Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோ ஃபயர் ஷோன்: படக்காட்சியின் போது என்ன நடந்தது? போல் நியூமன் விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோ ஃபயர் ஷோன்: படக்காட்சியின் போது என்ன நடந்தது? போல் நியூமன் விளக்கம்

http://youtu.be/gjZlIeiSxxI

Paul-Newman_UNHRC-2.jpgஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் நேற்று நண்பகல் சனல்-4 நிறுவனம் தயாரித்த இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களை விளக்கும் நோ ஃபயர் ஷோன் என்ற ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. 

இலங்கை அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஐ.நா மனித உரிமைச் சபையில் திரையிடப்பட்ட சனல்-4 தொலைக்காட்சியின் ‘போர் தவிப்பு வலயம்’ ஆவணப்படம், பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததோடு, பெருத்த வரவேற்பினையும் பெற்றுள்ளதாக ஜெனீவாவில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஏலவே வெளிவந்திருந்த இந்த ஆவணப்படத்தின் முன்னோட்ட காட்சிகளும், ஒளிப்படங்களும் பெரும் எதிர்பார்ப்புகளை பல்வேறு மட்டங்களில் ஏற்படுத்தியிருந்தமை இலங்கை அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடியினை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அனைத்துலக மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சனல்-4 தொலைக்காட்சியின் ஏற்பாட்டில் ஐ.நா மனித உரிமைச்சபை வளாகத்தின் 23ம் மண்டபத்தில் திரையிடப்பட்டிருந்தது.

ஐ.நா மனித உரிமைச் சபையில் மையங்கொண்டுள்ள பல்வேறு நாடுகளது பிரதிநிதிகள், இராஜதந்திரிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஐ.நா அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினைச் சேர்ந்த 300 பேருக்கும் மேற்பட்டவர்கள் அரங்கு நிறைத்திருந்தனர் நா.தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச்சபை ஓருங்கிணைப்பாளர் சுகிந்தன் முருகையா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் பணிப்பின் பேரில் 2008ம் ஆண்டு வன்னியில் இருந்து ஐ.நா பணியாளர்கள் வெளியேறுகின்ற காட்சிகளுடன் விரிகின்ற ஆவணப்படமானது சிறுவன் பாலசந்திரனின் படுகொலையுடன் நிறைவு காண்கின்றது.

திரையிடலுக்கு முன்னதாக கருத்துரைத்திருந்த இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் callum macrae, தான் ஓர் ஊடகனாக நடந்தேறிய மனித உரிமை மீறல்கள் குறித்த பதிவுகளை செய்திருப்பதானது தொழில் தர்மமே அன்றி இலங்கை அரசுடனான தனிப்பட்ட பகை நிமிர்தம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

திரையிடலினைத் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் தொடர்பில் இந்தியாவில் இருந்து ஜெனீவா சென்றுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபை வளஅறிஞர் குழுப்பிரதிநிதி பேராசிரியர் பொல் நியூமன் தெரிவிக்கையில் :

இதில் பிரதானமாக முன்னாள் ஐ.நா அதிகாரி கோல்டன் வைய்ஸ் ஐ.நா நிபுணர் குழுப் பிரதிநிதி யாஸ்மின் சுக்கா ஆகியோர் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

மனித உரிமை அமைப்புக்கள் – ஊடகங்களை என சர்வதேசத்தின் பிரசன்னத்தினை வெளியேற்றிவிட்டு நடத்தப்பட்ட யுத்தம் இதுவென கருத்துரைந்திருந்த  யாஸ்மின் சுக்கா  அவர்கள் ஓரு குழந்தை மேல் யாராவு போரை நடத்துவார்களா  சிறுவன் பாலசந்திரனின் படுகொலை தொடர்பில் தெரிவித்திருந்தார்.

ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவுக்கு கருத்துக்களை பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது வழமைபோல் இந்த ஆவணப்படத்தினை முற்றாக நிராகரித்திருந்ததோடு இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற முயற்சி இதுவென குற்றஞ்சாட்டியிருந்தார்.

கருத்துப்பரிமாற்றத்தின் நிறைவில் மனித உரிமைக் கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும் அனைவரும் போரினால் பாதிக்கப்பட்டு மக்களின் குரலாக ஒலிப்போம் என கூட்டாக அறைகூவல் விடுத்திருந்தனர்.வெளிநாட்டு இராஜதந்திரிகளை அதிரவைத்த இந்தப் படக்காட்சி தொடர்பாக ஜெனீவாவிலிருந்து டாக்டர் போல் நியூமன் தரும் தகவல்களை இங்கு காணொளியில் காணலாம்:

http://tamilleader.com/?p=6515

இந்த நிலையில் நாம் என்ன செய்யப் போகிறோம்? அழுத்தங்கள் தொடர
வேண்டும்.தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் ஆதரவுக் கட்சிகள் ஒரம் கட்டப்பட்டு
ஒதுக்கப்படல் வேண்டும்.ஒன்றுபட்டு போராட்டங்களை வலுப்படுத்த
வேண்டும்.இல்லையேல் மனிதம் செத்து விடும்.நீதி பொய்த்து விடும்.இந்த நிலை
அனைத்து நாடுகளிலும் தொடரும். ஏன் தமிழகமும் அதற்கு விதிவிலக்காகி விட
முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.