Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு வெளியுறவுக் கொள்கையே கிடையாது – தயான் ஜயதிலக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வெளியுறவுக் கொள்கையே கிடையாது – தயான் ஜயதிலக்க
30 மார்ச் 2013 விசேட மொழியாக்கம் குளோபல்தமிழ்ச்செய்திகள்


இலங்கைக்கு வெளியுறவுக் கொள்கையே கிடையாது என முன்னாள் பிரான்ஸிற்கான தூதுவரும், சிரேஸ்ட ராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.இலங்கையில் வெளியுறவுக் கொள்கைகளில் குறைபாடு காணப்படுகின்றது என்பதனை விடவும், வெளியுறவுக் கொள்கையே கிடையாது என்பதே யதார்த்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் புத்திசாதூரியமானவர், வெளியுறவுக் கொள்கையின் அவசியத்தை அறிந்தவர் என தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.இரண்டாம் தவணை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பரவலாக்கியதாகவே கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில பொறுப்புக்களை நம்பிக்கையின் அடிப்படையில் அவர் சிலரிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.பொறுப்புக்களை ஒப்படைத்தவர்கள் உரிய முறையில் தங்களது கடமைகளை ஆற்றத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தெரிவு தொடர்பில் பிரச்சினை கிடையாது என்ற போதிலும் யுத்தத்தின் பின்னரான மனோ நிலை முக்கிய பிரச்சினையாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.யுத்தத்தின் பின்னர் சரியான முறையில் ஆய்வுகள் நடாத்தி உரிய தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தத்தை வென்றெடுக்க ஓர் தந்திரோபாயம் வகுக்கப்பட வேண்டும் எனவும், சமாதானத்தை வென்றெடுக்க அதனை விடவும் பெரிய தந்திரோபாயமொன்று வகுக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கையில் தற்போதைய கொள்கைகள் கோட்பாடுகள் கிணற்றுத் தவளைத் தனமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே நாமே நமது எதிரிகளுக்கு தேவையான பலத்தை வழங்கி வருவதாகவும், இதனால் சர்வதேச சமூகத்தில் நாம் ஒதுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடுநிலையான கொள்கைளை பின்பற்ற வேண்டும் எனவும், இதுவே இலங்கையின் வெளியுறவுக் கொள்கையாக அமைந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதேனும் ஒரு பக்கச் சார்பாக செயற்படுவது ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்கா மேற்குலக நாடுகளுடன் விரோதமாக செயற்படுவது புத்திசாதூரியமானதல்ல என தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90222/language/ta-IN/article.aspx

சிறப்பான வெளிவிவகார கொள்கையை சிங்களம் கொண்டு இருந்தது. மகிந்த ஆட்சியால் அந்நியயப்படுத்தப்பட்டு வருகின்றது.

 

இந்த இடைவெளிக்குள் தமிழர் தரப்பு தமது ஆதரவை கூட்டி ஒரு அரசியல் தீர்வை மக்களுக்கு பெறல் வேண்டும்.

ஏன் இல்லை?

சிங்கள பௌத்தர்களின் பாலியல் வன்புணர்வுக் கொள்கைகளை மறந்து விட்டாரோ தயான்.

தயான் ஜெயதிலகா போன்றவர்களின் "வெளிநாட்டுக்கொள்கையில் யுத்த காலத்தில் ஒரு தந்திரம், சமாதன காலத்தில் இன்னொரு வெளிநாட்டுக் கொள்கை தந்திரம்" என்பதால் தான் இலங்கை, வட கொறியா போல் சர்வதேசத்தால் அன்னியப்படுத்தப்படும் ஆபத்துக்குள்  இன்று மாட்டித் திண்டாடுகிறது. ஜெயதிலகா பதவிக்காக தான் காட்டும் அப்பட்டமான பச்சோந்தித்தனத்தை ஸ்திரமான ஒரு வெளிநாட்டுக் கொள்ளையாக மாற்றி செப்படி வித்தை காட்ட முயல்கிறார். 

 

ஜெயதிலகா யுத்த நேரம் ஒரு தந்திரமும் அதன் பின்னர் இன்னொரு தந்திரமும் என்று போதிக்கிறார். இப்படியான விபச்சார நடத்தைகள் உலகில் வெளிநாட்டு கொள்கைகளாக அறியப்பட்டு இல்லை.

 

வல்லரசுகள் தமது நலன் கருத்தி தமக்கென்று ஒரு சாயலும், மேலும்  தம்முடன் ஒரு அணியும் வைத்திருக்கின்றன. அவர்களின் ஒருவரின் அணியில் சேர்வதும், அந்த சாயலை ஏற்றுக்கொள்வதும்,  பின்னர் விரும்பியவுடன் மாற்றிக்கொள்வதும்,  பச்சோந்தி தனது நிறம் மாற்றுவது போல அவ்வளவு இலகான காரியம் இல்லை. இதில்தான் இன்று இலங்கை மாட்டிகொண்டு விழிக்கின்றது என்பதை இலங்கையின் பாமர மக்கள்  கூட ஆய்ந்து அறிந்து விளங்கிக்கொண்ட பின்னர் தன்னைத்தான் புத்திமானாக கற்பனை பண்ணிக்கொள்ளும் தயான், தான் விளங்கிக் கொள்ளாதது மாதிரி புதுமை பேசுவது ஏமாற்றம் அளிக்கிறது.

 

இலங்கை  தன்னை அணி சேரா நாடகத்தான் வெளியில்அறிமுகப்படுத்திக்கொள்கிறது. இதன் பெறுமதி சோவியத் சார், மேற்கு சார் என்ற அணிகளுக்கிடையில் முரணல்கள் கடுமையாக இருந்த காலத்தில் பிதானமாக இருந்தது.  ஆனால், எப்போதும்  இதுவரையில், வெளியே, பொதுமக்களாலும், நிறுவனங்களாலும், அரசுகளாலும் இலங்கை இந்தியாவின் நிழலின் கீழ் வைத்துத்தான் பார்க்கப்படடது.(இந்திராகாந்தி சோவியத்துடன் உறவுக்கொள்கைகள் வைத்திருந்தாலும், JR தட்சரிடம் இராணுவ உதவி கேட்ட போது தட்சர் அதை இந்தியாவிடமிருந்துதான் பெறச் சொல்லியிருந்தார்) 

 

மேலும், எத்தகைய அப்பிப்பிராயம் இலங்கையை பற்றி வெளியில் இருந்தாலும், UNP காலத்தில் இலங்கை மேற்கு அணியுடனும், SLFP காலத்தில் கம்யூனிச அணிகளுடனும்(சோவியத்துடன் அல்ல) இலங்கை சார்வதுதான் இலங்கையின் வெளிநாட்டு உறவுக்கொள்கையாகவும் இருந்து வந்தது. ஆனால் அத்தனகலை இளவரசி சந்திரிக்கா காலத்தில் இந்த நடப்பு மாற்றி அமைக்கப்பட்டது.  9/11 ன் பிறகு புலிகளிடமிருந்து ஜிகாதிகள் தற்கொலை தந்திரங்களை பெறுவத்தாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்டினார்கள். இதனால் புலிகளின் தற்கொலை ஆயுதத்தை பெரித்து படுத்தி அவற்றால் வராத அழிவுகளை அவர்கள் மீது இட்டுக்கட்டி புலிகளை அன்னியப்படுத்தினார்கள். இது, ஆயுதக் குறைவால், தற்கொலையை ஆயுதமாக பாவித்த புலிகள் அருக்கிக் கொண்டுவந்த ஆயுதம் பெறும் வலிமையால், மேலும் தற்கொலையைப் பாவிக்க தள்ளியது. இந்த விரிவடைந்து வந்த சூழ் நிலையை கவனமாக கைப்பற்றிய  சந்திரிக்காவின் வெளிவிவகார அமைச்சரான கதிர்காமர், கம்யூனிசம் சார் SLFP அரசாங்கத்தை, மேற்கு அணிகள் பக்கம் திருப்பி வெற்றிகரமாக புலிகளுக்கு எதிராக செயல்ப்படவைத்தார். இந்த வெற்றியை பற்றிதான் ஜெயதிலகா  "யுத்த நேரத்தில் ஒரு தந்திரம்" என்று பெருமையாக கூறுகிறார். அதாவது இடது சாரி ஜெயதிலகா, பிறப்பு வளர்ப்பால்  முதலாளித்துவ மனப்பான்மை கொண்ட கதிர்காமரும், மேற்கு நாடுகளில் கல்வி கற்றும், சொத்துகளை வாங்கி குவித்தும் தனது உண்மை முகத்தை மறைக்க முடியாமல் போய்விட்ட சந்திராகவும், தமிழரை அழிப்பதறகு ஆயுதங்கள் வாங்கமட்டும் மேற்கு நாடுகளுடன் உறவு வைத்தது சரி என்கிறார். 

 

அணிகள் இல்லாமல் வளர்ந்து வரும் வல்லரசுதான் சீனா. ஆரம்பம் தொடக்கம் வட கொறியாயும் சீனாவும் நட்பு நாடுகளாக இருந்தாலும். ஒரு அணியில் என்றும் இல்லை.  பிற்காலத்தில், இந்தியஎதிரியான சீனாவுக்கு இலங்கையின் உறவு தேவையாகப்பட்டது. இதனால் தான் முதன் முதல் மூன்றாவது நாடுசார் அணியாக சீனாவின் அணியில் இலங்கை சேர்க்கப்பட்டது. அதில் இது வரையில் வேறு ஒரு நாடும் இன்னமும் சேர்க்கப்படவுமில்லை.

 

மேற்குநாடுகளிடமிருந்து புலிகளை அழிக்க தேவையானவை எல்லாம் கதிர்காமரால் செய்து முடிக்கபட்ட சரியான நேரத்தில் SLFP இன் ஆட்சி மகிந்தரின் கையிற்க்கு மாறியது. SLFP யின் புதிய, மேற்கு நாடுகளின் ஜநாயக, முதலாளித்துவ கொள்கைகளில் இருந்து திசை மாற, கதிர்காமரை பதவி நீக்குவது மட்டுமல்ல, தொடரத்தக்க ஆபத்துக்களில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க போடுத்தள்ளுவதும் தேவையாக இருந்தது.

 

இரண்டு ஆண்டுக்குள்(2006-2007) இலங்கை என்ற கப்பல் பாய்களை மாற்றி, சுங்கானை திருப்பி, "U turn" அடித்துவிட்டது. 2008ல் சீனாவின் ஆயுதவழங்கல்களில் தங்கிக்கொண்டு புலிகளுக்கு எதிராக போர்க்கொடியை பறக்கவிட்டுவிட்டது.  இந்த  சந்திரிக்க SLFP யிலிருந்து  மகிந்த SLFP அடித்த கொள்கை "U turn"யும் தான் "போர் காலம் ஒரு தந்திரம்" என்கிறார் தாயன் ஜெயதிலகா. அதேநேரம் ஐ.நாவிலிருந்துகொண்டு இந்த சந்தர்ப்பதவாதங்களுக்கு   மிண்டுகள் கொடுத்தவர்தான் இந்த தாயன் ஜெயதிலகா.

 

போர், மகிந்தரால், மேற்கு- கிழக்கு, கம்யூனிசம்-முதலாளித்துவம், இந்தியா-சீனா என்றெல்லாம் எதிரிகளைப் போட்டு வெல்லப்பட்டது. 35 வருடகாலம் சுதந்திரம் மறுக்கபட்டு தமது சுதந்திரத்தை பெற போராடிய போராளிகள், ஆப்கானிஸ்த்தானில் அல்கைதாவை  அழிக்க பெறப்பட்ட ஆதரவுகளை விட பாரிய ஒற்றுமையுடன் சர்வதேச நாடுகளால் ஆதரவு அளிக்கப்பட்டு அழித்து வைக்கப்பட்டார்கள். , அமெரிக்க எதிர்ப்பு மகிந்தர்,  அமெரிக்காவின் தலைமையின் கீழ், சுதந்திர போராளிகளாக தமது நாட்டுக்குள் போராடிக்கொண்டிருந்த இருந்த புலிக்களை, சர்வதேசத்தில் அல்கைதாவையும் விட பெரிய பயங்கரவாதிகளாக காட்டி அல்கைதாவை அழிப்பதிலும் பார்க்க புலிகளை அழிப்பத்தற்கான் முன்னுரிமைக்கான அழுத்தத்தை அமெரிக்கா மீது போட்டு  புலிகளை அழித்துவைத்தார்.  இதனால், இன்று,  நோக்கம் தடுமாறி கோட்டை விட்ட அமெரிக்கா, அல்கைதாவை ஆப்கானிஸ்தானில் அழிக்க முடியாமல் பின் வாங்குகிறது. விட்ட தவறை ஏற்றுக்கொள்ளாமல், பின் லாடனைவிட தலைவரை உலகத்துக்கு ஆபத்தான மனிதனாக சோடித்து அவரை அழித்தது முடித்ததாக அரசு கூறி இரண்டு வருடங்களின் பின்னர்தான், மேற்கு நாடுகள்,  UAV  தந்திரங்களை புதிதாக வகுத்து, பின்லாடனை கண்டு பிடித்து அழித்தார்கள்.  

 

உலக சரித்திரத்திலேயே, ஏமாளித்தனமாக, உலக நாடுகள் ஒன்றாக சேர்ந்து ஊசி போன இடம் தெரியும்  உலக்கை போன இடம் தெரியாது என்பது போல, பயங்கரவாத்தை ஏற்படுத்திய அல்கைதாவை அழிக்காமல் கோட்டை விட்டு விட்டு, சுதந்திரத்துக்கு போராடிய புலிகளை அழித்து விட்டு வெடி கொழுத்திய கொண்டாடிய சந்தர்ப்பம் நடந்தது கிடையாது. இதை செய்த அரசாங்கங்களில், காங்கிரஸ் கட்சி அரசொன்றை தவிர எல்லாம் இந்த நான்கு வருடங்களிலும் பதவி இழந்துவிட்டன. இதனால் அன்று  இலங்கை அரசு வெடி கொளுத்தி கொண்டாடிய வெற்றி அப்படி ஒன்றும் பெருமைக்குரியதாக இன்று மேற்கு நாடுகளால் பார்க்கப்படவில்லை. இதனால் இலங்கைக்கு மேற்கு நாடுகளில் இருந்து அழுத்தம் வருகிறது. கதிர்காமர் மாதிரி ஆபத்தானவராக கணிக்கப்படாததாலும், கதிர்காமரின் பின்னரும் சில உபயோகங்களை கொண்டிருந்த்தாலும், அரசால் கொடுத்த பல ஆபத்துக்களிலிருந்து தப்பமுடிந்துவிட்ட  தயான், இன்று, இந்த அழுத்தங்களைதான் பெரிதுபடுத்தி, தான் இழந்து போய்விட்ட பதவி மற்றும்  மகித்துவங்களை பெறும் முயற்சியாக இலங்கைக்கு வெளிநாட்டுகொள்கை பற்றி உபதேசிக்க வந்திருக்கிறார்.

 

வளரத் தொடங்கியிருக்கும் சீன அணியில் முதல் நாடாக தெரிந்து இணைக்கபட்டிருக்கும் இலங்கையின் ஆட்சி பொறுப்பில் இருக்கும் மகிந்த SLFP, தனது கம்யூனிச ஆதரவு வெளிநாட்டுக்க்கொள்கைகளில் இருந்து விலகி, முதன் முதலாக அது பெற்றிருக்கும், சீன அணியின் முதல் நாடு என்ற பதவிக்கு எற்றபடி தன்னை அமைத்துக்கொள்ள் முயன்று வருகிறது.  போரின் வெற்றின் பின்னர் அந்த இனவழிப்பை முழுமையாக அனுபவிக்கும் முகமாக  இலங்கையின் அரசியல் களங்களில் புதிய நிலைகள் வகுக்கப்படுகின்றன. போரின் ஆரம்ப காலத்தில், கதிர்காமர் SLFP யை கம்யூனிச ஆதரவு என்பதில் இருந்து முழுமையான மேற்கு ஆதரவுக் கட்சியாக மாற்றியிருந்தார். தனி மனித ஆசைகளுக்கு இடம் கொடுத்த SLFP தனது அணி சார்பு கொள்கைகளில் இருளில் மூழ்கியது.  இதை சந்தர்பமாக பாவிக்கும் மகிந்தா, தனது புதிய SLFP யை கம்யூனிச சார்பில் இருந்து மற்றி முடிக்குரிய கட்சியாக வகை அமைத்துவிட்டார்.

 

போரின் போது முதலாளித்துவத்திற்கு மாறி, போரின் பின்னர் தனது நிலைகளை மீண்டும் ஒரு தடவை மற்றி அமைத்துக்கொண்டுவிட்ட புதிய மகிந்த SLFP யிடம் தமக்கு தாமெதிர்பார்த்தவிடம் கிடையாமல் ஏமாந்து போய் அரசு மீது பலவகை  குறைகள் கண்டு பிடிக்கும்  இடதுசாரிப் புத்திசாலி அரசியல்வாதிகள்தாம் D.W. குணசேகரா, விக்கிரமபாகு, தாயான் ஜெயதிலாகா, ரஜீவ வியசிங்கா.......... இதில், அன்று அரசுடன் இருந்தாலும் தாம் உண்மையாக இருந்தவர்கள் இன்று அரசில் இருந்து பிரிந்த பின்னரும் தாம் உண்மையாக இருக்க விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் அரசு விடுவது பயங்கரமாமன குற்றங்கள் என்பதை ஒத்துக்கொள்கிறார்கள்.  ஆனால் தம்மை மட்டும் மேதாவிகளாக கண்டு  இன்னும் பதவிகளுக்கு அலையும் ரஜீவ வியசிங்கா, தயான் ஜெயதிலாகா போன்றோர், ஜனாதிபதியை புகழ்ந்து, காப்பாற்றி, பிழையை அருகில் இருப்போர் மீது போடுகிறார்கள். இதற்கு ஜெயதிலகா கண்டு பிடிக்கும் ஆயுதம் தான் இலங்கை என்றுமே கொண்டிருக்காத புதிய "வெளிநாட்டுக் கொளகை" என்ற பிதற்றல் கதை.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.