Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞாபக சக்தியை அதிகப்படுத்த சில வழிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பலநேரங்களில் சொல்வது மறந்திட்டேன் என்பதாகத்தான் இருக்கும்.

சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது.

தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பளபளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.

இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டன், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம், மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை.

இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஓக்ஸிஜனை உபயோகிப்பது. எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை.

இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும் பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.

ஆனால் அவர்களில் பி6, பி12, ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது. வெண்டைக்காயும் ஞாபகசக்தி பெரிதும் பயன்படுகிறது.

மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.

நன்றி http://newjaffna.com/fullview.php?id=MzI3OTA=

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைப்பூண்டு, உள்ளி, வெள்ளைவெங்காயம் இவற்றின் வேறுபாடுகள் என்ன? இவற்றின் பலனை அவிப்பதால் அன்றிப் பொரிப்பதால் அன்றிச் சுடுவதால் பெறமுடியுமா?.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விதமான நோய்களையும் குணப்படுத்தும் வெள்ளைப்பூண்டு வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

 
garlic.jpg

காய்கறி வகைகளில் இரண்டே இரண்டு மட்டுமே ஆங்கில மருத்துவத்தில் அப்படியே பதப்படுத்தப்பட்டு மாத்திரைகளாக விற்கப்படுகின்றன. ஒன்று, வல்லாரைக் கீரை! ஞாபக ச்கதியைப் பெருக்கப் பயன்படும் இந்தக் கீரையை உலர்த்திப் பொடியாக்கிப் பிறகு வில்லைகளாகத் தயாரித்து விற்கின்றனர்.

இரண்டாவது, வெள்ளைப்பூண்டு! இதய சம்பந்தமான நோய்களையும், பிளட்பிரஷரையும் தவிர்க்கவும், குறிப்பாக மாரடைப்புத் தவிர்க்கவும், வெள்ளைப்பூண்டு கேப்ஸுல்களை டாக்டர்கள் எழுதிக் கொடுக்கின்றனர்.

வேறு எந்தக் காய்கறிகளுக்கும் இத்தகைய சிறப்புகள் இல்லை.

உலக அளவில் வெள்ளைப்பூண்டு கேப்ஸுல்களை அதிக அளவில் தயாரித்துத் தினமும் சாப்பிடுகிறவர்கள், ஜெர்மானியர்களே! அவர்கள் இந்த கேப்ஸுல்களை அதிக அளவில் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

ஆஸ்துமா, காது கேளாமை, தொழுநோய், இதய நோய்கள், தொண்டை, அழற்சி, எல்லா வகையான காய்ச்சல்கள், கல்லீரல் கோளாறுகள், கக்குவான் இருமல், சிறு நீரகக் கோளாறுகள் என அனைத்துக்கும் மிகச் சிறந்த மூலிகை மருந்தாகவும், உணவாகவும் வெள்ளைப்பூண்டு திகழ்கிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் முடி நன்கு வளர, பசி மந்தம் அகல, வெண்புள்ளிகள் என்னும் லுகோடார்மா, தொழுநோய், இதய நோய்கள், மூலத் தொந்தரவுகள், வயிற்றில் புழுக்கள், கண்பார்வைக் கோளாறுகள், இருமல், நுரையீரல் கோளாறு முதலியவை விரைந்து குணமாகத் தினமும் உணவு மருந்து போலச் சாப்பிடச் சொல்லுகிறார்கள்.

இவையெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்தான். அதனால்தான் பதினேழாம் நூற்றாண்டில் நிக்கோலஸ் கல்பெப்பர் (Nicholas Culpeper) என்பவர் தமது ‘The Complete Herbal’ என்ற நூலில், “எல்லா வகையான நோய்களையும் குணமாக்கும் அற்புதமான மருந்து வெள்ளைப்பூண்டு என்னும் அரிய காய்கறிதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோடிக்கணக்கான மக்கள், தங்களின் எல்லா விதமான தோல்களையும் உடனடியாகக் குணமாக்க நாடும் ஒரே மூலிகை, ஒரே காய்கறி வெள்ளைப்பூண்டுதான் என்று 1994-ஆம் ஆண்டு, ஜீன்ஃபில்டிங் என்பவர் உலகம் முழுவதும் சென்று வெள்ளைப்பூண்டை உணவில் சேர்த்துக்கொண்டு நோய் குணமானவர்களைச் சந்தித்து இந்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்தார்.

மத்திய ஆசியாவில் தோன்றிய வெள்ளைப்பூண்டை, கி.மு.3000 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தங்களின் முக்கியமான தினசரி உணவு வகைகளுள் ஒன்றாகப் பயன்படுத்தி வருபவர்கள் சீனர்கள்தான். இவர்களின் உணவு வகைகளில் எப்போதும் வெள்ளைப்பூண்டு சேர்த்தே சமைக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் ஆரோக்கியமாய் வாழ்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி வருவது வெள்ளைப்பூண்டே! கடந்த நூற்றாண்டுகளில் இதன் பொருட்டே மதிப்பு வாய்ந்த காய்கறியாக வெள்ளைப்பூண்டு திகழ்ந்து, இப்போதும் திகழ்கிறது.

100 கிராம் வெள்ளைப்பூண்டில் மாவுச்சத்து 29.8%ம், நார்ச்சத்து 0.8%ம், தாது உப்புகள் 1.0%ம், கொழுப்பு 0.1%ம், புரதம் 6.3%ம், ஈரப்பதம் 62%ம் உள்ளன. மேலும், எலும்புகளின் பராமரிப்புக்குத் தேவையான 30 மில்லி கிராம் கால்சியம், இரத்த விருத்திக்குப் பயன்படும் 1.3 மில்லி கிராம் இரும்புச் சத்தும், வைட்டமின் ‘பி’யும், வைட்டமின் ‘சி’யும் சிறிதளவு உள்ளன.

மேற்கண்ட சத்துகளால் இன்சுலின் அதிகம் சுரந்து சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆண்மைக்குறைவு, விந்துக் குறைவு, கூந்தல் வளர்ச்சி தடைப்படுதல் போன்றவையும் குணப்படுத்தப்படுகின்றன.

இளமை புதுப்பிக்கப்படுகிறது!

மீண்டும் இளமையைத் திருப்பித் தருவதில் பூண்டு சிறந்து விளங்குகிறது. இரத்தத்தில் உள்ள நோய் நுண்ம நச்சூட்டும் பொருள்களை வெளித்தள்ளிவிடுகிறது. இரத்தத்திற்கு மீண்டும் வீரியம் ஊட்டி, இரத்த ஓட்டத்தை நன்கு செயல்பட வைக்கிறது. உடலின் வெப்ப நிலையையும் தொடர்ந்து சீராக வைத்திருக்கிறது. இதனால் வயதானவர்கள் உடல் மற்றும் உள்ள ரீதியாகத் தினமும் இளமைத் துடிப்புடன் செயல்பட முடிகிறது.

மூச்சு விடச் சிரமமா?

இதய நோயாளிகள் நன்கு மூச்சு விடவும், மாரடைப்பைத் தவிர்க்கவும், வெள்ளைப் பூண்டு இரசம் சாப்பிட வேண்டும். காசநோய், சளி போன்றைவுயும் இதனால் குணமாகும். தோலின் மேற்புறத்தில் உள்ள நோய் நுண்மங்களும் இதனால் அழிக்கப்படும்.

நெஞ்சு வலியின் போது வெள்ளைப் பூண்டுகளை அரைத்து நெஞ்சின் மேல் தடவலாம். எரிச்சலும் நீங்கும்.

ஆஸ்துமா குணமாக மூன்று பூண்டுபற்களை பாலில் காய்ச்சி அருந்தி விட்டு இரவில் படுக்க வேண்டும். ஆஸ்துமா குணமாகும் வரை இந்த முறையில் இரவில் பால் அருந்த வேண்டும்.

டி.பி. குணமாகும்

காச நோய் குணமாகக் கால் லிட்டர் பால், ஒரு கிராம் பூண்டு, ஒரு லிட்டர் தண்ணீர் ஆகிய கலவையை 4இல் ஒரு பாகமாய் வற்றும்வரை அடுப்பில் வைத்து இறக்கி அருந்தவேண்டும். ஆயுர்வேதம் காட்டும் இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்றினால் குணம் உண்டாகும். தினமும் மூன்று வேளை இந்த முறையில் அருந்த வேண்டும்.

பூண்டு கேப்ஸுல் சாப்பிடலாமா?

எல்லா விதமான செரிமானக் கோளாறுகளும் அகல நாலைந்து பூண்டு பற்களை நன்கு தட்டி தண்ணீர் அல்லது பாலில் விட்டு சூடாக்கி அதை அருந்தினால் போதும். இந்த முறையில் சாப்பிட்டால் எல்லாவிதமான கிருமிகளையும் வெளியே தள்ளிவிடும்.

கடும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு முதலியவற்றின் போது மேற்கண்ட முறையில் பூண்டைப் பயன்படுத்தவும், இல்லையெனில், கடையில் விற்கும் கேப்ஸுல் ஒன்றை வாங்கிச் சாப்பிட்டால் போதும்.

வெள்ளைப்பூண்டு வாசனை பிடிக்காத இதய நோயாளிகள், அதிக இரத்த அழுத்த நோயாளிகள் டாக்டர் அறிவுரை பெற்று, ஒரு நாளைக்கு மூன்று கேப்ஸுல்கள் வரை, மூன்று வேளை உணவிற்குப் பிறகு பயன்படுத்தி வெள்ளைப்பூண்டின் மருத்துவக் குணங்கள் அனைத்தையும் பெறலாம்.

இதய நோயாளிகள், புற்று நோயாளிகள், இருமல், சளி உள்ளவர்கள் ஐம்பது கிராம் பூண்டை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்துச் சாறாக தினமும் அருந்தி வரவேண்டும்.

தொண்டை அழற்சி நோய் (டிப்தீரியா) உள்ளவர்கள், தினமும் 4,5 பற்களை வாயில் இட்டு மென்று தின்றால் சளிச்சவ்வுகளை அகன்று குணமாவார்கள். ஐம்பது கிராம் பூண்டை எடுத்து, சமமாய் ஏழு நாள்களுக்குப் பிரித்து வைத்துக் கொண்டு, சாப்பிட வேண்டும். டிப்தீரியா நோயாளிகளுக்கு பூண்டின் வாசமோ, சுவையோ, தெரியாது. எனவே, இவர்கள் சளிச்சவ்வுகள் அகன்ற பின்பும் இந்த முறையில் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

இரத்தம் சுத்தமடையவும், ஆண்மைக் குறைவு அகலவும் இரண்டு பூண்டுப்பற்களை எல்லா வயதினரும் பச்சையாகக் சாப்பிடலாம். தினமும் இரண்டு பற்களுக்கு மேல் பச்சையாகச் சாப்பிடக் கூடாது. சமையலில் நறுமணத்திற்கு ஏற்ற வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

வெட்டுக்காயங்கள் விரைந்து ஆறப் பூண்டுச் சாற்றுடன் டிஸ்ட்டில் வாட்டரையும் கலந்து தடவ வேண்டும். இது ரஷ்யர்களின் மருத்துவமுறையாகும்.

பருக்கள், வடுக்கள், குணமாகப் பூண்டை அரைத்து குறிப்பிட்ட இடங்களில் தடவலாம். அல்லது தினமும் சமையலில் பூண்டு சேர்த்துச்சாப்பிடலாம். மூன்றாவதாக மூன்று வேளை பூண்டு கேப்ஸுல்கள் சாப்பிடலாம். தோல் நன்கு மாறவும் தொற்று நோய் ஏற்பட்டாமல் இருக்கவும் இந்த முறைகள் பயன்படும்.

இப்படிப்பட்ட சிறப்புமிக்க வெள்ளைப் பூண்டு ஒரு நறுமண உணவுப் பொருள் மட்டுமன்று; அது ஒரு மருந்துத் தாவரமும், ஆண்டிபயாடிக் மருந்தும், ஓர் அழகு சாதனப் பொருளுமாகும். தோல், எலும்புகள், சுரப்பிகள், நுரையீரல்கள் மற்ற சிறப்பு உறுப்புகள் அனைத்திலும் வெள்ளைப் பூண்டில் உள்ள ‘அலிசின்’ என்னும் பொருள் எந்த நோய்க்கிருமியும் போய்ச் சேர்ந்து விடாதபடி தடுத்துப் பாதுகாக்கிறது.

பாக்டீரியாக்களை அழிக்கவல்ல பெனிசிலின் அல்லது டெட்டிராசிலின் ஆகிய மருந்துகளை விடச் சக்தி வாய்ந்தது பூண்டில் உள்ள அலிசின். குறிப்பாக காசநோய், டைபாயிட் முதலிய நோய்களின் கிருமிகளை அறவே அழித்து விடுகிறது.

மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரட்டீஸ், மலச்சிக்கல் தீர வெள்ளைப் பூண்டு உபயோகிக்கச் சொன்னார். இதய சம்பந்தமான தொந்தரவுகளுக்கும், குடல் பூச்சிகளைக் கொல்வதற்கும், புண்களைக் குணப்படுத்தவும் அவர் காலத்தில் வெள்ளைப்பூண்டே மருந்தாகக் கொடுக்கப்பட்டது. அத்தகைய சக்தி வாய்ந்தது வெள்ளைப்பூண்டு.

1944-ஆம் ஆண்டு பூண்டில் உள்ள ‘அலிசின்’ அமெரிக்கர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இதன் மதிப்புக்கூடியது. பிரிட்டனில் இப்போதும் கீல்வாத நோயாளிகளை, வெள்ளைப்பூண்டை நன்கு சாப்பிட டாக்டர்கள் வற்புறுத்துகின்றனர்.

வெள்ளைப்பூண்டு இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. சுவாச சம்பந்தமான உறுப்புகளைப் பலப்படுத்துகிறது.

பூண்டில் கந்தகக்குழுக்களைச் சேர்ந்த ‘செலினியம்’ என்ற ஒரு வகைப் பொருள் இருக்கிறது. அது நுரையீரல்களின், நாடி நரம்புகளின் இறுக்கத்தைத் தளர்த்தி ஹார்ட் அட்டாக் அபாயம் ஏற்பட்டு விடாமல் தடுக்கிறது. இந்த உண்மையை மத்திய தரைக்கடல் மக்களின் உணவு முறைகளை ஆராய்ந்து 1995ஆம் ஆண்டுதான் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த மக்கள் தினமும் திராட்சை மதுவும், வெள்ளைப்பூண்டும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். மத்திய தரைக்கடல் நாடுகளில் இதய நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் இல்லாததற்குப் பூண்டும், திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் ஒயினுமே காரணம் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

வெள்ளைப்பூண்டு எய்ட்ஸ் நோய், இரைப்பைப் புற்று நோய் முதலியனவும் நமக்கு ஏற்பட்டு விடாதபடி தடுக்கிறது.

பூண்டு புத்துணர்ச்சி தருகிறது. ஆண்மைக் குறையை அகற்றும் அரிய மருந்து இது.

ஜைனமதத்தினர் பலர் பூண்டில் இரு வில்லைகளை மட்டும் தினசரி பச்சயைாகச் சாப்பிடுகின்றனர். இது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துவிடுகிறது.

கலிபோர்னியாவில் உள்ள லோர்னா லின்டா பல்கலைக் கழகம் தினமும் பூண்டு வில்லைகளை சேர்த்துக் கொண்டவர்களுக்கு கெடுதல் செய்யும் LDL கொலாஸ்டிரல் 70% வரை குறைந்து நல்ல கொலாஸ்டிரலான HDL நன்கு உயர்ந்தததை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

பம்பாயில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த இதய நோயாளிகளுக்கு தினமும் 18 பூண்டு வில்லைகளைக் கொடுத்து குணப்படுத்தி வருகிறார்கள். இதில் இரண்டு வில்லைகளை பச்சையாகவும் மீதி பதினாறை சமையலில் சேர்த்தும் சாப்பிட வேண்டும்.

மாரடைப்பைத் தவிர்க்கும் பூண்டு

இரத்தக் குழாய்களின் படிந்துள்ள கொலாஸ்டிரலை உடைத்து இரத்தக் குழாய் கெட்டிப்படுவதைத் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு முற்றிலும் தடுக்கப்படுகிறது. ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டவர்கள் மாரடைப்பைத் தவிர்க்கத் தொடர்ந்து வெள்ளைப்பூண்டைச் சேர்த்து வந்தால் போதும். மேலும் அது இரத்தத்திற்கு நன்மை செய்யும் HDL என்ற கொலாஸ்டிரல் வகையை அதிகரிக்கச் செய்கிறது. அத்துடன், ஒரே ஒரு பூண்டுப்பல இரத்தத்தில் உள்ள LDH என்ற இரத்தத்திற்கு கேடு விளைவிக்கும் சொலாஸ்டிரலை 12% குறைத்தும்விடுகிறது. மேற்கண்ட உண்மைகள் 1994ஆம் ஆண்டு ஜெர்மானிய டாக்டர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளாகும். இதய நோயாளிகள் தினசரி குறைந்தது ஒன்பது பூண்டு வில்லைகளை சாப்பிட வேண்டும்.

தாய்ப்பால் பெருக ஐந்து பூண்டுகளை பாலில் காய்ச்சி தினமும் அருந்தி வர வேண்டும்.

மூட்டு வீக்கம், நரம்புத் தளர்ச்சி, இசிவு போன்றவை குணமாகவும் நறுமணப் பொருளாகச் சமையலில் சேர்க்கப்படும் பூண்டே பயன்படுகிறது. இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டு மக்களைப்போல தினமும் வெள்ளைப் பூண்டு சாப்பிடுகிறவர்கள் உயர் இரத்த அழுத்தம், இதயநோய் முதலியவற்றின் பிடிகளுக்கு ஒரு நாளும் ஆளாகமாட்டார்கள்.

நோய் எதிர்ப்புச் சக்தியுடன் ஆரோக்கிமாய் வாழ வெள்ளைப்பூண்டைத் தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Thanks http://aroosba.wordpress.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.