Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருகி வரும் மாணவர் போராட்டம் கமல் ரஜினி ஆதரவு ? [படங்கள்] - Dinaithal

Featured Replies

பிரிவு: தமிழ் நாடு

manin.JPGஇலங்கையில் , தனி ஈழமே தீர்வு அதற்க்கு இந்தியா தனியாக பொது வாக்கெடுப்பு நடத்த கோரி ஐநாவின் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று முதன்மையான கோரிக்கையை வைத்து தமிழகத்தில் மூளை முடுக்கெல்லாம் மாணவர்கள் போராட்டம் ,

தீவிரம் அடைந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் பத்து புது கல்லூரி மாணவர்கள் வீதிக்கு வந்து போராட்டத்தை நடத்துகிறார்கள்.

திருச்சியில் விமான நிலையத்தை முற்றுகை இட்டனர்.

மதுரையில் என்றும் காணாதபடிக்கு பத்தாயிரம் மாணவர்கள் வீதியில் பேரணி நடத்தினர் .

மத்திய அரசு அலுவலகங்களை குறி வைத்து மாணவர்கள் நகர்வது அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

இந்நிலையில் , தமது சொந்த,வியாபார , லாப நட்ட பிரச்சினைகளிற்கு வீதிக்கு வந்து போராடும் திரை துறையினர்., உலகம் முழுவதும் இவர்கள் பங்குகொண்ட ,நடித்த தமிழ் திரைப்படம் பார்த்து அவர்களிற்கு ஆதரவு அளிக்கும் தமிழர்களின் முக்கிய பிரச்சினைக்கு இதுவரை மவுனமே காத்து நிற்கின்றனர்.

அவர்களில் சிலர்., சிம்பு, இமான், இன்று அனிருத் போன்றவர்கள் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து உள்ளார்கள்.

தமது படம், விஸ்வரூபம் பிரச்சினைக்கு உள்ளான பொழுது , தமிழர்கள்தான் தமது காசை ஆயிரத்தை, பத்தாயிரத்தை கமலுக்கு அனுப்பி தமது பாசத்தை காண்பித்தார்கள்.

அதே மாதிரி முதன்மை நடிகர் ரஜினியும் தமது படத்தை தமிழில் எடுத்து தமிழ் திரையரங்கதில்தான் வெளியிட்டு வியாபாரம் பார்கிறார்.

இவர்களை எல்லாம் விட , நடிகராக இருந்து தமிழ்மக்களின் ஆதரவு பெற்று எதிர்க்கட்சி தலைவராக உள்ள விஜயகாந்த் இதுவரை கிஞ்சித்தும் இது பற்றி பேசவில்லை .

மற்றொரு நடிகர் மற்றும் கட்சி தலைவரான சரத்குமார் இது ஏதோ நேபாள நாட்டு பிரச்சினை போலவே உள்ளார்.

இங்கே இவ்வளவு  போராட்டம் நடைபெறும்   பொழுதும, அண்ணா ஹஜாரே வுக்கு டெல்லிக்கு சென்று அளித்த  நடிகர் விஜய் , இங்கும் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் விழுப்புரம் சென்று  இலவச திருமணம் என்று  அரசியல் ஆசையில்  படம் கட்டி கொண்டு உள்ளார்.

விஜயையும்  ஸ்பானிஷ் நடிகர் அல்ல தமிழ் மொழியில் வசனம் பேசி தமிழ் மொழியில் படம் எடுக்கும் நடிகர்தான் .

இவர்கள் முதலான அனைவரும் வீதிக்கு வந்து போராடவேண்டாம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என்று அறிக்கை மட்டுமாவது கொடுக்கட்டும் .

அதுதான் தமிழ் மொழியை வைத்து திரை வியாபாரம் செய்த இவர்கள் காட்டும் நன்றி கடன் என்று சொல்லலாம்.

அதை செய்துதான் ஆகவேண்டும் .

அப்படி இல்லாமல் போனால் இவர்கள் இனிவரும் காலங்களில் , ஆங்கிலத்திலோ அல்லது ஸ்பானிஸ் மொழியிலோ படங்கள் எடுத்து அந்த நாட்டு தியேட்டர்களில்தான் வியாபாரம் பார்க்க முடியும் என்றே நிலைமை உள்ளது.

ஏன் என்றால் மாணவர்கள் போராட்டம் அப்படி உள்ளது. விமான நிலையத்தையே முற்றுகை இடும் இவர்களுக்கு இவர்களின் படம் ஓடும் தியேட்டர் எம்மாத்திரம் என்பதை அவர்கள் வெகு சீக்கிரம் உணர்ந்து , ஆதரவு அளிப்பார்கள் என்றே அனைவரும் எதிர்பார்கின்றனர்.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13400:rajani,kamal&catid=36:tamilnadu&Itemid=102

thiraithurai.JPG

Share this post

நடிகர்கள் நடிகைகளின் முகநூல் புத்தகத்தில் உள்ள இரசிகர்கள் இவர்களை கேட்கவேண்டும்

:"ஏன் நீங்கள் மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவு தர மறுக்கின்றீர்கள்? " என.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஆதரவு தெரிவிக்காது கம்மெண்டு கிடந்தாலே போதும். அவர்களது உள்நுழைவால் போராட்டம் திசைதிருப்பபட்டுவிடும். மேலும் தமிழ் மாணவர்களை இன்னமும் சரியாக எடைபோட, செய்தியாளர் தவறிவிட்டார், இப்போராட்டம் எதோ திடீரென வந்ததல்ல, தமிழீழ உணர்வாளர்கள், தம்பி சீமான், ஐயா நெடுமாறன், வைகோ அண்ணர், குளத்தூர் மணி அண்ணர், மகேந்திரன் அண்ணர், நல்லதம்பி ஐயா உள்ளிட்ட பலது கடந்தகால சீரிய செயற்பாடுகள், செங்கொடி முத்துக்குமாரன் உட்பட்ட அண்மையில் தீயினில் வெந்த தமிழர் வரையிலான அனைவரதும் செயற்பாடுகளது பலாபலன்களே இம்மாணவர் போராட்டம். இதில் சினிமா நடிகர்கள் உள்நுழைவது தேவையில்லாத அரசியலுக்கு வழிவகுக்கும். மத்திய அரசு, இவர்கள் குவித்துவைத்திருக்கும் கணக்கிலடங்கா சொத்துக்களையும் கள்ளப்பணத்தையும் காரணம்காட்டி மிரட்டி, இவர்கள்மூலமே, மாணவர்போராட்டத்தை சீரழிக்கும்.

ஐயா சினிமாக் கடவுளகளே தேவையெண்றால் நீங்கள் கோபாலபுரத்துக்கோ போயஸ்கார்டினுக்கோ, அன்றேல் சின்னப்பயல் சிதப்பரத்தின் வீட்டுக்கொ சென்று அவர்களுக்கு கிச்சு...கிச்சுமூட்டி விடுங்கோ. இதைத்தானே இவ்வளவு நாட்களும் செய்துகொண்டிருந்தீர்கள்.

அத்துடன்..புதிய தலைமுறை தொலைக் காட்ச்சி சணல்4 வெளியிட்ட உண்மை சம்பவங்கள் தாண் மாணர்களின் மனதை பாதீத்தது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.