Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர் போராட்டமும் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையும்

Featured Replies

 
ஈழத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீவிரமடைந்திருந்த காலப்பகுதிகளில் இந்தப் போராட்டத்தில் தமிழக மக்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமான பாத்திரத்தை வகித்திருந்தது.
 
குறிப்பிhக 83 கறுப்பு யூலை என்ற கொடுரம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்த போது தமிழகம் பெருமளவில் கொத்தளித்திருந்தது. இதன் ஒரு கட்டமாக தமிழக இளைஞன் அப்துல் றவூப் தனக்குத் தானே தீ மூட்டி உயிர்த்தியாகம் செய்திருந்தார். இத்தகைய ஒரு கொந்தளிப்பான நிலையில் வானொலி மூலம் உரையாற்றிய அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சிங்கள நாய்கள் என்ற சொற்பிரயோகத்தையும் தனதுரையில் பாவித்திருந்தார்.
 
இவ்வாறாக கிளர்ந்தெழுந்த தமிழக மக்களின் ஆதரவு நிலைப்பாடு போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களைத் தங்கள் பிள்ளைகளாக மற்றும் சகோதரர்களாகப் பாவித்து தம்மால் முடிந்த அனைத்தையும் செய்து ஊக்குவிக்கும் அளவிற்கு இருந்தது. டக்ளஸ் தேவானந்தா குழுவினால் மேற்கொள்ளப்பட்ட திருநாவுக்கரசு என்ற இளைஞனின்  படுகொலை, பாண்டிபசார் துப்பாக்கிச் சூடு, மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு போன்ற அதிருப்தியூட்டும் சம்பவங்கள் கூட இந்த மக்களின் தமிழ்ஈழ ஆதரவு என்ற தளத்தில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தி விடவில்லை. 
 
தமிழீழ விடுதலை இயக்கங்களைப் பாவித்து தமது அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள முயன்ற கருணாநிதி போன்றவர்கள் கூட தமிழக மக்களின் உணர்வுபூர்வமான ஆதரவைக் கண்டு தாமும் விடுதலை இயக்கங்களின் ஆதரவாளர்களாகக் காட்;டிக் கொள்ள அல்லது நடிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தனர்.
 
 
1987ம்ஆண்டில் இந்திய அமைதிப் படையுடன் விடுதலைப் புலிகள் மோதத் தொடங்கியிருந்த காலப்பகுதியிலும் தமிழக மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளையே தொடர்ந்தும் ஆதரித்தது வரலாறு.
 
எம்.ஜி.ராமச்சந்திரனின் மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றிய ஜெயலலிதா தமிழீழ விடுதலைப் புலிகளையோ அல்லது ‘விடுதலைப் போராட்டத்தையோ மானசீகமாக ஆதரித்தார் என்று சொல்வதற்கில்லை. மக்களின் உணர்வுக்கேற்ப ஆங்காங்கே சில பேட்டிகளையும் அறிக்கைகளையும் விடுத்து தனது அரசியல் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ளவே முயற்சித்தார். மயற்சிக்கிறார்.
 
இவ்வாறாக மக்களின் ஆதரவைப் பெற்ற இரு பெரும் சக்திகளான திமுக மற்றும் அதிமுகவின் கழுவுகிற மீனில் நழுவகிற யுக்தியை நன்றாகப் புரிந்து கொண்ட தமிழர் விரோத மத்திய அரசும் இ;நதிய உளவுப் பிரிவும் எப்போதுமே தமிழர் எதிர்ப்பாளர்களாக இருந்து வந்த நாராயணன் போன்ற அரசு அதிகாரிகளும் தமிழக மக்கள் மத்தியிலிருந்த ஈழஆதரவு உணர்வை மழுங்கடிப்பதில் தீவிர ஆர்வம் காட்டினர்.
 
சிறிபெரும்புத்தூரில் இடம்பெற்ற றாஜீவ் கொலை இவர்களுக்கு வாய்ப்பாகிப் போக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழீழ ஆதரவாளர்களை அச்சுறுத்தியும் சிறையிலடைத்தும் பொய் வழக்குகளைப் போட்டும் பெரும் தடைக்கற்களை ஏற்படுத்தினர்.
 
உண்மையான தமிழுணர்வுடன் தொடர்ந்தும் குரல் எழுப்பி வந்த ஐயா பழ நெடுமாறன், வைகோ போன்றவர்களின் குரல்களும் அரச பலம் ஆளணி பலம் மற்றும் ஊடக பலத்தின் முன் செல்லாக்காசாக்கிப் போயின. எனினும் பழ நெடுமாறன் ஐயா ஒருமூறை கூறியிருந்ததைப் போல மக்கள் மத்தியில் நீறு பூத்த நெருப்பாக இந்த உணர்வு தொடர்ந்து இருந்து கொண்டே வந்தது.
 
இந்த நீறு அகன்று விடக் கூடாது என்பதில் கருணாநிதி உள்ளிட்ட சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் சோ போன்ற பிராமணிய சக்திகளும்  மிகக் கவனமாகச் செயற்பட்டன.
 
குறிப்பாக 2009 இல் சிங்கள அரசாங்கம் கொடிய இன அழிப்பை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ்மக்களின் உணர்வை எப்படியாவது கிளர்ந்தெழ வைத்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்துடன் முத்துக்குமாரன் திட்டமிட்டு ஏற்பாடுகளுடன் கூடியதாய் தன்னைத் தானே அழித்துக் கொண்ட நேரத்தில் எங்கே அந்த இளைஞனின் ஏக்கம் ஈடேறிவிடுமோ எனப் பயந்த கருணாநிதியும் அவரது பரிவாரங்களும் புலித்தோல் போர்த்திய நரியாக ஆதரவு நாடகம் ஆடிய திருமாவளவன் போன்றோரின் துணை கொண்டு அந்த இளைஞனின் இறுதி ஆசையையும் நிராசையாக்கி விட்டிருந்தனர்.
 
எனினும்2009இற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் நாம்தமிழர் கட்சியின் எழுச்சியும் அதன் தலைவர் சீமானின் தொடர்ச்சியான பிரச்சாரங்களும் புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்களின் செய்திச் சேவைகளின் பங்களிப்பும் தமிழுணர்வை மூடியிருந்த அந்த நீற்றை படிப்படியாகப் போகச் செய்திருக்கிறது.
 
மக்கள் எல்லாம் மாக்களே என்று எண்ணிக் கொண்டு மத்திய அரசின முக்கிய பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கடிதங்கள் எழுதிக் கொண்டும் அறிக்கை விட்டுக் கொண்டும் கபட அரசியல் செய்யும் கருணாநிதியும் தொடர்ந்து ஈழப் பிரச்சினையில் அடிக்கடி நீண்ட மௌனமெனும் கோமா நிலைக்குச் சென்று விடுவதுடன் காவற்துறையையும் பள்ளி நிர்வாகங்களையும்எஏவி விட்டு தமிழுணர்வை மழுங்கடிக்க முற்படும் ஜெயலலிதாவின் எதாச்சாதிகாரமும் மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கிறது.
 
இந்த நேரத்தில் வேகமாகப் பரவி வரும் மாணவர் எழுச்சியை எப்படியாவது அடக்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள அதிகார வர்க்கம் தனது முழுப்பலத்தைப் பிரயோகித்து இந்த மாணவர் போராட்டத்தை அடக்க முற்பட்டுள்ளது.
 
இந்த மாணவர் போராட்டத்தைப் பொறுத்த வரை முழுமையான அதிகார பலம். படை பலம். நிர்வாக பலம். ஊடக பலம் என்பவற்றை உடைத்தெறிந்து முன்செல்வது என்பது மிகவும் கசவாலானது என்றாலும் மாணவர்கள் ஆரம்பித்து வைத்துள்ள இந்த எழுச்சி தமிழக மக்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என திடமாக நம்பலாம்
 
-Manivasahan 15-03-2013
 

Edited by Manivasahan

Quote: "எனினும்2009இற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் நாம்தமிழர் கட்சியின் எழுச்சியும் அதன் தலைவர் சீமானின் தொடர்ச்சியான பிரச்சாரங்களும் புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்களின் செய்திச் சேவைகளின் பங்களிப்பும் தமிழுணர்வை மூடியிருந்த அந்த நீற்றை படிப்படியாகப் போகச் செய்திருக்கிறது"

 

நிதர்சனமான உண்மை, தமிழக நண்பனுடன் கதைக்கும்போது சொன்னான், எமது அழிவை தமிழ்நாட்டு ஊடகங்கள் மூடி மறைத்துவிட்டார்கள் முன்னர்.

 

பிறையன் செனிவிரட்னா இளையோர் அமைப்பின் ஊடாக பலாயிரம் CD க்களை மாணவர்களிடையே விநியோகித்துள்ளார், இப்படி பலதரப்பட்ட முயற்ச்சிகளால்தான் , இப்போ மாணவர்களின் தொடர் போராட்டம் வெடித்துள்ளது.

 

தமிழக மாணவர்கள் ஒரு புத்துணர்ச்சி உலக தமிழர்களிடையே ஏற்படுத்திவிட்டார்கள், இதை நல்லமுறையில் பாவித்து எமது விடிவை வென்றெடுக்க வேண்டும்

இந்த அளப்பரிய மாணவர் எழுச்சிற்கு 'இதுதான் காரணம்' என ஒரு சிறப்பு காரணம் இல்லை என நம்புகின்றேன். இருந்தாலும் பாலச்சந்திரன் என்ற வியட்நாமிய சிறு பெண்ணை ஒத்தபடமும் அவர்களுக்குள்  அமுக்கப்பட்டு அடைக்கப்பட்டு இருந்த இன உணர்வுமே முக்கிய காரணிகளாக இருந்திருக்கலாம்.
 
அதேவேளை மேலே உள்ள கட்டுரை போன்று நெடுமாறன் அய்யா, வைகோ அண்ணா, சீமான் அண்ணா போன்றவர்கள் ஈழ உணர்வை அழியாமல் பாதுகாத்தவர்கள்.

நல்ல சாம்பாறு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சாம்பாறு.

 

 

 

என்ன ஆறு அது??   :icon_mrgreen:
 
 கேட்டால் எங்களுக்கு அரசியல் தெரியாது என்பீர்கள். உங்களுக்கு தெரிந்த அரசியலை எடுத்து விட வேண்டியது தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.