Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் சாதீய முரண்பாடுகளைத் தூண்டிவிடும் முயற்சியில் இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாணத்தில் சாதீய முரண்பாடுகளைத் தூண்டிவிடும் முயற்சியில் இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவு?

 

30 மார்ச் 2013



 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


 


Aavarankal1_CI.JPG

அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் சாதீய முரண்பாடுகளைத் தூண்டிவிடும் முயற்சியில்  இலங்கை இராணுவத்தின்  புலனாய்வுப் பிரிவும்  ஈடுபட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்ச் சமூகத்தினுள் சாதிய முரண்பாடுகள் நீறு பூத்த நெருப்பாக தமீழீழ விடுதலைப் போராட்டகாலத்தில் உறங்கிக்கிடந்ததை யாவரும் அறிவர். சாதிய ஒடுக்கு முறையினை ஒழிப்பதற்கான முறையான வேலைத்திட்டங்களோ உரையாடல்களோ இல்லாத போராட்ட அரசியலூடாக வளர்ந்த காரணத்தினால் சாதிய முரண்பாடுகள் மீண்டும் வலுவுடன் தலையெடுத்து வருகின்றன. இதனை அறிந்துள்ள இலங்கையின் பாதுகாப்புத்தரப்பு தமிழ்சமூகத்தை பிரித்தாளும் தந்திரத்தை கையாளத்தொடங்கியுள்ளது.


இதனைவிட வடக்கில் நிகழும் இன்னுமொரு நடவடிக்கையும் படைத்தரப்பின் கண்களை உறுத்தி வருவதாகவும்  அறியக்கிடைகிறது புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் பல்வேறு ஒன்றியங்கள் நலன்புரி சபைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை கோவில்கள் வாசிக சாலைகள் போன்றவற்றை மையப்படுத்தித் தத்தமது சமூகம் சார் நலன்பேண் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன. வடபுலக் கிராமங்களுக்கும் புலம்பெயர் சமூகங்களுக்கும் இடையில் இருக்கும் இந்த ஊடாட்டம் வடபுல மக்கள் இலங்கை அரசை  நோக்கி நகர்வதை தடுக்கிறது என இராணுவத்தரப்பு  நினைப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஆவரங்காலில் நிகழ்ந்த சம்பவம்  ஒன்று  மேலே சொல்லப்பட்டவற்றிற்கு சிறு ஆதாரமாக அமைவதாக அந்தசம்பவத்தை நேரிற்கண்ட  ஊடகவியாளாளர் ஒருவர் தெரிவித்தார்.


Aavarankal2.JPG


இவ்வகையில் நேற்று முன்தினமான புதன் கிழமை (27.03.13) ஆவரங்காலில் திருமண மண்டபமொன்று தாக்கப்பட்டதுடன் அதன் முகாமையாளரும் தாக்கப்பட்டுள்ளார்.


ஆவரங்கால் ஒன்றியம் எனும் இலண்டனை மையமாகக் கொண்ட அமைப்பொன்றினால் வெளியிடப்பட்ட நூலொன்றின் பிரதிகளும் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன. 20ம் நூற்றாண்டில் ஆவரங்காற் சிவபூமி எனும் பெயரில் வெளியிடப்பட்ட அந்நூலில் யுத்தகால படுகொலைகளையும் படைத்தரப்பினரையும்  விமர்சிக்கும் பக்கங்களும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. (இந்த நூலில்  உள்ளடங்கியுள்ள விடயங்கள் என்ன என்பதனை குளோபல் தமிழ்ச் செய்திகளால் இன்னமும் அறிய முடியவில்லை)


இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் திருமண மண்டபத்தினைச் சுற்றிக்  குவிந்து நிற்க ஒரு தொகுதி இளைஞர்கள் குறித்த திருமண மண்டபத்தினுள் புகுந்து அங்கு அடுத்த தினம் நடக்க ஏற்பாடாகியிருந்த  திருமண நிகழ்வொன்றிற்கான ஏற்பாடுகளை அடித்து நொருக்கியுள்ளனர்.  பின்னர் அங்கு நின்றிருந்த மண்டப முகாமையாளரான ஓய்வு பெற்ற கிராம அலுவலரொருவரையும்  மிக மோசமாக தாக்கியுள்ளனர். தாக்குதலின் போது அதில் ஈடுபட்ட  இளைஞர்களை இராணுவப்புலனாய்வு பிரிவினர் தூண்டிவிட்டுக் கொண்டிருந்ததை அங்கு நின்றிருந்த மக்களும் பத்திரிகையாளர்கள் சிலரும் நேரிற்கண்டுள்ளனர்.


Aavarankal4.JPG


குறித்த இளைஞர் தொகுதியினர் குறித்த நூல் வெளியீட்டின் மீதும் அதன் ஏற்பாட்டாளர்கள் மீதும் கோபமடைவதற்கும் தாக்குதலில் ஈடுபடுவதற்கும் நியாயமான காரணங்கள் ஏதும் இருந்தனவா என்பது பற்றி அறிந்து கொள்ளக் குளோபலுக்கு முடியவில்லை. அவ்வாறு நியாயமான காரணங்கள் இருந்திருப்பின் அவற்றை முறையான உரையாடலுக்கூடாகத் தீர்க்க முனைந்திருந்தால் அது வலிமையான அரசியற் செய்தியாகவிருந்திருக்கும் எனச் சில அவதானிகள் தெரிவித்தனர்.


தமிழர்பகுதிகளில் கோவில்கள் மணிமண்டபங்கள் கல்யாண மண்டபங்கள் போன்றவற்றை மையப்படுத்தி சாதிய ஒடுக்குமுறைகள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன. இத்தகைய பாகுபாடுகள் நிகழ்காலங்களிலும் நிகழ்ந்து வருகின்றன. இவை தவறானவை. மேற்குலகின் முதலாளித்துவ சனநாயக முறைக்குள் காணமுடியாத- சாதிய ஒடுக்குமுறை இல்லாத ஒரு சமூகத்தை அறிந்த புலம்பெயர்தமிழர்கள் ஈழத்தில் சாதிய ஒடுக்குமுறையை இல்லாது செய்வதற்கான முதல் அடியை எடுத்து வைக்க ஈழத்தமிழர்களுக்கு உதவவேண்டும். புலம்


பெயர்தேசத்திலிருந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளிலும் சரி ஈழத்தில் மேற்கொள்ளப்படும் எல்லாவிதமான நடவடிக்கைகளிலும் சரி சாதிய ஒடுக்குமுறையின் மூலங்களோ வாசங்களோ இருக்கக்கூடாது. என ஆழமான அரசியலறிவுகொண்ட சமுகவிமர்சகர் ஒருவர் தெரிவித்தார். சாதிய ஒடுக்குமுறைகளுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இத்தகைய முரண்பாடுகளுக்குள் இராணுவத்தை நுழைய அனுமதிப்பது அல்லது இராணுவத்தின் துணையுடன் இவற்றைக் கையாள நினைப்பது ஆரோக்கியமான அரசியலாகாது என்பதை உணரவேண்டும் எனவும் இராணுவத்தின் உதவியுடன் அடையப்படுவது தற்காலிகமான வெற்றி உணர்வையோ பழிவாங்கிய திருப்தியையோ தரக்கூடுமாயினும் தமிழ்சமூகத்தினுள் இருந்து சாதியத்தினைத் துடைதெறிய வழிவகுக்காது எனவும் அவர் கூறினார்.


Aavarankal3.JPG


எவ்வாறெனின்னும் புலம்பெயர்ந்த மக்கள் தாயகத்திற்கான உதவிகளை ஆலயங்கள் மற்றும் சமூக நிறுவனங்களினூடாக மேற்கொள்வதுடன் தொடர்பாடல்களையும் பேணிவருகின்றனர். அதனை முடக்கும் வகையிலும் சாதிய முரண்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலும்  இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவு இத்தாக்குதல்கள் ஊக்குவித்திருக்கலாம் என ஆவரங்காலைச் சேர்ந்த சிலர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்குத் தெரிவித்தனர்.


இந்தச்சம்பவம் தொடர்பாக பலாலி இராணுவ முகாமில் இருந்து தொழிற்படும் ஊடக மையத்தின் மின் அஞ்சல் முகவரியைப்  பயன்படுத்தி சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கும் தனிநபர்களுக்கும்  ஒரு  ஊடகச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.


அவ்வூடகச்செய்தியை கீழே தருகிறோம் (இந்தச் செய்தி யார் யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டதென்கிற விபரம் பாதுகாப்புக்காரணங்களுக்காகத் தவிர்க்கப்பட்டுள்ளது. மின் அஞ்சல் முகவரியும் அனுப்பப்பட்ட  திகதியும் உள்ளடக்கமும் இங்கு தரப்பட்டுள்ளது.)


அச்செய்தியின் சாரம்: நாட்டில் அமைதியைக்குழப்பி மீண்டும் பயங்கரவாதத்தைக் கொண்டுவரும் நோக்கில் தொழிற்பட்ட ஒரு ஒன்றியத்தை கிராம மக்கள் தாக்கி அதன் வெளியீட்டையும் எரித்ததுடன் அதற்கு எச்சரிக்கையும் விடுத்தனர் என்பதாகும்.


 


---------- Forwarded message ----------

From: SAYURI ANUSARA MADDUMA LIYANAGE <sayuri041@gmail.com>

Date: 29 March 2013 18:14

Subject: Avarankal Civilians Get United against Diaspora’s False Propaganda

To:

 


    Avarankal Civilians Get United against Diaspora’s False Propaganda   

 

A group of opportunists, self claimed as members of a London-based organization named “Avarangal Onriam”, who tried to provoke the residents in Avarankal in Jaffna against the Security Forces and the government, was chased away by the people in the area on 26th March evening.

 

     They had planned to sell a book titled “20th Century History SivathalamAvarankal” written by a
retired principal of a leading school in Jaffna District who is presently living in the UK.

 

    The campaign had been arranged by the organizers in front of the Sivashakthi Mani Mandapam
at Avarankal. However, civilians in the area who opposed the “Avarangal Onriam”-based anti social campaign had claimed that the false information in the book directly affect the peaceful environment prevailing in the area and invite terrorism again. They further launched a protest saying that security Forces, as mentioned in the book, are not involved in killings or abductions in the area.  

 

    People especially were annoyed to find that names of some living people are also mentioned in
the book as killed during the humanitarian war. 

 

    Later, irate civilians set fire to about 80 copies of the book and warned the members of  so called
“Avarangal Onriam” that they would face bad repercussions if they try to organize that type of campaigns again.   

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90226/language/ta-IN/article.aspx

புலம்பெயர் அமைப்பு ஒன்றினால் வெளியிடப்பட்ட நூல் ஒன்றில் சிறிலங்கா அரச பயங்கரவாதம் பற்றிய தகவல்கள் இருந்ததனால், சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர் என்பது சரி. ஆனால் இதில் சாதியம் எப்படி வந்தது என்பதை செய்தி சரியான முறையில் சொல்லவில்லை.

நூலில் சாதியத்தை ஊக்குவிக்கும் சொற்கள் இருந்தனவா? மண்டபம் உயர்சாதியினருக்கு மட்டும் வழங்கப்பட்டதா? தாக்குதலில் தாழ்த்தப்பட்ட சாதியத்தை சேர்ந்த இளைஞர்கள் பயன்படுத்தப்பட்டார்களா?

கூட்டமைப்பு தாம் செய்யவேண்டிய கடமைகளை சரிவர செய்யவில்லை என்றால் தமிழின விரோதிகள் மக்களைக் குழப்புவதில் வெற்றியடையலாம்.

60 களில் செய்த அரசியல் இன்று எடுபடாது என்பதை கூட்டமைப்பின் கிழட்டுச் சோம்பேறி அரசியல்வாதிகள் உணரவேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.