Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெடுகுடி சொல் கேளாது

Featured Replies

2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி கைச்சாத்திடப்பட்ட ரணில் - பிரபா யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு வயது 11 வருடங்கள். அன்றைய சர்வதேச சூழலை கிஞ்சித்தும் உள்வாங்கிக் கொள்ளாது பிரபாகரன் ஒப்பந்தம் கைச்சாத்தாகி 7 ஆண்டுகளில் புலிகள் இயக்கத்தின் கடைசி ஆயுதத்தையும் மெளனிக்கச் செய்தார். தமிழ் மக்களின் 60 வருட தேசியக் கனவு 2009 மே 19 ஒரு பகல் கனவாகிப்போனது.

 

யுத்த வெற்றியில் ஒரு ஜனாதிபதி தேர்தலை நிகழ்த்தி பெரும் வெற்றி பெற்ற மகிந்த பாராளுமன்ற தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றார்.  மகிந்தவின் யுத்த வெற்றிக்கு பெரும் பங்காற்றிய மேற்குலகம் யுத்த முடிவின் பின் இலங்கையில் ஒரு புதிய அரசியல் சகாப்தத்தை உருவாக்க அவருக்கு நான்கு ஆண்டுகள் அவகாசம் கொடுத்தது.

 

இந்த மாத முடிவில் மகிந்தவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை ம்கிந்த சந்திக்கவிருக்கும் ஒரு முள்ளிவாய்கால்.

 

கெடுகுடி சொல் கேளாது.

 

 

 

Sri Lanka: U.S. ‘Procedural’ resolution at UNHRC – Update No. 229

 

 

 

Edited by ராஜகுரு

Excerpt from the article:

 

 

The reason is simple: the U.S. has given no indication that it is contemplating any new action but only follow up on what has been said before.

 

The draft resolution I have received is no threat to status quo but it is a little more elaborate in listing the things not done as promised by Sri Lanka. It neither proposes scaling up the degree of pressure on President Rajapaksa, nor contemplates any collective action against Sri Lanka for non compliance with the earlier resolution. It buys more time for President Rajapaksa to set the house in order. Its title “Promoting reconciliation and accountability in Sri Lanka” (the same as the March 2012 resolution) sets the tone of U.S. action. In no way it either intimidates or intrudes into Sri Lanka’s internal affairs.

 

So the U.S. draft is truly procedural to give a push to the unfinished issues raised in the March 2012 resolution and nothing more

 

 

 

அமெரிக்காவின் பிரேரணையில் இந்தியாவினால் ஏற்றுக் கொள்ள முடியாத சில விடயங்கள்

| நிலவழகன் | 01. 03. 2013, வெள்ளிக்கிழமை, தமிழீழ நேரம் 8:35

 

 

india-sri-lanka11-300x240.jpgஐக்கிய

நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு

ஆதரவளிப்பதா? இல்லையா என்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் தீவிர ஆலோசனை

மேற்கொண்டு வருகிறது 

இந்திய ஊடகங்களின் தகவலின்படி, அமெரிக்காவின் இந்த பிரேரணையின் பிரதி

ஒன்று இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவினால் ஏற்றுக் கொள்ள முடியாத சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்ஒன்றை மேற்கோள்காட்டி த டைம்ஸ்ஒப் இந்தியாஇந்த செய்தியை வெளியிட்டிருந்தது

இதன்படி, பிரேரணையில் கூறப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில் இந்தியா

அமெரிக்காவிடம் சீர்த்திருத்தங்களை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த வாரம் இந்த பிரேரணைக்கு இந்தியா சாதகமாக வாக்களிக்கும் என்று

மத்திய அமைச்சர் நாராயணனசாமி தெரிவித்திருந்த போதும், அது உத்தியோகபூர்வ

அறிவிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

http://nerudal.com/nerudal.55489.html

 

 

  • தொடங்கியவர்

இந்தியா மகிந்தவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் பிரேரணை குறித்து ஆற்றும் ‘இராஜ தந்திர’ நடைமுறைகளை தமிழர் தரப்பு ’நதி மூலம்’ காணத்தலைப்பட வேண்டியதில்லை. அதைத்தான் 1987ல் நாம் இந்தியாவுக்கு எதிராக செய்ய முனைந்தோம். படுமோசமான விளைவை 2009ல் சந்தித்தோம். இந்திய உபகண்டத்தில் இந்திய நலன்களை முற்றாக நிராகரித்து இலங்கையில் தமிழ்த்தேசிய நலனை எம்மால் ஏற்படித்த முடியும் என்பது ‘தலையால் மண் கிண்டும்  வேலை’க்கு ஒப்பானது.

  • கருத்துக்கள உறவுகள்

நந்திமாதிரி குந்தியிருந்த இந்தியாவை நடுத்தெருவில் இழுத்துவிட்டதே தமிழர்களின் இராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி.. இதை மேலும் முன்னோக்கி நகர்த்த வேண்டும்.

இந்தியாவோடு மினக்கெட வேண்டுமாயின் தேர்தல் வந்து போக வேண்டும். 2009 ஆணடு தேர்தலுக்கு பின்னர்தான் மகிந்த முள்ளிவாய்க்காலை நிறைவேற்றியவர். காங்கிரசால் பிரேரணைமீது போடத்தக்க முட்டுக்கட்டை இந்த தேர்தல் வரைக்கும்  மட்டுமாகத்தான் இருக்கும். BJP யின் சுஸ்மாவோ, மோடியோ இலங்கையின் சீனப்பூசாண்டியை கண்டு வெருளும் சந்தர்ப்பம் குறைவு.

  • தொடங்கியவர்

//நந்திமாதிரி குந்தியிருந்த இந்தியாவை நடுத்தெருவில் இழுத்துவிட்டதே தமிழர்களின் இராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி.. இதை மேலும் முன்னோக்கி நகர்த்த வேண்டும்.//

 

இந்தியாவை மீறி இங்கொன்றும் நிகழவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். இந்தியா விரும்பாமல் சனல்-4 ஆவணப் படம்  இந்திய மக்களை உறுப்பினர்கள் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்பில்லை.மகிந்தவுக்கு எதிரான பிரேரணை வெறும் மேற்குலகின் தனித்தவில் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்,



//இந்தியாவோடு மினக்கெட வேண்டுமாயின் தேர்தல் வந்து போக வேண்டும். 2009 ஆணடு தேர்தலுக்கு பின்னர்தான் மகிந்த முள்ளிவாய்க்காலை நிறைவேற்றியவர். காங்கிரசால் பிரேரணைமீது போடத்தக்க முட்டுக்கட்டை இந்த தேர்தல் வரைக்கும்  மட்டுமாகத்தான் இருக்கும். BJP யின் சுஸ்மாவோ, மோடியோ இலங்கையின் சீனப்பூசாண்டியை கண்டு வெருளும் சந்தர்ப்பம் குறைவு.//

 

’சீனப்பூசாண்டி’ என்பதெல்லாம் உபகண்ட பூகோள அரசியலின் உள்ளடுக்குகளை புரிந்து கொள்ள முடியாத அப்பாவித்தனமாக அரசியல் ஆய்வுகள். 

  • கருத்துக்கள உறவுகள்

//நந்திமாதிரி குந்தியிருந்த இந்தியாவை நடுத்தெருவில் இழுத்துவிட்டதே தமிழர்களின் இராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி.. இதை மேலும் முன்னோக்கி நகர்த்த வேண்டும்.//

 

இந்தியாவை மீறி இங்கொன்றும் நிகழவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். இந்தியா விரும்பாமல் சனல்-4 ஆவணப் படம்  இந்திய மக்களை உறுப்பினர்கள் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்பில்லை.மகிந்தவுக்கு எதிரான பிரேரணை வெறும் மேற்குலகின் தனித்தவில் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்,

 

மேற்குலகின் தனித்தவில் மட்டுமே..

 

2009 இல் கனடா கொண்டுவந்த தீர்மானத்தை தோற்கடிக்கச் செய்து மட்டுமல்லாது அதனைத் தொடர்ந்து இலங்கையைப் பாராட்டி ஒரு தீர்மானத்தையும்  முன்மொழிந்து அதை வெற்றிபெறச்செய்தது இந்தியாதான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது..

 

அன்று இந்தியா இலங்கையைப் பாராட்டியதற்கான காரணிகள் இன்று மாறிவிடவில்லை. போன தீர்மானத்தை இந்தியா ஆதரித்தபோதே இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

கருணாநிதியின் தோல்வியை அரசியல் அறிந்த மம்மதா சரியாக விளங்கிகொண்டார். 

 

கருணாநிதி இலகுவில் விலகமாட்டர். அவர் கையினாமாதிரி.  வேட்டைக்கு போகும் சிங்கத்தின் பின்னால் இரை களவெடுக்க போவார். எருமை வேட்டையில் சிங்கம் தாடை, காலை உடைத்து விட்டு இயலாமல் இருப்பது கணாடல் சிங்கத்தை அடித்து சாப்பிட்டுவிடும் கையினா. காங்கிரசின் அழிவு சில சமையம் கருணாநிதி கையால் வர இருக்கும். 

 

கடைசி நேரத்தில் வைத்து ஆதரவை விலக்கி காங்கிரசை பதவி விலக வைத்தாராயின் காங்கிர இந்த தேர்தலில் வடக்கு, தெற்கு, கிழக்கு மேற்கு எங்கும் வெல்லவும் முடியாது கூட்டு அமைக்கவும் ஒருவரையும் கண்டு பிடிக்கவும் முடியாது. 



மோடி அரசியல் சுழி ஒடுவதில் திறமை இல்லாவதர். அடிப்படை கட்டுமாணம் போடுவதில் திறமையானவர். அவர் வந்தால் இலங்கை தனது ராஜதந்திரதில் தனிக்க விடப்பட்டு விடும்.

2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி கைச்சாத்திடப்பட்ட ரணில் - பிரபா யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு வயது 11 வருடங்கள். அன்றைய சர்வதேச சூழலை கிஞ்சித்தும் உள்வாங்கிக் கொள்ளாது பிரபாகரன் ஒப்பந்தம் கைச்சாத்தாகி 7 ஆண்டுகளில் புலிகள் இயக்கத்தின் கடைசி ஆயுதத்தையும் மெளனிக்கச் செய்தார். தமிழ் மக்களின் 60 வருட தேசியக் கனவு 2009 மே 19 ஒரு பகல் கனவாகிப்போனது.

 

 அன்றைய சர்வதேச சூழல் என அதை நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்?

 அதை உள்வாங்காமல் தலைவர் ஒப்பந்தம் செய்தாரா?

சீன பூச்சாண்டியை ஏற்கமுடியாது:யெஷ்வந்த் சின்ஹா

 

மேலும் இந்தியா இலங்கையை பகைத்துக்கொண்டால் அங்கே
சீனா புகுந்துவிடும் என்று கூறப்படும் வாதத்தை ஏற்கமுடியாது என்று மறுத்த
சின்ஹா, இலங்கை விவகாரத்திலாகட்டும், இந்தியா இலங்கைக்கிடையிலான
உறவிலாகட்டும், இந்தியாவின் அண்டை நாடுகளோ அல்லது மற்ற சர்வதேச நாடுகளோ
தலையிடுவதை இந்தியா அனுமதிக்காது என்பதை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இந்தியா
தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.


இலங்கையை பொறுத்தவரை, இந்தியாவின் மிக நெருங்கிய
அண்டை நாடு என்று கூறிய யெஷ்வந்த் சின்ஹா இலங்கைக்கு அறிவுரை கூற
இந்தியாவுக்கு உரிமையும் தகுதியும் இருப்பதாக கூறினார்.


“இலங்கையுடன் நமக்கு நட்புறவு இருக்கிறது. அதே
சமயம் நாமும் அவர்களும் அண்டை நாட்டுக்காரர்கள். எனவே அவர்களுக்கு கோரிக்கை
வைக்கவும், அறிவுரை கூறவும், அவர்களை கண்டிக்கவும், அவர்களுடன்
விவாதிக்கவும் இந்தியாவுக்கு இருக்கிறது. அந்த உரிமையை இந்திய அரசு
பயன்படுத்தவேண்டும்,” என்றார் யெஷ்வந்த் சின்ஹா.

http://www.bbc.co.uk/tamil/india/2013/03/130307_indianloksabha.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.