Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிற்கு மறைமுக மிரட்டல் விடுத்த ராஜபக்சே.

Featured Replies

 

இலங்கைக்கு
எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்று தான் நம்புவதாக இலங்கை
அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்கா
கொண்டு வரும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை மீறல் கவுன்சிலில் திங்கள் அன்று
விவாதத்திற்கு வர உள்ளது. இந்நிலையில், விவாதத்தை தடுக்கும் ராஜபக்சேவின்
அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. தோல்வி விரக்தியில்
இருக்கும் ராஜபக்சே, இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என நம்புவதாக
தெரிவித்திருக்கிறார்.

காஷ்மீர் பிரச்சனையை ஈழத் தமிழர்
விவகாரத்துடன் இணைத்து பேசியுள்ள அவர், இலங்கை மீது இந்தியா அத்துமீறாது
என்ற துணிவில் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு இடையே, தமிழர்கள்
கொன்று குவிக்கப்பட்ட காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'நோ ஃபயர் ஸோன்'
என்ற ஆவணப் படம் ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை கவுன்சில்
கூட்டத்தில் திரையிடப்பட்டுள்ளது. ஆவண படத்தை திரையிட தடையிட முயன்ற
இலங்கையின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. படத்தை பா£த்த உறுப்பு நாடுகளின்
பிரதிநிதிகள் இலங்கையின் இன படுகொலை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில்
திரைப்படத்தின் இயக்குனர் கெலம் மேக்கரே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள்
இனியாவது ஒன்றுப்பட்டு இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று
வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 27ந் தேதி முதல் ஜெனீவாவில் ஐ.நா. மனித
உரிமை கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது. வரும் திங்கள் அன்று இலங்கைக்கு
எதிரான அமெரிக்காவின் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட
இருக்கிறது. அதனை அடுத்து தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கும்.
தீர்மானத்தின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால் இலங்கை
நடத்தியுள்ள போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், உள்ளிட்ட குற்றங்கள்
பற்றி விசாரிக்க சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழுவை அனுப்ப வேண்டும்
என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இலங்கைக்கு எதிரான
பெரும்பாலான நாடுகள் கண்டன குரல்களை பதிவு செய்துள்ள நிலையில், இந்த
தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலையை மத்திய அரசு இன்னும் வெளியிடாமல்
மவுனம் காத்து வருவது வேதனை அளிக்கிறது.

 

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13041:makinthan&catid=36:tamilnadu&Itemid=102

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.