிற்காக வந்த 2 டோரா படகுகளை மூழ்கடித்தீர்கள். எதற்காக இந்த முற்றுகை?

கேணல் சூசை : சிறிலங்கா படையணியினர் 710 பேரை சுமந்த பேல்குறுசர் கப்பல் திரிகோணமலையிலிருந்து காங்கேசன்துறைமுகத்துக்குச் சென்றது. 25 மைல் கடல் எல்லைக்குள் அது போய்க்கொண்டிருந்தது. அதனை முற்றுகைக்கு உள்ளாக்கும் நோக்கம் எங்களுக்கு இருக்கவில்லை. நாங்கள் எங்களுக்கென்று இருக்கப்பட்ட பகுதியிலிருந்து நாகர்கோவில் தொடக்கம் கொக்குத் தொடுவாய் வரைக்குமான கடற்பகுதியில் காலம் காலமாக பயிற்சி எடுத்து வருகின்றோம். தற்போது நாலரை வருட காலமாக இந்தப் பயிற்சியை அதிகமாக பண்றோம். தேவைப்படும் பட்சத்தில் திரிகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் கடலில் போக்குவரத்தை மேற்கொண்டோம். அந்தப் போக்குவரத்தையும் தடுத்து நிறுத்தி, தாக்குதல் நடத்தி கிழக்கு மாகாணத்துக்குப் போய் யாரையும் எற்றிக்கொண்டு வரக்கூடாது, மீறிப்போனால் தாக்கி அழிப்பம் என்று அரசு மிரட்டியது.

நாங்கள் எங்கள் கடல் இறையாண்மையை நிலைநாட்டுவதற்காக இந்த சம்பவத்திற்கு முதல் 15 நாட்களுக்கு முன்பாக திரிகோணமலைக்குப் போனோம். அங்குள்ள போராளிகளை எற்றிக் கொண்டு இங்கு வந்தோம். நாங்கள் பயிற்சியில் நிற்கும்போது, அவர்களின் கப்பல் தொடரணிக்கு பாதுகாப்புக் கொடுப்பதற்காக கரைக்கு வந்த டோரா படகு எங்கள் மீது தாக்குதல் நடத்தினது. நாங்களும் பதிலுக்குத் தாக்கினோம். எங்களில் சிலர் வீரச்சாவடைந்தார்கள். அதன்பிறகு எங்களால் பொறுமையாக இருக்க முடியாது. நாங்கள் ஒரு வலிமையான தாக்குதலை நடத்தி ஒரு டோராவை மூழ்கடித்தோம். மற்றொரு டோராவின் கண்காணிப்புக்குழு அதிகாரி ஒருவர் இருந்தார். அவருக்குத் தெரியும். நாங்கள் நினைத்திருந்தால் 10 நொட்சைவிட குறைவான வேகத்தில் சென்ற அந்த டோராவையும் தாக்கியிருக்க முடியும் என்பது. ஆனால் அப்படி நாங்கள் செய்யவில்லை. அந்தச் சமயம் 710 பேரை சுமந்த கப்பல் எங்கள் எல்லைக்குள் நுழைவதை பார்த்து நாங்கள் தற்காப்பிற்காக தயாரானோம். அனாலும் தாக்குதல் நடத்த நாங்கள் விரும்பவில்லை. எனெனில் அதில் இருந்தவர்கள் எல்லோரும் நிராயுதபாணிகளாக இருந்தார்கள். இதனைத்தான் நாங்கள் முற்றுகையிட்டோம் என்பதாக இலங்கை அரசு கூறியது.

நக்கீரன் : 1995-ம் அண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததற்கு கடலில் நடத்தப்பட்ட தாக்குதல்தான் காரணம். இப்போதும் கடலில் தாக்குதல்கள் நடைபெற துவங்கியிருக்கிறது. அப்படியானால் யுத்த நிறுத்தம்...?

கேணல் சூசை : அவ்வப்போது சிறு சிறு தாக்குதல் நடக்கிறதே தவிர, பாரிய தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. அதுவும் பதில் தாக்குதல், எதிர்த் தாக்குதல் என்கிற அளவில்தான் எங்களது செயல்பாடுகள், நடவடிக்கைகள் கடற்பரப்பில் இருக்கிறது. எங்கள் கடற்போக்குவரத்தை எப்போதும் செய்து கொண்டிருப்போம். அதைத் தடுத்தால்... தாக்குவோம். வட-கிழக்கை சூழவுள்ள கடல் எங்களுக்குச் சொந்தமானது. எங்களுடைய போக்குவரத்தையெல்லாம் முழுமையாக நிறுத்தப்பட்டிருக்கின்ற நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள போராளிகள் வடக்கிற்கும் வடக்கில் உள்ள போராளிகள் கிழக்கிற்கு போவதற்குமான பாதைகளை எல்லாம் மூடி வைத்துக்கொண்டு போக்குவரத்தும் செய்யக்கூடாதென்றால் அதற்குரிய போக்குவரத்துப் பாதையை திறந்து கொடுக்க வேண்டியது கடற்புலிகள்தான். கடற்புலிகள் அன்றும் அதைத் தான் செய்தார்கள், இன்றும் அதைத்தான் செய்கிறார்கள். இதனை யார் தடுத்தாலும் அதை எதிர்கொண்டு எங்கள் பயணத்தைத் தொடர்வோம். அது சண்டைக்கு வழிகோலுமா, இல்லையா? என்பது அப்போதைய சூழலைப் பொறுத்தது.

நக்கீரன் : வன்முறைகள் அதிகம் வெடித்து தமிழகத்துக்கு வருகிற அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த முடியாதா?

கேணல் சூசை : வன்முறைகள் வெடித்து அகதிகள் அதிகம் தமிழகத்துக்கு வருகிறார்கள் என்றால் இந்தியா பாராமுகமாக இருக்கிறது என்பது பொருள். இங்கு, இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண நோர்வே உட்பட சர்வதேச நாடுகள் தலையிட்டுப் பேசுவதற்கு முன்வருகிற அமைச்சர்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டுப் பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி... உடனே இந்தியாவிற்குப் பயணம் செய்து தங்கள் கருத்தைச் சொல்லி வருவார்கள். அனால், இந்தியாவோ, இதுபற்றி அக்கறையான கருத்தை எதுவும் முன்வைக்காமல் இருக்கிறது. இப்பவும் அப்படித்தான் இருக்கிறது இந்தியா. ஜாஓப்னாவிலிருந்து எமது மக்கள் வெளியேற்றப்பட்ட போதும், ஈழத் தமிழர்கள் மிகுந்த நெருக்கடிகளைச் சந்தித்தபோதும் எவ்வித கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவிக்காத அண்டைநாடுதான் இந்தியா. அனால், சிறிலங்கா போர் புரிவதற்கு உதவியாக இந்தியா போர்க்கப்பல்களை வழங்கி வருகின்றது. இது எங்களுக்கு மனவருத்தத்தை தருகிற வேதனை. அமைதி வழியில் தீர்வுகாண வேண்டும் என்று சொல்லி அழுத்தம் திருத்தமான ஆக்கபூர்வமான செயல்களில் இறங்கினால், எமது நாட்டிலுள்ளவர்கள் அகதிகளாக அங்குபோக வேண்டிய அவசியம் இருக்காது.

இது சம்மந்தமாக பல கருத்துக்களை எமது அரசியல் அலோசகர் அன்ரன் பாலசிங்கமும் எமது அரசியல் தலைவர் தமிழ்ச்செல்வனும் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளனர். ஆனாலும் இந்தியா பாராமுகமாகத்தான் இருந்து வருகிறது. இருதரப்பு நியாயங்களையும் நிஜமான அக்கறையுடன் இந்தியா அணுகினால் அகதிகளாக எமது மக்கள் மாறமாட்டார்கள்.

நக்கீரன் : தமிழக முதல்வராக கலைஞர் பொறுப்பேற்றுள்ள நிலையில் ஈழத்தமிழர்கள் எப்படியான மனநிலையில் உள்ளனர்?

கேணல் சூசை : எங்களுடைய விடுதலைப் போராட்டம் மிகுந்த நெருக்கடியை சந்தித்தபோது, எங்களைப் பாதுகாத்தது தமிழகம்தான். தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன், எமது தலைவருக்கு பெருமளவு நிதியைக் கொடுத்தார். நிதியைத் தந்து போராளிகளை பட்டினியில் இருந்து தப்பிக்க செய்து போராட்டத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர். அவருக்குப் பிற்பாடு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த முதலமைச்சர்களாக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் இடையில் எற்பட்ட கசப்பான சம்பவங்களால் தமிழக மக்களுக்கும் எங்களுக்கும் இடையிலை ஒரு கீறல் விழுந்திருந்தது. ஆனால் இன்று அது மாறிப்போயிருக்கிறது, மாறியும் விட்டது. தமிழக மக்கள் எங்கள் விடுதலைப் போராட்டம் வீச்சாவதற்கு பெருமளவு குரல் ஓங்கி ஒலிக்கச் செய்கிறார்கள் என்பது எமது மக்களுக்குக் கிடைத்துள்ள ஆறுதல், நிம்மதி எல்லாம். அன்றைக்கு எப்படி எங்களுக்கு எல்லாவகையிலும் உறுதுணையாக தமிழகம் இருந்ததோ, இன்றைக்கு அந்த உறுதுணையை எமது மக்கள் எதிர்பார்க்கிறார்கள். விடுதலைப் போராட்டம் வெற்றிபெற அன்றைக்கு பொருளாதார உதவி இருந்தது. இன்றைக்கு முழுமையான அதரவு வேண்டும். ஆதரவு இருக்கிறது என்பதைத்தான் எமது மக்கள் நினைக்கிறார்கள். எனெனில், உலகத்தில் எல்லா இடத்திலும் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் இல்லாத நாடே இல்லை. ஆனால் தமிழ் பேசும் எங்களுக்குத்தான் ஒரு நாடு இல்லை. எங்களுக்கான நாடு உஈதயமாக தமிழகம் உறுதுணையாக நிற்க வேண்டும்.

- இளையசெல்வன்

நன்றி - நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ நடவடிக்கைகளால் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு இலங்கை அரசு தீர்வு காண முடியாது என்று பிரதமர் கூறிடும் நிலையில், இலங்கை அரசுக்கு ராடார் போன்ற இராணுவத்திற்கு உதவக் கூடிய பல கருவிகளை அனுப்பும் செயல் அப்பட்டமான தமிழர் விரோத நடவடிக்கை அல்லவா?

தலையிட மாட்டோம் என்றால் அதையாவது முறையாக கடைப்பிடிக்க வேண்டாமா?

இரு தரப்புகள் போர் நிறுத்தத்தை மீறும் நிலையில், ஒரு தரப்புக்கு இராணுவ உதவி செய்வது என்பது எவ்வகையில் நியாயம் ஆகும்.

-திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

http://www.eelampage.com/?cn=27150

-------------------------------------------

நியாயமான உரிமைகளுக்காகப் போராடி வரும் இலங்கை தமிழர்களை முப்படைகளையும் கொண்டு தாக்கி அழித்து வரும் இலங்கை அரசுக்கு இராணுவத் தளவாட உதவியை இந்தியா வழங்கி இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த செய்தி உண்மையாக இருக்கக்கூடாது என்பது இங்குள்ள ஒவ்வொரு தமிழரின் விருப்பமாகும்.

இது உண்மையாக இருக்குமானால் இந்திய அரசின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரையில் இத்தகைய இராணுவ உதவியைச் செய்யவில்லை என்றால் இனிமேலும் செய்யக்கூடாது. எனவே இது குறித்த நிலைமையை இந்திய அரசு உடனே தெளிவுபடுத்த வேண்டும்.

மாலைதீவு போன்ற நாடுகளுக்கு இந்தியா இராணுவ ரீதியாக உதவுவது என்பது வேறு இலங்கைக்கு உதவுவது என்பது வேறு. இந்தியா அளிக்கும் இந்த உதவியைக்கொண்டு இலங்கை அரசு யாருக்கு எதிராகப் பயன்படுத்தப் போகிறது? எந்த வெளிநாட்டுப் படையெடுப்பைத் தடுக்க இந்தியாவின் இந்த ரேடார்கள் உதவப் போகின்றன.

இலங்கையில் அரசியல் உரிமைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடி வருகிற தமிழர்களுக்கு எதிராகத்தான் இந்த உதவியை இலங்கை பயன்படுத்தப்போகிறது என்பதை இந்தியா மறந்துவிடக்கூடாது.

இலங்கையில் நியாயமான அரசியல் தீர்வு ஏற்படவும் அதன் மூலம் சிங்களவர்களைப் போலத்தமிழர்களும் எல்லா உரிமைகளையும் பெற்றுச் சமவாய்ப்புடன் வாழவும் இந்தியா உதவ வேண்டும். அதற்கான நெருக்கடியை இலங்கை அரசு மீது இந்தியா கொண்டு வரவேண்டும்.

இப்படித்தான் இந்திய அரசு செயல்பட வேண்டுமே தவிர, இராணுவ ரீதியாக உதவுவது என்ற இந்திய அரசின் முடிவு சிக்கலைத் தீர்க்க உதவாது.

-பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்

http://www.eelampage.com/?cn=27142

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.