Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணுசக்தி வேண்டாம் - சுஜாதா!

Featured Replies

(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது) 
 
அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.
 
எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.
 
விபத்துகள்:-
 
முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
 
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.
 
ஆபத்தான கதிரியக்கம்:-
 
அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.
 
அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.
 
சாம்பலை என்ன செய்வது:-
 
அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவு தகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.
 
ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-
 
உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.
 
எரிபொருள்கள்:-
 
இந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.
 
காற்று மண்டலத் தூய்மைக்கேடு:-
 
நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.
 
துருவப் பிரதேசப் பனி உருகலாம்:-
 
அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.
 
மாற்று வழிகள்:-
 
நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.
 
ஹைட்ரஜன் வாயு:-
 
ஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.
 
"சைவ" பெட்ரோல்:-
 
அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.
 
சூரியனே கதி
 
சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.
 
இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.

 
அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். 
 
சுஜாதாவிடம் இருந்து தொழில்நுட்பம் படிக்க வெளிக்கிட்டால் இப்படித் தான் இருக்கும்.  
 
 
 
 
.

Edited by ஈசன்

  • தொடங்கியவர்

 
சுஜாதாவிடம் இருந்து தொழில்நுட்பம் படிக்க வெளிக்கிட்டால் இப்படித் தான் இருக்கும்.  
 
 
 
 
.

ஈசன் முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் சுஜாதா ஒரு தொழில்நுட்பவியலாளர் அல்ல. அவர் ஒரு எழுத்தாளர் மாத்திரமே. அவரின் கட்டுரையில் தொழில்நுட்ப சொற்களை தேடினால் அது உங்கள் அறியாமையே. கட்டுரை என்ன கருத்தை சொல்லவருகிறது என விளங்கிகொண்டால் போதுமானது.

Edited by ilankathir

ஈசன் முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் சுஜாதா ஒரு தொழில்நுட்பவியலாளர் அல்ல. அவர் ஒரு எழுத்தாளர் மாத்திரமே. அவரின் கட்டுரையில் தொழில்நுட்ப சொற்களை தேடினால் அது உங்கள் அறியாமையே. கட்டுரை என்ன கருத்தை சொல்லவருகிறது என விளங்கிகொண்டால் போதுமானது.

 

 

அணுசக்தியைப் பிளப்பதனால் தான் அணுமின் உற்பத்தி செய்யப்படுமானால் உலகில் ஒரு அணுமின் உற்பத்தி நிலையமும் இருக்காது.
 
இது சொல் அல்ல ஒரு கருத்து. மொத்தக் கட்டுரையையும் தலைகிழாக்கும் கருத்து.
 
 
மற்றவர்களுக்கு அறியாமைப் பட்டம் சூட்ட முதல் எங்கட எங்கட அறிவியல் நிலமை என்ன மாதிரி என்டு கொஞ்சம் யோசிக்கலாமே ?  :icon_idea:
  • தொடங்கியவர்

நான் ஒரு அணு விஞ்ஞானி அல்ல. பிழை பிழை என்கிறீர்கள் சரியானதை ஒரு 10 வாக்கியங்களில் எழுதிப் இட்டால் எல்லோரும் பயனடைவார்கள் தானே?

 

 

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 

கொதிநீர் அணு உலை (boiling water reactorBWR) மின்னுற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மென்னீர்அணுக்கரு உலைகளில் ஒருவகையாகும். மின்னுற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் அணு உலைகளில் மற்றொரு மென்னீர் அணு உலையான அழுத்த நீர் அணுஉலைக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகவும் பயன்படுத்தப்படும் அணு உலையாகும். இரண்டிற்குமான வேறுபாடாக, கொதிநீர் அணு உலையில் உலைக் கருவம் நீரை நீராவியாக மாற்றி சுழலி மின்னாக்கியை இயக்குகிறது. அழுத்த நீர் அணு உலையில் உலைக்கருவம் நீரைக் கொதிக்க விடுவதில்லை. இந்த சுடாக்கப்பட்ட நீர் கருவத்திற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அழுத்தம் குறைக்கப்படுவதால் நீராவியாக மாறி சுழலியை இயக்குகிறது. 1950களின் இடையில் இடாகோ தேசிய ஆய்வகமும் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனமும் இணைந்து உருவாக்கின. தற்போது இத்தகைய அணு உலைகளின் வடிவமைப்பிலும் கட்டமைப்பிலும் ஜிஇ இடாச்சி அணுக்கரு ஆற்றல் (GE Hitachi Nuclear Energy) நிறுவனம் சிறப்புக் கவனம் பெற்று வருகிறது.

 

கொதிநீர் அணு உலையில் கனிமங்கள் நீக்கப்பட்ட நீர் குளிர்வியாகவும் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. அணுக்கருப் பிளவினால் ஏற்படும் வெப்பம் குளிர்வி நீரை சூடாக்கி கொதிக்கச் செய்கிறது. இதனால் உண்டாகும் நீராவி நேரடியாக சுழலி மின்னாக்கியை இயக்குகிறது. பின்னர் இந்த நீராவி ஓர் ஆவி சுருக்கியில் குளிர்விக்கப்பட்டு மீண்டும் நீராக மாற்றப்படுகிறது. இந்த நீர் மீண்டும் உலைக் கருவத்திற்கு அனுப்பப்பட்டு சுழற்சி முழுமையடைகிறது. குளிர்விக்கும் நீர் சுமார் 75 atm (7.6 MPa, 1000–1100 பவுண்ட்/ச.அங்) அழுத்தத்தில் வைக்கப்பட்டிருப்பதால் கருவத்தில் சுமார் 285 °C (550 °F) வெப்பத்தில் கொதிக்கிறது. இதற்கு எதிராக ,அழுத்த நீர் அணு உலையில் முதன்மைச் சுற்றில் நீர் சுமார் 158 atm (16 MPa, 2300 psi) மிகை அழுத்தத்தில் வைக்கப்படுவதால் கொதிப்பதில்லை. 2011 சப்பானிய அணு உலை விபத்திற்கு முன்பாக கருவச் சேத நிகழ்வடுக்குகள் 10−4 க்கும் 10−7 க்கும் இடையே மதிப்பிடப் பட்டிருந்தது (அதாவது, ஒவ்வொரு 10,000 முதல் 10,000,000 வரையிலான உலையாண்டுகளுக்கு ஒரு கருவச் சேதம்).[1]

 

 அணுக்கருப் பிளவினால் ஏற்படும் வெப்பம் குளிர்வி நீரை சூடாக்கி கொதிக்கச் செய்கிறது................. ஈசன் இதற்குமேல் என்னால் முடியாது. நீங்களே எழுதிவிடுங்கள் சரியானதை...

 

 

 

 

 

யுரேனியம் அணு இயற்கையாகவே உயர் சக்தி (வெப்பம் உள்ளடங்களாக ) கதிரியக்கத்தைக் காழுகின்றது. அது இப்படிச் செய்வதன் நோக்கங்கள்:
 
அதன் கரு பெரியது. அதனால் உறுதியற்றது. ஆகவே நுண்துணிக்கைகளாக கதிரியக்கத்தைக் காழுவதன் மூலம் காலப்போக்கில் சற்று சிறிய அணுவாக மாறலாம். ( Natural Decay)  சிறிய அணுக்கள் பெரிய அணுக்களைவிட உறுதியானவை.
 
யுரேனியத்தை துய்மையாக்கி செறிவாக்கும் போது ஒரு கன அளவு யுரேனியத்தில் இருந்து வரும் வெப்பம் / கதிரியக்கம் உக்கிரமாக இருக்கும்.
 
இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீரை ஆவியாக்கி நீராவி இயந்திரத்தைப் போன்ற ஒரு பொறிமுறையினூடாக மின்சக்தி பிறப்பிக்கப்படுகின்றது.
 
அணுமின் நிலையங்களில் பயன்படும் யுரேனியம் கோல்கள் தொடர்ச்சியாக கொதித்துக் கொண்டேயிருப்பதால் அவை நீரில் வைக்கப்பட்டு எப்பொழுதும் குளிர்விக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
 
ஜப்பான் நில நடுக்கத்தில் இந்த குளிர்விக்கும் பொறிமுறையில் பயன்படும் பம்பிகள் சேதமடைந்த்தால் வெப்பநிலை கட்டுக்கடங்காமல் போய் அந்த நிலயத்தின் பகுதிகள் வெடித்தன.
  • தொடங்கியவர்

நீங்கள் சொல்லும் செறிவாக்குதல் மூலம் வெப்பம், கதிரியக்கத்தின் உக்கிர விளைவு ஏற்பட அணுக்கரு பிளவு (Nuclear fission) ஏற்பட வேண்டும் என்பதுதானே நியதி. அல்லது நீங்கள் கூறும் செறிவாக்கல் என்றால் என்ன அதனை கொஞ்சம் விரிவாக விளக்கமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

யூரேனியம் கதிரியக்க முடிவில் lead (துத்தநாகம்??) ஆகும் என்று படிச்ச ஞாபகம்..!

நீங்கள் சொல்லும் செறிவாக்குதல் மூலம் வெப்பம், கதிரியக்கத்தின் உக்கிர விளைவு ஏற்பட அணுக்கரு பிளவு (Nuclear fission) ஏற்பட வேண்டும் என்பதுதானே நியதி. அல்லது நீங்கள் கூறும் செறிவாக்கல் என்றால் என்ன அதனை கொஞ்சம் விரிவாக விளக்கமுடியுமா?

 

 

பழைய ஞாபகத்தில் தவறாக எழுதியிருக்கிறேன். மன்னிக்கவும்.
 
Quantum mechanics இல் கதிரியக்கத்தைப் பற்றியும் அதன் மூலம் வெப்ப மின் உற்பத்தி பற்றியும், கருப்பிளவை அணுக்குண்டு அடிப்படையாவும் படித்த ஞாபகம். 
 
இதில் நான் தவறவிட்ட விசயம் கட்டுப்படுத்தப்பட்ட கருப்பிளவு பற்றியது. கருப்பிளவு கட்டுப்படுத்த முடியாமல் சங்கிலித்தொடராக அணுகுண்டுக்கு நிகரான சக்தி வெளிப்படும் என்ற எண்ணத்தில் இருந்து விட்டேன். அதனால் தான் கருப்பிளவு தவறு என்று எழுதினேன்.
 
இன்று இது பற்றி தேடியபோது மேலதிக தகவல்களைப் பெற முடிந்தது. மிகவும் நன்றி.
  • 7 months later...

 

 
சுஜாதாவிடம் இருந்து தொழில்நுட்பம் படிக்க வெளிக்கிட்டால் இப்படித் தான் இருக்கும்.  
 
 
 
 
.

 

இப்பொழுது தெரிகிறது சுஜாதாவை குருட்டு தனமாக தவறு  என்று உறுதி செய்யாமல் பேசிவிடுபவர்கள் உங்களைபோல் அதிகம் .... அது கற்றதும் பெற்றதும் எழுதும் போதே பலர் இந்த ஐந்து நிமிட புகழுக்காக பேசுவர் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.