Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

Posted

களமாடிய மாணவர்கள் இனி என்ன செய்ய வேண்டும்?-என்னும் குறுந்தகடு வெளியீட்டு விழா கருத்தரங்கம் 24-04-13 அன்று சென்னை எழும்பூர் ICSA அரங்கத்தில் மாலை 4 மணி முதல் இரவு 9 வரை சிறப்புற நடைபெற்றது.

 

நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் பெருந்திரளாய் பங்கு பெற்றனர். உலகத்தமிழ் அமைப்பின் தமிழ்நாடு மாணவர் பேரவை ஒருங்கிணைத்த இந்த விழாவில் கச்சதீவு மீட்பு இயக்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் “சீதையின் மைந்தன்” அவர்தம் குறுந்தகடை வெளியிட மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். விழாவில் அண்ணன் பேரறிவாளனின் வழக்குரைஞர் உயர்திரு.பாரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை உலகத்தமிழ் அமைப்பின் நிறுவனர் இரா.செழியன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்.

 

397786_610416135637082_444119718_n.jpg

 

 

(முகநூல்: loyolahungerstrike)

 

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு நடைபெறும் எமது மாணவர் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வாக வரும் மே மாத விடுமுறை நாள்களில் ஈழத்தமிழர் இனப்படுகொலை காட்சிகளடங்கிய காணொளி பதிவை கிராமங்கள் தோறும் திரையிட முடிவெடுத்துள்ளோம்.

இணையதளத்திலிருந்து சேகரிக்கப்பட்ட போர் காட்சிப்பதிவுகள், மற்றும் சேனல் 4 இனப்படுகொலைக்கு எதிரான ஆவணத் தகவல்கள் என தமிழீழ விடுதலைக்காக மக்களிடையே காட்சிப்படுத்தப்பட உள்ள காணொளி குறுவட்டு தொக்குக்கப்பட்டு நிறைவு நிலையில் உள்ளது. குரல் பதிவு பணிகள் நடந்து வருகிறன.

சில தினங்களுக்குள் முதல் கட்டமாக கடலூர், மாவட்டத்திலுள்ள 20-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் ஆதாயமின்றி கட்சி சர்பற்ற முறையில் முன்னெடுக்கப்படும் எமது இம் முயற்சிக்கு அதரவளிக்க கோருகிறோம் !

தொடர்புக்கு: தோழர்.ஆ.குபேரன் +919042223563

 

72876_440668526023890_1826835096_n.jpg

 

(முகநூல்)

Posted

நாம் நேற்று வெளியிட்ட செய்திக்கு மறுப்புதெரிவித்து தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கும் நிர்வாகிகள் எமக்கு அனுப்பிய செய்தி .

மன்னிக்கவும் உறவுகளே , குமார் சங்ககாரா பற்றிய பதிவினை இந்த பக்கத்தை நடத்தும் நாங்கள் பதிவிடவில்லை, எங்கேயோ தவறு நடந்துள்ளது . மேலும் நாங்கள் தேசிய தலைவரின் பாதையில் உங்களுடன் பயணிப்பவர்கள் "கரும்புலி ஆவோமே தவிர கருணா ஆக மாட்டோம்"..மேலும் எங்கள் பக்கத்தில் நான்கு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் நிர்வாகியாக இருந்தனர் . தற்போது பக்கம் மீண்டும் எங்களால் மீட்கப்பட்டது .. யார் இதற்கு காரணம் என தேடுகின்றோம் .

இப்படிக்கு
தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு மாணவ நிர்வாகிகள்

 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

இலங்கை வீரர்களை நீக்கும் வரை ,சன் ரைசஸ் மற்றும் ஐ.பி.எல்' க்கு எதிரான மாணவர் போராட்டம் தொடரும் ..

 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

கோவையில் மாணவர்களால் நடத்தப்பட்ட கண்காட்சி தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 21 ஆம் திகதி வந்த செய்தி.

 

 

Posted

தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்த கோரியும் இன்று ஜேர்மனில் நடந்த போராட்ட படங்கள்.

 

62684_309636802503252_1184258773_n.jpg

 

62684_309636805836585_1684996867_n.jpg

 

62684_309636812503251_462797446_n.jpg

 

936689_309767645823501_1972223563_n.jpg

 

936689_309767649156834_500311385_n.jpg

 

936689_309767652490167_232893285_n.jpg

 

936689_309767655823500_101971734_n.jpg

 

936689_309767659156833_1620197015_n.jpg

 

(முகநூல்)

Posted

528408_611144252230937_613714035_n.jpg

 

(fb: loyolahungerstrike)

Posted

பெல்ஜியத்தில் 18.05.2013 மாபெரும் எழுச்சி பேரணி.

 

375144_448895215196108_500258153_n.jpg

 

 

 

டென்மார்க்கில் 17.05.2013 கண்டன பேரணி

 

601651_448895285196101_1423140993_n.jpg

 

 

(முகநூல்)

 

Posted

அன்பு உறவுகளே ...
பேஸ் புக், மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலமாக மாணவர் போராட்டத்தின் திட்டங்கள் இருந்த இடத்திலிருந்தே குறைவான செலவில் பகிர்ந்துக்கொண்டிருந்தாலும் நம் கோரிக்கைகளை பொதுமக்களிடத்திலும் கொண்டுசேர்க்கவேண்டிய இடத்தில் உள்ளோம். வரும் விடுமுறை நாட்களில் சென்னையில் ஒரு இடத்தில் மாணவர்கள் அமர்ந்து வேலை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்கு ஒரு சிறிய அறை ஒதுக்கித்தருவதாக உண்ணாநிலை போராட்டத்திற்கு இடம் தந்து உதவிய தமிழ் உணர்வாளர் ஐயா திருச்சி சௌந்தரராஜன் அவர்கள் கூறியிருக்கிறார்.

குறைந்தபட்ச தேவைகள் உள்ள பொருட்கள் வாங்க, நமது போராட்ட செய்தியை மற்ற மாணவர்களுக்கு கொண்டுசேர்க்க துண்டுபிரசுரம் அடிக்க, பதாகைகள் தயார் செய்வது போன்ற தேவைகளுக்காக நிதி உதவி பெற எண்ணியுள்ளோம். எந்த கட்சியின், இயக்கத்தின் பின்புலத்திலிருந்தும் இயங்காமல் மாணவர்கள் மாணவர்களாகவே இயங்குவதால் பொது மக்களிடமிருந்து நிதியுதவி பெறுவதில் தவறில்லை என்று பல கட்ட யோசனைகளுக்குப் பிறகு முடிவு செய்துள்ளோம்.

கீழ்வரும் நிபந்தனைகளுடன்,

  1. கூடுமானவரை பொருளாக வாங்க முயற்சிப்போம்,
  2. ஒவ்வொரு மாதம் இறுதியில் வரவு செலவு கணக்கு சரி பார்க்கப்பட்டு நிதி மேம்பாட்டு குழுவால் பொதுவால் சமர்ப்பிக்கப்படும். வரவு செலவு கணக்கில் வெளிப்படைத்தன்மை இருக்கும்,
  3. கூட்டமைப்பின் பெயரில் வங்கிக்கணக்கை தொடங்கும் வரையில் தற்காலிகமாக என்னுடைய சொந்த கணக்கு எண் கொடுக்கப்படுகிறது,
  4. ஈழத்தமிழர்கள் நிதியுதவி அன்புடன் மறுக்கபடுகிறது.

தற்போதையத் தேவை :

  1. பிளாஸ்டிக் நாற்காலிகள்
  2. மின்விசிறி
  3. ஆரம்பக்கட்ட மின்இணைப்பு செலவுகள்
  4. மே மாதம் 18ஆம் தேதி பேரணி பரப்புரை செலவு
  5. கணினி
  6. தொலைபேசி
  7. போக்குவரத்து செலவுகள்

Bank Details

Name : T.Dhileepan
Account No. :171201000031062
Bank :I.O.B
IFS code:1712
Branch :loyola college branch

இனப் படுகொலை தினமான மே 18 அன்று பேரணியில் சந்திப்போம் ...இலக்கை நோக்கி ஓடுவோம் .
தமிழிழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக
திலீபன்.
 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

திருப்பூரில் ஈழம் தொடர்பான மாணவர் போராட்டத்தை முன்னெடுத்த ஏஞ்சல் கல்லூரி மாணவர் ராம்குமார் அவர்களை அக்கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத விடாமல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்தார்.

 

ராம்குமாருடன் உரையாட:: 8438137437

 

(முகநூல்)

 

Posted

தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் 8 கோடி தமிழர்களை சந்திக்கும் வகையில் 5 பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்தி 12/05/2013 அன்று காலை புறப்படுகின்றனர். அவர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள், பொதுமக்கள் , வணிகர்கள் உள்ளிட்ட தமிழர்கள் அனைவரும் பேராதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மாணவ போராளிகளின் இந்த சுடர் பயணம் 17/05/2013 அன்று தஞ்சை "முள்ளிவாய்க்கால் முற்றத்தில் " முடிவடைகிறது.

 

மேலும் தகவலுக்கு : சீ.தினேஷ் -9791162911 (ஒருங்கிணைப்பாளர் - தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு)

 

21154_611230265555669_978960710_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன  தவம் செய்தோம்

இவரை எம்மவராக அடைய..........

Posted

தமிழீழ விடுதலைக்கான "மாணவர் சுடர் பயணம்".

 

உங்கள் ஊரின் வழியே பயணிக்கும் சுடரை நீங்கள் வழி நடத்த விரும்பினால்... தொடர்புக்கு - தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.... 9791162911, 9791156568..

 

936762_611225128889516_1806039208_n.jpg

 

 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

தமிழக மாணவர்கள் நடத்தும் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்" தர்மபுரி- தஞ்சை நோக்கிய பாதை.

மே 12 ஆம் திகதி காலை 9 மணிக்கு தர்மபுரியில் ஆரம்பித்து கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் ஊடாக சென்று 17/05/2013 அன்று தஞ்சாவூர் "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் " முடிவடைகிறது.

 

மேலும் தகவலுக்கு: சீ.தினேஷ்-9791162911 (ஒருங்கிணைப்பாளர்-தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு)

 

164622_611595138852515_104128398_n.jpg

 

 

(முகநூல்)

Posted

சென்னை கண்ணம்மா பேட்டை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடும் மாணவர்கள்.

 

528440_357246264385671_744714847_n.jpg

 

(முகநூல்)

Posted

தமிழக மாணவர்கள் நடத்தும் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்" சென்னை- தஞ்சை நோக்கிய பாதை.

 

வரும் 12/05/2013 அன்று தமிழகத்தின் 5 பகுதிகளில் ஒரு பகுதியாக "சென்னை மெரினா காந்தி சிலையில்" காலை சரியாக 9 மணிக்கு "உணர்ச்சிக்கவிஞர் காசி அனந்தன் " தலைமையில் "இனமான இயக்குனர் மணிவண்ணன் " அவர்களால் சுடரேற்றி தொடங்கிவைக்கப்படுகிறது.

 

பின் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஊடாக சென்று 17.05.2013 அன்று தஞ்சை "முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நிறைவுபெறுகிறது. அச்சுடர் "அய்யா பழ.நெடுமாறன் மற்றும் அய்யா இரா.நல்லகண்ணு ஆகியோரால் பெற்றுகொள்ளப்படுகிறது.

 

164972_611282502217112_1865237816_n.jpg

 

 

(முகநூல்)

Posted

"தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்" விருதுநகர்- தஞ்சாவூர் நோக்கிய பாதை.

 

12/05/2013 அன்று காலை 9 மணிக்கு விருதுநகரில் ஆரம்பித்து தேனீ, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி ஊடாக சென்று  17/05/2013 தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நிறைவு பெறுகிறது.

 

931219_611593938852635_88916320_n.jpg

 

(முகநூல்)

Posted

"தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்" நீலகிரி - தஞ்சை நோக்கிய பாதை.

12/05/2013 அன்று காலை 9 மணிக்கு நீலகிரியில் ஆரம்பித்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி ஊடாக சென்று 17/05/2013 அன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நிறைவு பெறுகிறது.
 

407159_611594682185894_1703547251_n.jpg

 

(முகநூல்)

 

Posted

"தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்" கன்யாகுமரி - தஞ்சை நோக்கிய பாதை.

 

 

400684_611594505519245_547474054_n.jpg

 

(முகநூல்)

Posted
"புரட்சி உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக உறுதியான போராட்டம் , துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது".

- தோழர் பகத்சிங்.
401176_548106591906795_835613274_n.jpg
Posted

மலேசியாவில் இன்று நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவுப் பேரணி

 

 

164615_441572422600167_1594181066_n.jpg

 

 

419357_441572479266828_1683113146_n.jpg

 

420647_441572802600129_1760592660_n.jpg

 

 

935479_441572775933465_2131230230_n.jpg

 

381519_441572535933489_1769339935_n.jpg

 

 

 

601749_441572865933456_1942136877_n.jpg

 

 

407162_441572885933454_9251627_n.jpg

 

389121_441572922600117_1497274543_n.jpg

 

27116_441572662600143_512371157_n.jpg

 

 

401914_441572502600159_1997747135_n.jpg

 

601755_441572445933498_1322875656_n.jpg

 

 

931184_441572625933480_1445329327_n.jpg

 

486788_441572379266838_921496573_n.jpg

 

389144_441572612600148_1954851412_n.jpg

 

 

 

 

934970_441572685933474_1607173501_n.jpg

 

935594_441572355933507_153603419_n.jpg

 

301946_441572339266842_571509270_n.jpg

 

 

575544_441572352600174_130846432_n.jpg

 

 

164649_441573005933442_1153210480_n.jpg

 

 

397793_441572735933469_1785529175_n.jpg

 

 

(முகநூல்)

 

Posted

இலங்கை தமிழர் பிரச்சனை : ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் சென்னையில் இருந்து டெல்லிக்கு மாற்றம்

 

சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் இலங்கை தமிழர் பிரச்சனை காரணமாக டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர் பிரச்சினை காரணமாக சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனிடையே சென்னையில் கடந்த வாரம் நடந்த ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந் நிலையில் ‘சென்னையில் நடைபெறுவதாக  இருந்த ‘பிளே–ஆஃப்’ சுற்று போட்டிகளை டெல்லியில் நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசனுடன் விரிவாக ஆலோசனை நடத்திய பிறகு இந்த மாறுதல் முடிவு எடுக்கப்பட்டதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ‘தமிழக அரசு தனது முடிவில் நிலையாக இருந்ததால் போட்டி டெல்லிக்கு மாற்றப்பட்டதாக அவர் கூறினார்.
 

http://www.tamizl.com/?p=7501

 

Posted

399842_433547106738138_92198745_n.jpg

 

 

931400_449397248479238_1931892426_n.jpg

 

 

24662_449563295129300_388002115_n.jpg

 

 

(முகநூல்)

Posted

மாணவர்கள் மத்தியில் சுப.வீ. பேச்சு என்று செய்தி

இதில் யார் மாணவர்கள் ??
இவர்களை தமிழீழ மாணவர்கள் போராட்டத்தில் எங்காவது பார்த்ததுண்டா??

"எப்படி அமைதி வழி போராட்டத்தில் ஒரு பின்னடைவு ஏற்பட்டதோ அதே மாதிரி ஆயுதவழி போராட்டத்திலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது, பின்னடைவு ஏற்பட்டதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும், அதற்காக நாம் வெட்கப்படக்கூடாது" என வடிவேலு பாணியில் மாணவர்கள் முன் என்று சொல்லி திமுக உறுப்பினர்கள் முன் சுப.வீ. பேச்சு

 

923427_611992405479455_794422216_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

'ஈழம்: தமிழகம் என்ன செய்ய வேண்டும்?' தமிழகமெங்கும் விளக்கப் பொதுக்கூட்டங்கள்!

'ஈழம்: தமிழகம் என்ன செய்ய வேண்டும்?' என்ற தலைப்பில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வரும் மே 2 தொடங்கி 17 அன்று வரை, தமிழகமெங்கும் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

தமிழீழ விடுதலை, தமிழகம் எதிர் கொள்ளும் ஆற்று நீர் உரிமை மறுப்புகள், சாதி ஒழிப்பு, அணு உலைத் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் தவிக்கும் தமிழினம், இனி என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டும் வகையில் நிகழும் இக்கூட்டங்களில், கட்சியின் முன்னணியாளர்கள் உரையாற்றுகின்றனர்.

கீரனூர் - 02.05.2013
உரை: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன்

சிதம்பரம் - 04.05.2013
உரை: த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து, த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன்

மதுரை - 04.05.2013
உரை: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன்

கோவை - 06.05.2013
உரை: த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை

ஈரோடு - 07.05.2013
உரை: த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து

ஒரத்தநாடு - 08.05.2013
உரை: த.தே.பொ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ரெ.சிவராசு

பாப்பாநாடு - 09.05.2013
உரை: மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மேரி

திருச்சி - 09.05.2013
உரை: மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி

பாபநாசம் - 10.05.2013
உரை: மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மேரி, த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன்

பட்டுக்கோட்டை - 10.05.2013
உரை: த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு

திருக்காட்டுப்பள்ளி - 11.05.2013
உரை: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன்

சென்னை - 11.05.2013
உரை: த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி

ஓசூர் - 12.05.2013
உரை: மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி

காட்டுமன்னார்குடி - 15.05.2013
உரை: த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன்

தஞ்சை - 15.05.2013
உரை: த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன்

பெண்ணாடம் - 16.05.2013
உரை: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர் தோழர் பெ.மணியரசன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா

செங்கிப்பட்டி - 16.05.2013
உரை: த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன்

குரும்பூர் - 16.05.2013
உரை: த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி

சாமிமலை - 17.05.2013
உரை: மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி,த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன்

மேற்கண்ட பொதுக்கூட்டங்களில், தமிழுணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
பேச: 044-24348911

 

405868_376778309097866_2142781746_n.jpg

 

(முகநூல்)

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.