Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்க ஜப்பானில் டோக்கியோ வாழ் தமிழர்கள் போராட்டம் [படங்கள் ]

Featured Replies

ஜப்பான் வெளியுறவுதுறையிடம் டோக்கியோ வாழ் தமிழர்களின் கோரிக்கை எமது வேண்டுகோளை ஏற்று, டோக்யோவில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள், திங்கள் கிழமை (18 மார்சு) மதியம் 1 மணி அளவில், ஜப்பான் வெளியுறவுதுறையின் அலுவலகத்தின் முன் திரண்டனர். நால்வர் மட்டுமே மேற்கு ஆசியாவின் வெளியுறவுதுறையின் தலைமை இயக்குனர் திரு மகோட்டோ மாசுதா(Makoto Masuda san) அவர்களை சந்திக்கும் இயலும் என்று கூறியதால், திரு அருள், திரு குகன், திரு பாலு அவர்களுடன் செந்தில்குமார்  இணைந்து எமது கோரிக்கையை இயக்குநர் அவர்களிடம் விளக்கி கூறினோம். ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள், எமது கோரிக்கையை பொறுமையுடன், மிகுந்த கனிவுடனும் இயக்குநர் அவர்களும், வெளியுறவுதுறையின் ஓசாகி (Takeshi Ozaki) அவர்களும் இணைந்து செவிமடுத்தார்கள்.

எமது முக்கிய கோரிக்கைகள் பின் வருமாறு,

1.    2009 மே மாதம் நிகழ்ந்த இனபடுகொலை மற்றும் போர்குற்றங்கள் குறித்து, ஐக்கிய நாட்டு சபையின் மூலம் சுதந்திரமான முறையில் விசாரணை மேற்கொள்ளபட்டு, குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும்(ACCOUNTABILITY).

2.    ஐக்கியநாட்டு சபையில், இலங்கையின் போர்குற்றங்களுக்கு எதிராக இந்த வார இறுதியில் அமெரிக்காவினால் கொண்டுவரபட இருக்கிறது. சென்ற ஆண்டு (2012) மார்சு மாதம், இதே மாதிரியான ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்ததது. இருப்பினும் ஈழதமிழர்களுக்கு அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை. நிரந்தர தீர்வு என்பது, உலக நாடுகளின் மேற்பார்வையில், ஈழதமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு (UN REFERENDUM) எடுக்கபபட்டு, அவர்களின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்யும் வகையில் சுய நிர்ணய உரிமை வழங்கபட வேண்டும்.

3.    தமிழர்களின் பூர்வீக தாயகமான வடகிழக்கு பகுதியில் சிங்களர் குடியேற்றம் தடுத்து நிறுத்தபட வேண்டும் (STOP THE ETHNIC CLEANSING).

4.    இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு, தமிழர்களின் பூர்வீக தாயகமான வடகிழக்கு பகுதியில் நிகழும் நிகழ்வுகள், வெளி உலகிற்க்கு தெரியபடுத்தபட வேண்டும்.

5.    இலங்கையில் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை, இலங்கையின் இனவாத அரசுக்கு, ஜப்பான் அரசு செய்து வரும் உதவிகளை நிறுத்தி வைக்க வேண்டுமாய் கோருகிறோம்.

6.    60 ஆண்டுகாலமாக தொடரும் போராட்டத்தினாலும், இனபடுகொலை சம்பவங்களினாலும், இனி தமிழர்களும், சிங்கள மக்களும் இணைந்து வாழ்வது என்பது சாத்தியமில்லாத நிலையை எட்டியுள்ளது. இதை உலக நாடுகள் புரிந்துக் கொண்டு, தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையான தமிழ் ஈழம் குறித்து, ஈழ தமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு எடுக்க உதவ முன்வர வேண்டும். ஜப்பான் அரசு, அந்த முயற்சியை முன்னெடுக்க கோருகிறோம்.

போன்ற எமது கோரிக்கைகளை விளக்கி கூறியபின், ஆங்கிலத்திலும், ஜப்பானிய மொழியிலும் நாம் தயார் செய்திருந்த மனுவை அனைவரும் கையெழுத்திட்டு இயக்குநர் அவர்களிடம் வழங்கினோம்.

இலங்கை இனவாத அரசின் போர்குற்ற ஆதாரங்களை விளக்கி கூறி, சமிபத்தில் வெளியான பாலசந்திரன் புகைபடம் குறித்தும் எடுத்து கூறினோம். அப்போது இயக்குநர் கேட்ட கேள்வி, எங்களை மிகுந்த சங்கடத்தில் ஆழ்த்தியது. அந்த புகைபடத்தின் உண்மைதனம் குறித்து உங்களது வெளியுறவுதுறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சந்தேகம் எழுப்பியுள்ளாரே என்று அவர் கேட்ட போது, இலங்கை விவகாரத்தில், இந்தியாவின் நிலையை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்ற சூழ்நிலையில், நமது காங்கிரஸ் அமைச்சர்கள், தமிழர்களின் உணர்வை சற்றும் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து துரோகம் செய்து வருவது மிகுந்த வருத்தத்தை அளித்தது.

பொதுவாக, எங்களிடம் பேசிய ஜப்பான் வெளியுறவுதுறை அதிகாரிகள், இலங்கை போராட்டம் குறித்தும், இந்திய கட்சிகள் குறித்தும் தெளிவாக புரிந்து வைத்திருந்தனர். நீங்கள் பொது வாக்கெடுப்பு பற்றி கோரிக்கை விடுக்கிறீர்கள். ஆனால், தமிழகத்தில் பெரிய கட்சியான தி.மு.க அதே நிலைப்பாட்டை இப்போதும் கொண்டிருக்கிறதா? என்று கேட்டார் திரு மசுதா அவர்கள்.

எங்களுக்கு கொடுக்கபட்ட நேரத்தில், எங்களால் இயன்ற வரையில் , ஈழதமிழர்களின் போராட்ட வரலாற்றையும் (முதலில் நிகழ்ந்த அகிம்சை போராட்டம், அதன் தோல்வி, பிறகு எழுந்த ஆயுத போராட்டம்), தற்போதைய ஈழதமிழர்களின் பரிதாபமான நிலையையும் விளக்கி கூறி, ஜப்பானின் உதவியை கோரியுள்ளோம்.

இந்த முயற்சியை சாத்தியமாக்கிய திரு அருள், நண்பர் குகன், நண்பர் பாலு, துரை, ஒரே இரவில் ஜப்பானிய மொழியில் மொழியாக்கம் செய்து உதவிய திரு கோவிந்த், இபராக்கியில் இருந்து, இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்க்காகவே வருகை தந்த திரு வினோத் ராஜ், தமது குழந்தைகளுடன் வீசியடித்த காற்றையும் பொருட்படுத்தாது குவிந்த தமிழ் தாய்மார்கள், கடுமையான அலுவல்களுக்குமிடையிலும், முன்னதாகவே வந்திருந்து கலந்துக் கொண்ட ஆறுமுகம் போன்ற சொந்தங்களை காணும் போது ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது.. இனியும், தமிழன் தனியன் அல்ல.

செந்தில்குமார்

டோக்கியோ.

jappan.JPG

Share this post

 

 

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13470:jappan-tamil&catid=36:tamilnadu&Itemid=102

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானில்...உங்கள் உணர்வை வெளிபடுத்தியதற்கு நன்றிகள்...உங்கள்மூலம் இந்திய அரசின்முகம்முடி கிழிபட்டதிற்கும்...போராட்டத்தினுண்மைத்தன்மையை விளங்க வைத்தமைக்கும் எமது நன்றிகள்.....போராடுவோம் ..வெல்வோம்..

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானில்...உங்கள் உணர்வை வெளிபடுத்தியதற்கு நன்றிகள் .. உணர்வுள்ள தமிழர்களே !

 

அப்படியே .... ஜப்பானிய மொழியில் ஜசூசி அகாசி புரியுமாப்போல ஈழ தமிழரின் உண்மையான நிலவரத்தை எடுத்து உரைக்கவும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.